Blog Archive

Sunday, March 27, 2022

மலைக் கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயில்


 லஸ் வினாயகர்.




   வெள்ளாளத் தெரு கற்பக வினாயகர்.

திண்டுக்கல் வெள்ளை வினாயகர்
  திருமங்கலம் சொக்க நாதர் மீனாக்ஷி கோவில்

15 comments:

Geetha Sambasivam said...

ஆஹா! எல்லாப் பிள்ளையார்களும் மொத்தமாக இங்கே வந்துட்டாங்க போல! அருமை! மலைக்கோட்டைக்கு ஏறுவதை எல்லாம் இனிமேல் நினைச்சுக் கூடப் பார்க்க முடியாது. :(

ஸ்ரீராம். said...

உச்சிப்பிள்ளையார் கோவில் சென்றிருக்கிறேன்.  பிரம்மா கோவிலைச் சுற்றிக் காண்பித்த அதே இளைஞர்கள்...!  இன்று என்ன பிள்ளையார் சதுர்த்தியா?  ஏகப்பட்ட பிள்ளையார்கள்!  உங்கள் ஊர் ராஜ்டிவி விநாயகரை விட்டு விட்டீர்கள்!

கோமதி அரசு said...

பிள்ளையார் எல்லோருக்கும் நல்லருள் புரியட்டும்.
உச்சி பிள்ளையார் கோயில் இப்போது பல மாற்றங்கள் அடைந்து இருக்கிறது. இவர் போனது 2020 ல் போய் இருக்கிறார் போலும். அன்று தொலைக்காட்சியில் காட்டினார்கள். நிறைய மாற்றங்கல் ஏற்பட்டு இருக்கிறது.

எல்லா பிள்ளையார்களையும் தரிசனம் செய்து கொண்டேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,
பிள்ளையார் நிறைய கனவில் வருகிறார்.
அதை எழுதிப் பதிவை வெளியிட நினைத்திருந்தேன்.

எழுதத் தாமதமாகத் தானாகப் பப்ளிஷ் ஆகிவிட்டது.மா.

தாமிர பரணிப் பிள்ளையாரும், அரஸரடிப் பிள்ளையாரும் ஒரு
பாடலும் விட்டுப் போய் விட்டது மா.

என்றும் காக்கும் கடவுள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம்,
நலமுடன் இருங்கள்.

ஒன்றும் விசேஷம் இல்லைமா.
எந்தப் பிரச்சினைக்கும் அவரை நினைப்பது
வழக்கமாகி விட்டது.
நாலைந்து நாட்களாக உஷ்ண வயிற்று வலி.

சும்மா வலி வலி என்று புலம்ப வேண்டாம் என்று
அவரைப் பதிவேற்றினேன்.
அதில் லஸ் பிள்ளையார் பாட்டு விட்டுப் போய் விட்டதுமா.
நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதிமா,
வாழ்க வளமுடன்.
தெரு முனைப் பிள்ளையாரிலிருந்து
எல்லாப் பிள்ளையார்களையும் வழிபட்டு,
எப்பொழுதும் அவர் கருணையோடே
வாழ்ந்து வழக்கமாகி விட்டது.

பிரச்சினைகளை எல்லாம் அவர் தீர்க்க வேண்டும் . தீர்ப்பார்.

நமக்கு வேறு ஏது கதி.
நலமுடன் இருங்கள் அம்மா.

Bhanumathy Venkateswaran said...

ஆஹா! பிள்ளையார் என் இஷ்ட தெய்வம்.

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

பதிவு அருமை. எல்லா பிள்ளையாரையும் பக்தியுடன் வணங்கி கொண்டேன்.உச்சிப் பிள்ளையார் கோவில் தரிசனம் கண்டு கொண்டேன். லஸ் பிள்ளையாரையும் நீண்ட வருடங்களுக்குப் பின் தரிசனம் செய்து கொண்டேன். பிள்ளையார் என் இஷ்ட தெய்வம்.(முக்கால்வாசி அனைவருக்குமே அவர்தான் இஷ்ட தெய்வம்.அதில் சந்தேகமில்லை.) தொடங்கிய எந்த ஒரு செயலையும் இவர் அருளில்லாமல், தொடர்ந்து செய்ய இயலுமா? அனைவரையும் விக்கினேஷ்வரன் நலமுடன் காக்க வேண்டுமென பிரார்த்தித்துக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் பானுமா,
எளிய இனிய தெய்வம் நம் பிள்ளையார்.
பயமுறுத்த மாட்டார்.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கமலாமா,
என்றும் நலமுடன் இருங்கள்.

அந்தக் குழந்தை தெய்வம் எப்போதும் தும்பிக்கையை நீட்டி
அணைத்துக் கொள்வார்.
''தொடங்கிய எந்த ஒரு செயலையும் இவர் அருளில்லாமல், தொடர்ந்து செய்ய இயலுமா? அனைவரையும் விக்கினேஷ்வரன் நலமுடன் காக்க வேண்டுமென பிரார்த்தித்துக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.''

பிள்ளையார் சுழி பதியாமல் லிஸ்ட் கூடப் போடத்தெரியாது.
விக்னம் இல்லாமல் அவர் அருளால் வாழ்வு தொடர வேண்டும்.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம்,
என்றும் நலமுடன் இருங்கள்.

லஸ் வினாயகர் பாட்டு அடுத்த பதிவில் மா.
தினம் தினம் கேட்ட பாடலாச்சே.

தேவேந்திரன், ராஜேந்திரன் என்று ராஜ் டிவி
உரிமையாளர்கள் பெயர்கள் வரும்.:)

Thulasidharan V Thillaiakathu said...

அம்மா ஆ மிஸ் பண்ணிவிட்டேனே நம்ம தோஸ்ட் போஸ்டை!!! உச்சிப்பிள்ளையார் கோயில், போயிருக்கிறேன், லஸ் கார்னருக்கும்

பிள்ளையார்ப்பட்டி போயிருக்கிறேன்.

கீதா

வெங்கட் நாகராஜ் said...

மிகவும் பிடித்த கோவில் உச்சி பிள்ளையார் கோவில்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,
ஆஹா. நான் கூட உங்களைப் பார்த்திருக்கலாம்.
நம் செல்லப் பிள்ளையார் எல்லோருக்கும்
நன்மை செய்வார்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் பா. கலங்கரை விளக்கம் மாதிரி
அந்த மலை உச்சி விளக்கும், ஸ்ரீரங்க கோபுர ஒளியும்
வழி காட்டும். நன்றி மா.