Blog Archive

Thursday, March 24, 2022

சீர்காழிக்கும் சௌந்தரராஜனுக்கும் வந்தனங்கள்.

வல்லிசிம்ஹன்

#GomathyArasu.

அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்.

என்றும் எல்லோரும் நலமுடன்
வாழ  இறைவன் அருள்.

இன்று முக நூலில் ஒரு சகோதரியின் பதிவில்
வானொலி, சினிமா இவைகள் நம் வாழ்வை
இனிமையாக்கின தருணங்களைப்
பற்றி எண்ணங்கள் பரிமாறிக் 
கொள்ள வாய்ப்பு கிடைத்தது.

வாழ்வின் அரிய பொக்கிஷமான நாட்கள் நம்
இளமைக் காலம்.

அங்கிருந்து வெளியே வந்தால் நம் அன்பு#கோமதி அரசின்
பாடல் பதிவு.
திரு சீர்காழி கோவிந்தராஜன் இறையடி இணைந்த நாள்.
திரு டி எம் சௌந்தரராஜன் பிறந்த நாள்.
மனம் நிறை இசையை நமக்கு வழங்கியவர்கள்.

இருவரும் இணைந்து முழங்கிய தமிழ்ப்
பாடல்கள் முருகனோடு நம்மை இணைத்தவை.
சீர்காழியின் பிள்ளையார் பாடல் கணபதியே 
பாடல் தினமும் என்னை மகிழ்வித்த வருடங்களை
நன்றியுடன் நினைக்கிறேன்.
அதே போல உள்ளம் உருகுதையாவைப் 
பாடி உருக வைத்த டி எம் எஸ் அவர்களுக்கும் 
மனம் நிறை நன்றி.

அன்பின் திருமதி பக்கங்கள் கோமதிக்கு என்றும் நன்றி.

   என் பெற்றோர் சென்னை பக்கத்தில் கல்பாக்கத்தில் இருக்கும்
போது அங்கிருக்கும் அன்னை காமாட்சி கோவிலில் தினமும் ஒலிபரப்பாகும்
பாடல்களைக் கேட்கும் நிறை பாக்கியம்
கிடைத்தது.
அம்மா குழந்தைகளை அருகில் வைத்துக் 
கொண்டு பாடச் சொல்வார்.
அவற்றில் சில பாடல்களைப் பதிகிறேன்.

சீர்காழியின் அபிராமி

டி எம் எஸ் சின் முருகா
இருவரும் இணைந்து கண்ணனை அழைத்த பாடல்.
பாடிய பெருந்தகைகளுக்கும், கேட்க செவிகளைக் 
கொடுத்த இறைவனுக்கும் மிக மிக நன்றியும்
நமஸ்காரங்களும்.
முக நூல் தோழி Jayanthi SJsrinivasan க்கும் நன்றி.

23 comments:

ஸ்ரீராம். said...

அங்கு கோமதி அக்கா பதிவில் ராமு படப்பாடல் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன்.  இங்கு நீங்கள் பகிர்ந்து விட்டீர்கள்.

கோமதி அரசு said...

அருமையான பாடல்கள்.
கேட்டு கேட்டு மகிழ்ந்த நாட்களை நினைத்து பார்க்கிறேன்.

வானொலி மட்டுமே இருந்த காலம் பொற்காலம்.
அருமையான பாடல்களை கேட்டு விட்டுத்தான் தூங்க போவோம்.

திருவெண்காடு கோவிலில் காலை சீர்காழி அவர்களின் அபிராமி அந்தாதி ஒலிக்கும் வீட்டிலிருந்து கேட்கலாம். மாயவர்த்தில் பிள்ளையார் கோயிலில் ஒவ்வொரு மாத சதுர்த்திக்கும் இரவு சீர்காழியின் விநயகர் அகவல்.
கணபதியே வருவாய், விநாயகனே விளை தீர்ப்பவனே! பாடல் ஆரம்பித்து அவர் பாடிய அத்தனை பிள்ளையார் பாடல்களும் ஒலிக்கும், கேட்போம்.

நீங்கள் பகிர்ந்த பாடல்கள் எல்லாம் அருமையான பாடல்கள்.
கேட்டு மகிழ்ந்தேன். ஒரு பாடல் மட்டும் youtube.com போய் கேட்டேன்.
நன்றி
வாழ்க வளமுடன்

கோமதி அரசு said...

ராமு படத்தில் இரண்டு பேரும் கண்ணன் வருவான் பாடிய போது அந்த ஊமை குழந்தை பேசிவிடாதா என்ற பதை பதைப்பு எழுந்தது எனக்கு.

அவ்வளவு உணர்ச்சி ததும்ப பாடி இருப்பார்கள்.

கோமதி அரசு said...

நினைத்த போது நீ வர வேண்டும் பாடல் என் அத்தைவீட்டு கொலுவிற்கு பாடினேன். (திருமணம் ஆகும் முன்.) அப்போது என் அக்காவிற்கு திருமணம் ஆன புதிது. நான் பள்ளி மாணவி.
கொலுவிற்கு அழைத்து இருந்தார்கள் என் அக்காவும், அத்தையும், அம்மாவுடன் போனேன்.
அப்போது பாடிய பாட்டு.

சாரும் கேட்டு நன்றாக இருந்தது என்று இன்னொரு பாடல் பாடு என்று கேட்டார்கள். அம்பலத்தரசே அருமருந்தே ! பாடினேன் கைதட்டினார்கள்.

அது நினைவுகளில் என்றும் நீங்கா இடம் பிடித்த இனிய நினைவுகள்.

அவர்களை தான் திருமணம் செய்வேன் என்று அப்போது தெரியாது.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம்,
நம் கோமதிக்குத் தான் நன்றி சொல்கிறேன்.
வாழ்வில் இது போல நல்ல செய்திகள் நிறைந்த
பாடல்களைக் கேட்க கொடுப்பினை வேண்டுமே!!
எல்லாம் இறைவன் அருள்.

அட!! நீங்களும் கண்ணனைச் சொல்லி இருந்தீர்களா!!!
போய்ப் பார்க்கிறேன்..

முருகனைத் துதிப்போம். கண்ணனையும் வேண்டுவோம்.
எல்லா நலங்களும் கிடைக்கட்டும்.
நலம் பெற வாழுங்கள் அப்பா.

KILLERGEE Devakottai said...

இருவருமே கடவுளின் குழந்தைகள் மரணித்தும் வாழ்பவர்கள் அம்மா.

எல்லாமே அருமையான பாடல்கள்.

வல்லிசிம்ஹன் said...

வானொலி மட்டுமே இருந்த காலம் பொற்காலம்.
அருமையான பாடல்களை கேட்டு விட்டுத்தான் தூங்க போவோம்.''

அன்பின் கோமதிமா,
வாழ்க வளமுடன்.
அதெல்லாம் ஒரு கனாக் காலமாகத் தெரிகிறது.

இப்போதும் நீங்கள் வானொலி கேட்பதே இனிமை.


''ராமு படத்தில் இரண்டு பேரும் கண்ணன் வருவான் பாடிய போது அந்த ஊமை குழந்தை பேசிவிடாதா என்ற பதை பதைப்பு எழுந்தது எனக்கு.''

மிகவும் உணர்ச்சி வசப்படுவோம் இந்தப் பாடலைக் கேட்டால்.

பாவம் அந்தக் குழந்தை. நடித்த சிறுவனும் நன்றாக
நடித்திருப்பான்.
உங்களுக்கு மிக இளகிய மனது மா.
வாழ்க வளமுடன்.


வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதிமா,

''திருவெண்காடு கோவிலில் காலை சீர்காழி அவர்களின் அபிராமி அந்தாதி ஒலிக்கும் வீட்டிலிருந்து கேட்கலாம். மாயவர்த்தில் பிள்ளையார் கோயிலில் ஒவ்வொரு மாத சதுர்த்திக்கும் இரவு சீர்காழியின் விநயகர் அகவல்.
கணபதியே வருவாய், விநாயகனே விளை தீர்ப்பவனே! பாடல் ஆரம்பித்து அவர் பாடிய அத்தனை பிள்ளையார் பாடல்களும் ஒலிக்கும், கேட்போம்.''

கோவிலுக்குப் பக்கத்தில் குடி இருந்தது எத்தனை உன்னதமான
காலங்கள்.
உங்கள் அனுபவங்களின் சிறப்பை இந்த வரிகளில்
பார்க்க முடிகிறது.
நமக்கு எல்லாத் துதிகளும் மனப்பாடம் ஆனது
இந்த ஒலிபெருக்கியின் உதவியால தான்.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதிமா,
ஓஹோ. அப்பொழுதே ஸார் தீர்மானித்திருப்பார்.

அண்ணா மனைவியின் குணமும்
அவரது தங்கையின் குரலும் அவரைக் கட்டிப்போட்டு விட்டதோ!!

''கொலுவிற்கு அழைத்து இருந்தார்கள் என் அக்காவும், அத்தையும், அம்மாவுடன் போனேன்.
அப்போது பாடிய பாட்டு.

சாரும் கேட்டு நன்றாக இருந்தது என்று இன்னொரு பாடல் பாடு என்று கேட்டார்கள். அம்பலத்தரசே அருமருந்தே ! பாடினேன் கைதட்டினார்கள்''

அரசே, அருமருந்தேவா. ம்ம்ம்ம்ம்ம். சரிதான்.
அந்த தெய்வமே வந்து தூது சென்று விட்டது.
அன்பின் கோமதிமா. மனம் நிறைய மகிழ்ச்சி.
வழிகாட்டிய தெய்வம் நல் வாழ்வு கொடுத்ததுமா.
என்றும் நலமுடன் இருங்கள்.

நெல்லைத்தமிழன் said...

இங்கு பகிர்ந்த பாடல்கள் சாகா வரம் பெற்றவை. பாடும்போது அவர்களுக்குத் தெரியுமா இவை இவ்வளவு புகழை அள்ளித்தரும் என்று.

நினைத்தபோது நீ வரவேண்டும் பாடல் உட்பட

வல்லிசிம்ஹன் said...

அன்பின் முரளிமா,
இனிய காலை வணக்கம்.

பாடும்போது அவர்களுக்குத் தெரிந்திருக்காது அப்பா.
பக்தி மேலிட்டுப் பாடும் பாடல்கள்
அந்தப் பக்திக்காகவே
பலம் சேர்க்கின்றன.
சாகாவரம் பெற்றவை தான் இந்தப் பாடல்கள்.

நலமுடன் இருங்கள் மா.

கோமதி அரசு said...

அரசே அருமருந்தே ! நான் இப்படி நினைக்கவில்லையே! நீங்கள் அழகாய் சொன்னீர்கள்
நன்றி.

Geetha Sambasivam said...

நல்லதொரு நினைவூட்டல். அருமையான பாடல் பதிவுகள். எதைச் சொல்வத்? எதை விடுவது? கண்ணன் வந்தான், அங்கே கண்ணன் வந்தான் பாடலும் எனக்குப் பிடிக்கும். அது "ராமு" படப் பாடல் என இப்போத் தான் உங்கள் மூலம் தெரிந்தது. முன்னெல்லாம் நானும் என் தம்பியும் குடும்பச் சூழ்நிலைகளால் மனம் வெதும்பிக் கொண்டிருக்கையில் எங்கிருந்தோ நம்பிக்கை ஒலி போல் இந்தப் பாடல் கேட்டுவிடும். இருவருக்கும் நம்பிக்கை தோன்றும். எல்லாம் சரியாகிவிடும் எனச் சொல்லிப்போம். சாப்பிட்டுட்டு மின்சாரம் இருந்தால் வரேன்.

Thulasidharan V Thillaiakathu said...

அம்மா இப்பதான் கோமதிக்கா பதிவு பார்த்து வந்தேன் அங்கும் அருமையான பாடல்கள் என்றால் இங்கும். சீர்காழி, டி எம் எஸ் பாடிய பாடல்கள் அதுவும் பக்திபாடல்கள் அனைத்துமே அருமையான பாடல்கள். திகட்டாதவை.

அதுவும் ஊரில் கோயிலில் சீர்காழியின் குரல் ஒலிக்கும்.

இவர்களின் பாடல்கள் இப்போதுவரை நாம் விரும்பிக் கேட்கிறோம், பல இடங்களிலும் கூட ஒலிக்கிறது. என்ன புண்ணியம் செய்தனரோ.

அருமையான பாடல்கள் அம்மா....கேட்டுக் கொண்டே டைப்புகிறேன்

கீதா

Geetha Sambasivam said...

அருமையான பகிர்வு. ராமு படப் பாடல் என்பது இன்னிக்குத் தான் தெரியும் என்றாலும் அந்தப் பாடல் ரொம்பப் பிடிக்கும்.மனதையே ஆறுதல் படுத்தும். அதிலும் சில சமயங்களில் மனம் ரொம்ப நைந்திருக்கையில் கண்ணீரே வந்துடும். கோமதி அரசுவுக்கு அவங்க மாமியார் அத்தையா? சொந்தம்? அல்லது மாமியார் என்பதால் அத்தை என்கிறாரா? ஆனால் கோமதி அரசு முன்னரே சொல்லி இருக்காங்க. அவரைத் தான் அரசு சார் அவர்களுக்குக் கல்யாணம் செய்து வைக்கணும்னு முன்னரே பேசிக் கொண்டதாகச் சொல்லி இருக்கார்.

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

நலமா? எப்படி இருக்கிறீர்கள்.? உங்கள் தளத்திற்கு வந்தே வெகு நாட்களாகி விட்டது. எபியில் இப்படி நாம் அடிக்கடி விசாரிப்பதோடு சரி... உங்கள் அன்பான விசாரிப்புகளுக்கும், என் நலம் குறித்த உங்களின் மனம் நிறைந்த பிரார்த்தனைகளுக்கும் உங்களுக்கு மிக்க நன்றி.

இன்றைய பதிவில் மிகவும்
நல்ல நல்ல பாடல்களை பகிர்ந்துள்ளீர்கள்.அத்தனையும் அமிர்தம். நல்ல பாடகர்களையும், நல்ல பாடல்களையும் நமக்குத் தந்த இறைவனுக்கு நன்றி. எ.பியிலும், உங்கள், மற்றும் சகோதரி கோமதி அரசு அவர்களின் பதிவிலும், சிறந்த இவ்விரு பாடகர்களை பற்றிய செய்தியும், அவர்கள் பாடிய பாடல்களையும் கேட்டு சந்தோஷமடைந்தேன்.பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

வல்லிசிம்ஹன் said...

@GomathyArasu,
அன்பின் கோமதிமா,
வாழ்க வளமுடன்.

தங்கையைப் பரிகாசம் செய்ய அமைந்த வார்த்தையாகி விட்டது. !!!
நீங்கள் இருவருமே அந்த
நிலையைத் தாண்டியவர்கள்.

திட்டம் செய்து பாடவில்லை. தானாக சிவபெருமான்
வந்துவிட்டார். நலமுடன் இருங்கள்.

வல்லிசிம்ஹன் said...

என் பள்ளித் தோழி சாந்தி அடிக்கடி பாடும் பாடல்
தங்கமே தங்கம் ,யாரு அந்த மாப்பிள்ளை சிங்கம்
பாடல்.
கடைசிவரி மாலைபோடும் மாப்பிள்ளை பேரு சிதம்பரம்''
என்று வரும். அவள் திருமணம் செய்தது சிதம்பரம் என்ற
நல்ல மனிதரைத் தான்.
எல்லாமே கனவுக் காலத்தைச் சேர்ந்தது.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,
நலமுடன் இருங்கள்.

''முன்னெல்லாம் நானும் என் தம்பியும் குடும்பச் சூழ்நிலைகளால் மனம் வெதும்பிக் கொண்டிருக்கையில் எங்கிருந்தோ நம்பிக்கை ஒலி போல் இந்தப் பாடல் கேட்டுவிடும். இருவருக்கும் நம்பிக்கை தோன்றும். எல்லாம் சரியாகிவிடும் எனச் சொல்லிப்போம். சாப்பிட்டுட்டு மின்சாரம் இருந்தால் வரேன்.''

உண்மைதான் அம்மா. நல்ல குரலும் நல்ல வார்த்தைகளும் காதில்
ஒலித்தால் மனம் தெம்பு பெறும்.
அருமருந்து கண்ணன் நாமம்.
சோதனைகளைத் தீர்க்கவும், மருந்தாக அமையவும்
நாம உச்சாடனமே சிறந்தது.

நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாரங்கன் மா,
என்றும் நலமுடன் இருங்கள்.

இங்கு சத்தமே கேட்காது. நம்மூரில் சத்தமே பிரதானம்.

இதமான காலை நேரங்களிலும் பூஜைக் காலங்களிலும்
நம் ஓதனைக் காலங்களிலும் நல்ல நம்பிக்கை தரும் குரல்களைக்
கேட்பதே
நன்மை கொண்டுவரும்.
அந்தவகையில் இந்த இருவரும்செய்திருக்கும்
சேவை சொல்லி முடியாது.
எத்தனையோ மொழிகள் இருந்தாலும் தமிழில் கேட்கும் இனிமை
வேறெதிலும் வராது.
மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,
என்றும் நலமுடன் இருங்கள்.

''என்றாலும் அந்தப் பாடல் ரொம்பப் பிடிக்கும்.மனதையே ஆறுதல் படுத்தும். அதிலும் சில சமயங்களில் மனம் ரொம்ப நைந்திருக்கையில் கண்ணீரே வந்துடும். கோமதி அரசுவுக்கு அவங்க மாமியார் அத்தையா? சொந்தம்? அல்லது மாமியார் என்பதால் அத்தை என்கிறாரா? ''

ஆமாம் மா. மாமியாரைத் தான் அத்தை என்கிறார்கள்
என்று நம்புகிறேன்.
திரு அரசு ஸாரும்,
நம் கோமதியின் அக்கா கணவரும்
அண்ணா தம்பிகள்.
அதனால் தான் அக்கா வீட்டு கொலுவுக்கு
அவரும் வந்திருக்கிறார்.
இவரும் போயிருக்கிறார்.
அப்போது அந்தத் திருமணப் பேச்சு இல்லை.
சின்ன வயதுதானே.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் தேவகோட்டைஜி,
என்றும் நலமுடன் இருங்கள் மா.

''இருவருமே கடவுளின் குழந்தைகள் மரணித்தும் வாழ்பவர்கள் அம்மா.

எல்லாமே அருமையான பாடல்கள்.''

இதுதான் உண்மை. இந்தக் கலிகாலத்தில்
முருக நாமம், கண்ணன் நாமம், நம் பிள்ளையாரிடம் பக்தி
இவையே நமக்கு நற்கதி கொடுக்கும் அப்பா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கமலாமா,
என்றும் நலமுடன் இருங்கள்.

வெகு காலம் ஆன மாதிரி இருக்கிறது அம்மா.
உங்கள் மக்கள் அனைவரும் நலமுடன்
இருக்க என் பிரார்த்தனைகள்.
எபி வழியாக எல்லோர் நலனும்,செய்திகளும் நம்மை வந்தடைகிறது.
அவர்களுக்கு நன்றி.

உங்கள் வேலைகளுக்கு நடுவே இங்கும் வந்து
படித்துக் கருத்தும் இட்டதுதான் சிறப்பு.
நம் கோமதி சொல்லித்தான் இந்த நாளின் சிறப்பு தெரிந்தது.
முக நூலிலும் அனைவரும்
எழுதிக் கொண்டு இருக்கிறார்கள்.

நல்லனவற்றைக் கொண்டாடுவோம்.
குழந்தைகள் மற்றும் உங்களுக்கு என் அன்பும் அரவணைப்பும்.