அனைவரும் நலமுடன் இருக்க இறைவன் அருள வேண்டும்.
ஒரு நல்ல அமைதியான ஆத்மா
பகவான் திருவடிகளை அடைந்தது.
ஸ்ரீமதி பிரேமா ஸ்ரீனிவாசன்,
என் மாமா திரு ஸ்ரீனிவாசனின் அருமை மனைவியும்,
ஸ்ரீப்ரியா ஸ்ரீனிவாசனனி அருமை அம்மாவும்,
ஒரு வாரம் நோயில் இருந்து இன்று ஞாயிறு காலை
இறைவனடி சேர்ந்தார்,.
என் பாட்டியின் மருமகள்கள் அத்தனை பேரும் சிறந்த குணவதிகள்.
பொறுமையின் பூஷணங்கள்.
ஓர்ப்படிகள் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்திக் குடும்பத்தை
ஒற்றுமையாகக் கட்டுக் கோப்பாக வைத்துக்
கொண்டிருந்தார்கள்.
அண்ணா தம்பிகளுக்குள் எத்தனை ஒற்றுமையோ
அதே போல அவர்கள் மனைவிகளும்
எந்த சமயத்தில் உதவி தேவையோ
அந்த சமயத்தில் ஒன்று சேர்ந்து உறவுகளைக்
காத்து வந்தனர்.
இது எங்கள் தலைமுறையின் அதிர்ஷ்டம்.
பழி பாவத்துக்கு அஞ்சிய தலைமுறை.
என் வயதே ஆன பிரேமாவும் ,பெரிய குடும்பத்திலிருந்து வந்தவர்.
என் பாட்டி மிகவும் கட்டு திட்டங்களுடன், ஆசாரம் பேணி
வாழ்க்கை நடத்துவார்,.
அவருடன் கூட இருப்பது சில நேரங்களில் சிரமம் தான்.
பிரேமா தன் உயர்ந்த குணத்தால்
மாமா, பாட்டி, மச்சினர்கள், ஓர்ப்படிகள்
அனைவருக்கும் ஒத்த மருமகளாக எப்போதும் நடந்தார்.
வேலைக்கு அஞ்ச மாட்டார். எப்பொழுதும் சுறு சுறுப்பாக,
வீட்டைப் பளிங்கு போல் வைத்துக் கொண்டு,
அரிய விருந்தோம்பலால் அனைவரையும் கவர்ந்து
49 வருட தாம்பத்திய வாழ்வைச் சிறக்க வைத்தார்.
மகளிடம் பேரன்பு.
அவள் திருமணம் சிறப்பாக நடந்ததும்
நல்ல மாப்பிள்ளையுடன் தன் வீட்டுக்கு அருகிலேயே பக்கத்தில்
அவர்கள் இருக்க ,
நிம்மதியுடன் காலம் கழித்தவருக்கு இந்த திடீர்
என்று வந்த
நோய் , வாழ்வை முற்றுப் பெற வந்தது.
இனி அவர்கள் எப்படி மீள்வார்களோ ..அது இறைவன் கையில்.
என் மாமாவுக்கும்,
அவரது மகள்,மருமகனுக்கும் நல வாழ்வும் ஆறுதலும் இறைவனே
அருள வேண்டும்.
என் அருமை பிரேமாவின் ஆன்மா சாந்தியுடன்
அமைய வேண்டும்.
15 comments:
ஆழ்ந்த இரங்கல்கள். அவர் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறப் பிரார்த்தனைகள்.
பிரியமான உறவின் இழப்பு மனதை மிகவும் சங்கடபடுத்தும். அவரின் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்தனைகள்.
அவர்களை இழந்து வாடும் அவர்கள் குடும்பத்தினர்களுக்கு இறைவன் ஆறுதலும், தேறுதலும் வழங்க வேண்டும்.
எனது அஞ்சலிகள் அம்மா.
இவர் தான் அன்னிக்கு நீங்க சொன்ன உறவினரா? வருத்தமாய் இருக்கு. அதுவும் சின்ன வயசில் இருந்தே பழக்கமானவர்/சம வயது என்னும்போது வேதனையின் தாக்கம் அதிகமாகவே இருக்கும். எங்கள் வருத்தங்கள்/உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் ஆறுதல்கள்.
இறைவனின் திருவடியில் இந்த நல்ல ஆத்மாவிற்கு அமைதி கிடைக்கட்டும் பிரார்த்திப்போம் அம்மா. ஆழ்ந்த அனுதாபங்கள். அவரது குடும்பம் இதிலிருந்து மீளவும் பிரார்த்திப்போம்.
கீதா
அண்ணா தம்பிகளுக்குள் எத்தனை ஒற்றுமையோ
அதே போல அவர்கள் மனைவிகளும்
எந்த சமயத்தில் உதவி தேவையோ
அந்த சமயத்தில் ஒன்று சேர்ந்து உறவுகளைக்
காத்து வந்தனர்.
இது எங்கள் தலைமுறையின் அதிர்ஷ்டம்.//
நானும் இந்த விஷயத்தில் ப்ளெஸ்ட். என் மாமிகள் இப்போதும் என்னிடம் மிகுந்த அன்புடன் இருப்பவர்கள். எனக்கு ஏதேனும் கஷ்டம் என்றால் உடனே உதவ ரெடியாக இருப்பவர்கள். நான் தான் அன்பும் ஆசிர்வாதமும் போதும் அதுவே மிகப் பெரிய நிறைவு என்று அவர்களுடன் தொடர்பில் இருந்துகொண்டே இருப்பவள். அவர்கள் குழந்தைகளும். அதனால்தான் எல்லோரையும் என் தம்பி தங்கைகள் என்று சொல்லுவது.
கீதா
அன்பின் ஸ்ரீராம்,
மிக நன்றி. எதையும் பதிவு செய்வது வழக்கமாகி விட்டது.
நல் வாழ்வு வாழ்ந்து நிறைவாகவே சென்றிருக்கிறார்.
அதை எதிர்கொள்ளவும் சக்தியை இறைவனே
தருவார்.
நல்ல உயிர்களுக்கு இறைவனே காப்பு.
அன்பின் கோமதி மா.
வாழ்க வளமுடன்.
அவர்களுடன் தொடர்பில் இருந்து வருகிறேன்.
வாழ்வில்வேதனைகளைக் கொடுக்கும்
இறைவன் அதைத் தாங்க சக்தியும் கொடுப்பான்.
அவர்கள் பெண்ணை நினைத்துத் தான் சங்கடமாக
இருக்கிறது.
அவர்கள் அனைவருமே மெதுவே மீள வேண்டும்.
நன்றி மா.
அன்பின் தேவ கோட்டைஜி,
நன்றி. பிரார்த்தனைகளால் எல்லாத் துன்பங்களும் நீங்க வேண்டும்.
அன்பின் கீதாமா,
நன்றி.
ஆமாம் மா. சமவயது. மாமாவும் இவரும் அவ்வளவு அன்யோன்ய
தம்பதிகள்.
சரளமான அன்பான சுபாவம். மென்மையானவர்.
அவர்கள் மகளும் பக்தி நிரம்பிய மிக நல்ல குழந்தை.
மிகவும் சிரமமான காலம்.மீள வேண்டும்.
1973 லிருந்து பழகிய மனுஷி.
கபடம் இல்லாத சினேகம். சமீப காலமாக கொஞ்சம்
தள்ளி வந்து விட்டேன்.
மாமாவும், மகளும் சௌக்கியமாக இருக்க வேண்டும்.
அந்தத் தைரியத்தையும் பகவானே கொடுப்பான்.
அன்பின் கீதா ரங்கன் மா,
ஆமாம். அன்பும் பாசமும் எப்பொழுதும் நிரம்பி இருக்கும் குடும்பம்.
நீங்கள் சொல்வது மிகச் சரி.
என் மாமாக்களை என் அம்மாவின் பிரதி நிதியாகவே நான்
பார்ப்பேன்.
என் குடும்பத்தில் மிகுந்த அக்கறையுடன் இருப்பார்கள்.
மாசு இல்லாத உறவு.
அவர்கள் குழந்தைகள் என்னை விட வயதில் மிகச் சிறியவர்கள்.
அதனால் என் மக்களைப் போலவே '
அவர்களிடம் கவனம் வைப்பேன்.
அவர்களும் அதையே பிரதிபலிப்பார்கள்.
ஒளிவு மறைவு இல்லாத குடும்பம்.
நலமுடன் இருங்கள்.
அவர்கள் மெது மெதுவே மீள இறைவன்
அருள வேண்டும்.
மிக நன்றி மா.
பிரேமா என்னும் நல்லதோர் ஆத்மா இறைவன் பாதங்களில் அடைக்கலம் அடைந்துவிட்டது.
துயருறும் குடும்பத்தினர்களுக்கு அனுதாபங்கள்.
ஆழ்ந்த இரங்கல்கள். சில இழப்புகளிலிருந்து விடுபடுவது கடினம் தான் என்றாலும் விடுபட்டே ஆக வேண்டும் - இதுவும் கடந்து போகும்...
அன்பின் மாதேவி,
நலமுடன் இருங்கள்.
ஆறுதல் வார்த்தைகளுக்கு மிக நன்றி மா.
திரும்பிப் பார்க்கும் முன் ஒரு வாரம் ஓடி விட்டது.
அன்பின் வெங்கட்,
என்றும் நலமுடன் இருங்கள்.
ஒரு வாரம் சென்று விட்டது.
காலம் ஆற்றும் என்றுதான் நினைக்கிறேன்.
Post a Comment