Blog Archive

Wednesday, March 09, 2022

பகவத் கீதை....


வல்லிசிம்ஹன்

[12:08 AM, 3/5/2022] Subha.: இந்துக்களின் புனித நூலான "பகவத்கீதை" கூறும் அற்புதமான வாழ்க்கை போதனை.....

👇👇👇👇👇👇👇👇👇
**********
1. வாழ்வென்பது உயிர் உள்ள வரை மட்டுமே!
**********
2. தேவைக்கு செலவிடு.
*********
3. அனுபவிக்க தகுந்தன அனுபவி.
************
4. இயன்ற வரை பிறருக்கு உதவி செய்.
*********
5. மற்றும் ஜீவகாருண்யத்தை கடைபிடி.
**********
6. இனி அநேக ஆண்டுகள் வாழப்போவதில்லை.
**********
7. உயிர் போகும் போது, எதுவும் கொண்டு செல்ல போவதுமில்லை. ஆகவே, அதிகமான சிக்கனம் அவசியமில்லை.
*********
8. மடிந்த பின் என்ன நடக்கும் என்று குழம்பாதே.
**********
9. உயிர் பிரிய தான் வாழ்வு. ஒரு நாள் பிரியும். சுற்றம், நட்பு, செல்வம், எல்லாமே பிரிந்து விடும்.
**********
10. உயிர் உள்ள வரை, ஆரோக்கியமாக இரு.
*********
11. உடல் நலம் இழந்து பணம் சேர்க்காதே.
*********
12. உன் குழந்தைகளை பேணு. அவர்களிடம் அன்பாய் இரு. 
*********
13. அவ்வப்போது பரிசுகள் அளி. 
**********
14. அவர்களிடம் அதிகம் எதிர்பாராதே. அடிமையாகவும் ஆகாதே.
*********
15. பெற்றோர்களை மதிக்கும் குழந்தைகள் கூட, பாசமாய் இருந்தாலும், பணி காரணமாகவோ, சூழ்நிலை கட்டாயத்தாலோ, உன்னை கவனிக்க இயலாமல் தவிக்கலாம், புரிந்து கொள்!
*********
16. அதைப்போல, பெற்றோரை மதிக்காத குழந்தைகள், உன் சொத்து பங்கீட்டுக்கு சண்டை போடலாம்.
*********
17. உன் சொத்தை தான் அனுபவிக்க, நீ சீக்கிரம் சாக வேண்டுமென, வேண்டிக்கொள்ளலாம். பொறுத்துக்கொள்.
**********
18. அவர்கள் உரிமையை மட்டும் அறிவர்; கடமை மற்றும் அன்பை அறியார்.
*********
19. “அவரவர் வாழ்வு, அவரவர் விதிப்படி” என அறிந்து கொள்.
*********
20. இருக்கும் போதே குழந்தைகளுக்கு கொடு.
*********
21. ஆனால், நிலைமையை அறிந்து, அளவோடு கொடு. எல்லாவற்றையும் தந்து விட்டு, பின் கை ஏந்தாதே. 
*********
22. “எல்லாமே நான் இறந்த பிறகு தான்” என, உயில் எழுதி வைத்திராதே. நீ எப்போது இறப்பாய் என எதிர்பார்த்து காத்திருப்பர்.
**********
23. எனவே, கொடுக்க  நினைப்பதை மட்டும் முதலில் கொடுத்து விடு; மேலும் தர வேண்டியதை, பிறகு கொடு.
**********
24. மாற்ற முடியாததை, மாற்ற முனையாதே.
*********
25. மற்றவர் குடும்ப நிலை கண்டு, பொறாமையால் வதங்காதே! 
*********
26. அமைதியாக, மகிழ்ச்சியோடு இரு. 
*********
27. பிறரிடம் உள்ள நற்குணங்களை கண்டு பாராட்டு.
**********
28. நண்பர்களிடம் அளவளாவு.
**********
29. நல்ல உணவு உண்டு, நடை பயிற்சி செய்து, உடல் நலம் பேணி, இறை பக்தி கொண்டு, குடும்பத்தினர், நண்பர்களோடு கலந்து உறவாடி, மன நிறைவோடு வாழ்.
*********
30. இன்னும் இருபது, முப்பது, நாற்பது ஆண்டுகள், சுலபமாக ஓடி விடும்!
*********
31. வாழ்வை கண்டு களி!
*********
32. ரசனையோடு வாழ்!
*********
33. வாழ்க்கை வாழ்வதற்கே!
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

34. நான்கு நபர்களை புறக்கணி!
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

🌹மடையன்
🌹சுயநலக்காரன்
🌹முட்டாள்
🌹ஓய்வாக இருப்பவன்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

35. நான்கு நபர்களுடன் தோழமை கொள்ளாதே!
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

🌹பொய்யன்
🌹துரோகி
🌹பொறாமைக்கைரன்
🌹மமதை பிடித்தவன்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

36. நான்கு நபர்களுடன் கடினமாக நடக்காதே!
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

🌹அனாதை
🌹ஏழை
🌹முதியவர்
🌹நோயாளி
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

37. நான்கு நபர்களுக்கு உனது கொடையை தடுக்காதே!
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

🌹மனைவி
🌹பிள்ளைகள்
🌹குடும்பம்
🌹சேவகன்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

38. நான்கு விசயங்களை ஆபரணமாக அணி:
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸!

🌹பொறுமை
🌹சாந்த குணம்
🌹அறிவு
🌹அன்பு
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

39. நான்கு நபர்களை வெறுக்காதே!
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

🌹தந்தை
🌹தாய்
🌹சகோதரன்
🌹சகோதரி

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

40. நான்கு விசயங்களை குறை!

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

🌹உணவு
🌹தூக்கம்
🌹சோம்பல்
🌹பேச்சு

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

41. நான்கு விசயங்களை தூக்கிப்போடு!
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

🌹துக்கம்
🌹கவலை
🌹இயலாமை
🌹கஞ்சத்தனம்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

42. நான்கு நபர்களுடன் சேர்ந்து இரு!
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

🌹மனத்தூய்மை உள்ளவன்
🌹வாக்கை நிறைவேற்றுபவன்
🌹கண்ணியமானவன்
🌹உண்மையாளன்

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
43. நான்கு விசயங்கள் செய்!
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

🌹 தியானம், யோகா   🌹நூல் வாசிப்பு
🌹உடற்பயிற்சி
🌹சேவை செய்தல்
☘ ☘ ☘ ☘ ☘ ☘ ☘ ☘ 
எந்நாளும்  நலமாக வாழ,,வாழ்க்கை வளம் பெற "பகவத் கீதை"யை கடை பிடியுங்கள்.
🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯

🚩🚩ஜெய்ஹிந்த்🇮🇳🇮🇳 பாரத் மாதாகி ஜெய்🇮🇳வந்தேமாதரம்🇮🇳🚩🚩

என்றும் தேசப்பணியில்,

அன்பின் தங்கை திருமதி சுபா அனுப்பிய செய்தி.




14 comments:

KILLERGEE Devakottai said...

படித்து முடித்ததும் நமது தவறுகள் புரிகிறது அம்மா இனியாவது புரிந்து வாழ்வோம்.

ஸ்ரீராம். said...

இதில் கொஞ்சமாவது கடைப்பிடிக்க நினைப்போம்!  எல்லாமே நல்ல சிந்தனை.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் தேவகோட்டைஜி,

நலமுடன் இருங்கள்.
தவறே செய்யாமல் வாழ்வு ஏது.
நீங்கள் சொல்ல வந்தது புரிகிறது.

கீதை உரைகளைப் படிக்கும் போது
நமக்கு இதுபோன்ற உணர்வுகள் ஏற்படுவது சகஜம் தான்.
அவரவர் நிலையில் இருந்து
பார்த்தால் தான் தெரியும்.
உங்கள் வாழ்வு மேலும் நலம் பெற இறைவன் அருள் செய்வான்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ஸ்ரீராம்.

சில அறிவுரைகளையாவது கடைப் பிடிக்கலாம். நலமுடன் இருங்கள்.

Anuprem said...

அற்புதமான வரிகள் மா ....

கோமதி அரசு said...

மிகவும் அருமையான பகிர்வு.

//“எல்லாமே நான் இறந்த பிறகு தான்” என, உயில் எழுதி வைத்திராதே. நீ எப்போது இறப்பாய் என எதிர்பார்த்து காத்திருப்பர்.
**********
23. எனவே, கொடுக்க நினைப்பதை மட்டும் முதலில் கொடுத்து விடு; மேலும் தர வேண்டியதை, பிறகு கொடு.//

நல்ல யோசனை கடைபிடிக்கிறேன்.


//நல்ல உணவு உண்டு, நடை பயிற்சி செய்து, உடல் நலம் பேணி, இறை பக்தி கொண்டு, குடும்பத்தினர், நண்பர்களோடு கலந்து உறவாடி, மன நிறைவோடு வாழ்.//

நல்ல நிம்மதியாக வாழ இதை கடைபிடித்தாலே போதும்.

நன்றி அக்கா.


Thulasidharan V Thillaiakathu said...

அம்மா அனைத்துமே அருமை.


யோசித்து யோசித்து மண்டை காய்கிறது. வேறொன்றுமில்லை...இதில் ஏதாவது ஒன்றையேனும் பின்பற்றியிருக்கிறேனா என்று!!! ஒன்றிரண்டாவது பின்பற்றிப் பார்க்கலாம் தான் பின்பற்ற முடியுமா??? ..ஹூம் மனித மனசு.. ஹாஹாஹா

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

இத்தனையும் உரைப்பது ஒரு விஷயம். இவ்வுலகில் ஒருவரும் 100 சதவிகிதம் பெர்ஃபெக்டாக இருப்பது அரிது என்பது. இதில் பாதியளவு கூட இருக்கமுடியுமா என்பதுதான். என்னதான் அவரவர் வாழ்வு அவரவர் விதி என்று நாம் வாயால் சொன்னாலும் இப்படிச் செய்திருக்கலாம் அப்படிச் செய்திருக்கலாம் அவர் செய்தது சரியல்ல என்று எத்தனை விமர்சனங்களை நாம் சொல்கிறோம்.

துளசிதரன்

வல்லிசிம்ஹன் said...

மிக நன்றி அன்பின் அனுப்ரேம்.
சில வற்றையாவது கடைப் பிடிக்கலாம்.
மிக உயர்ந்த அறிவுரைகள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதிமா,
வாழ்க வளமுடன்,.

கீதை சொன்ன கண்ணன் இன்று தேரில் வருகிறான்.
கேட்டவர்க்குக் கேட்டபடி வாழ்வு தருகிறான்.''

பாடல் தான் நினைவுக்கும் வருகிறது.
கண்ணன் மொழிகளைத் தொகுத்துத் தந்தவர்க்கே
நாம் நன்றி சொல்ல வேண்டும்.

எத்தனையோ நீதி உரைகளைப் படிக்கிறோம். பகவத் கீதையில்
இல்லாதது ஒன்றுமே இல்லை.

மிக நன்றி மா.நலமுடன் இருப்போம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,
நலமுடன் இருங்கள் அம்மா.
ஒன்றிரண்டு என்ன!! நீங்கள் அனைவரிடமும் காட்டும் அன்பு
ஒன்றே போதுமே.
நல் வாழ்வு கட்டாயம் கிடைக்கும்
அம்மா. கண்ணன் கீதை சொன்ன போது
இல்லாத பல விஷயங்களை
இப்போது சமாளிக்க வேண்டி வருகிறது.
அவனைத் துணைக்கு வைத்துக் கொண்டு மீளும் வழி
பார்ப்போம்.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் துளசிதரன்,
என்றும் நலமுடன் இருங்கள்.
நீங்கள் சொல்வது சரியே.
ஏற்றம் தாழ்வு இருக்கும் உலகில்

யாராவது ஏதாவது சொல்லிக் கொண்டு தான் இருப்பார்கள்.

தன் முதுகு ஒரு போதும் தனக்கே தான் தெரியாது
என்பது தானே பழமொழி.

நம் வழி நாம் செல்வோம். மற்றவரைப் பழிக்காமல் இருப்போம்.

நல்லவர்கள் தோழமை நமக்கு நல் வழி காட்டும்.
மிக நன்றி மா.

மாதேவி said...

பகவத்கீதை சிந்தனைகள் அத்தனையும் சிறப்பு இதில் நாம் சிறுதளவாவது கடைப்பிடித்தால் வாழ்க்கை நலமே.

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பான தகவல்கள்..... சிலவற்றை மட்டுமாவது கடைபிடிக்க முடிந்தால் நல்லது. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.