Blog Archive

Wednesday, January 19, 2022

யாரோடு....யார்.வல்லிசிம்ஹன், 

 நான் யார் என்ற கேள்வி 
அடிக்கடி தோன்றிக் கொண்டே இருக்கும் சில சமயம்.:)

நிறைய ஆன்மீக சிந்தனைகளைக் கேட்பதனால் 
இருக்கலாம்.
கேட்டால் மட்டும் பதில் கிடைத்துவிடுமா என்ன.!!!

மன இறுக்கம் போக்க சில பாடல்கள்.
மிகப் பிடித்தது "யார் அந்த நிலவு. "
இந்தப் பாடல் காட்சியின் அமைப்பு,
சிவாஜியின் நடை, விஸ்வனாதன் ராமமூர்த்தி இசை,
கவிஞரின் பாடல்வரிகள்...

எப்படித்தான் இப்படி ஒரு காட்சியை
அமைத்தார்களோ.டி எம்  எஸ் அவர்களின் 

மிக மிக நிதானமான குரல்,இரவின் அமைதிக்கு ஏற்ற
கவிதை.


மேலே இருக்கும் மோஹன் பாடல்  எஸ்பி பி
அவர்களின் குரலில் மிதந்து வரும்போது
1980 களில் பார்த்த படம் நினைவில் வருகிறது.60களில் வெளிவந்த பார்த்தால் பசி தீரும் 
படப் பாடல். இதிலும் அந்த நாளையக் கனவுக் கன்னி சரோஜாதேவி
அவர்களின் நடிப்பும்,
சிவாஜி அவர்களின் முக பாவமும், நடையும்
சுசீலா அம்மாவின் குரலும்
சேர்ந்து படைத்த காவியம்.
எப்பொழுதும் அனுபவிப்பது.


1998 எங்களைச் சுற்றி வந்த மஹராஜபுரம் சந்தானம் அவர்களின்
குரலில் இந்தப் பாடல் எப்பொழுதும் பிடிக்கும்.
பாடலின் வரிகளில் உள்ள ஊக்கம்
அனைவரையும் கவரும்.ஆஸ்வாஸப்படுத்தும்.

யாரை நம்பி யார்,
இந்தப் பாடலுக்கு சிவாஜி சாரின் நடிப்பு,
டி எம் எஸ்ஸின் குரல்

எந்த நாளும் உண்மை. இந்த நிலைமை எல்லோருக்கும்
கிடைத்தால் அது பெரிய விடுதலையாக
இருக்கும்.
ஆனால் யாரும் இல்லாமல் இருப்பது மிக மிகக் கஷ்டம்.


பாசமலர் சாவித்ரி இல்லாமல் பதிவு இருக்குமா.

இந்த  ஜோடியின்  நடிப்பு, இயற்கையின் அருமை

பி பி எஸ், மற்றும் சுசீலாம்மா குரல்,
கண்ணதாசன் கவிதை, மெல்லிசை மன்னர்களின் இசை
எல்லாவற்றையும் சேர்த்துக் கேட்பதே அருமை.
எப்படிப் பாடினரோ  என்று தான் தோன்றுகிறது.
அனைவரும் வாழ்க நலமுடன்.

21 comments:

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

என் நண்பர்கள் பதிவில் உங்களின் புதுப்பதிவை கண்டு காலையில் வந்தேன். உங்கள் பதிவின் பக்கம் திறக்கப்படவில்லை என்றது. ஏமாற்றத்துடன் சென்று விட்டேன். இப்போது உங்கள் பக்கம் காண்பிக்கப்பட்டது. பதிவின் கருத்துக்கள் அருமையாக உள்ளது. பகிர்ந்த பாடல்களை மதியம் கேட்டு விட்டு பிறகு மீண்டும் வருகிறேன். நன்றி சகோதரி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

Geetha Sambasivam said...

பாடல்கள் தேர்வு மிக அருமை. எல்லாப்பாடல்களுமே ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல. நல்ல இனிமையான பாடல்கள். நல்லதொரு பதிவுக்கு நன்றி. நான் இப்போதெல்லாம் பக்தி செய்வதே பெரும்பாடாகப் போய் விட்டது. ஆன்மிகச் சிந்தனைக்கு எங்கே போவது! :(

நெல்லைத் தமிழன் said...

//நான் யார் என்ற கேள்வி
அடிக்கடி தோன்றிக் கொண்டே இருக்கும் சில சமயம்.:)// ஹா ஹா ஹா. நீங்க நாடி ஜோதிடரிடம்தான் இந்தக் கேள்வியைக் கேட்கணும்.

பாடல் பகிர்வுகள் மிக அருமை வல்லிம்மா

நெல்லைத் தமிழன் said...

அது சரி... அருமையான திரையிசைப் பாடல்களோடு, யாரென்ன சொன்னாலும் என்ற அருமையான கர்நாடக பாடல் மஹாராஜபுரம் குரலில், ஒட்டவில்லையே

மாதேவி said...

இனிய பாடல்கள். பாடல்கள் மனதை மகிழ்ச்சிகொள்ள வைக்கும்.

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

இன்றைய பதிவுக்காக தொகுத்து பாடல்கள் அனைத்தும் அருமை. முதல் பாடல் ந. தி. சிவாஜியின் வார்த்தை உச்சரிப்புகள் மிக அருமை.பாடலுக்கேற்ற அவரது முகபாவம் வேறு யாருக்கும் வராது. மோகன் பாட்டு இதுவரை கேட்டதில்லை. மீதி எல்லா பாடல்களும் இனிமையோடு உலா வந்தவை.

நாம் யார் என்ற கருத்துதான் என் மனதிலும் ஓடுகிறது. அதிலும் எதிராளிக்கு அவர்களது பிரச்சனைகளுக்கு(நம் வாரிசு என்ற நெருங்கிய சொந்தங்களுக்கும்) ஏதாவது யோசனை சொல்லப் போகும் போதும், இதற்கு இவள் யார் என்ற ரீதியில் அவர்கள் நினைக்கும் போதும், இதே எண்ணம்தான் வருகிறது.:)))) இறை பக்தியில் அதை மறக்க முடியும் ஒரு நொடி தோன்றினாலும், அடுத்த நொடி சம்சார பந்தம் இந்த பக்கமே இழுத்து போடுகிறது. இதே போராட்டந்தான்..! பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

ஸ்ரீராம். said...

நான் யார் என்கிற கேவி வந்து விட்டால் மனதை சமாதானப்படுத்துவது ரொம்பச் சிரமம்!    சலங்கையில் ஒரு சங்கீதம் படத்தில் எல்லாப் பாடல்களுமே மிக அருமையாக இருக்கும்.  எல்லா யார் பாடல்களுமே ரசிக்க வைக்கின்றன. 

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கமலாமா,
மிக நன்றி. என்றும் வளமுடன் இருங்கள்.
பதிவிட்ட பிறகு தான் பார்த்தேன். அதில் நான்
தேர்ந்தெடுத்த பாடல்கள் இனிமையாவயிருந்தாலும்,
பார்க்க நன்றாக இல்லை.

அதனால் டெலிட் செய்து விட்டேன்.
மன்னிக்கணும் சகோதரி.

ஒரு பாடலுக்கு மூன்று வீடியோக்கள் வரும்போது
தவறான வீடியோவைப் பதிவதற்கு முன் செக்
செய்யாமல் பப்ளிஷ் செய்யக் கூடாது.
யாரோட யார் பதிவு நன்றாக இருந்ததாகத் தோன்றியது.
ரசிப்பதற்கு மிக நன்றி அம்மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,

ஆன்மீகச் சிந்தனையும் நானும் ....நகைச்சுவைதான்.

பற்றில்லாமல் இருப்பது எப்படி என்றே தெரியவில்லை.

விஸ்ராந்தியாக இருக்கும்போது தோன்றும் எண்ணங்கள்
நிஜ வாழ்க்கைக்கு எப்படிப் பொருந்தும்:)
அன்னன்னிக்கு சவால்களைச் சந்தித்துத்தானே ஆக வேண்டும்.!!

அதுதான் பாடல்களை மருந்தாக உபயோகிக்கறேன்.
உங்களுக்கும் பிடித்ததே எனக்கும் மகிழ்ச்சி.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் முரளிமா,

நலமுடன் இருங்கள்.

என் முன் ஜன்மமா. ஒ அது தெரியுமே.
கலிங்க நாட்டில் ஒரு பணக்காரப்
பெண்.
திமிர் ஜாஸ்தி. கணவனுக்கு சாப்பாடு போடாதவள்:)

40 வயசுக்கு மேல் பிழைகளை உணர்ந்து வருந்தி
நல்லவளாக ஆனதால்
இந்தப் பிறவி

மேலே இருப்பது ,நாடி சொன்னதுதான்:)

உங்களுக்கும் பாடல்கள் பிடித்தது தான் நன்மை.

வல்லிசிம்ஹன் said...

அன்பு முரளிமா,
எனக்கு எல்லா வகைப் பாடல்களையும்
பிடிக்கும்.

சந்தானம் குரல் ரொம்பவே பிடிக்கும்மா.
யார் என்பது முதல் சொல் .யார் வந்தால் என்ன:)

இசை போதும்:)

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கமலாமா,
மீள் வருகைக்கு நன்றி.

நீங்கள் சொல்வது சரிதான்.
சில சமயங்களில் மனம் குழம்பிப் போகிறது.

என்ன சொல்கிறோம், அது மற்றவர்களை எப்படிச் சென்றடைகிறது
என்றே புரிவதில்லை.
சும்மா இருத்தலே சுகம் என்று இருக்கவும்
சிரமம்.

அவர்களுக்கே சில சிரம வேளைகளில் நம்
சொல் இதமாகத் தேவைப் படுகிறது.
நம் குழந்தைகள் நல்லவர்கள்.
நாம் அவ்வப்போது நல் வார்த்தை சொல்லிவிட்டு
ஒதுங்க முயற்சிக்க வேண்டும்.

இறை வழிபாடே நம்மை நல்வழிப்படுத்தும்.
நல்ல சுகம் அனைவருக்கும் கிடைக்கட்டும் அம்மா.

இது முடியும் நாள் மோக்ஷம் கிட்டிவிடும்.
விரிவான அன்பான பின்னூட்டத்துக்கு மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம் ,
என்றும் நலமுடன் இருங்கள்.

நடிகர் மோஹனுக்குக் கிடைத்த பாடல்கள் எல்லாமே இனிமை தான்.
நல்ல பாடல்கள். யார் ' ஏன்' என்ற கேள்விகளுக்கு விடையே கிடையாதம்மா.
நன்றி ஸ்ரீராம்.

வெங்கட் நாகராஜ் said...

அனைத்துமே இனிமையான பாடல்கள்..... கேட்டு ரசித்தவையும் கூட. மீண்டும் கேட்டு ரசிக்க வாய்ப்பு உங்கள் பதிவு வழி - நன்றிம்மா.

திண்டுக்கல் தனபாலன் said...

என்றும் ரசிக்கும் பாடல்கள்...

Thulasidharan V Thillaiakathu said...

அம்மா ரொம்ப யோசிக்காதீங்க. ஜஸ்ட் எஞ்சாய் த டே!!! அவ்வளவுதான்..

எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த பாடல் யார் என்ன சொன்னாலும் அஞ்சாதேட் நெஞ்சமே...யாராவது நம்மை குற்றம் சொன்னால் உடனே இந்தப் பாட்டுதான் மனதுள் பாடி பிரார்த்தானி செய்து கொள்வதுண்டு அஞ்சா நெஞ்சத்தைக் கொடப்பான்னு..

பகிர்ந்த பாட்டுஅனைத்தும் நல்ல பாடல்கள்.

கீதா

வல்லிசிம்ஹன் said...

''மாதேவி said...
இனிய பாடல்கள். பாடல்கள் மனதை மகிழ்ச்சிகொள்ள வைக்கும்.''

அன்பின் மாதேவி எல்லா இனிமைக்கும் இறைவனிடம் நன்றி தெரிவிக்கலாம்.
என்றும் வளமுடன் இருங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் வெங்கட்,
என்றும் நலமுடன் இருங்கள்.

தனிமை சில சமயம் நம்மை சோதிக்கும்.
அப்போது நல்ல பாடல்கள் நிம்மதி கொடுக்கும். மாற்ற முடியாத சந்தர்ப்பங்களில்
மாட்டிக் கொண்டுவிட்டால் பொறுத்துப்
போவதே வாழ்க்கையாகிறது.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் தனபாலன்,
என்றும் நலமுடன் இருங்கள்.

திரை இசையின் வரிகளும் இசையும் எப்பொழுதும்
நமக்கு அமைதி தர மறுப்பதில்லை.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,
என்றும் நலமுடன் இருங்கள்.

''அஞ்சாதேட் நெஞ்சமே...யாராவது நம்மை குற்றம் சொன்னால் உடனே இந்தப் பாட்டுதான் மனதுள் பாடி பிரார்த்தானி செய்து கொள்வதுண்டு அஞ்சா''

ஊங்கள் அஞ்சனை மைந்தன் சுந்தர காண்டம் வழி உங்களுடன் இருக்கிறான் அம்மா.
ஆரோக்கியம் பேணுங்கள்.
கூசாமல் கத்துகிறவர்களை லட்சியம் செய்ய வேண்டாம்.

மன திடம் அதிகரிக்கட்டும்.
மிக நன்றி அம்மா.

Thulasidharan V Thillaiakathu said...

நல்ல பாடல்களைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி வல்லிஅம்மா.

துளசிதரன்