Blog Archive

Thursday, March 10, 2022

1969 டிசம்பரில் ஒரு பயணம். Part 1

வல்லிசிம்ஹன்

அனைவரும் நிறைவான  வாழ்வு வாழ வேண்டும்.



  1969 டிசம்பரில் ஒரு பயணம்.
குடும்பத்தில் ஐந்தாவது நபர் இன்னும் பிறக்கவில்லை:)
மூன்று வயது மகனும், ஒன்றரை வயது மகளும்,
பெரிய தம்பி முரளியோடு (நல்லதொரு துணைவன் 19 வயதான
அன்பு முரளி) சிங்கம் சாரதியாக,
 மார்கழி முதல் நாளில்
வெள்ளை அம்பாசடர்  டாக்சியில்  தொடங்கியது:)
அப்போது  சேலத்தில் இருந்தோம்.
ஒரு நாளைக்கு 150 மைல்கள் பயணித்து,கோயம்பத்தூர்,
ஊட்டி, மைசூரு, பேலூர், தலைக்காவேரி
 சிவசமுத்திரம் நீர்வீழ்ச்சி,
ஸ்ரீரங்கப்பட்டணம், ரங்கண்ணா திட்டு பறவைகள் சரணாலயம்,
கிருஷ்ண ராஜ சாகர், பிருந்தாவன் கார்டன்ஸ்,

1000 மைல்கற்கள், நடுவில் சிறுத்தை பயம், உடைந்த
ஃப்ளாஸ்க், வளைந்து செல்லும் பாதையில்
குழந்தைகள் வாந்தி,
என்றும் தளராத உற்சாகத்துடன் சிங்கம்,
அலுக்காமல் ஆக்ஃபா காமிராவில் படம் 
எடுத்த தம்பி என்ற பயணத்தை நினைவில் கொண்டு வந்தது,

தி.ஜானகிராமன் ஸாரின் ''நடந்தாய் வாழி காவேரி"
அவர் கொடுக்கும் விவரங்களில் 
நானும் இணைந்தேன். நன்றி தி.ஜா சார்.
  Salem to  Coimbatore 100 miles
Coimbatore to  Ooty,  AND Mysore 160 miles  approx?
Mysuru to  Thala kaveri  140 miles
Thala kaveri to   Chikmagaluru 200 miles 
Chikmagaluru to Shimoga
Shimoga to Jog Falls100 miles
Shimoga to Bangaluru  200 miles
Bangaluru to Salem   100 miles.
Hotel Alankar CBE.


Ooty Dodda betta peak.

 தலைக்காவேரி

எப்பொழுதும் வேலை மும்முரத்திலேயே
இருக்கும் சிங்கத்துக்கு லீவு எடுத்தே ஆக வேண்டிய கட்டாயம்.
அந்த வருட காலண்டரில் இருந்த 
ஹலிபேட் சிற்பங்கள்  ...அவற்றை எல்லாம்
காண வேண்டும் என்ற உற்சாகத்தைத்
தூண்ட, சட்டென்று 

''பயணம் செய்ய வேண்டும்''
என்ற முடிவை எடுத்தார். 
அந்த சமயத்தில் பெரிய தம்பி எங்களைக் கண்டு
போக(!)   சேலத்துக்கு ஐ ஐ டியிலிருந்து வந்திருந்தான்.
அவனிடமும் என் பெற்றோரிடமும் சம்மதம்
வாங்கிக் கொண்டு  பயணத் திட்டம் போட்டார்.

   அஜந்தா புக் செண்டர்
 புத்தகக் கடையில் 
கர்னாடகா  map   வாங்கி வந்தார்கள்.    தொடருவோம்.






21 comments:

KILLERGEE Devakottai said...

சுவாரஸ்யமான தொடக்கம் அம்மா...

வல்லிசிம்ஹன் said...

அன்பின் தேவகோட்டைஜி,
மிக நன்றி நலமுடன் இருங்கள் 53 வருடங்களுக்கு முன்பு நடந்ததைக் கோர்க்க
சற்றே சமயம் எடுக்கிறது.
சென்ற இடங்களைக் கச்சிதமாகச் சொல்ல வேண்டும் இல்லையா.

மிக நன்றி மா.

ஸ்ரீராம். said...

அந்த வளைந்து செல்லும் பாதையை முகநூலிலும் கண்டேன்.  கவர்ந்திழுக்கும் பாதை.  காரிலேயே உற்சாக பயணம் மிகவும் ரசிக்கத்தக்கதாய் இருந்திருக்கும்.  நீங்கள் சொல்லி இருக்கும் இடங்களில் தொட்டபெட்டா மட்டும் 79 ல் பார்த்திருக்கிறேன்!

நெல்லைத் தமிழன் said...

இன்றைக்கு இதனைப் படிக்கும் வேளை நான் வைரமுடி சேவைக்குச் செல்கிறேன். இன்று ஸ்ரீரங்கபட்டினத்தில்தான் தங்கல். பிறகு பல இடங்களுக்குச் செல்கிறோம். 5 நாட்கள் பயணம் இது.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம்,
என்றும் நலமுடன் இருங்கள்.

நாங்கள் போய் வந்த பத்து வருடங்களில் நீங்கள்
சென்றிருக்கிறீர்கள்.

அந்த வயதில் எங்களால் முடிந்ததால் இவ்வளவு இடங்களையும்
பார்த்திருக்கிறோம்.

சிங்கத்தின் கையில் வண்டியும் பயணமும் எப்பொழுதுமே சுகம்.

ஒரு இடத்தில் வண்டி சூடாகி நின்றிருக்கிறோம்.
டயர் பங்க்ச்சரும் உண்டு.
களைப்பு தெரியாமல் சென்று வந்தோம்.

நல்ல ப்ளானிங்க் அவருக்கு.சிங்கத்துக்கு தான் நன்றி சொல்லணும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் முரளி மா.
பத்திரமாகச் சென்று வாருங்கள்.
நாங்களும் அங்கே சென்றிருக்கிறோம்.
மகன் பங்களூரில் இருக்கும் போது சென்று வந்தோம்.

அம்மா கூட வந்தார், மேல் கோட்டே மலை மேல் நரசிம்ஹரையும் தரிசித்தோம்.
எல்லாம் அவன் அருள்.
வைரமுடி அதீதப் பிரகாசம். நாராயணனே நமக்கே பறை தருவான்.

கோமதி அரசு said...

இனிமையான பயணம் . மலரும் நினைவுகள் அருமை.

திட்டமிட்ட பயணம் என்றும் சிறப்புதான்.
அருவியின் அழகை காணொளியில் கண்டேன்.

படங்கள் எல்லாம் அருமை.

Geetha Sambasivam said...

நல்ல தொடக்கம். இந்தப் பதிவு முன்னர் படித்தது இல்லை. படங்கள் எல்லாமும் அப்போ எடுத்தவை தானா? நன்றாகத் தெளிவாக இருக்கிறது. தலக்காவிரி போனதே இல்லை. முயற்சியும் எடுக்கலை. :( ஏனெனத் தெரியலை. மற்ற இடங்கள் போயிருக்கோம். ஷிமோகா/ஜோக் நீர்வீழ்ச்சியும் போகலை. மேல்கோட்டை சமீபத்தில் தான் போனோம். வெயிலாகிவிட்டதால் மலை மேல் ஏறாதேனு சொல்லிட்டாங்க. :( சாயந்திரம் வரை இருக்க முடியலை. அது ஒரு குறை தான்.வைரமுடி சேவை என் அப்பா ஒவ்வொரு வருஷமும் தவறாமல் போவார். அவருடன் பள்ளியில் வேலை பார்த்த செல்லப்பா வாத்தியார் அங்கே தான் மேல்கோட்டைப் பெண்ணுடன் கல்யாணம் ஆகி மனைவி வீட்டுடன் மாப்பிள்ளையாகப் போய்விட்டார். ஆகையால் அப்பாவுக்கு அவர் இருந்தது ஒரு வசதி! :))))

Geetha Sambasivam said...

தொடரக் காத்திருக்கேன்.

மாதேவி said...

பயணத் தொடர் இனிதாக ஆரம்பம்...வருகிறோம் தொடர்ந்து.

தொட்டபெட்டா இரண்டு தடவை சென்றிருக்கிறேன். சேலம், ஏற்காடு,கோயம்புத்தூர்,பெங்களூர், சென்றிருக்கிறேன் இப்பொழுது எல்லாம் மாறிஇருக்கும்.

Thulasidharan V Thillaiakathu said...

1969 ல் பயணம். அட! அப்போது இடங்கள் எப்படி இருந்திருக்கும் என்று யோசித்துப் பார்க்கிறேன் இப்போது விட இன்னும் அழகாக மாசு மருவற்று சுத்தமாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன் அம்மா. கட்டிடங்கள் குறைவாக இயற்கை நிறைய...

அழகான இடங்கள் நீங்கள் சென்று வந்திருப்பது. நல்ல நினைவுகள் இல்லையா,.

மலைப்பகுதி பாதை அழகு.

தொடர்கிறேன் அம்மா

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

எத்தனை வருடங்களுக்கு முன்னான பயணம்! உங்களின் பொக்கிஷ நினைவுகள். சுவாரசியமான தொடக்கம். தொடர்கிறேன்.

துளசிதரன்

Thulasidharan V Thillaiakathu said...

அம்மா அப்போது மேப் வாங்கி வந்து பயணம் இல்லையா. நானும் மகனும் கூட இங்க முன்பு பங்களூரில் கையில் மேப் வைத்துக் கொண்டு (மொபைல் வராத சமயம் அதுவும் ஆன்ட்ராய்ட் கூகுள் மேப் இல்லா சமயம்) நகருக்குள் சென்று வந்தோம். இப்போது அந்த பங்களூரே மாறிவிட்டது. நீங்கள் சொல்லியிருக்கும் இடம்களளும் இப்ப ரொம்பவெ மாறிவிட்டது.

கீதா

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதிமா,
என்றும் வாழ்க வளமுடன்.

ஆமாம் மா, ஒரு கான்வாஸ் easel வைத்திருந்தார்.
அதில் எல்லா இடங்களையும் குறிப்பிட்டு,

புள்ளி வைத்து ,அதையும் படம் எடுத்து வைத்திருந்தார்.

எல்லாம் கறுப்பு வெளுப்பு தான்.
திட்டம் இடுவது எப்போதுமே அவருக்குப் பிடிக்கும்.:)

எஞ்சினீயர் எப்போதுமே உஷார்.
மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,
என்றும் நலமுடன் இருங்கள்.
தொடர்ந்து வந்து மகிழ வைப்பதில் நன்றி

அந்த ஒரு பயணமே எங்களால் முடிந்த நீண்ட பயணம். மற்றவை எல்லாம்
பெற்றோரைக் காணவும்,
ஊர் விட்டு ஊர் போவதிலும்
இருக்கும் ஊருக்குப் பக்கத்தில் இருக்கும் இடங்களுக்குச் செல்வதும் தான்
முடிந்தது.

குழந்தைகளுக்கு அசதி இல்லாமல்
கவனம் செலுத்தியபடி தொடர நினைத்தோம்.
முடிந்தது.

இந்தப் படங்கள் கூகிளார் தயவில் பதிந்தேன் மா.

அப்போது எடுத்தவை நல்ல காமிராவில் என்றாலும்,
கறுப்பு வெள்ளைதான்.
மீண்டும் விவரங்களை நினைவில் கொண்டு வந்து
பதிகிறேன்.
பெரிய முயற்சியாக இருக்கிறது.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,
உங்கள் அப்பா சென்று வந்தது போல
என் அம்மாவழிப் பாட்டியும் திருவல்லிக்கேணியிலிருந்து
புறப்படும் பஸ்ஸில் மேல்கோட்டே
சென்று வந்தார். அதுவும் 70களின் ஆரம்பத்தில்.

உடல் தெம்பு மனத்தெம்பு இருந்தது.

மலையில் என் அம்மா ஏற வில்லை. நாங்கள்
ஏறி தரிசித்து வந்தோம். என்னுடைய 49 ஆவது
வயது வரை அலுப்பு வரவில்லை.:)))))

வல்லிசிம்ஹன் said...

அன்பின் மாதேவி மா,

என்றும் நலமுடன் இருங்கள்.
கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு முன்பு கூட
இந்த கூட்டத் தொந்தரவு இருந்ததில்லை.
இப்பொழுது நிறைய பயணங்கள்
இருக்குன்றன.
நீகளும் தொட்ட பெட்டா எல்லாம் கண்டு களித்தது
நல்ல மகிழ்ச்சி.
இப்போது எல்லாமே மாறி இருக்கும்.
மரங்கள் சாய்ந்து சாலைகளாகும் காலம்.:(

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதா ரங்கன் மா,
என்றும் நலமுடன் இருங்கள் மா.
''1969 ல் பயணம். அட! அப்போது இடங்கள் எப்படி இருந்திருக்கும் என்று யோசித்துப் பார்க்கிறேன் இப்போது விட இன்னும் அழகாக மாசு மருவற்று சுத்தமாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன் அம்மா. கட்டிடங்கள் குறைவாக இயற்கை நிறைய...''


இந்த மாற்றத்தை மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு
தெரிந்தது. நிறைய ஹோட்டல்கள் விடுதிகள்.
மண் சரிவுகள். சாலை அடைப்புகள்.
எல்லாமே 72 லியே பார்த்தேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் துளசிதரன்,
என்றும் நலமுடன் இருங்கள்.

பொக்கிஷமான நினைவுகள் தான். இவை நடந்த போது
ரொம்ப சர்வ சாதாரணமாக
எடுத்துக் கொண்டேன்.
இப்போது நினைத்துப்
பார்க்கும் போது பிரமிப்பாக
இருக்கிறது. இது ஒரு சவால் தான் எனக்கு.:)

சாதித்து விடலாம். நீங்கள் எல்லோரும் என் துணை.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதா ரங்கன் மா,

நீங்களும் மாப் யூஸ் செய்திருக்கிறீர்களா!! அட!!
நாங்களும் மகனும் 86லிருந்து 2000 வரை பெங்களூரில் இருந்தோம்.
அப்போது செல்லுலார் ஃபோன் இருந்தது. மகனுக்கு.செங்கல் மாதிரி இருக்குமே,:)


எங்களுக்கு லாண்ட்லைன் தான்:)

''அம்மா அப்போது மேப் வாங்கி வந்து பயணம் இல்லையா. நானும் மகனும் கூட இங்க முன்பு பங்களூரில் கையில் மேப் வைத்துக் கொண்டு (மொபைல் வராத சமயம் அதுவும் ஆன்ட்ராய்ட் கூகுள் மேப் இல்லா சமயம்) நகருக்குள் சென்று வந்தோம்.''

நல்ல முயற்சி தான்.பங்களூருக்குக் கண்டிப்பாக
வழிகாட்டி வேண்டும்:)
நன்றி அன்பு கீதாமா. நலமுடன் இருங்கள்.

வெங்கட் நாகராஜ் said...

நல்லதொரு தொடக்கம். உங்களுடன் பயணிக்க நாங்களும் காத்திருக்கிறோம்.