Blog Archive

Sunday, January 02, 2022

சில செய்திகள்

வல்லிசிம்ஹன்

இந்த ஊரின் சீதோஷ்ணம் எப்பொழுதும் 
ஒரு சீராக இருக்கிறதா என்று தேடிக்கொண்டிருக்கிறேன். 
கோடை முடிந்து அக்டோபர் மாதம் வரை 
கொஞ்சம் காற்று  பலமாக அடித்து நவம்பரில் இருந்து குளிர் துவங்கியது.

இவர்கள் எல்லாம் லட்சியமே செய்யவில்லை.
நல்ல வெதர் என்று சொல்லி மகிழ்ந்தார்கள்:)

சென்னையில் மழை மழை என்று கேட்டு 
அலுத்தசமயம், இங்கே பனிமழை ஆரம்பித்துவிட்டது.!!++++++++++++++
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

புத்தாண்டு பிறந்து ,அதற்கும் முன்பிருந்தே வாழ்த்துகள்
பறக்க ஆரம்பித்து,
மழை அரக்கன் எங்கள் உற்சாகத்தை ஒன்றும் செய்ய
முடியாது என்று பறை அறிவித்தன.

வாட்ஸாப் வரும் முன்னர் என்ன செய்தோமோ
என்று நினைக்கத் தோன்றுகிறது.
அமெரிக்கா முழுவதும் நோய்ப் பரவல் அதீதமாக இருக்கும்
நேரம் .அவரவர் இல்லங்களுடன் 
புதுவருடத்தை வரவேற்றுக் கொண்டார்கள்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++

சென்னையில் 30 ஆம் தேதியின் அபாய மழையால்
வயோதிகர்களும், வேலையில் 
இருந்து திரும்புவர்களும் பட்ட அவதிகளைக்
கண்டு அதிலிருந்து மீள நேரம் ஆகிறது.
எங்கள் வீட்டில் 80,90 வயதுகளில் இருக்கும்
உறவுகள் அதிகம். எல்லோருக்கும் 
மகனும் ,மகளும் வேறு வேறு கண்டங்களில் வசிக்கிறார்கள்.

இருவர் வீட்டை மழை வெள்ளம் சூழ,
அவர்கள் பட்ட அவதி கொஞ்ச நஞ்சம் இல்லை.

இதே போன்ற மழை இன்னும் மூன்று வாரத்துக்கு ஒரு முறை தொடருமாம்.

மனதால் எத்தனை பிரார்த்தனைகள் அனுப்ப
முடியுமோ அத்தனையையும் அனுப்பிக் கொண்டிருக்கிறேன்.

அங்கும் இங்கும் என்று மனம் 
சென்று வந்து கொண்டிருக்கிறது.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
இன்று அனுமத் ஜயந்தி. எங்கள் பாங்க் ஹனுமான் 
பழங்களாலும் வெண்ணெயாலும், வடை மாலைகளாலும் சூழப்பட்டுத்
திவ்ய தரிசனம் அளித்துக் கொண்டிருப்பார்.
அவரே சென்னை மக்களை மீட்டு காக்க வேண்டும்.

நோய் பரவாமல் ,மக்கள் கவனத்துடன் இருக்க அவரே துணை.
ஜெய் ஸ்ரீராம். ஜெய் ஹனுமான்.









18 comments:

KILLERGEE Devakottai said...

இறைவன் துணை புரியட்டும் அம்மா.

ஸ்ரீராம். said...

வரவர சோதனைகள் தொடர்கின்றன.   அப்படியே இதுவே பழகி விடும்!  அப்புறம் சோதனைகள் இல்லாவிட்டால் போர் அடித்து விடுமோ என்னவோ!

எங்கள் தெருக்களில் மோட்டார் வைத்து தண்ணீர் இறைத்து வருகிறார்கள்.

வெங்கட் நாகராஜ் said...

சோதனைகள் மிகுந்த காலம்தான். இதுவும் கடந்து போகும் என்ற எண்ணத்துடனே நாட்கள் சென்று கொண்டிருக்கின்றன. வெளியிடும் குளிர் அதிகமாகவே இருக்கிறது.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் தேவகோட்டைஜி,
நலமுடன் இருங்கள்.

உலகம் முழுவதும் எல்லாமே மாறிக் கொண்டிருக்கின்றன.
இதே தேசத்தில் ஒரு முனையில் குளிர். ஒரு முனையில் வெய்யிலின் அட்டகாசம். இன்னோரு இடத்தில்
காடுகளில் தீயின் கொடுமை.
இதெல்லாவற்றையும் தாண்டித்தான் வரவேண்டும்.
கடவுள் நிச்சயம் கைகொடுப்பார்.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம் ,
நலமுடன் இருங்கள்.
சோதனைகள் பழகிவிடும் என்கிறீர்களா.:)))
இரு கோடுகள் தத்துவம் தான். இதுக்கும் மேலே ஏதும்
வராமல் இறைவன் நம்மைக் காக்க வேண்டும். பலமான முதுகெலும்பைக்

கொடுக்க வேண்டும்.
மீள்வோம். பத்திரமாக இருங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் வெங்கட் என்றும் நலமுடன் இருங்கள் அப்பா. தில்லி குளிர் மிக மோசம்ஆச்சே.

சில்லிப்பு இங்கே அதிகமா இருக்கு. எனக்கு தான் தாக்குப் பிடிக்க முடியவில்லை.
நீங்க பத்திரமாக இருங்கோ.

Geetha Sambasivam said...

இந்த வருஷம் இங்கே குளிர் அதிகம் இல்லை. அதே சமயம் வெயிலும் காயவில்லை. அவ்வப்போது மோடம் போட்டுக்கொள்கிறது. இங்கே போல் எல்லா இடங்களிலும் இருந்தால் நல்லது தான். ஆனால்! எங்கே!

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,
நலமுடன் இருங்கள்.

உலகம் முச்சூடும் சீதோஷ்ண நிலை
மிக மாறி இருக்கிறது.
இங்கே குளிர் என்றால் அட்லாண்டாவில் 80 டிகிரீ.
ஹ்யூஸ்டன் கூட வெப்பமா இருக்கு என்றார்கள்.
மழை வரப் போகிறது என்று நினைக்கிறேன்.
எல்லோரும் சௌக்கியமாக இருக்க வேண்டும்.

Thulasidharan V Thillaiakathu said...

இந்த வருடம் லானினா அதனால் பருவ நிலை மாற்றங்கள். பனி வந்தாலும், அதிக மழை வந்தாலும், வெயில் கடுமையாக இருந்தாலும் நாம் புலம்புகிறோம்தான். வெயில் இல்லை என்றால் ஹோ வற்றல் வடாம் போட முடியலையே என்றும் புலம்புவோம்.

வயதானவர்களுக்குச் சிரமம் தான். புரிந்து கொள்ள முடியும்.

ஆனால் அது இயற்கை. இயற்கையில் மாற்றங்கள் வருவது இயல்புதானே அம்மா. மனித மனங்களில் வரும் மாற்றத்தைவிடவா??!! அதுதான் கொடூரம். இயற்கையின் மாற்றங்களுக்குக் காரணமும் ஓரளவு மனிதர்கள்தான் எனும் போது!!

இங்கும் ஒ மை பரவல் இருக்கிறது அம்மா. உலகம் முழுவதுமே. இது மனிதன் உருவாக்கியது எனும் போது இதைவிடக் கொடுமை இயற்கையின் சீற்றம் பெரிதாக இல்லைதானே அம்மா..

எனவே இதுவும் கடந்து போகும். நாம் நம் பிரார்த்தனைகளுடன் மனதை அமைதிப்படுத்திக் கொள்வோம்!.

கீதா

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லதே நடக்கட்டும்...

Thulasidharan V Thillaiakathu said...

உலகம் முழுவதுமே பிரச்சனைகளால் குறிப்பாக தொற்றினால் கடந்த இரு வருடங்கள் கடந்தன. இப்போது இயற்கைச் சீற்றம். எதையும் நம்மால் தடுக்கவோ தவிர்க்கவோ தீர்வு காண்பதோ முடியாதுதான். எனவே நாம் நம்மைப் பாதுகாப்பாக வைத்துக் கொண்டு இறைவனிடம் பிரார்த்தித்துக் கொண்டு கடக்க வேண்டியதுதான். வேறு வழி இல்லைதான்.

துளசிதரன்

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,
என்றும் நலமுடன் இருங்கள்.

''வயதானவர்களுக்குச் சிரமம் தான். புரிந்து கொள்ள முடியும்.

ஆனால் அது இயற்கை. இயற்கையில் மாற்றங்கள் வருவது இயல்புதானே அம்மா. மனித மனங்களில் வரும் மாற்றத்தைவிடவா??!! அதுதான் கொடூரம். இயற்கையின் மாற்றங்களுக்குக் காரணமும் ஓரளவு மனிதர்கள்தான் எனும் போது!!""

மனித மனங்கள் கொள்ளும் மாற்றங்கள் அவரையும் அவரைச் சார்ந்தவர்களையும்
கொடுமைப் படுத்தும்.

மனிதர்களால் இயற்கைக்குக் கொடுமைகள் நடக்கின்றன.
செய்பவர்கள் தங்கள் அடுத்த தலைமுறைக்கும்
சேர்த்தே அனியாயங்கள் செய்கிறார் என்று புரிவதில்லை.

அபுதாபியில் கூட க்ளௌட் பர்ஸ்ட் நிகழ்ந்திருக்கிறது.
அது மழைக்காக விதைக்கப் பட்ட
மேக வெடிப்பு.
நம் ஊரில் இயற்கையே இதைச் செய்திருக்கிறதுதான்
அதிசயம்'
சுனாமியும் ஒரு டிசம்பரில் நிகழ்ந்ததுதான். அதற்கும்
வேறெங்கேயோ பெயத மழையும் ஊழி அலைகளும்
தான் காரணம்.
அவதிப்படுபவர்கள் சாதாரண மக்கள்.
செய்பவன் ஒருவன். பாதிக்கப் படுபவன்
இன்னோருவன்.

நன்றி கீதாமா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் தனபாலன் மிக மிக நன்றிமா.
நலமுடன் இருங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் துளசிதரன்.
நலமுடன் இருங்கள்.

''எதையும் நம்மால் தடுக்கவோ தவிர்க்கவோ தீர்வு காண்பதோ முடியாதுதான். எனவே நாம் நம்மைப் பாதுகாப்பாக வைத்துக் கொண்டு இறைவனிடம் பிரார்த்தித்துக் கொண்டு கடக்க வேண்டியதுதான். வேறு வழி இல்லைதான்''

இதுதான் நிதர்சனம்.
இறைவனிடம் இடை விடாத பிரார்த்தனையும்

விழிப்புணர்வுடன் கூடிய சுய பாதுகாப்புமே
நன்மை பயக்கும்.
நன்மை கூட வேண்டும்.
மிக நன்றி மா.

நெல்லைத்தமிழன் said...

பெங்களூரிலும் குளிர். வெகு சீக்கிரம் எழும் நான் இப்போதெல்லாம் தாமதமாக்குகிறேன். பகலிலும் குளிர். வெயிலில் வெளியே நடக்கிறேன்.

மாதேவி said...

நோய் தொற்று,காலநிலை மாற்றம் என எங்கும் சிரமங்கள் இருக்கத்தான் செய்கின்றன அவற்றையும் கடக்க வேண்டுவோம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் முரளிமா,
நலமுடன் இருங்கள்.
ஆமாம் உலகம் எங்கும் கால நிலை மாறித்தான் இருக்கிறது.

இப்படிக் குளிர் இருந்தால் வரும் கோடையும்
நிறைய வெப்பம் கூடும் என்று நினைக்கிறேன்.
பொறுத்துக் கொள்வோம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் மாதேவி,
நலமுடன் இருங்கள் அம்மா.
எங்கு பார்த்தாலும் இந்த செய்திகளே
நம்மை வந்து அடைகின்றன.
இறைவன் நம்மைக் காக்க வேண்டும். நன்றி மா.