Blog Archive

Wednesday, February 16, 2022

உருளைக் கிழங்கு சலாட்.

வல்லிசிம்ஹன்
எல்லோரும் நலமாக வாழ வேண்டும்.


வெகு நாட்களுக்கு அப்புறம் 
நல்ல சிவப்பு உருளைக்கிழங்கு  கிடைத்தது.
இப்போதெல்லாம்  நாம் இன்ஸ்டா கார்ட் டில் சொன்னதே
வரும் என்று சொல்ல முடியாது.
நம் ஆர்டரை எடுப்பவர் என்ன புரிந்து கொள்கிறாரோ
அப்படித்தான் வீட்டுக்கு வரும் பொருளும் இருக்கும்.

பக்கத்து வீட்டில் சொல்லி இருக்கும் 
மீன் கூட நம் வீட்டில் முழித்துக் கொண்டு இருக்க வழி உண்டு.
மகளுக்கு இதெல்லாம் பார்த்த்வுடனே
தெரிந்து  கொள்ளும் சாமர்த்தியம் இருப்பதால்
அந்த மாதிரி வருவதை குப்பை தொட்டியில் 
போட்டு விடுவாள்.!!!

மீனை ஆர்டர் செய்பவர்களுக்கு மீண்டும் ஒரு பாக்கேஜ் வந்து சேரும்.:)

நானாக இருந்தால் என்ன செய்வேன் 
என்று யோசிக்கிறேன்.
நம்ம வீட்டுக்கு ஒரு  பார்சல் வந்து விட்டால்

அது நமக்கானது இல்லை என்று தெரிந்தால் 
உடனே  அந்தப் பார்சல் ஆஃபீஸ்க்கு
தொலைபேசி இதை எடுத்துக் கொண்டு 
போக வேண்டும் என்று  கேட்டுக் கொள்வேன்.

இங்கே தூக்கிப் போடுவது தான் முறை 
போல இருக்கு:)
அதுவும் கொரோனா வந்தபிறகு contamination பயம் வேற:(


 நாம செய்யப் போகிற உருளைக் கிழங்கு சலாடுக்கு
இந்த ஊர்ல சிவப்பு உருளைக் கிழங்கு
உபயோகிக்கிறார்கள்.
ஆமாம் பல வண்ணங்களில் உ.கி வருகிறது.
சந்தனக் கலர், சிவப்பு, வெள்ளை என்று 
பல விதம். சிலது இனிப்பாகக் கூட இருக்கும்.:)
இல்லை இல்லை, சர்க்கரை வள்ளிக் கிழங்கு இல்லை.


    Sour cream.....yum
படங்கள் எல்லாம் இணையத்திலிருந்து எடுக்கப் பட்டவை.
சிவப்பு உருளைக் கிழங்கு.


பழுப்பு நிற உ.கி வறுப்பதற்கும் , வதக்குவதற்கும் ஏற்றது.

சிவப்பு உ.கி. வேக வைத்து மசித்து எல்லாம் சேர்த்து
சலாட் செய்துவிடலாம்.


அப்பாடி ,செய்முறைக்கு வந்துவிட்டேன்.
அப்பா வழிப் பாட்டி சொல்வது காதில் விழுகிறது.'
'' ஆண்டா!! ஏம்மா ஆதிகாலத்திலிருந்து சொல்ற.
சுருங்கச் சொல்லி விளங்கவை''ன்னு"" சிரிப்பார்.
நமக்கு வராத வழி!!!!!

அதனால் கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள்:))
தேவை 
++++++++++++++++++++++++++++++++++++++
உருளைக் கிழங்கு

தேவையான   பச்சைப்பட்டாணி
சீவிச் சேர்க்க வேண்டிய வெங்காயம், இஞ்சியும்,பச்சை மிளகாயும்.

ஒரு கிண்ணம் சவர் க்ரீம், கொஞ்சம் வெண்ணெய்,உப்பும்
கொஞ்சம் மிளகுப் பொடியும். அலங்கரிக்க
கொத்தமல்லி, வறுத்து உடைத்த நிலக்கடலை.

செய்முறை.
உருளைக் கிழங்கை    அரை வேக்காடாக  வேக வைக்க
வேண்டும். அப்போதுதான் கஞ்சி மாதிரி இல்லாமல்
இருக்கும்.

துருவின வெங்காயம், இஞ்சி,பச்சை மிளகாய் எல்லாவற்றையும்
வெண்ணெயில் வதக்கிக் கொண்டு  வைத்துக் கொள்ளவும்.
இங்கே கிடைக்கும் சவர் க்ரீம் நம்மூரிலும் கிடைக்கிறது.
நீல்கிரிஸில் வாங்கிய நினைவு.

உருளைக் கிழங்கை தோலுரித்து,
பாதியை மசித்து,  உப்பு சேர்த்து,
மீதியை ஒன்றிரண்டாக பிசைந்து
கொள்ள வேண்டும்.
இதன் தலையில் வறுத்த இ.வெ ப மி சேர்த்து மீண்டும் ஒரு கலக்கல்:)

வேக வைத்த பச்சைப் பட்டாணியையும்
சவர் க்ரீம்,வெண்ணெய் சேர்த்து
கரண்டியால் மசித்துக் கொண்டால்
வேலை முடிந்தது.:)

பார்ப்பதற்கே அழகாக இருக்கும்.
பிடித்திருக்கிறதான்னு சொல்லுங்கள்.






21 comments:

KILLERGEE Devakottai said...

படம் வெஜிடபிள் பிரியாணி போலவே தெரிகிறது அம்மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தேவகோட்டை ஜி.

நலமுடன் இருங்கள் மா.
இந்தப் படங்கள். இந்த ஊர் இணையத்திலிருந்து எடுத்தவை.
எல்லாமே இந்த உ கி சலாட் தான்.

பிரியாணி மாதிரி தெரிகிறதா. அட ராமா.

ஸ்ரீராம். said...

சிவப்பு உருளைக்கிழங்கா?

நாம் சொன்னதே வரும் என்று சொல்லமுடியாதா?  அவர் என்ன புரிந்து கொள்கிறாரோ அதுதானா?  அடக்கொடுமையே!

ஸ்ரீராம். said...

பார்க்க நன்றாய்த்தான் இருக்கிறது.  தேவகோட்டையர் சொல்வதுபோல பிரியாணி ரைஸ் போல இருக்கிறது.

Geetha Sambasivam said...

உ.கி. போண்டாவுக்குக் கலவை சேர்ப்பது போல் இருக்கு. ஆனாலும் இப்படி சாலடாகச் சாப்பிட்டதில்லை. இங்கேயும் சிவப்பு உ.கி வர ஆரம்பிச்சிருக்கு. வட மாநிலங்களில் உ.கி. நீங்கள் சொல்லி இருப்பது போல் இனிப்பாக இருக்கும். விரைவில் வெந்துவிடும். நன்றாக மசிக்கலாம். இங்கே மாதிரிக் கட்டிக் கட்டியாக வராது. ருசி அபாரம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம்,
நலமுடன் இருங்கள்.
ஆர்டர் எடுத்துக் கொள்பவர் அனேகமாக கீழை
மெக்சிகோ நாட்டவர்களாக இருப்பார்கள்.
ஒருதடவை ஒரே ஒரு பச்சை மிளகாய் வைத்திருந்தார்கள்:)
சில்லி என்று சொன்னதால் ஒரே ஒண்ணு!!!!!!

வல்லிசிம்ஹன் said...

பிரியாணி ரைஸ் அகைன்????
சரியாப் போச்சு கூகிள் கம்ப்ளெயிண்ட் தான்
கொடுக்கணும். ஹாஹா.!!!!

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,
என்றும் நலமுடன் இருங்கள்.

நம்மூரில் உ.கி பச்சடி செய்வோமே. அதுதான் நினைவுக்கு வந்தது. தயிருக்குப்
பதில் sour cream.:)
தேங்காய்க்குப் பதில் வெண்ணெய்.
அவ்வளவுதான்.
பசங்களுக்கு உ.கி .எந்த வடிவில் வந்தாலும் பிடிக்கிறது.

வெங்கட் நாகராஜ் said...

இங்கேயும் சிவப்பு உ.கி. சில சமயங்களில் கிடைக்கிறது அம்மா.

சுவையான குறிப்பு.

Thulasidharan V Thillaiakathu said...

ஆஅஹா உகி சாலாட் ரொம்ப ரொம்ப பிடிக்கும்...நன்றாக இருக்கு அம்மா...இங்க பழுப்பில்தான் செய்வது. உங்கள் ரெசிப்பி என்னன்னு பார்க்கிறென் அதுக்கு முன்ன...


அது நமக்கானது இல்லை என்று தெரிந்தால்
உடனே அந்தப் பார்சல் ஆஃபீஸ்க்கு
தொலைபேசி இதை எடுத்துக் கொண்டு
போக வேண்டும் என்று கேட்டுக் கொள்வேன்.//

ஹாஹாஹாஹா ஹைஃபைவ்!!!

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

அப்பாடி ,செய்முறைக்கு வந்துவிட்டேன்.
அப்பா வழிப் பாட்டி சொல்வது காதில் விழுகிறது.'
'' ஆண்டா!! ஏம்மா ஆதிகாலத்திலிருந்து சொல்ற.
சுருங்கச் சொல்லி விளங்கவை''ன்னு"" சிரிப்பார்.
நமக்கு வராத வழி!!!!!//

ஹாஹாஹாஹா இதுக்கும் உங்களோடு ஹைஃபைவ்!! மீக்கும் கஷ்டமாச்சே!!!

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

சூப்பர் ரெசிப்பி அம்மா...நான் பச்சைப் பட்டாணி சேர்க்காமல் இப்படியே அலல்து காரட் கொஞ்சம் சேர்த்து...

இதில் புளிப்புக் க்ரீம், சீஸ் கலந்து போட்டு இட்டாலியன் ஸ்பைஸஸ் மேலே தூவி கடலை இல்லாமல் அதுவும் நன்றாக இருக்கு. ரோஸ்டட் ப்ரெட், சப்பாத்திக்கு ரொம்ப நன்றாக இருக்கும் இது

கிட்டத்தட்ட நம்மூர் உகி பச்சடிதான்..

செய்து ரொம்ப நளாச்சு, நினைவு படுத்திவிட்டீர்கள் செய்யணும்..

நன்றி அம்மா

கீதா



வல்லிசிம்ஹன் said...

அன்பின் வெங்கட்,
என்றும் நலமுடன் இருங்கள்.

உங்கள் ஊரில் இல்லாத உருளைக் கிழங்கா!!!!

அங்கேயும் , மும்பையிலும் மாத பொருட்களாக
உ.கி வெங்காயம் வாங்குவார்கள்
என்று பார்த்திருக்கிறேன்:)
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதா ரங்கன்,
என்றும் நலமுடன் இருங்கள்.

இங்கே இன்றும் விடாத ஸ்னோவும் மழையும்.
அதற்குத்தான் இந்த சலாட்.
நீங்கள் இன்னும் அருமையாகச் செய்வீர்கள்.
"ஆஅஹா உகி சாலாட் ரொம்ப ரொம்ப பிடிக்கும்...நன்றாக இருக்கு அம்மா...இங்க பழுப்பில்தான் செய்வது. உங்கள் ரெசிப்பி என்னன்னு பார்க்கிறென் அதுக்கு முன்ன..."
:)))))
என்னை மாதிரி நீங்களும் நேர்மைப் பொக்கிஷம்.!!!!!!
என் பிள்ளைகள் என்னை அழைப்பது
அப்படித்தான்.
நம் ஊரின் Bringing up அப்படி.
அப்படியே இருப்போம்.

வல்லிசிம்ஹன் said...

Hi Five once again:)

ஹாஹாஹாஹா இதுக்கும் உங்களோடு ஹைஃபைவ்!! மீக்கும் கஷ்டமாச்சே!!!

சுத்தி சுத்தி வந்தீஹ:)

வல்லிசிம்ஹன் said...

Dear Geetha Rengan,

இதில் புளிப்புக் க்ரீம், சீஸ் கலந்து போட்டு இட்டாலியன் ஸ்பைஸஸ் மேலே தூவி கடலை இல்லாமல் அதுவும் நன்றாக இருக்கு. ரோஸ்டட் ப்ரெட், சப்பாத்திக்கு ரொம்ப நன்றாக இருக்கும் இது"


அதுதானே பார்த்தேன்!!!
உங்களுக்குத் தெரியாத செய்முறையா!!!!

ஏயப்பா. உங்க முறை யூரோப்பியன் மாதிரி இருக்கு.
நான் நம்ம ஊருக்கு
மாற்றிக் கொண்டேன். ஹாஹாஹா.
நன்றி அன்பின் கீதாமா.

Avargal Unmaigal said...


எனக்கென்னவோ இது பார்ப்பத்தற்கு deviled eggs கலவை மாதிரி இருக்கிறது. வேண்டுமென்றால் வெஜ் டைப் deviled eggs என்று அழைக்கலாம்

வல்லிசிம்ஹன் said...

அன்பின் துரை,
நலமுடன் இருங்கள் மா. Deviled egg? பெயரே பயங்கரம்ஆ இருக்கே:)

கூகிள் அம்மா இதுதான் உ.கி சலாட் என்றார் :(

கோமதி அரசு said...

உருளை கிழங்கு சாலட் செய்முறை சொன்ன விதம் அருமை.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதிமா,
வாழ்க வளமுடன்.
இப்போது உடல் நலம் தேவலையா.
வலைப்பதிவாளர்களுக்கே சோதனை காலம் போலத் தெரிகிறது.

பதிவை வந்து படித்துக் கருத்தும் இட்டதற்கு மிக நன்றிமா.
உடல் நலம் பேணவும்.

மாதேவி said...

நன்றாக சொல்லியுள்ளீர்கள்.உருளை சலட் எங்கள் வீட்டிலும் பிடிக்கும்.