Blog Archive

Thursday, March 31, 2022

சில செய்திகள் அங்கும் இங்கும்

இன்று பங்குனி அமாவாசை. இந்த
 நன்னாளில் தொடங்கப்படும் அனைத்துக்
காரியங்களும் வெற்றி பெற இறைவனின் அருள் 
கிடைக்கப் பிரார்த்தனைகள்.

உகாதி பண்டிகைக்கான வாழ்த்துகள்.
பாட்டி விமரிசையாகக் கொண்டாடும் பண்டிகை.

பெற்றோர்களுடன் இருந்தபோது உகாதி 
கொண்டாடிய வழக்கம் இல்லை.
சென்னையில் இருப்பவர்கள் மிக உத்சாகத்துடன் 
கொண்டாடுவதைப் பார்த்திருக்கிறேன்.
திருப்பதியும் ஆந்திரப் பிரதேசமும்
சென்னையுடன் இருந்ததால் இந்த வழக்கமும் 
வந்திருக்கவேண்டும்.

அதிக மகிழ்ச்சி அதிக நேர் எண்ணங்கள் இப்படித்தான்
இந்த விழாவை நான் பார்க்கிறேன்.
சென்னைத் தோழிகளை அன்புடன் வாழ்த்துகிறேன்.
அவர்கள் வீட்டிலிருந்து வரும் போளிகளையும்
மனதில் எண்ணி சுவைக்கிறேன்:)

சுலபமாகப் போளி செய்யும் முறையைத்
தினமும் மணமும்  யூடீயூப் இணைப்பில்  
பார்த்தேன். 
கடலை மாவு, வெல்லம், கொஞ்சம் மைதாமாவு,தேங்காய்ப் பொடி,ஏலக்காய் தூள்
சேர்த்துக் கரைத்து,(ஆமாம் கரைத்து)ப்
போளியைத் தோசைக்கல்லில் ஊற்றி செய்தார்கள்.
பார்க்க
நன்றாகத் தான் இருந்தது . அதுவும் நெய் ஊற்றி
இரண்டு பக்கத்தையும் பொன்னிறமாக
எடுத்தார்கள்.
இங்கும் அதை செய்து பார்க்க வேண்டும்.





பழைய படப் பாடல்கள் மனதுக்கு மிக இனிமை. அண்மையில்
நடிகர் ரஞ்சன்(பழைய நடிகர்)  அவர்களின் 
வாழ்க்கை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களைப்
படித்தேன்.
என் மாமியாரின் பிறந்து வீட்டுக்குப்
பக்கத்தில் அவர் இருந்ததாகவும், மாடவீதிகளில்  அவர்
குதிரையில் சவாரி(மெதுவாகத்தான்) செய்த
விவரங்களையும் ஆனந்தமாகச் சொல்வார்,.
திரை உலகின் நெளிவு சுளிவுகளை அறியாத
திறமைசாலி சில படங்களில்
மட்டும் நடித்திருக்கிறார். 
பிறகு மும்பை சென்று விட்டாராம். சிறுவயதில்
மனத்தில் படிந்த நல்ல பாடல்களில் ஒன்றை
மேலே பதிந்தேன். வீர சாகசமும்,நேர்மையும்
எப்பொழுதுமே மனதை ஆட்கொள்ளும் இல்லையா!!!

வல்லிசிம்ஹன்

   அன்பின் அனைவருக்கும் 
 யுகாதித் திரு நாள்  வாழ்த்துகள். இறைவன் அருள் என்றும் கூடி நம்முடன் நிற்கவேண்டும்.

சென்னை மற்றும் தமிழகத்தின் எல்லா இடங்களிலும்
வெய்யிலின் தாக்கம் அதிகமாக
இருப்பதாகப் படிக்கிறேன்.
இந்த வட அமெரிக்காவிலேயே ஒரு பக்கம் வெய்யில்,ஒரு பக்கம் மழை காற்று சேதம், இந்த ஊரில் குளிர்.
எல்லாவற்றையும் கடப்போம்.
இறைவன் அருளால் தமிழகத்தில் நல்ல மழை பெய்து வெப்பம் தணிய வேண்டும்.


நம் ஊருக்கு வர வேண்டும் என்ற எண்ணம்
எப்போதும் உண்டு.
சந்தர்ப்பம் கூடி வரவேண்டும்.
தொற்று பற்றி பயம் இல்லாமல் தான் இப்போது அனைவரும் நடமாடுகிறார்கள்
என்று தோன்றுகிறது.

நேரம் கூடி வந்து அனைத்து நட்புகளையும்
காண ஆவல். 
லஸ் வினாயகரே என் கோரிக்கையை
நிறைவேற்ற வேண்டும். 

ஜூன் மாதத்திலிருந்து நிலத்தடி மெட்ரோவுக்கான
வேலைகள் தொடங்கப் போவதாகச் சொன்னார்கள்.
நம் வீட்டுக் காம்பவுண்டிருந்து இருபதடி தூரத்திலிருந்து 
வேலைகள் ஆரம்பிக்கும். அந்தப் பக்கம் இருக்கும் கட்டிடங்கள்
பாதிக்கப் படும்.

வீடுகள் கட்டிக் குடி வந்தவர்கள் கதி என்ன என்று 
யோசிக்க மாட்டார்களா.
பக்கத்துவீடு ,அதற்கப்புறம் இருக்கும் அடுக்கு மாடிக் 
குடி இருப்பு எல்லாமே பாதிக்கப் படும்.
அத்தனை குடும்பங்களுக்கும் என்ன வழி செய்யப் 
போகிறார்களோ .

இறைவன் காக்க வேண்டும்.

28 comments:

நெல்லைத் தமிழன் said...

நீங்கள் எழுதியது ரசனைக்குரியதாக இருக்கிறது.

போளி - ஆஹா... பெங்களூரில் போளி ஸ்டால்கள் நிறைய உண்டு. எல்லாமே ஸ்டாண்டர்டாகவும் 20-30 ரூபாய் ரேஞ்சிலும் இருக்கும். ஆனால் கடந்த 9 நாட்களாக இனிப்பு, பொரித்தது எதுவும் கிடையாது.

உங்களுக்கும் உகாதி வாழ்த்துகள்.

இந்த முறை தமிழ் வருடப்பிறப்புக்கு நான் (அதையொட்டிய நாலு நாட்கள்) பிரபந்தம் சேவாகாலத்துக்காக விழுப்புரம் செல்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

'' கடந்த ஒன்பது நாட்களாக இனிப்பு,பொரித்தது ஒன்றும் கிடையாதா''
ஏன்மா முரளி?

சென்னையைச் சுற்றியே நினைவுகள் செல்வதால் என்னவோ எழுதினேன்.
Random thoughts.

போளி உச்சரிப்பில் கூட எனக்கு சந்தேகம் வரும்.:)

Bo or Po?
பாராட்டுகளுக்கு மிக நன்றி மா.
என்றும் நலமுடன் இருங்கள்.பிரபந்தம் சேவிக்கப் போகிறீர்களா. மஹா புண்ணியம்.
விழுப்புரத்தில் என்ன விசேஷம்.?

வெங்கட் நாகராஜ் said...

PoLi எனக்கு மிகவும் பிடித்த இனிப்பு. நிலத்தடி மெட்ரோ நிலையம் வருவது நல்ல விஷயம் என்றாலும் அங்கே வீடு கட்டி கொண்டிருப்பவர்களுக்கு எந்த பிரச்சனையும் வராமல் இருந்தால் நல்லது. நல்லதே நடக்கட்டும்

வல்லிசிம்ஹன் said...

அன்பின் வெங்கட்,
என்றும் நலமுடன் இருங்கள்.
போளி உச்சரிப்புக்கு நன்றி:)

நம் வீட்டிற்கு வந்திருக்கிறீர்களே மா நீங்க.
அந்த சாலையே இருபதடி கூட இருக்காது.
80 களின் நடுவில் தான் ஒரு வழிச்சாலை ஆனது.
சாலியோர வீடுகளில் விரிசல் வருகிறது என்று
உணர்ந்த பிறகே அப்படிச் செய்தார்கள்.

இரண்டு மருத்துவமனைகளூக்கும் வரும்
தண்ணீர் லாரிகளின் அட்டூழியம்
சொல்லி முடியாது.

நிலத்தடி டெலிஃபோன் லைன், தண்ணீர் குழாய்கள், மின் கம்பிகள்/
இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.
பார்க்கலாம். நல்லது நடக்கட்டும்.
நன்றி மா.

ஸ்ரீராம். said...

நாளை யுகாதி.  போளி கரைத்து  ஊற்றி பார்த்ததில்லை.  ஆனால் அதில் கடலை மாவு அதிகம் இருக்க வேண்டுமா?  ரஞ்சன் பற்றி நானும் படித்திருக்கிறேன்.  குதிரையேற்றம், வாட்பயிற்சி எல்லாம் முறையாகக் கற்றவர்.  பெரும்படிப்பு படித்தவர் என்று நினைவு.  சாத்தியமே லட்சியமாக கொள்ளடா பாடல் அருமையான பாடல் 

ஸ்ரீராம். said...

வெய்யில் குறையவேண்டும்.  வெப்பம் குறையவேண்டும்.  மார்ச்சிலேயே இப்படி கொளுத்தினால் மே என்ன ஆகும்?  சமயங்களில் அப்போது குளிர்ந்ததும் இருக்குமோ என்னவோ!  மெட்றாஸ் நல்ல மெட்ராஸ் தான்!

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஶ்ரீராம்.நலமுடன் இருங்கள்.உங்களுக்கு அந்த ரெசிப்பி அனுப்புகிறேன் மா.ரஞ்சன் பற்றி மாமியார் ரொம்ப உசத்தியாகச் சொல்வார். நல்ல நடிகரும் கூட. தான் வளரும் பொது பேசின தமிழ்accent விட முடியவில்லை அவரால்:) சாதுர்யம் போதாது.நன்றி மா

ஸ்ரீராம். said...

இரண்டு கமெண்ட்ஸ் போட்டேனே...

ஸ்ரீராம். said...

மீண்டும்...

வெப்பம் குறையவேண்டும்.  மார்ச்சிலேயே இவ்வளவு வெப்பம், வெக்கை இருந்தால் மே மாதம் என்ன ஆகும்?  ஒருவேளை குரலிருந்து போகுமோ...   மெட்றாஸ் நல்ல மெட்ராஸ் தான்.

வல்லிசிம்ஹன் said...

இரண்டும் இப்போதாம்மா வந்ததுமா.
வெக்கை அக்னி நட்சத்திரத்தின் போது கண்டிப்பாக மழை வரும்.

இரண்டு தடவை ஒரே கமெண்ட் வந்திருக்குமா.

ஏப்ரில் பத்துக்குள் ஒரு மழை வரும்னு சொன்னார்கள்.

வெக்கை விலகி சென்னை குளிரட்டும்.

வல்லிசிம்ஹன் said...

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் தான் மனிதர்கள் மாறிவிட்டார்கள். மிக நன்றி ஶ்ரீராம்.

கோமதி அரசு said...

உகாதி பண்டிகை வாழ்த்துகள்! வாழ்க வளமுடன்.
பாடல்கள் அருமையானவை.
தேயிலை தோட்டம் தெரிகிறது நீலமலை திருடன் பாடலில்.
ரஞ்சன் பற்றி நானும் படித்து இருக்கிறேன்.

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் பட பாடலில் வரும் மெட்ராஸ்க்கும் இப்போ உள்ள மெட்ராஸ்க்கும் எவ்வளவு வித்தியசம் இருக்கிறது.

இப்போது கண்ணதாசன் இருந்தால் எப்படி பாடி இருப்பாரோ!

உங்கள் விருப்பத்தை லஸ் வினாயகர் நிறைவேற்றி வைப்பார்.

குடியிருப்புகள் பாதிக்கபடாமல் இருக்க வேண்டும். பிரார்த்திப்போம்.

Thulasidharan V Thillaiakathu said...

உங்கள் நினைவுகளைச் சொன்ன விதம் அருமை.

சென்னையில் உங்கள் வீட்டருகில் நிலத்தடி மெட்ரோவா? வீட்டிற்குச் சேதம் இருக்காதுதானே?

திரு ரஞ்சன் பற்றியும் கொஞ்சம் தெரியும்.

யுகாதி வாழ்த்துகள்.

துளசிதரன்

Thulasidharan V Thillaiakathu said...

அம்மா யுகாதி வாழ்த்துகள்! நம் வீட்டில் இரு வீட்டிலுமே யுகாதி கொண்டாடுவார்கள்.

திருக்குறுங்குடியில் கோயிலில் கொண்டாடுவார்கள். நம் வீட்டு உபயம். அப்பா அங்கிருந்த வரை சென்று வருவார். அப்பாவும் அவர் மாமாவும் உபயம். மாமாதாத்தா இல்லை. அவரின் குழந்தைகள் செய்கிறார்களா என்று தெரியவில்லை. இந்த வருடம் அப்பா நேரில் செல்ல முடியாததால் பணம் மட்டும் அனுப்பப்படும்.

முன்பு ஊரில் இருந்தவரை அப்பா திருக்குறுங்குடி போய் வரும் வரை நாங்கள் எல்லாரும் (கூட்டுக் குடும்பம்) புளியோதரைக்காகக் காத்திருப்போம். ராத்திரி 10, 11 ஆகிவிடும் இருந்தாலும் கொஞ்சம் சாப்பிட்டுவிட்டுப் படுப்போம் மீதி அடுத்த நாள் காலையில் பிரேக்ஃபாஸ்ட் சுவைத்து அதுவும் திருக்குறுங்குடி புளியோதரை பிரமாதமாக இருக்கும். தனியா மிளகு, எள்ளு எதுவும் போடாத புளியோதரை. அக்மார்க்!!!! நல்லெண்ணையில் ஊறி...ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

இப்பவும் ராமாநுஜன் மாமாதான் செய்கிறாரா என்று தெரியவில்லை.

போளி செய்வதுண்டு. செய்தேன் கொஞ்சமே கொஞ்சம்...வேலைகள் வந்திருக்கு வேலைப் பளு அம்மா அதனால் ஓடுகிறென்

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

போளி கரைத்து ஊற்றியா? அட பார்க்க வேண்டுமே...சரி குறித்துக் கொள்கிறேன் வேலை முடித்த பிறகுதான் பார்க்க வேண்டும்.

ரஞ்சன் பற்றி தெரியாது அம்மா. பார்க்கிறேன்

ஆ கடைசியில் வீட்டருகில் நிலத்தடி மெட்ரோ வருகிறதா....அந்தப் பகுதியில் இருப்பவர்கள் எல்லாம் எங்கே போவார்கள்...என்னவோ போங்க

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

pOளி தான்...

கீதா

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதிமா,
என்றும் வாழ்க வளமுடன்.

நீங்கள் சொல்வது உண்மைதான்.
1969 இன் சென்னை வேறு.
53 வருடங்களில் எத்தனையோ மாற்றம்.
கட்டிடங்கள் எழும்பி வானத்தை, சூரியனை,நிலவை மறைக்கின்றன,
இந்தத் தலைமுறைக்குக் கிடைத்த அனுபவம் அவர்கள் குழந்தைகளுக்குக்
கிடைக்குமா தெரியவில்லை.


முன்னை விட அழுக்கு அதிகம்.
புகை,சத்தம் எல்லாமே கூடிவிட்டன. நம் வீட்டுக்கு வரும் குயிலாவது
இருக்க வேண்டுமே என்று தோன்றுகிறது.

மெற்றோ பற்றி சொல்ல எனக்குத் தெரியவில்லை. நீர் நிலைகள்
பாதிக்கப் படும் என்கிறார்கள்.
நீங்கள் சொல்வது போல லஸ் பிள்ளையார் தான் கவனிக்க வேண்டும். நன்றி மா.


வல்லிசிம்ஹன் said...

அன்பின் துளசிதரன்,
என்றும் நலமுடன் இருங்கள்.

''சென்னையில் உங்கள் வீட்டருகில் நிலத்தடி மெட்ரோவா? வீட்டிற்குச் சேதம் இருக்காதுதானே?

திரு ரஞ்சன் பற்றியும் கொஞ்சம் தெரியும்.''

ஆமாம் மா. தண்டையார்பேட்டையிலிருந்து ஆரம்பித்து
கிண்டி வரை செல்வதாக ஏற்பாடு. திட்டம்.
நம் வீட்டுக்குப் பக்கத்தில் ரயில் நிலையம் காட்டுகிறார்கள்.
கீழே ரயில் பொகப் போகிறது.
ஒரு பத்து வருடங்களாவது ஆகும் எல்லாம் முடிக்க.
இறைவன் விட்ட வழி.

வல்லிசிம்ஹன் said...

''போளி ''தான்.
நன்றி அன்பின் கீதாமா,.

வல்லிசிம்ஹன் said...

@Geetha Rangan,

திருக்குறுங்குடியிலும் கொண்டாடுவார்களா.

தெரியாமல் போச்சே மா.
ஒஹோ. அதுதான் அம்மாப்பாட்டி கொண்டாடி இருக்கிறார்.
நன்றி ராஜா,

''திருக்குறுங்குடியில் கோயிலில் கொண்டாடுவார்கள். நம் வீட்டு உபயம். அப்பா அங்கிருந்த வரை சென்று வருவார். அப்பாவும் அவர் மாமாவும் உபயம். மாமாதாத்தா இல்லை. அவரின் குழந்தைகள் செய்கிறார்களா என்று தெரியவில்லை. இந்த வருடம் அப்பா நேரில் செல்ல முடியாததால் பணம் மட்டும் அனுப்பப்படும்.''

ஊரைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை பாருங்கள்.

அப்பாகூட மாதாமாதம் கோவிலுக்குப்
பணம் அனுப்புவார்.
திருமணம் ஆனபிறகு என் கவனம்
கும்பகோணத்திற்கு திரும்பி விட்டதுமா.
உங்கள் அப்பாவுக்கு என் அன்பு வாழ்த்துகள்.



வல்லிசிம்ஹன் said...

என் அம்மா செய்யும் புளியோதரையும்

மிளகு ,தனியா எல்லாம் கிடையாது.
நல்லெண்ணையில் கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு ,சிகப்பு மிளகாய்
தாளித்து,
மஞ்சள் பொடி போட்டு புளி கரைத்து வீட்டுக் கொதிக்க வைப்பார். கீழே
இறக்கும் போது மஞ்சள் பொடி,
வறுத்துப் பொடித்த மெந்தியம்
போட்டு ஆறினபிறகு பச்சை நல்ல எண்ணெய் விடுவார்.
கெடவே கெடாது.

வல்லிசிம்ஹன் said...

ஆ கடைசியில் வீட்டருகில் நிலத்தடி மெட்ரோ வருகிறதா....அந்தப் பகுதியில் இருப்பவர்கள் எல்லாம் எங்கே போவார்கள்...என்னவோ போங்க....


hmmm. Thats the way it is kannaa.

Geetha Sambasivam said...

இந்தப் பதிவு வந்ததே தெரியலை. இப்போத் தான் பார்த்தேன். அருமையாக எழுதி இருக்கீங்க. என் பிறந்த வீட்டில் யுகாதி கொண்டாடும் வழக்கம் உண்டு. தாம்/தூம் எனக் கொண்டாடுவார்கள் என்றே சொல்லலாம். இப்போல்லாம் அண்ணா/தம்பி என்ன செய்யறாங்களோ தெரியலை. உங்கள் வீட்டருகே மெட்ரோ வருவது ரொம்பவே பிரச்னை தான். என்னவோ! என் மாமியாரும் உங்க அம்மா மாதிரி வெறும் தாளிப்புச் சேர்த்துத் தான் புளிக்காய்ச்சல் காய்ச்சுவார். என் அம்மா அந்த நாட்களிலேயே தனியா, எள், வெந்தயம், கொஞ்சம் போல் மிளகு வறுத்துப் பொடித்துச் சேர்ப்பார். எதுவாக இருந்தாலும் நமக்கு உள்ளே இறங்குமே!

Geetha Sambasivam said...

ரோபோ என்னோட கருத்தை ஏற்கவே இல்லைனு நினைக்கிறேன். மறுபடி அப்புறமா வந்து பார்க்கிறேன். :(

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,
பதிவு போடறதை எல்லாம் ஒரு கணக்கு இல்லம்மா.
பார்த்ததைச் சீக்கிரம் பதிகிறேன்.
அப்படியும் ஸ்ரீரங்கனாதர் ஏள்ளின நாள்
பதியாமல் அப்படியே இருக்கிறது.
சாப்பிட்டவுடனே வரும் வயிற்றுவலி
கவனத்தைத் திருப்பி விடுகிறது.

நீங்கள் எத்தனையோ வேலைகளுக்கு நடுவில் வரவேண்டி இருக்கிறது.
அதனால பரவாயில்லைமா.

எங்க வீட்டிலயும் அம்மா பாட்டியும், சிம்மு பாட்டியும் சிறப்பாகக்
கொண்டாடுவார்கள்.
மதுரைப் பாட்டி ஒரு பாயசத்தோடு நிறுத்திக் கொள்வார்:)

வல்லிசிம்ஹன் said...

''''என் அம்மா அந்த நாட்களிலேயே தனியா, எள், வெந்தயம், கொஞ்சம் போல் மிளகு வறுத்துப் பொடித்துச் சேர்ப்பார். எதுவாக இருந்தாலும் நமக்கு உள்ளே இறங்குமே!'''


அதுதான் அம்மா கை மணம்

என்ன செய்தாலும் நம் வயிற்றுக்கு இதமாக இருக்கும்.
நன்றி கீதாமா.

Geetha Sambasivam said...

காலம்பர ரோபோ தொந்திரவு தாங்கலை. ரஞ்சன் பற்றிச் சொல்ல நினைச்சுச் சொல்லலை. அவருடைய படங்கள் பார்த்ததே இல்லை. நீலமலைத் திருடன் அவர் படம் என்பதோ இந்தப் பாடல் அந்தப் படத்தில் என்பதோ இப்போத் தான் தெரிந்து கொண்டேன். லாயிட்ஸ் ரோடு, சென்னையில் ஒரு பக்கம் முழுக்க அவரோட வீடுகள்/கடைகள் என இருந்தன. இப்போ அவை எல்லாம் இருக்கின்றனவோ இல்லையோ? ரஞ்சன் எனப் பெயர் பெரிதாகப் பொறித்திருக்கும். காப்டன் ரஞ்சன் என்றும் சொல்வார்கள் போலவே!

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,
ரொம்ப நன்றி.

1918 இலியே பிறந்திருக்கிறார். அதனால தான் மாமியாருக்குத் தெரிந்திருக்கிறது.
அதே லாயிடஸ் ரோடில் சாரதா விலாஸ் என்ற பங்களோவில் தான்
சேஷயங்கார் தாத்தா இருந்திருக்கிறார்.
கமலம்மா தங்கை கல்யாணத்துக் கூட வந்திருந்தாராம்:)

நான் அவரைத் திரையில் பார்த்தது திருமங்கலத்தில்.
நல்ல படிப்பாளி.

65 வயதிலேயே இறந்து விட்டதாகவும் சொல்வார்.

வசீகரமான முகம். நீலை மலைத் திருடன், மின்னல் வீரன், சந்த்ரலேகா
இவைதான் என் நினைவில்:)