வல்லிசிம்ஹன்
உலகம் இருளில் மூழ்கும் ஒரே ஒரு ஊரில்
பிறந்த குழந்தையும் தாயும் ஒரு இடம். தந்தை போருக்குச் செல்ல
தாய் செய்தி நிறுவனத்துக்கு பேட்டி கொடுக்கிறாள்.
கேட்பார் யாரும் இல்லையா.
இன்று எங்களை அடிப்பவன் நாளை உங்களை அடிக்க
மாட்டானா என்று கதறும் அந்தப் பெண்ணை யார் தேற்றுவது.
உலகம் நலம் பெறட்டும்.
😢😬
14 comments:
போர் வேண்டாம் உலக மக்களின் வேண்டுகோள் இதுவே...
பேச்சு வார்த்தை சுமுகமாக நடந்து அனைவருக்கும் விடிவு பிறக்கப் பிரார்த்திப்போம். போதும் போதும். போரெல்லாம்! :(
இன்று எங்களை அடிப்பவன் நாளை உங்களை அடிக்க
மாட்டானா//
மனதை குத்தும் வரிகள்....உண்மையான வரிகள். இதை வாசித்ததும் அந்தப் பெண்ணை நினைத்து மனம் என்னவோ செய்கிறது. எத்தனை துன்பம் இது.
கீதா
உக்ரைன் ரஷ்யா போர் மிகவும் வேதனை. பேச்சுவார்த்தை நல்லபடியாக முடிந்து போர் ஒரு முடிவுக்கு வர வேண்டும். அந்தப் பெண்மணி சொல்வது மிகவும் உண்மை. நாளை எந்த நாட்டின் மீது கைவைக்குமோ?
துளசிதரன்
ஆமாம் மா. அன்பு தனபாலன். உலகம் எங்கே போகிறது!!
அன்பின் தேவகோட்டைஜி,
நம் பிரார்த்தனைகள் அவர்களுடன்.
அன்பின் கீதாரங்கன் மா,
தொலைக்காட்சி பார்க்கவே மனம் நடுங்குகிறது. அரக்கர்களை
அழிக்க முடியாதா என்று தான் தவிக்க முடியும்.
ஆமாம் அன்பு கீதாமா,
சட்டென்று ஒரு தீர்வு கிடைக்காதா என்ற தவிப்பு.
பகவான் அருளட்டும்.
நம் ஊரில் ஒரு செய்தி படித்தேன். இரண்டு மகன்களில் ஒரு மகன் உக்ரைனில், இன்னொரு மகன் ரஷ்யாவில். பெற்றோர் இந்தியாவில்.
நாடுகள் தோறும் உறவே வருக பகையே வர வேண்டாம்
சமாதானமே சமாதானமே தழுவுகின்றேன் உன்னை
அன்பின் ஸ்ரீராம்,
இன்னோரு செய்தியும் படித்தேன். மனம் நிலை கொள்ளாமல் தவிப்பாக
இருக்கிறது.
பெருமாள் அவதாரம் எடுத்து வந்து விட்டால் நன்றாக இருக்குமே
என்றும் யோசனை.
ஒவ்வொரு வினாடியும் தினமலர் அப்டேட்ஸ்
ரசிக்கும்படி இல்லை.
கடவுள் துணை. நன்றி மா.
அன்பின் துளசிதரன்,
நிம்மதியும், அமைதியும் வேண்டுவோம்.
களங்கம் இல்லாத மக்கள் இப்படி வேதனைப்
படலாமா. மண்ணில் பிறந்தவன் மண்ணில் போகப்போகிறவன்,
ஈரம் இல்லாமல் நடந்தால் என்ன செய்யலாம்.
வேதனை தரும் கேள்வி.
போரில்லா உலகம் வேண்டும்.
உலகில் அமைதி வேண்டும்.
போர் காலத்தில் நாங்கள் பட்ட துன்பங்கள் மறுப்பதற்கில்லை.
போர் என்றாலே வேதனைதான்.
Post a Comment