வல்லிசிம்ஹன்
இசைக்கு மொழியில்லை.
மனமும் அதன் விசால நோக்கும் தான் அதற்குத் தேவை.
கண் வழியே அந்த நிலவின் கிரணங்களைக்
காட்டக் கூடிய விழிகள்
அன்பு நிறை உள்ளங்களை என்றும் கவரும்.
அப்படிச் சில சிறந்த நடிகைகளில் நூதனும் ஒருவர்.
எந்த நடிகரோடு சேர்ந்து நடித்தாலும் அவர் சோபிப்பார்.
இங்கே பௌர்ணமி அன்று நிலவைக் காண முடியவில்லை.
இன்று வேர்டில் போடுவதற்கு முன்பே நிலா
அம்மா தரிசனம் கிடைத்தது.
நான் இங்கே தான் இருக்கிறேன்.
மேகங்கள் சூழ்ந்து மறைத்தாலும் அவற்றுக்கு மேல்
நான் இருப்பேன் என்று நீ உணர்ந்தாலே போதும்
என்று சொல்கிறாள்.
அனைவரும் நலமுடன் வாழ்வோம்.
11 comments:
இசைக்கு மொழி பேதமில்லை உண்மைதான் அம்மா.
உங்களுக்கு நூதனை ரொம்பப் பிடிக்கும் என்று சொல்லி இருக்கிறீர்கள். அந்தக் கடைசி பாட்டு எனக்கு மிக மிகப் பிடிக்கும். சௌதாகர் படப்பாடல்.
நூத்தன் நல்லதொரு நடிகை.... பாடல்களை கேட்டுக் கொண்டு இருக்கிறேன்.
இசையை மொழி என்ன எனப் புரிந்து கொள்ளாமலேயே ரசிக்கலாம். உண்மைதான். நூதன் பிடித்த நடிகைகளில் ஒருவர்.
அம்மா இசைக்கு மொழி இல்லைதான். பாட்டு கேட்கிறேன் கேட்டுவிட்டு வருகிறேன்
கீதா
அன்பின் தேவகோட்டை ஜி,
என்றும் நலமுடன் இருங்கள்.
உண்மையே. மனசுக்கு இதம் அளிக்கும்
பாடல்கள் எந்த மொழியில் இருந்தால் என்ன.
நன்றி மா.
அன்பின் ஸ்ரீராம்,
என்றும் நலமுடன் இருங்கள்.
ஆமாம் மா. கௌரவமான வாழ்க்கை
வாழ்ந்தவர். உங்களுக்கு அந்தப் பாட்டு
பிடிக்கும் என்று தெரியும். சௌதாகர் மிக நல்ல படம்.
மிக நன்றி மா.
அன்பின் வெங்கட்,
என்றும் நலமுடன் இருங்கள்.
இந்தப் பனி காலத்தில் உறைய வைக்கும் குளிரில்
பாடல்களே மனதுக்கு ஆறுதல்.
நீங்கள் கேட்பதே எனக்கு மகிழ்ச்சி. நன்றி மா.
அன்பின் கீதாமா,
என்றும் நலமுடன் இருங்கள். உடம்பு தேவலையா.
நூதன் எல்லோருக்குமே பிடித்த நடிகை என்று நினைக்கிறேன். அதிகமாக
வம்புகளில் மாட்டாத கௌரவமான நடிகை.
நன்றி மா.
அன்பின் கீதாரங்கன் மா,
மெதுவாகக் கேளுங்கள்.
காலம் செல்கிறது இசையுடன்.
என்றும் நலமுடன் இருங்கள்.
நன்றி மா.
இசைக்கு மொழி பேதம் இல்லை தான்.
நூதன் நல்ல நடிகை நீங்க்ள் சொல்வது போல் எல்லோருடனும் நடைத்து த பாத்திரங்களுக்கு உயிர் கொடுப்பார்.
அவர் பாடல்களை கேட்டேன் அக்கா.
நன்றி.
Post a Comment