Blog Archive

Wednesday, January 19, 2022

நிலவைப் பார்த்து...



வல்லிசிம்ஹன்எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.

நிலாப் பைத்தியம் என்னை விடுவதாக இல்லை:)

இரவு  நேரம் பனி மூட்டத்தில் மறையும்
நிலா அன்னை காலையில்
படி இறங்கி வருகையில்
 வாசல் கண்ணாடிக் கதவுகளுக்கு அப்பால்
வந்து குதிக்கிறாள்.
உன்னை விட்டு நான் ஓட மாட்டேன்.
என்றும் உன்னுடனே நான் என்று சொல்கிறாளோ.!

15 வருடங்களாகப் படங்கள் எடுத்து வருகிறேன்,
அலுக்கவில்லை.
அப்படியே ஒரு கனிவான முகம் அதில் தெரிகிறது.

அப்படியே கதவோரம் ஒரு நாற்காலியைப் போட்டுக் 
கொண்டு உட்கார்ந்து பார்க்க ஆசைதான்.
கண்ணாடியைத் தாண்டி வரும்  குளிர்
என்னை நகரச் சொல்கிறது.

குளிர் கிரணங்களால் நிலத்தை அணைக்கும் அன்பு.
மலையோ மடுவோ, வீடோ ,காடோ
எதுவுமே  அவளுக்கு வேறுபாடு இல்லை.
மனித மனங்களின் காயங்கள் ஓடிப் 
போவதும் அவளால் தான். 
பழைய நினைவுகளைக் கொண்டு வந்து கொட்டி
அசை போட வைப்பதும் அவள்தான்.
நன்றி நிலாவே.






எல்லோரும் வளமுடன் வாழவேண்டும்.

15 comments:

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

நிலவு படங்கள் நன்றாக உள்ளன. "நிலவை பார்த்து வானம் சொன்னது" பாடல் நினைவுக்கு வருகிறது. இதுவரை எத்தனை நிலா பாடல்களை ரசித்து கேட்டுள்ளோம் என்பது கணக்கே இல்லை. ஆனாலும் எதுவும் திகட்டவில்லை. இன்றைக்கும் நிலாவை பார்த்தால், நம் வாய் "வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையை" என்ற நிலா பாடலை முணுமுணுக்க தவறுவதில்லை. அழகு நிலா..வானில் அழகாக பவனி வருகிறது. ரசித்தேன்.. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

ஸ்ரீராம். said...

ஆம், நிலவுப் படங்கள் நீங்கள் தொடர்ந்து பகிர்ந்து வருகிறீர்கள்.  எனக்கு நிலாவைப் படம் எடுத்தால் ஒரு மாதிரி அலங்கலாகத்தான் வருகிறது!!!  நாம் இப்போது பார்க்கும் வானத்தின் காட்சிகள் இப்போதைய காட்சிகள் அல்லவாம்.  பல நூறு வருடங்களுக்கு முந்தைய காட்சியாம்!  அந்தக் காட்சி நம்மை அடைய பல வருடங்கள் ஆகிறதாம்!  நிலா வே நீ சாட்சி எனக்கு மிக மிக மிக மிகப் பிடித்த எஸ் பி பி பாடல்களில் ஒன்று.

Geetha Sambasivam said...

நிலவைப் போன்ற பளிச் நினைவுகள். அழகான நிலா. மனதுக்கு இதம் தரும் நிலவொளி. உங்கள் நிலாப்பைத்தியம் தொடரட்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கமலாமா,
என்றும் நலமுடன் இருங்கள்.

நிலாவுக்குத் தான் எத்தனை ஆகர்ஷணம்.
மனதை அப்படியே கவர்ந்து இழுத்து விடுகிறது.

நிலாப்பாடல்களுக்கு என்றும் குறைவில்லை.

அலுப்பதும் இல்லை. அமுதைப் பொழியும் நிலவேயும் மறக்க முடியாதது.!!
சட்டென வந்து கருத்திட்டதில் மிக மிக மகிழ்ச்சிமா.
நன்றி.

வல்லிசிம்ஹன் said...

ஆஹா!!! அன்பு கீதாமா!!!
எத்தனை பிரியமான வாழ்த்து.

நம் நட்பும் அதே போலத் தொடர வேண்டும்.
காணக் காண சலிக்காத நிலா.!
மேகங்கள் மறைத்தாலும்,
சட்டென்று வெளியில் வந்து சந்தோஷம் தரும்.

பதிவிட்டவுடன் வரும் பின்னூட்டம் போல:)
நன்றி மா. நலமுடன் இருங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம்,
நலமுடன் இருங்கள்.

''நாம் இப்போது பார்க்கும் வானத்தின் காட்சிகள் இப்போதைய காட்சிகள் அல்லவாம். பல நூறு வருடங்களுக்கு முந்தைய காட்சியாம்! அந்தக் காட்சி நம்மை அடைய""

நிஜமாகவா??? என்ன ரு மாய உலகம் டா இது.

எனக்கு இது புதிய செய்தி.
சூரியனுக்குச் செல்லத்தான் வருஷக் கணக்கு சொல்வார்கள்.
நிலாக் காட்சியும் அதுதானா?
எனக்கு நிலா நல்ல போஸ் கொடுக்கும்.
இது கண்ணாடிக் கதவுக்குப் பின் இருந்து எடுப்பதால்
கலங்கி விடுகிறது மா.களங்கம் இல்லா நிலா வாழ்க.

வெங்கட் நாகராஜ் said...

நிலவு, சூரியன், கடல், மலைகள் என சில விஷயங்கள் அலுப்பு தராதவை. எத்தனை பார்த்தாலும் அலுப்பதில்லை. உங்களுக்கு நிலவு, எனக்கு சூரியனும் மலைகளும்.

வெங்கட் நாகராஜ் said...

பகிர்ந்து கொண்டிருக்கும் பாடலும் நிலவு படங்களும் நன்று. அனைத்தும் ரசித்தேன்.

KILLERGEE Devakottai said...

நிலவை ரசிக்காதோரும் உண்டோ ?

Thulasidharan V Thillaiakathu said...

அம்மா ஆமாம் நீங்க நிலவு ஃபோட்டோ எடுத்துப் போடுவீங்களே. எனக்கும் நிலா என்றா ரொம்பப் பிடிக்கும் தான் அதுவும் மேகங்களுக்கிடையில் மறைந்து மறைந்து விளையாடுவதும் ஒரு அழகு.

உங்கள் படம் நன்றாகவே வந்துள்ளது,

எனக்கு இரவுக் காட்சிகள் சரியாக வருவதில்லை. அதுவும் நிலா ஒழுங்காகவே வருவதில்லை. சூரியன் கூட நன்றாக வந்துவிடுகிறது ஆனால் நிலா சரியாக வருவதில்லை. நானும் முயற்சி செய்து பார்த்துக் கொண்டே இருக்கிறேன்

பாடும் நிலாவின் நிலாப்பாடல்கள் அனைத்தும் ரொம்பப் பிடிக்கும்

நிலவே நீ சாட்சி பாட்டும் பிடித்த பாடல்

கீதா

வல்லிசிம்ஹன் said...

அன்பின் வெங்கட்,

என்றும் நலமுடன் இருங்கள்.
முழு நிலவு வரும் நாட்கள் அமைதியையும் கொடுக்கும்.
கொஞ்சம் சோகத்தையும் கொடுக்கும்.

சூரியன் என்றும் ஒரே மாதிரி இருப்பான். மலைகளும் திடத்தை
அதிகரிக்கும்.
உங்களுக்கு அவர்கள் ஆதாரம் கொடுப்பார்கள்.

வெளிச்சம் குறைந்த நாட்கள் நம்மை சோர்ந்து போக
வைக்கும்.
மீறி வர வேண்டியது நம் வேலை.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் தேவகோட்டைஜி.
நலமுடன் இருக்க வாழ்த்துகள்.

அன்புடன் வந்து பின்னூட்டம் இடுவதற்கு மிக நன்றி மா.
இசையே வாழ்க்கையாகிறது.

வல்லிசிம்ஹன் said...

Dear Geetha Rangan,


நிலா அவ்வளவு சீக்கிரம் கையில் அகப்படுமா.

நான் அலைபேசியில் எடுக்கும் போது
கை ஆடி விடுகிறது. ஃபோகஸ் மாறுகிறது.
ஆனாலும் விடுவதாக இல்லை:)

நிலவின் குளிர்ச்சி அனைவரின் உள்ளங்களையும் மகிழ்விக்கட்டும்.


''பாடும் நிலாவின் நிலாப்பாடல்கள் அனைத்தும் ரொம்பப் பிடிக்கும்

நிலவே நீ சாட்சி பாட்டும் பிடித்த பாடல்'' Enakkum thaan.
நன்றி மா.

மாதேவி said...

நிலவை பார்த்தாலே மனதுக்கு குளிர்ச்சி.

Thulasidharan V Thillaiakathu said...

நிலவு க்கும் மனதிற்கும் தொடர்புண்டு என்று ஜோதிட சாஸ்திரக்கலையில் சொல்லப்படுவதுண்டு. அதனால்தான் நிலவு மனதை இழுக்கிறதோ?

துளசிதரன்