Blog Archive

Tuesday, April 19, 2022

ஆட்டத்திலே பல வகை," Niagara 2

அனைவரும் வளமாக வாழ வேண்டும். Vallisimhan
Toranto   scene 1



நயாகராவில் முதல் நாள் இப்படியாகச் சென்றது.
இரண்டாம் காலையிலேயே  சூரிய உதயம் காண
 
ஜன்னல் அருகில் உட்கார்ந்து கொண்டோம்
நானும் சிங்கமும்.
காப்பி சாப்பிடாமல் வெளியே போக முடியாத குளிர்.
நாங்கள் அங்கே சென்றது ஒரு 
குளிர் தாங்க, வயிற்றுக்கு ஈய வேண்டிய கடமை
இருந்தது. 



 மேலே இருப்பது தான் எங்கள் ப்ளாக் ஸ்ரீராம்
சொன்ன பணம் கட்டி செய்யும் காம்ப்ளிங்க்.
அது பெரிய படுகுழி.
பத்து டாலர் பந்தயம் கட்டுவதிலிருந்து
லக்ஷக் கணக்கில் பணம் தோற்பார்கள் 
ஜயிப்பார்கள்.
நாங்கள் அந்தப் பக்கம் போகவில்லை:)
பாகப் பிரிவினையில் இந்தப் பாடல் வந்தபோது

நம்பியார் இந்த மாதிரி சர்க்கஸ் நடத்திப் 
பணம் இழப்பதையும்,
அதற்கு எம் ஆர் ராதா வழிவகுப்பதையும் கண்டு 
இந்த ஆட்டத்தின் மேல் ஒரு வெறுப்பே
வந்தது.
திரைப்படங்களைக் கண்டு நன்மை கற்றது அந்த நாள்.














பயண ஆரம்பம் சிகாகோ

இப்படியாகத்தானே பலவித டீல்களையும் பார்த்து ஒரு வார ஆராய்ச்சியில் ஹோட்டல் விடுதிகளை இணையத்தில் தேடி,ரிவார்ட்ஸ் பாயிண்டுகளைப் பயன்படுத்தி மாரியாட்(டொரண்டோ) விடுதியில் இரண்டு அம்மா அப்பா,இரண்டு குழந்தைகள் தங்க ஒரு அறை ஏற்பாடு செய்தார்கள். முதல் கட்டம் முடிந்தது.
அடுத்தது நயகரா புக்கிங். நயகரா கொட்டும் அழகைப் பார்த்தவாறு ஒரு அறை வேண்டும் என்று தேடி அதுவும் கிடைத்தது:)
14ஆம் தேதி ஒரு மணிக்கு மதியம் கிளம்ப நினைப்பு. ம்ஹூம் நாங்கள் கிளம்ப மணி நாலு ஆச்சு. டெட்ராய்ட் போய்ச் சேர 5 மணிநேரம் பிடிக்கும்.
மாப்பிள்ளையின் நண்பர் அங்கெ இருக்கிறார்.
அவர் வீட்டில் இரவு தங்கி,அடுத்தநாள் கனடியன் விசா எடுப்பதாகவும்,எடுத்த கையொடு பயணம் தொடர உத்தேசம்.
நடுவில் சூசன் அம்மா(GPS)வை வேற வாங்க வேண்டி வந்தது. அவங்க கூடவே வந்து வழிகாட்டியதால் தான் எல்லா இடங்களையும் ஒழுங்காகக்
கடந்தோம்! அதான் இந்த ஜிபிஎஸ்ஸின் மகிமை.

ஆனால் ஒன்று கொஞ்சம் ரோடு மாறினாலும் அந்த அம்மா,'கீப் ரைட் 'சொல்ல ஆரம்பித்துவிடுவார்,.
அப்படியெல்லாம் மகா சௌகரியமாக ஆரம்பமான பயணம்,பாதியில் நிதானப் படவேண்டி வந்தது.  சாலையில்
ஒரு பெரிய 'மாக்' ட்ரக் மழையில் கண் மண் தெரியாத வேகத்தில் வந்து,
கவிழ்ந்து விட்டது.
நல்ல வேளை அந்த வண்டி ஓட்டுனருக்கு அடியில்லாமல் தப்பித்திருந்தார்.
அந்த விஷயத்தில் போக்குவரத்தை ஒழுங்கு செய்த சாலைப் போலீசாரை மெச்சவேண்டும்.
ஒரு வண்டி அந்த இடத்தைக் கடப்பதற்கே 10 நிமிடம் ஆகியது.
வெகுஜாக்கிரதையாக மழையில் ஒளிபாய்ச்சியபடி நின்றவர்களைப் பார்த்து
அதிசயப் பட்டேன்.
இப்படி அப்படியாக நண்ப்ர் வீட்டுக்குப் போய்ச்சேர இரவு 1 மணி ஆகியது.
அவர்களும் கதவைத் திறந்த நொடியிலிருந்து எம்க்களுக்கு படுக்க வசதி செய்து கொடுத்து தூங்கப்போகையில் மணி இரண்டு!
இதெல்லாம் இருக்கட்டும்.
என்னுடைய மறதி மகிமை அடுத்த நாள் காப்பியுடன் வெளிவந்தது.
இரத்த அழுத்த மாத்திரை மட்டும் எடுத்துவர மறந்திருந்தேன்.
அலுப்பாக இருக்கிறதா:)
நாளை பார்க்கலாம்.




19 comments:

ஸ்ரீராம். said...

சூதாட்டம் :  ஆம்.  இதுதான்.  மேலும் வேறு சில சீட்டு விளையாட்டுகளும் விளையாடுவார் ஜேம்ஸ் பாண்ட்.  அவர் சகலகலா வல்லவர்!

ஸ்ரீராம். said...

இப்போ எல்லாம் நாம் வழி மாறினால்  சூசனம்மா அலட்டிக் கொள்வதில்லை.  எங்கு மாறினோமோ அங்கிருந்து  வேறு வழி காட்ட ஆரம்பித்து விடுகிறார் - இந்தியாவில்.  

இந்தியாவில் இதை மாரியம்மா என்று சொல்லலாமோ!

ஸ்ரீராம். said...

எவ்வளவோ பார்த்துப் பார்த்து எடுத்து வைத்தாலும் பயணத்தில் இபப்டி சில 'மறந்து விடும் பொருட்கள்' உண்டு.   சங்கடம்தான்.  பக்கத்தில் கடைகளும் இருக்காது.  மேலும் அங்கே மாத்திரைகளை நினைத்த நேரத்தில் சட்டென அப்படி கடையில் வாங்கி விடவும் முடியாது இல்லையா?

Thulasidharan V Thillaiakathu said...

அது பெரிய படுகுழி.
பத்து டாலர் பந்தயம் கட்டுவதிலிருந்து
லக்ஷக் கணக்கில் பணம் தோற்பார்கள்
ஜயிப்பார்கள்.//

ஆமாம் அம்மா இதை வாசிக்கும் போதே அடிவயிற்றில் ஒரு பயம் கவ்வும்!!! அப்படியான ஒன்று. நம் மனதில் ஆழமாகப் பதிந்த ஒன்று. அது போலத்தான் குதிரைப்பந்தயம் போன்றவையும்.

சூசன் அம்மாவா உங்களுக்கு!!!! நானும் மகனும் சொல்வது வழிகாட்டி நட்சத்திரம். விண்ணிலிருந்து! என்பதால். ஆனால் எங்களுக்கு இங்கு இந்த நட்சத்திரம் அடிக்கடிக் குழப்பிவிடும்!!! சரியான இன்புட் இல்லையோ என்னவோ! அல்லது நம் ஆட்சியாளர்கள், சில பற்றுடையவர்கள் அவ்வப்போது இடத்தின் பெயரை தெருவின் பெயரை மாற்ற்றுவதாலும், திடீர்னு கட்டிடங்கள் இடிபட்டு எழுவதாலும் இன்புட் சரியாகச் செய்யப்படுவதில்லையோ என்னவோ

ஹைஃபைவ்! இன்றைய என் பதிவிலும் இந்த கூகுள் மேப்ஸ் பற்றிய ஒரு விஷயம்தான்!!!!!!

கீதா

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம்,
என்றும் நலமுடன் இருங்கள்.

நம் ஊர் சூசன் அம்மாவுக்கு மாரியம்மா பெயரே வைக்கலாம்.
மாறி மாறி சாலைகளைக் காண்பிப்பதால்:)
சாலையில் செல்பவர்களைக் காக்கவும் செய்வாள் அன்னை.

Thulasidharan V Thillaiakathu said...

அம்மா, ஆமாம் பயணத்தில் சிலப்போ இப்படி சிலது அதுவும் குறிப்பாக முக்கியமானதை மறந்துவிடுவதுண்டுதான். இத்தனைக்கும் லிஸ்ட் எழுதி வைத்து செக் செய்தும், இங்கு பொதுவாகப் பெரும்பாலான மாத்திரைகள் எங்கு போனாலும் பெயர் நினைவு இருந்தால் வாங்கிவிடலாம் ஆனால் அங்கு முடியாது இல்லையா? ப்ரிஸ்கிரிப்ஷன் இல்லாமல்?

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

அங்கு சாலை விபத்துகளைப் பல இடங்களில் அழகாகக் கையாள்வத்ம் பற்றி அறிந்திருக்கிறேன்.

அருமையான பயணக் குறிப்பு நினைவில் வைத்து எழுதுவது அருமை அம்மா

முதல் படத்தில் ப்ளேன் பறக்கும் படம் சூப்பர்!

கீதா

வல்லிசிம்ஹன் said...

ஜேம்ஸ் பாண்டுக்கு என்னதான் தெரியாது:)

ஷான் கானரி மாதிரி இன்னோரு ஜேம்ஸ்பாண்ட்
இனிமேல் தான் பார்க்கவேண்டும்.

நாங்கள் புத்தகத்தில் படித்த பாண்ட் டுக்கும்
சினிமாவில் பார்த்தவருக்கும் நிறைய ஒத்துப் போனது.

வல்லிசிம்ஹன் said...

''எத்தனையோ கவனம் வைத்தாலும் சில பொருட்கள்
மறந்து விடும்''

2008இல் சின்னவனுக்கு ஒன்றரை வயது.
விஷமங்கள் செய்து கொண்டே இருப்பான்.
வைத்த பொருட்களைப் பெட்டியில் இருந்து
விட்டெறிந்து விடுவான்.:)
அப்படித்தான் அது ஆச்சு.
இருந்தாலும் முதலிலேயே பார்த்து எடுத்து வைத்திருக்க வேண்டும் இல்லையா.
என்னவோ அப்போது புத்தி அவ்வளவுதான் இருந்தது.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதா ரங்கன்,
என்றும் நலமுடன் இருங்கள்.

''சூசன் அம்மாவா உங்களுக்கு!!!! நானும் மகனும் சொல்வது வழிகாட்டி நட்சத்திரம். விண்ணிலிருந்து! என்பதால். ஆனால் எங்களுக்கு இங்கு இந்த நட்சத்திரம் அடிக்கடிக் குழப்பிவிடும்!!! சரியான இன்புட் இல்லையோ என்னவோ! அல்லது நம் ஆட்சியாளர்கள், சில பற்றுடையவர்கள் அவ்வப்போது இடத்தின் பெயரை தெருவின் பெயரை மாற்ற்றுவதாலும், திடீர்னு கட்டிடங்கள் இடிபட்டு எழுவதாலும் இன்புட் சரியாகச் செய்யப்படுவதில்லையோ என்னவோ"

நீங்களும் அனுபவித்திருக்கிறீர்களா.இந்த சூஸன் ஒரே மோனோடோனில்
கோ ஸ்டிரைட். நௌ யு டர்ன் ரைட்'' என்று சொல்லிக் கொண்டே
வருவார்.
நாம் ஏதோ ஸைன் பார்த்து திருப்பினோமானால்
லூப்பில் விட்டு விடுவார்:)

நல்ல உபகரணம் தான்.

சூதாட்டம் , குதிரைப் பந்தயம், லாட்டரி சீட்டு வாங்குவது எல்லாமே
ஒரு வியாதி தான்.
இழந்தவர்கள் தான் அதிகம். அவர்கள் குடும்பத்தை இறைவன் தான் காக்க வேண்டும்.

கோமதி அரசு said...

நாங்களும் நயகராவை காலை, மாலை இரண்டு நேரமும் இரண்டு நாள் பார்த்தோம். நினைவுகள் அருமை.

ஆட்டத்திலே பலவகை உண்டு, பாடல் கேட்டேன்.

பாகபிரிவினை படம் பல நல்ல கருத்துக்களை கொண்ட படம். குடும்ப ஒற்றுமையை , மற்றும் பல தீமைகளை அதனால் ஏற்படும் துன்பங்களை சொல்லும் படம்.

மாத்திரையை மறந்து விட்டது கஷ்டம் அப்புறம் என்னாச்சு ? தொடர்கிறேன்.

Geetha Sambasivam said...

நான் பெட்டியோடு எடுத்து வைச்சுண்டுடுவேன். முக்கியமாய் வயிற்றுக்கான மாத்திரைகள். இல்லைனா பயணம் பயணம் தான்.:))))) தொடர்ந்து படிக்கக் காத்திருக்கேன்.

Thulasidharan V Thillaiakathu said...

முதல் படமும், வானவில் இருக்கும் படமும் மிக அருமை.

நயாகரா இணையத்தில் பார்த்திருக்கிறேன். உங்கள் அனுபவங்கள் சுவாரசியமாக இருக்கின்றன.

மாத்திரைக்கு அப்புறம் என்ன செய்தீர்கள்?

சூதாட்டம் என்பது ரொம்ப மோசமான விஷயம். எத்தனையோ பேர் தங்கள் பணத்தை எல்லாம் இழந்து நடுத் தெருவிற்கு வந்திருக்க்றார்கள்.

பயணம் பற்றி அடுத்து அறிய ஆவல்

துளசிதரன்

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதா ரங்கன் மா,
என்றும் நலமுடன் இருங்கள்.

பயணங்களின் போது அப்பாவின் பெட்டி கச்சிதமாக
எடுத்து வைத்து மூடி வைப்பார். நான் தான் லாஸ்ட் மினிட்
சேர்க்கையாக மருந்துகள் வைப்பேன். அப்போதெல்லாம்
மூன்று மாதங்களுக்கான மருந்து வாங்கி வருவேன்.
200 பிபி
100 கொலஸ்டிரால்,
200 க்ளூகோபே
100, ஜனுவியா.
வாராவாரம் தனி டப்பாவில் போட்டு வைத்துக் கொள்வேன்.
இந்தச் சின்னது பெட்டியில் வைத்ததை
நொடியில் தூக்கி பின்னால் போட்டிருக்கிறான்.
அதைக் கவனிக்காமல் கிளம்பற அவசரத்தில்
கிளம்பி விட்டேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதிமா,
வாழ்க வளமுடன்.
''நாங்களும் நயகராவை காலை, மாலை இரண்டு நேரமும் இரண்டு நாள் பார்த்தோம். நினைவுகள் அருமை.''

ஆமாம் மா. அங்கே இரண்டு நாட்களாவது தங்க வேண்டும்.
நிறைய இடங்கள் பார்க்க வேண்டும்.
அந்த அருவியின் அருகில் நின்று
எத்தனை மணித்துளிகள் வேண்டுமானாலும்
காணலாம்.
இறைவன் அருளால் நமக்கு அங்கே போக முடிந்தது.

மாத்திரைக்காக சிரமப் பட வேண்டி வந்தது. இங்கே இருக்கிற
டாகடர் மனம் இறங்கி 20 எண்ணிக்கை எழுதிக் கொடுத்தார்.
அவர் சொல்லி, டெட்ராய்ட்டில் வாங்கி
சாப்பிட்ட பிறகுதான் பட்படப்பு அடங்கியது.

வெளியே சொன்னால் அவ்வளவு எல்லோராலும் ரசிக்க முடியாது.நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

ஹைஃபைவ்! இன்றைய என் பதிவிலும் இந்த கூகுள் மேப்ஸ் பற்றிய ஒரு விஷயம்தான்!!!!!!''

அன்பின் கீதா ரங்கன் பார்த்தேன் மா. மீண்டும் படிக்கணும்.
அந்த ரெட்டை வானவில்லும் , ப்ளேன் இறங்குவதையும் ஹோட்டல்
ஜன்னல் வழியே எடுத்தேன். கொட்டின மழைக்குப் பின் வந்த வான்வில் ரொம்ப அழகாக இருந்தது.

நம்மூரிலும் சாலை விபத்தில், கவனம் ஆகத்தான் இருக்கிறார்கள். வேண்டாத செய்திகள் காதில் விழுந்த வண்ணம் தான்
இருக்கிறது. இந்தப் பெரிய டிரக் விழுந்திருந்த விதம்
பயங்கரமாக இருந்தது. யாருக்கும் அடி இல்லை நல்ல வேளையாக.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா, ஹஹ்ஹா. அந்த மாத்திரை இல்லாமல் வெளியே கிளம்ப முடியுமா.
அதுவும் நமக்கு இடும்பை கூர் வயிறாயிற்றே.:)

இரண்டு நாட்கள் பயணமோ ஒரு வாரப் பயணமோ அது முதலில்
கைப்பையில் போட்டிக் கொண்டு விடுவேன். நடமாடும் மருந்துக்கடை :)
நன்றி மா.

மாதேவி said...

நயகரா தொடர் இனிதாக செல்கிறது. தொடர்கிறேன்.

வெங்கட் நாகராஜ் said...

பயணத்திற்கான ஏற்பாடுகள்,வசதிகள் என் தகவல்கள் அனைத்தும் சிறப்பு. தொடர்கிறேன் அம்மா.