வல்லிசிம்ஹன்
சேலத்தை விட்டுக் கிளம்பியது ஒரு சனிக்கிழமை
பிற்பகல்.
நேரம் ,நாள் பார்க்கும் வழக்கம் கிடையாது.
என்னிக்கு வேலை குறைவாக இருக்கிறதோ
அப்போது கிளம்பி விடவேண்டியதுதான்.:)
எந்தவித எதிர்பார்ப்பும் கூடாது. சிங்கம் வந்த நேரம்
நாங்கள் தயாராக இருந்தால் ,அவர் குளித்து விட்டு
ஆறு பாண்ட் ஆறு ஷர்ட் எடுத்து நம் பெட்டியில் போட்டு
விடுவார்.
அது எப்படி .தயாராக இருக்கும் என்று
கேட்கக் கூடாது.:)
12 செட் வெள்ளை வண்ணத்தில் எப்பொழுதுமே
இருக்கும்.
அதான் வீட்டு அம்மாவுக்கு வேலை.இந்தக் குழந்தைகள்
எல்லாம் குளித்துவிட்டு வெளியே போகும்.
மண்ணில் விளையாடி உலக அழுக்குகளைப்
பூசிக் கொண்டு வீட்டுக்கு வரும்.
இவரும் வெள்ளையும் சள்ளையுமாகப்
போவார். வீட்டுக்கு வரும்போது அத்தனை க்ரீஸ்
கறையோடு உடைகள் திரும்பும்.
சனி ஞாயிறு அத்தனையையும் தோய்த்துக்
கொடிகளில் காயும். ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு செட் , அயர்ன் செய்து கொடுப்பேன்.
முதலில் எல்லாமே பருத்தி உடைதான்.
பிறகு டெரி காட்டன் வந்து என் வேலை
சுலபமானது:)
அதற்கு நான் பட்ட சந்தோஷத்தை நினைத்தால்
எனக்கே சிரிப்பு வருகிறது.
கோவையில் வீட்டுக்கு வந்து துணி துவைத்துக்
இந்தப் பயணத்துக்கு மட்டும் மனமுவந்து ஒரு கறுப்பு , ஒரு ஆலிவ்
வண்ணம் என்று இரண்டு எக்ஸ்டிரா..
அப்பொழுதும் அதே வெள்ளை முழுக்கை சட்டை:)
மடித்து விட்டுக் கொள்வார்.
என்ன இருந்தாலும் நம் கார் ஓட்டிக்குன்னு
ஒரு பக்கம் ஒதுக்க வேண்டும் என்ற நல்லெண்ணம் தான்
மேற்படி சமாசாரங்கள்.
ஒரு வழியாக அம்பாசடரும், சிங்கமும் வந்து ,
காரின் டிரங்க்கில் எங்கள் பெட்டிகள் ஏறின.
அப்போது பிரபலமாக இருந்த ஈகிள் ஃப்ளாஸ்க்குகளில்
வென்னீரும் பாலும்,
குழந்தைகளுக்கான சீரியல்கள். ஆமாம். அதே மோஹன் கார்ன்ஃப்ளேக்ஸ்
தான்.
மூன்று வயது, ஒன்றரை வயது குழந்தைகளுக்கு,
இட்லி காலை வேளை, மதியம் பருப்பு சாதம்,
இரவில்( கார்ன்ஃப்ளேக்ஸ். நடு நடுவில் மொனாகோ பிஸ்கட், எக்ளேர்
சாக்கலேட்.)
இவை எல்லாம் கிடைக்கும் என்ற நம்பிக்கைதான்.
24 comments:
பயண ஆரம்பமே சூடு பிடித்துவிட்டது ஃப்ளாஸ்கின் உதவியோடு. நாங்களும் எங்கே போனாலும் ஃப்ளாஸ்கில் வெந்நீர் எடுத்துப் போவோம். ஆனால் அப்போல்லாம் நீண்ட தூரப் பேருந்துப் பயணம் கூடச் செய்ததில்லை, குழந்தைகளை உத்தேசித்து. எல்லாமே ரயில் தான். :)
1969 ஆம் வருடம் நான் சென்னையில் இருந்தேனோ? தி.நகரில் சித்தி வீட்டில்!
// நேரம் நாள் பார்க்கும் வழக்கம் கிடையாது...//
அதைத்தான் நானும் விரும்புகிறேன். எங்கள் வீட்டில் எல்லாவற்றுக்கும் நாள், நேரம் பார்க்கும் வழக்கம்!
பயண முஸ்தீபுகள் பிரமாதம். உற்சாகம் தொற்றிக்கொள்ள இனிய பயணம் ஆரம்பமாகி விட்டது!
படங்களோடு எல்லா விபரமும் சொல்லி வருவது சிறப்பு அம்மா
பயணத்திற்கு முன்னால் ஏற்பாடுகள் மிக அருமையாக இருக்கிறது.
பழைய படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.
குழந்தைகளுக்கு என்று பயணத்தில் எவ்வளவு தூக்கி செல்வோம். இப்போது நினைத்தாலும் பயணம் இனிமையாக மனதில் ஓடுகிறது நேரடி காட்சியாக இல்லையா அக்கா!
தொடர்கிறேன்.
அன்பின் கீதாமா,
என்றும் நலமுடன் இருங்கள்.
நாங்களும் இந்த விடுமுறையை எடுக்க வேண்டிய அவசியம் வந்ததால்
கார்ப் பயணம் மேற்கொண்டோம்.
அதுவே இன்னோரு வீடு போல மாற்றிக் கொண்டோம்.
அப்போது அப்பாவுக்கு வயிற்று வலியினால்
அதற்கான வைத்தியங்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
அங்கே சென்று தொந்தரவு செய்ய மனம் இல்லை.
மாமியார் வீட்டில் தண்ணீர் பற்றாக்குறை.
அங்கேயும் போக முடியவில்லை.
சட்டென்று எடுத்த முடிவு.
நன்றாகத் தான் நடந்தது அந்தப் பயணம்.
நன்றி மா.
''1969 ஆம் வருடம் நான் சென்னையில் இருந்தேனோ? தி.நகரில் சித்தி வீட்டில்!''
hahahhaahaa.
நன்றாக யோசித்துப் பாருங்கள்.
மகள் பிறந்து சென்னை வந்து விட்டீர்களா என்று.
அந்த ரயில்ப் பயணம் எல்லாம் மறக்க முடியாதே!!!
அன்பின் ஸ்ரீராம்
நலமுடன் இருங்கள்.
ஆமாம் பயணங்கள் எப்போதுமே பரபரப்பாக
இருக்கும்.
Never a dull moment.
குழந்தைகளை உத்தேசித்து நிறைய நிறுத்தங்கள்.
நடுக்காடு, வயல் வெளி என்று மிகப்
பெரிய இயற்கைப் பாடமாக அமைந்த பயணம்.
அன்புள்ள வல்லிம்மா , தங்கள் பயண பதிவு அருமை. நாங்களும் உங்களுடன் கிளம்பியது போல அத்தனை சுவார்ஸமாய் எழுத்துக்கள் எங்களை ஒன்றச்செய்கிறது! தங்கள் பயணங்களில் எங்கள் ஊர் சேலமும் , ஏற்காடும் வருவது இன்னும் மகிழ்ச்சி!
அன்பின் தேவகோட்டைஜி,
நலமுடன் இருங்கள்.
உங்களுக்கும் என் சின்னமகன் வயது தான் இருக்கும்.
நீங்களும் கூட வந்ததாக நினைத்துக் கொள்கிறேன் மா.
தொடர்வதற்கு மிக நன்றி.
அன்பின் தங்கச்சி கோமதிமா,
வாழ்க வளமுடன்.
ஆமாம் பயணமே மகிழ்ச்சி தான்.
அதை இதமாகச் செய்வதில் இனிமை கூடும்.
அந்த ஆக்ஃபா காமிரா பழசு அம்மா. அதில் ஃபில்ம்ஸ் வாங்கிப் போட்டு எடுக்க வேண்டும்.
வீடியோ எடுக்க முடியாது.
எண்ணி 30 படங்கள் இரண்டு இடத்தில் எடுப்போம்.
சேலம் வந்த பிறகு டெவலப் செய்தோம். எல்லாமே
செலவு தானே அப்போ:)
தொடர்ந்து வருவதற்கு மிக நன்றி மா.
@ Gayathri Chadrasekar,
கிளம்பியது போல அத்தனை சுவார்ஸமாய் எழுத்துக்கள் எங்களை ஒன்றச்செய்கிறது! தங்கள் பயணங்களில் எங்கள் ஊர் சேலமும் , ஏற்காடும் வருவது இன்னும் மகிழ்ச்சி!
சேலம் எனக்கு மிகப் பிடித்த நகரம் மா.
நலமுடன் இருங்கள்.
திருமணமான ஆறு மாதங்களில் அங்கே வந்தோம்.
ரயில்வே ஸ்டேஷன் பக்கம் கொஞ்ச காலமும்
பெரமனூரில் மீதி நாலு வருடங்களும்
இருந்தோம்.
நீங்கள் எல்லாம் பிறந்து கூட இருக்க மாட்டீர்கள்:)
வெகு நாட்கள் கழித்து உங்களை
வலையில் பார்ப்பதில் ரொம்ப சந்தோஷம் மா.
அன்பின் ஸ்ரீராம்,
முன்னால யாரோ சொல்வார்கள். திருமணத்துக்கு நேரம் பார்த்தால் போதும்
என்பார்கள்.
//மகள் பிறந்து சென்னை வந்து விட்டீர்களா என்று.
அந்த ரயில்ப் பயணம் எல்லாம் மறக்க முடியாதே!!!// ம்ஹூம், கல்யாணப் பேச்சு அது பாட்டுக்கு இருந்தது. ஆனால் அப்போக் கல்யாணம் பண்ணக் கூடாதுனு என் தாத்தா சொல்லி இருந்தார். (அம்மாவோட அப்பா) அதுக்கப்புறமாத் தான் கல்யாணம். பெண்ணும் அப்புறமாத்தான் ஒன்றரை வருஷத்துக்கு அப்புறமாப் பிறந்தாள். அவளைச் சென்னையில் கொண்டு விட அப்பா/அம்மாவுடன் வந்தப்போ தான் மறக்க முடியாத ரயில் பயணம். மதுரையிலிருந்து முதல்நாள் காலை கிளம்பி மறுநாள் மாலை போய்ச் சேர்ந்தோம். :)))))))
நேரம் ,நாள் பார்க்கும் வழக்கம் கிடையாது.
என்னிக்கு வேலை குறைவாக இருக்கிறதோ
அப்போது கிளம்பி விடவேண்டியதுதான்.:)//
ஆஹா நம் வீட்டிலும் அதேதான்.
கனஜோர் எல்லாம் ஃப்ளாஸ்கில் வெந்நீர், பால், கார்ன்ஃப்ளேக்ஸ், அருமை
நானும் மகன் சின்னவனா இருந்த போது அடிக்கடி சென்னைப் பயணம் அப்போது இப்படித்தான். இட்லி பாக் செய்துகொண்டுவிடுவேன், பால் கார்ன்ஃப்ளெக்ஸ்...அட அப்பவே மொனாக்கோ இருந்ததா..
கீதா
கறுப்பு வெள்ளைப் படங்கள் இனிமையானவை இனிய நினைவுகளை மீட்டெடுக்கும். அப்பா ஒல்லியாக உயரமாக இருக்கிறார்! மாமாவும்
நீங்களும் இருக்கிறீர்களே ஒரு ஃபோட்டோவில் ஹலபெடு....
நல்ல பயணம் ...கிளம்பியாச்சு உங்க பின்னாடியே நாங்களும் வருகிறொம்
கீதா
பயணம் இனிது. அதுவும் குடும்பத்துடன். உங்களின் இனிய பயண நினைவுகளை மீட்டெடுக்கும் அந்த நாளைய படங்கள். அருமை. தொடர்கிறேன்.
துளசிதரன்
பயணக் குறிப்புகள் அனைத்தும் சுவாரசியம். தொடர்கிறேன் அம்மா.
குழந்தைகளுடன் பயணம் செய்ய ஆயத்தங்கள் வேண்டும். மகிழ்ச்சியான பயணம் இனிதாக செல்கிறது.
அன்பின் கீதாமா,
ஓஹோ. நான் வருடக் கணக்கில் தப்பு செஞ்சுட்டேனா:)
உங்கள் பயண அனுபவம்( குழந்தை+ அம்மா அண்ட் அப்பா) நினைவில் இருக்கு.
வருடத்தை மறந்து விட்டேன்:)))
'69 இல் சென்னையில் இருந்தீர்களா!!!
நாங்கள் சென்னைக்கு வரப் போக இருப்போம்.
முழுவதுமாக இடம் பெயர்ந்தது 1976 இல்.
அன்பின் கீதாமா,
நலமுடன் இருங்கள்.
''கனஜோர் எல்லாம் ஃப்ளாஸ்கில் வெந்நீர், பால், கார்ன்ஃப்ளேக்ஸ், அருமை
நானும் மகன் சின்னவனா இருந்த போது அடிக்கடி சென்னைப் பயணம் அப்போது இப்படித்தான். இட்லி பாக் செய்துகொண்டுவிடுவேன், பால் கார்ன்ஃப்ளெக்ஸ்...அட அப்பவே மொனாக்கோ இருந்ததா.''
பெரியவனுக்கு இட்லி ஒன்றுதான் ஒத்துக் கொள்ளும்.
மகள் எது கொடுத்தாலும் சமத்தா சாப்பிட்டு விடுவாள்.
என்னமோ நானும் வளர்த்தேன் போ.
பயணம் நல்ல மாற்றாக இருந்தது,.
மிக நன்றி மா.
@ Geetha Rengan,
கறுப்பு வெள்ளைப் படங்கள் இனிமையானவை இனிய நினைவுகளை மீட்டெடுக்கும். அப்பா ஒல்லியாக உயரமாக இருக்கிறார்! மாமாவும்
நீங்களும் இருக்கிறீர்களே ஒரு ஃபோட்டோவில் ஹலபெடு....''
சேலத்தில் இருந்த போது மேற்கொண்ட பயணம். அதன் பிறகு கோவையில் 4
வருடங்கள். பிறகு திருச்சியில் 4 வருடங்கள்.
ஒவ்வொரு இடமும் மாறும்போது பொருட்களைக் காபந்து செய்துதான்
வந்தேன்.
ஒரு டிரங்க் பெட்டியில் அவை இருந்தன.
கட்டிலுக்கு அடியில் வைத்து அவ்வப்போது
சுத்தம் செய்வேன்.
தொலைந்தது போக மீதி இருப்பதை நல்ல வேளையாகப்
படம் எடுத்தேன்.
அப்பா எப்பவுமே உடல் பயிற்சியில் கவனம் செலுத்துவார்.
நானும் தம்பியும் இருக்கும் படத்தை
அப்பாதான் எடுத்தார்.
எப்பப் பார்த்தாலும்குழந்தைகள் மேல தான் கவனம்:)))
அன்பின் துளசிதரன் என்றும் நலமுடன் இருங்கள்.
என் கணவரின் முயற்சியால்
நல்லபடியாக பயணம் நடந்தது.
நல்ல நினைவுகள் தான். நன்றி மா.
Post a Comment