Blog Archive

Saturday, February 26, 2022

மனதுக்குப் பிடித்த பாடல்கள் சில


வல்லிசிம்ஹன்

  எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.

சில பாடல்கள் மனதை விட்டு மறைவதில்லை.எங்கள் குடும்பத்துக்குப் பிடித்த பாடல் 
Papa he loves mama. 
குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.1966.


பெரிய தம்பிக்குப் பிடித்த பாடல்
அவனை மண மேடை ஏற்றியது.







   சின்ன தம்பிக்குப் பிடித்ததெல்லாம் ட்ரம் பீட் 
இசைதான்.
 Song of Singam   அதற்குப் பின் எனக்குப் பிடித்தது.
இரண்டு பேருக்கும் பிடித்த பழைய க்ரீக் நாட்டுப்
பாடல்.

You know I can't smile without you
I can't smile without you
I can't laugh and I can't sing
I'm finding it hard to do anything
You see I feel sad when you're sad
I feel glad when you're glad
If you only knew what I'm going through
I just can't smile without you
You came along just like a song
And brighten my day
Who would have believed that you were part of a dream
Now it all seems light years away
And now you know I can't smile without you
I can't smile without you
I can't laugh and I can't sing
I'm finding it hard to do anything
You see I feel sad when you're sad
I feel glad when you're glad
If you only knew what I'm going through
I just can't smile
Now some people say
Happiness takes so very long to find
Well, I'm finding it hard
Leaving your love behind me
And you see I can't smile without you
I can't smile without you
I can't laugh and I can't sing
I'm finding it hard to do anything
You see I feel glad when you're glad
I feel sad when you're sad
If you only knew what I'm going through
I just can't smile without you.............


12 comments:

ஸ்ரீராம். said...

இனிமையான பாடல்கள்.    பிடித்தமான பாடல் மணமேடை ஏற்றியதா? எப்படி?

Geetha Sambasivam said...

அருமையான பாடல்கள் அனைத்தும். எங்கள் குழந்தைகளும் "Papa loves Mama" பாடலை விரும்பிக் கேட்பார்கள். எங்களுக்கெல்லாம் அவங்க மூலமாகவே ஆங்கில/வேறு மொழி இசை பழக்கம் ஆனது. அந்தப் பழைய ஆடியோ/வீடியோ காசெட்டுகளை எல்லாம் இப்போத் தான் போன வாரம் தெரிந்தவர் ஒருத்தர் கிட்டே கொடுத்தோம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம்,
ஆமாம் மா.
இந்தப் பாடல்கள் அவனுக்குப் பிடிக்கும் என்று
நாங்கள் பெண் பார்க்கப் போகும் போது
தம்பியின் விருப்பங்களை அவளிடம் முதல் நாளே
தொலைபேசி விட்டேன்.

அவன் பார்த்துவிட்டு, அவளிடம் இந்தப் பாடல் பிடிக்குமா
என்று கேட்டதற்கு,
'நான் ஆங்கில இசையே கேட்டதில்லை'
என்று சொல்லி விட்டாள்:)

அந்த நேர்மை பிடித்ததாலும்,( ரொம்ப அழகா இருந்ததாலும்)
உடனே சரி என்று விட்டான் மா!!!

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,
என்றும் நலமுடன் இருங்கள்.

பப்பா லவ்ஸ் மம்மா அனேகமாக எல்லாக் குழந்தைகளுக்கும் பிடிக்கும்.

'பப்பா கி லா மம்மா' போடு மா என்று துளைப்பான் பெரியவன்:)

நம் விருப்பங்களுக்கு பாதிக்கு மேல் அவர்கள்
தான் காரணமாகிறார்கள்!!!

அதுவும் நானும் அவர்களும் மட்டுமே
பல நாட்கள் தனியாக இருப்போம்.
அப்போதெல்லாம் இசையே எங்களுக்குத் துணை.

பாடல்களை ரசித்ததேகு மிக நன்றி மா.

KILLERGEE Devakottai said...

எல்லா பாடல்களையும் கேட்டேன் 1966 வந்த கலர் படம் நல்ல க்ளாரிட்டியாக இருக்கிறதே...

கடைசி பாடல் தமிழ் பாடலொன்றின் மெட்டு போலவே இருக்கிறது.
ஜெயலலிதா நடித்த பாடல் என்று நினைவு.

சச்சா சின்ன பாப்பா என்று தொடங்கும் பாடல் சரியாக ஞாபகம் இல்லை அம்மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் தேவகோட்டைஜி,,

என்றும நலமுடன் இருங்கள்.
பாடல்களைக் கேட்டு ரசித்ததற்கு மிக நன்றி மா.

நீங்கள் சொல்லும் பாடல் எதிரிகள் ஜாக்கிரதை படத்தில் வேதா அவர்களின் இசையில் மனோகர, மணிமாலா வின் குழந்தை பாடுவதாக வந்தது.
அம்மா பக்கம் வந்தா என்று ஆரம்பிக்கும் என்று நினைக்கிறேன் மா ஆங்கிலப் பாடல் முனபே வந்து விட்டது. மனோகர் நன்றாக நடித்திருப்பார்.

நன்றி மா.

KILLERGEE Devakottai said...

ஆம் அம்மா தங்களுக்கு ஞாபகசக்தி அபாரம்.
ஆம் ஆங்கில படம்தான் முதலில் வந்து இருக்கும்.

கோமதி அரசு said...

பாடல்கள் பகிர்வு மிக அருமை கேட்டு மகிழ்ந்தேன்.
பெரிய தம்பிக்கு பிடித்த பாடல் தம்பி மனைவியின் நேர்மையான பதில் மணமேடை ஏற்றியது மகிழ்ச்சியான விவரம்.

"நீஎங்கே நினைவுகள் அங்கே" எங்கள் இருவருக்கும் பிடித்த பாடல்.

இப்போது மனது பாடி கொண்டே இருக்கும் பாடல்.


Thulasidharan V Thillaiakathu said...

அம்மா எல்லாப் பாட்டும் கேட்டேன். நன்றாக இருக்கிறது ஆங்கிலப் பாடல்கள். கடைசிப் பாடல் ஆ தமிழிலும் அப்படியே உண்டே. லாலாலா..என்று தொடங்கும் ஒரு நள் இருந்தேன் அப்புறம் வேர்ட்ஸ் தெரியலை...அப்படியே இந்தப் பாடல் க்ரெடிட்ஸ் கொடுத்தார்களா என்று தெரியவில்லை!!!!!!

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

அதாவது நம்ம ஊர்ல அந்தப் படத்துல (எந்தப் படம் என்று தெரியவில்லை) லால்லா லல்லல்லா...அந்தப் பாட்டுக்கு க்ரெடிட் ...ஆங்கில இசையமைப்பிற்கு..அப்படியே போட்டிருக்கிறார்கள் இங்கு

கீதா

வல்லிசிம்ஹன் said...

அன்பின் தேவ கோட்டைஜி,
எனக்கு இசையும், புத்தகங்களும் குழந்தைகளும்
தான் வாழ்வே, எங்கள் சிங்கம்
அலுவலக வேலைகளுக்காக அடிக்கடி வெளியுர் போக வேண்டி வரும்.
குழந்தைகளும் சின்ன வயசு. அதுகளைச் சந்தோஷப்
படுத்தவே இந்தப் பாட்டெல்லாம்.
ஞாபக சக்தி சில சமயம் நல்லது. சில சமயம் இல்லை.:)

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதி என்றும் வாழ்க வளமுடன்.

நம் கதை எல்லாம் ஒன்றாகத்தான் இருக்கிறது.
பழைய பாடல்களில் ஏதோ நிம்மதி கிடைக்கிறது,.

நீ எங்கே மிகப் பிடித்த பாடல்.
உங்களுக்கும் பிடித்ததில் மனசு மகிழ்கிறது.
நல்ல நினைவுகள் நம்முடன்.

தம்பி மனைவி ,
இப்போது கேட்டாலும் சிரித்துக் கொள்வாள் பாவம்.