Blog Archive

Wednesday, February 23, 2022

பற்றுக பற்றற்று.....


வல்லிசிம்ஹன்
   எல்லோரும் வளமாக  வாழ வேண்டும்.
நாம  நினைப்போம் இன்னோருத்தர் நமக்கு 
சொல்கிறார். 
நன்றி திருமதி லக்ஷ்மி ஸ்ரீனிவாசன் நான் பெறாத அன்பு மகள்.

படித்ததில் பிடித்தது

*படிங்க ரொம்ப பிடிக்கும்!...*

*அந்த வீட்டு ஆண் எப்போதும் வேலைப்பளுவின் காரணமாகவும், குடும்ப உறுப்பினர்கள் பற்றிய அக்கறையினாலும் ஒரு பதற்றத்தோடேயே இருப்பார்..... எரிச்சலும் கொள்வார்.... ஆனால் ஒரு சில தினங்களாக பதற்றமோ, கோபமோ, எரிச்சலோ இன்றி அவர் அமைதியோடு காணப்பட்டார்!.....*

*ஒருநாள் அவரது மனைவி, .... "நான் நண்பர்களோடு சேர்ந்து  சுற்றுலா  போகிறேன்" .... என்று அந்த ஆணிடம் கூறினார்.... அவரும் அமைதியாக சம்மதித்தார்....*

*மகன் தனது தந்தையிடம் தயங்கியவாறு, "அப்பா நான் எல்லா பாடங்களிலும் பின் தங்கி இருக்கிறேன்" என்றான்.... அதற்கு அந்த ஆணும், "ஒழுங்காக படித்தால் உன்னால் முடியும்.... முடியவில்லை என்றால் மறுபடியும் அதே வகுப்பில் இருந்து படி" என்றார் அமைதியாக....*

*மகள் ஓடி வந்து, "அப்பா என் காரை விபத்துக்குள்ளாக்கி விட்டேன்" என்றாள் பதற்றத்தோடு.... அதற்கு, "கொண்டு போய் சரி செய்து விடு" என்றார்....*

*குடும்ப உறுப்பினர்கள் அவரின் அமைதியை கண்டு குழப்பம் கொள்ள ஆரம்பித்தனர். ஏதாவது மருந்துக்களை பாவித்து தன்னை அமைதிப்படுத்திக் கொள்கிறாரோ என்று கவலைப்பட தொடங்கினர்....*

*ஒருநாள் அவரே எல்லோரையும் அழைத்து அமர வைத்து பின்வருமாறு கூறினார்:- ....*
👌🏾 ⬇️ 👌🏽
*"சில உண்மைகள் புரிய எனக்கு நீண்ட காலம் எடுத்தது..... அதாவது அவரவர் வாழ்க்கைக்கு அவரவர் தான் பொறுப்பு....*

*என்னுடைய கோபம், என்னுடைய பதற்றம், என்னுடைய பயம், என்னுடைய மன அழுத்தம், என்னுடைய தைரியம் எதுவும் உங்கள் பிரச்சினைகளை தீர்க்க போவதில்லை.... அவை என் ஆரோக்கியத்தை கெடுத்து என் பிரச்சினைகளை தான் அதிகரிக்கும்.....*

*என் அன்பையும், தைரியத்தையும் மட்டுமே உங்களுக்கு என்னால் கொடுக்க முடியும்.... உங்களுக்கு தேவைப்பட்டால் என் அறிவுரைகளை நான் தருவேன்....* *உங்களுக்காக நான் பிரார்த்தனை செய்வேன். ஆனால் உங்கள் வாழ்க்கையை நான் வாழ முடியாது.....*

*ஏனெனில் என்னை சார்ந்து நீங்கள் இந்த பிறவியை எடுக்கவில்லை. இது உங்களுக்கு கிடைத்துள்ள வாழ்க்கை..... உங்கள் பிரச்சினைகளுக்கு நீங்களே பொறுப்பு கூறல் வேண்டும்.....* *உங்கள் பிரச்சினைகளை களைந்து உங்கள் சந்தோசத்தை நீங்களே தேடுமளவுக்கு நீங்களும் எல்லா அறிவையும் பெற்றுள்ளீர்கள். ஆகவே தான் நான் அமைதியாகி விட்டேன்."...*

*குடும்பமே வாயடைத்துப் போனது!!!.....*

*அவர்களின் செயல்பாடுகளுக்கு அவர்களே பொறுப்பு என்று அனைவரும் உணர்ந்து விட்டால் வாழ்க்கை அமைதிப் பூங்காவாக மாறும்....*
*💓...  *இதுவே இயற்கையின் நியதி..*.💓.
*வாழ்க வளமுடன்.*🙏🙏🙏

15 comments:

Geetha Sambasivam said...

நல்ல அறிவுரை தான். இதையே குடும்பத் தலைவி சொல்வதாகவும் வாட்சப்பில் சுற்றிக் கொண்டிருந்தது. ஆனாலும் நம்ம மனசு இதை எல்லாம் எங்கே ஏற்றுக்கொள்ளும்! அது பாட்டுக்குப் புலம்பும்.

கோமதி அரசு said...

படித்த பகிர்வு மிக அருமை.

அவர்களின் செயல்பாடுகளுக்கு அவர்களே பொறுப்பு என்று அனைவரும் உணர்ந்து விட்டால் வாழ்க்கை அமைதிப் பூங்காவாக மாறும்....*
*💓... *இதுவே இயற்கையின் நியதி..*.💓.
*வாழ்க வளமுடன்.*🙏🙏🙏//

உண்மை உண்மை.
செயலுக்கு ஏற்ற விளைவாய் இறைவன் வருவான். என்பது உண்மைதான்.

நெல்லைத் தமிழன் said...

பதிவின் கருத்து அருமை. ஆறு மாதங்களாகக் கடைபிடிக்கிறேன்

ஸ்ரீராம். said...

அருமையான கதை.  ஆனால் இந்த நிதானம் அனைவருக்கும் வர, அனைவரும் கைக்கொள்ள முடியுமா என்பது சந்தேகம்.  எனக்கும் இந்த சிந்தனைகள் அடிக்கடி வரும்.

ஸ்ரீராம். said...

அவர் பற்றிவிட்டார் பற்றற்றார் பற்றினை.  உணர்ந்துவிட்டார் பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக்கல் என்பதை!

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பான பதிவு. சரியாகச் சொல்லி இருக்கிறார்கள். பதட்டம் கொண்டு எந்த விஷயத்தினையும் செய்வதில் பலன் இல்லை.

Thulasidharan V Thillaiakathu said...

நேற்றே வாசித்துவிட்டேன் அம்மா. ராத்திரி.

// *அவர்களின் செயல்பாடுகளுக்கு அவர்களே பொறுப்பு என்று அனைவரும் உணர்ந்து விட்டால் வாழ்க்கை அமைதிப் பூங்காவாக மாறும்....*//

யெஸ் யெஸ் ....இது இருந்துட்டா அப்புறம் ஏது பிரச்சனை. ஆனா பலரும் மத்தவங்க மீதுதானே பழையைப் போடுறது வழக்கமா இருக்கு பலரிடமும்...

நல்ல விஷயம் சொல்லியிருக்கும் பதிவு.

கீதா

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,

நம் மனதுக்கு ஏது கட்டுப்பாடு. கேட்பதை எல்லாம் கேட்டுவிட்டுப்
பழைய நினைவுகளுக்கும்
புதுப் பிரச்சினைகளுக்கும் போகிறது.

சங்கடங்கள் நடக்கும் இடத்தில் நாம் இல்லாவிட்டாலும்
அங்கு இருப்பவர்களின் வருத்தத்தை
உணர்கிறோம்.
அவர்கள் நம் குழந்தைகளோ, இல்லை மற்றவர்களோ
கவலை கவலைதான்.

இப்போது கொஞ்சம் தெளிவாகச் சிந்திக்கும் ப்து
எதுவுமே நாம் சொல்வதாலோ வருந்துவதாலோ
மாறுவதில்லை என்ற ஒரே உண்மை.

ஓஹோ இது ஏற்கனவே வந்தவிட்டதா:)
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதிமா,

ஆமாம். அவரவர் செயலுக்கு அவரவர்கள்
பொறுப்பேற்காமல்
நாம் அவர்களைப் பற்றிக் கவலைப் பட்டு என்ன செய்யப்
போகிறோம்.

இறைவனை நம்பி அவனிடம் ஒப்படைத்து விட வேண்டியதுதான்.

திருமதி ரேவதி சங்கரன் சொல்வதைப்
போல முதுமை வந்தவுடன் பிரச்சினைகள் ஓய்வதில்லை.
வேறு ரூபத்தில் வருகின்றன அவ்வளவுதான்.
நன்றி அம்ம. வாழ்க வளமுடன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் முரளிமா,
மிகக் கஷ்டமான விஷயம் மா
இப்படி இருப்பது. ஆனால் இயற்கை நம்மைப் பதப்
படுத்திவிடும்.
வாழ்த்துகள் .

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம்,
என்றும் நலமுடன் இருங்கள்.

''அவர் பற்றிவிட்டார் பற்றற்றார் பற்றினை. உணர்ந்துவிட்டார் பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக்கல் என்பதை!''

அதுதான் உண்மை.
இப்பொழுது இந்தப் பதிவு சொல்வதை நான் பின்பற்றியதே இல்லை.

எப்பொழுது பார்த்தாலும் கவலை கவலைதான்.
ஆனால் திருந்தி வருகிறேன்.
நம்மால் ஆவது ஒன்றுமில்லை
என்பதுதான் நிதர்சனம்.
பிரார்த்தனைகள் எப்பொழுதும் செய்யலாம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் வெங்கட்,

என்றும் நலமுடன் இருங்கள்.
பதட்டம் தான் நிறைய உடல் கேடுகளுக்குக் காரணம்.

அதீதக் கவலையினால் இரத்த அழுத்தம்
தான் வரும்.

சிலர் பிறக்கும் போதே அமைதியாகப் பிறக்கிறார்கள்.
மற்றவர்கள் அனுபவித்துத் தான்
அதை அடைய வேண்டும். நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதா ரங்கன் மா,

நலமுடன் இருங்கள்.
நாம் அமைதியாக இருந்தாலும் , சுற்றி இருப்பவர்கள்
நம்மை இருக்க விடமாட்டார்களே .

''யெஸ் யெஸ் ....இது இருந்துட்டா அப்புறம் ஏது பிரச்சனை. ஆனா பலரும் மத்தவங்க மீதுதானே பழையைப் போடுறது வழக்கமா இருக்கு பலரிடமும்...""

இதை எதிர்கொள்வது மிகவும் அவசியம்.
சிலர் வாழ்க்கை குற்றம் சொல்வதிலேயே போய்விடுகிறது.
நம் வரையில் நாம் அமைதியாக இருக்கலாம்.

மாதேவி said...

இந்த மனம் இருந்தால் நிம்மதியே.
'மனமே அமைதி கொள்' என வேண்டவேண்டியதுதான்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் மாதேவி,

வாழ்வில் நாம் கற்க வேண்டிய பாடங்கள் எத்தனையோ.
எல்லோரும் ஒரே நாளில்
சன்யாசம் வாங்கிக் கொள்ள முடியுமா.
வாழ்ந்துதான் தீர வேண்டும். மிக நன்றி மா. நலமுடன் இருங்கள்.