Blog Archive

Wednesday, January 05, 2022

ஊட்டியிலிருந்து ஒரு நினைவு

தம்பி ,குழந்தைகளோடு நான் ஹலெபிட், கர்னாடகா.


வல்லிசிம்ஹன்

Sing.
Sing a song.
Sing out loud, sing out strong.
Sing of good things, not bad.
Sing of happy, not sad.
Sing.
Sing a song.
Make it simple to last your whole life long.
Don´t worry that it´s not good enough for anyone else to hear.
Just sing.
Sing a song.
La La La La La La
La La La La La La
La La La La La La
Sing. Sing a song.
Let the world.
Sing out loud.
Sing of love there, could be.
Sing for you and for me.
Sing a song.
Make it simple to last your whole life long.
Don´t worry that it´s not good enough for anyone else to hear.
Just sing, sing a song.

That was our idea for life.

தடால் என்று ஒரு சத்தம் ,அடுத்த வினாடி, அந்த மனிதர்
அங்கிருந்த சோஃபாவில் சரிந்தார்.

!!!! குடகிலிருந்து வந்த அந்த தேனிலவு தம்பதி
பெயர் தெரியாது......
திருமண நாளிலிருந்து குடிக்க ஆரம்பித்தவர்கள் அந்த மிதப்பிலேயே
ஊட்டி வரை வந்துவிட்டனர்.
அது அவர்கள் வழக்கமாம்.!!
இப்பொது ஊட்டி அறைக்கு வருவோம்.:))

எல்லாம் ஒரே சமயத்தில் நடந்தன.
சிங்கமும் தம்பியும் உள்ளே வந்தனர்.

அந்தத் திருமணப் பெண் வந்து அலற ஆரம்பித்தார்.

அவர் என்ன சொல்கிறார் என்று புரியவில்லை.
ஓட்டல் மேனேஜர் உள்ளே வர, குழந்தைகள் அலற ஆரம்பிக்க
ஹப்பா....களேயபரம்.:)))

மேனஜர் அந்தப் பெண்ணை அவள் மொழியில் 
விசாரிக்க உயர் போதையில் இருந்த அவள்
என்னைக் கை காண்பிக்க

சிங்கம் சிரிக்க ஆரம்பித்தார்.

அடுத்து அவர் செய்த நல்ல காரியம்... குளியலறையிலிருந்து 
பெரிய பாட்டில் நிறைய 
பச்சைத் தண்ணீர் பிடித்து
சோஃபாலிருந்த மனிதர் மேல் கொட்டியதுதான்.:)))

சட்டென்று எழுந்தவர் எல்லோரையும் பார்த்து
பேந்தப் பேந்த விழித்தார்.
இன்னும் அழுது கொண்டிருந்த அவர் மனைவி 
சிரிக்க,
தடுமாறும் நடையோடு மனைவியின் தோள்களைப்
பிடித்தவாறு வெளியேறினார் மஹானுபாவர்.

குழந்தைகள் கத்துவதை நிறுத்திவிட்டு குபீரென்று
சிரித்தவாறு அப்பாவைக் கட்டிக் கொண்டன.
தம்பி முரளி , 'ஆண்டாள் பயந்து போயிட்டியா'
என்று ஆதரவாகக் கேட்டான்.

எனக்கு வந்த கோபத்துக்கு அளவே இல்லை.
'ஏண்டா எங்கே இவ்வளவு நேரம் போனீர்கள்?"
என்று கேட்க, 
''கீழே காஃபி சாப்பிட்டுட்டு, உனக்கும் குழந்தைகளுக்கும் 
ஊட்டி பன் ,பிஸ்கட் கொண்டுவந்தோம்''
என்று நீட்டினான்.
''டேய் உங்க அக்காவுக்கு முதலில் காப்பிகொடுடா'
என்று பரிந்துரைத்தார் சிங்கம்.

'ரேவ், குழந்தைகளை ஸ்வெட்டர் போட்டு அழைத்து வா,
மழை நின்னாச்சு, பார்க் பக்கம் அதுகளை அழைத்துப் 
போகலாம்.
''காலையில் வெய்யில் வந்ததும், 
படகுல போகலாம்'' என்று சொன்னார்.

எனக்குப் படபடப்பே குறையவில்லை.
அடுத்த நாள் காலை நாங்கள் வெளியே வந்த போது 
அந்தத் தம்பதியினரும்  காலை உணவு எடுத்துக் கொண்டிருந்தனர்.

சிங்கம் அவர்கள் மேஜை அருகே சென்று
காலை வணக்கம் சொன்னார்.
இருவர் முகத்திலும் சிறிய வெட்கம்.

''வாழ்க்கை ,மது அருந்துவதால் மட்டும் செழிக்காது.
அரிய நாட்களை அனுபவியுங்கள்'.
என் மனைவியும் உங்களை மன்னித்து விட்டார் 'என்று 
சிறு பொய்யைச் சொல்லி 
எங்கள் மேஜைக்கு வந்தார்.
குழந்தைகளுக்கு ப்ரெட் டோஸ்ட்டில் வெண்ணெய் தடவியபடி
அவரை முறைத்தேன்.

நான் மன்னிக்கலையே. அந்தப் பொண்ணு 
என்னக் காண்பித்து அழுதாளே என்றேன்.

''ஏன், உனக்கு ஞாபகம் இல்லையா... நாம் ராஜகுமாரி 
தியேட்டரில்( படம் இப்போ நினைவில் இல்லை)
 இன்னோரு பெண் பக்கத்தில் இருட்டில் உட்கார்ந்து விட்டேன்.
கல்யாணம் ஆகி 4 நாள் ஆகி இருந்தது.
எவ்வளவு  கோபம் உனக்கு!!"" என்று 
மீண்டும் சிரிக்க, 
''சரியான சமாளிப்புத் திலகம் நீங்க"
என்று நானும் புன்னகைத்தேன்.
கதை முடிந்து கத்திரிக்காய் காய்த்தது:)






23 comments:

நெல்லைத் தமிழன் said...

ஹா ஹா ஹா.... அறை மாறி வந்துவிட்டாரா.. நல்ல நினைவு

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் பா. அன்பு முரளிமா.
நலமுடன் இருங்கள். மாறிதான் வந்துவிட்டார் .போதை வந்த போது புத்தி இல்லையே:)

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

ஓ.. தெரியாமல் அறை மாறி வந்த ஹனிமூன் தம்பதியருக்கு குடிப்பழக்கமா? நல்லவேளை... அந்த சமயத்தில், தங்கள் கணவரும், தம்பியும் துணையாக வந்து விட்டனர். அது சரி அந்தப் பெண்மணி உங்களை ஏன் கைகாட்ட வேண்டும்? உங்களுடன் சேர்ந்து எனக்கும் புரியவில்லை.:) உங்கள் கணவருக்கு பெரிய மனது. இல்லாவிட்டால், மறுநாள் அவர்களை கண்டதும் காலை வணக்கம் செய்து விட்டு நீங்கள் சொல்லாத மன்னிப்பையும் அவர்களுக்கு அள்ளி வழங்கி விட்டு வந்திருப்பாரா?:) கடைசியில் அவர் அந்த காரணத்தின் உண்மையை சொன்னதும் நானும் சிரித்து விட்டேன்.

சுவாரஸ்யமான நிகழ்வுகள்.அந்த நிகழ்வுகளின் நினைவுகள் எப்போதும் இனிமையான நிழல்களாக இருந்து உங்கள் மனதை அரவணைக்கின்றன. அதை எங்களுடனும் பகிர்ந்து மகிழ்ந்தது எங்களுக்கும் சந்தோஷமாக இருக்கிறது. உங்கள் அன்பான பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கமலாமா,
நலமுடன் இருங்கள்.

''ஓ.. தெரியாமல் அறை மாறி வந்த ஹனிமூன் தம்பதியருக்கு குடிப்பழக்கமா? நல்லவேளை... அந்த சமயத்தில், தங்கள் கணவரும், தம்பியும் துணையாக வந்து விட்டனர். அது சரி அந்தப் பெண்மணி உங்களை ஏன் கைகாட்ட வேண்டும்? உங்களுடன் சேர்ந்து
எனக்கும் புரியவில்லை.:)''
ஓ. கமலாமா அது ஒண்ணும் பெரிய கம்ப சூத்ரம் இல்லை.

அவர்கள் அறையை எடுத்த போது நாங்களும் உள்ளே நுழைய இவரும்
நானும் சிரித்தபடி
உள்ளே வந்தோம் இல்லையா. அதை அவள் தப்பாகப்
புரிந்து கொண்டுவிட்டாள்.
எங்களுக்கு ஏற்கனவே அவரைத் தெரியும்.
நாங்கள் அவரை வரச்சொல்லி அழைத்ததாக
அவள் நினைத்துவிட்டாள்.

கடவுளே!!
கதவைப் பூட்டிக் கொண்டு அவர்கள் வெளியெ
போயிருந்தால் சரியாக இருந்திருக்கும்.
ஆனால் எனக்கு ஏதாவது வேண்டும் என்றால்
வெளியே போக முடியாமல் சங்கடம் நேர்ந்திருக்கும்.

இதெல்லாம் பயணங்களில் ஏற்படும் சங்கடம் தான்.
குடிமக்கள் சாம்ராஜ்யம்.
அவர்களுக்கு எதுவும் யோசித்து செய்யத் தெரியாதே.

மிக நன்றி மா.
வெளியே சென்றதும் நானும் இதை எல்லாம்
மறந்து விட்டேன்.:)

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கமலாமா,

''கணவருக்கு பெரிய மனது. இல்லாவிட்டால், மறுநாள் அவர்களை கண்டதும் காலை வணக்கம் செய்து விட்டு நீங்கள் சொல்லாத மன்னிப்பையும் அவர்களுக்கு அள்ளி வழங்கி விட்டு வந்திருப்பாரா?:) கடைசியில் அவர் அந்த காரணத்தின் உண்மையை சொன்னதும் நானும் சிரித்து விட்டேன்.''

இந்த கணம் அதை நினைத்துப் பார்க்கிறேன்.
அவருக்கு சட்டென்று கோபம் வந்த நேரம்
அடக்கிக் கொண்டு
நல்ல விதமாகப் பேசி,அதே நேரம் அவர்களை உணரவும் வைத்து விட்டார்.
எங்கள் வயதுதான் அவர்களுக்கும் இருந்திருக்கும்.

''விடும்மா. புது தம்பதிகள்!'' என்ற தோரணையில் அவர்
வார்த்தைகள் இருந்தன. நன்றி.

ஸ்ரீராம். said...

இசை நோய்களையே தீர்க்கும்போது மகிழ்ச்சியைத் தருவதில் வியப்பென்ன..   அருமையான பாடல்.  பாடல் ஒரு தொடரி..  யாராவது ஏதாவது பாடுவதைக் கேட்டால் நம் மனம் மனதுத்துக்குள்ளாவது அந்தப் பாடலைத் தொடரும்!!

ஸ்ரீராம். said...

தம்பதி சகிதமாக போதையா?   ஹா...  ஹா..  ஹா...   இப்போது எங்கு என்ன செய்து கொண்டிருப்பார்கள் அவர்கள்!  சிங்கத்தின் டீலிங் எனக்கு பிடித்திருக்கிறது!

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம்,
நலமுடன் இருங்கள்.

''இசை ,.
அருமையான பாடல். பாடல் ஒரு தொடரி.. யாராவது ஏதாவது பாடுவதைக் கேட்டால் நம் மனம் மனதுத்துக்குள்ளாவது அந்தப் பாடலைத் தொடரும்!!'

ஆமாம் ஸ்ரீராம். இசை தரும் நிறைவு எல்லை இல்லாதது.
இப்போது மருமகள் அனுப்பிய ஆர் டி பர்மன் பாடல்களைக்
கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

ஒரே சோகப் பாடல்கள்.
நான் பதிலுக்கு உற்சாகப் பாடல்களை அனுப்பி விட்டேன்.:)




வல்லிசிம்ஹன் said...

தம்பதி சகிதமாக போதையா? ஹா... ஹா.. ஹா... இப்போது எங்கு என்ன செய்து கொண்டிருப்பார்கள் அவர்கள்! "
அவர்கள் குடகு கல்யாணங்களில்
எல்லோரும் வைன் சாப்பிடுவார்களாம்.

தி.ஜா கூட ஒரு கட்டுரையில் சொல்லி இருப்பார்:)

மெர்க்காராவிலிருந்து ஊட்டிக்கு எப்படித்தான் வந்தார்களோ.
நாங்கள் கூட அந்தப் பயணத்தில் ஊட்டி,மைசூர், மெர்க்காரா, தலைக்காவிரி
எல்லாம் சென்று வந்தோம்.
சிங்கம் தான் ஓட்டினார்.பாவம்.

நன்றி மா.

Thulasidharan V Thillaiakathu said...

குடகு கல்சர்!!!! அந்தப் பகுதி மக்கள் அப்படித்தான். ஆனால் எப்படி இப்படி சமாளிக்கிறார்கள் பப்ளிக்கில் என்று ஆச்சரியம்தான். அதான் உங்கள் அறைக்கு மாறி வந்திருக்கிறார். ஹாஹாஹா பதிவை வாசித்துச் சிரித்துவிட்டேன்.

அதுவும் கடைசியில் நம்ம அப்பா...ஹாஹாஹாஹாஹாஹா நிஜமாகவே சிங்கராஜாதான் !!!!! அவர்களிடம் சொன்ன விதத்தை ரொம்ப ரொம்ப ரசித்தேன்!! தேர் ஹீ இஸ்!!!!!

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

பாடல் வரிகளை ரசித்தேன். ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதுவேதான் சுகம் சுகம்!!!!

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

பாடலை ரசித்தேன் அம்மா...அது முந்தைய கருத்தில் சொல்ல விட்டுப் போச்சு

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

ஓ அவர் குடி மயக்கத்தில் அறை மாறி வந்துவிட்டாரா! மனைவியும் சேர்ந்து குடிப்பது!!! அது சில சமூகங்களில் இருக்கிறதுதான்.

உங்கள் கணவர் அந்த ஜோடியிடம் மறுநாள் பேசியவிதம் அருமை.

பதிவை ரசித்தேன் வல்லிம்மா

துளசிதரன்

Geetha Sambasivam said...

கடவுளே! இடம் தெரியாமல் மாறி வரும் அளவுக்குக் கணவன், மனைவி இருவருக்கும் போதையா? நல்லவேளையா நீங்க தப்பிச்சீங்க! என்றாலும் அந்த மனைவிக்கு உங்கள் மேல் கோபம் வந்தது அநியாயம், அக்கிரமம். எப்படியோ எல்லாம் சரியானதே! சிங்கம் சரியான சமயத்தில் வந்து காப்பாற்றி இருக்கார். அவங்களோடயே நீங்களும் போயிருந்திருக்கலாம் போல!

வல்லிசிம்ஹன் said...

அன்பின் நட்புகளுக்கு,
நலமுடன் வியாழன் வணக்கம்.
இன்று பூஸ்ட்டர் ஊசி போட ஏற்பாடு.
40 நிமிடங்கள் போக. அங்கே காத்திருப்பு ,வருவதற்கு 4ஒ நிமிடம்.
எல்லாம்
சேர்ந்து திரும்பி வர 10 ஆவது ஆகும்.
வலி ஏதும் இல்லையெனில்

பின்னூட்டங்களுக்குப் பதில் பதிகிறேன்.
மன்னிக்கணும்.

அந்த நிலைமை ஒரு இசைகேடான நிகழ்ச்சி.
அந்தப் பெண் கத்திய குரல் கீழே தம்பிக்கும் கணவருக்கும்
கேட்டு அவர்கள் விரைந்து வந்திருக்கிறார்கள்.

இல்லாவிட்டால் கொஞ்சம் டென்ஷனாகி
இருக்கும்.
சிங்கம் நிதானமாகக் கையாண்டதால்
எங்கள் இருவருக்குமே வயது இருபதுகளில்
இருந்ததால் அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை.

இதுவே அங்கே வயதானவர்கள்
இருந்திருந்தால் மோசமாக ஆகி இருக்கும்.
நன்றி.

மாதேவி said...

திரு.சிங்கம் அவர்கள் சமாளித்த விதம் பிடித்திருந்தது.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாரங்கன்,

நலமுடன் இருங்கள்.

''ஆச்சரியம்தான். அதான் உங்கள் அறைக்கு மாறி வந்திருக்கிறார். ஹாஹாஹா பதிவை வாசித்துச் சிரித்துவிட்டேன்.

அதுவும் கடைசியில் நம்ம அப்பா...ஹாஹாஹாஹாஹாஹா நிஜமாகவே சிங்கராஜாதான் !!!!! அவர்களிடம் சொன்ன விதத்தை ரொம்ப ரொம்ப ரசித்தேன்!! தேர் ஹீ இஸ்!!!!!''

அப்பாவுக்கு யாரையும் வருத்தப்பட வைக்க முடியாது.
அதனாலயே நறுவிசாகப் பேசுவார்.
இயல்பில் உயர்ந்த குணம்.
கோபித்துக் கொள்ள மனம் இல்லை.ஆனாலும்
நாம் இளைத்தவர்கள் இல்லை என்று புரிய வைக்கணும். அதுதான்
அந்த செயல்.
மிக நன்றி கண்ணா.

வல்லிசிம்ஹன் said...

பாடலை ரசித்தேன் அம்மா...அது முந்தைய கருத்தில் சொல்ல விட்டுப் போச்சு."

ஆடலுடன் பாடலைக் கேட்பதில் சுகம் தான்.
அப்பாவுக்கு இந்த பாடகரை மிகவும் பிடிக்கும் அம்மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் துளசிதரன்,
நலமுடன் இருங்கள்.
ஆமாம் பா.
சில சமூகத்தில் அதுவும் கர்னாடகா மலையோரங்களில் குளிருக்காகக்
குடிப்பதாகச் சொல்பவர்கள் தான் நான்
பிற்பாடு கூடக் கண்டிருக்கிறேன்.
பெங்களூரில் நிறையக் குடும்பங்களில்
இது வழக்கமாகவே இருக்கும்.
பரிதாபம் அப்பா இந்த நிலைமை.
கருத்துக்கு மிக நன்றி மா.


''உங்கள் கணவர் அந்த ஜோடியிடம் மறுநாள் பேசியவிதம் அருமை.''
மிக நன்றி.
அது வக்கீல்கள் பரம்பரைக் குடும்பத்தின் சாதுர்யம்.
தன் சினத்தை வெளிக்காட்டாமல்
சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டு வந்தார்மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,

நலமுடன் இருங்கள்.
''நல்லவேளையா நீங்க தப்பிச்சீங்க! என்றாலும் அந்த மனைவிக்கு உங்கள் மேல் கோபம் வந்தது அநியாயம், அக்கிரமம். எப்படியோ எல்லாம் சரியானதே!''


ஆஹா. அந்தக் கோபம் எனக்கு ஊட்டியை விட்டுக் கிளம்பும்
வரை இருந்தது.

அசடுகள் அம்மா.!!
தன் நிலை அறியாமல்(( நல்ல வேளை உடையெல்லாம்
சரியாக இருந்தது))
கணவனைத் தேடி வெளியே வந்துவிட்டாள்.

அதற்கப்புறம் அவர்கள் அறையை விட்டு வெளியே வரவே இல்லை.
இவர், அந்த ஆள் மேல் தண்ணீரைக் கொட்டினதே
எனக்குப் பெரிய ரிலீஃப்:)
அவள் மேலயும் கொட்டி இருக்கலாம்:)))))))))
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் மாதேவி,
நலமுடன் இருங்கள்.
ஆமாம் அம்மா. அவரின் துணை எனக்குப்
பெரிய ஆதாரம். நன்றி மா.

Bhanumathy Venkateswaran said...

குடி போதையில் அறை மாறி வந்து விட்டார்களா? நல்ல கூத்து. உங்கள் கணவருக்கு நல்ல பிரசென்ஸ் ஆஃப் மைண்ட்!

வல்லிசிம்ஹன் said...

அன்பின் பானுமா,
நலமுடன் இருங்கள்.

ஓ....அவர் ப்ரசன்ஸ் ஆஃப் மைண்ட் பற்றித் தனி புத்தகமே
போடலாம். ப்ரில்லியண்ட் man of the hour நு
அவரைச் சொல்வேன்.

யாரையும் துன்புறுத்தாத ஒரு மனிதர்.
நன்றி பானுமா.