Blog Archive

Saturday, January 01, 2022

நீலாவுக்கு நிறைஞ்ச மனசு:) இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.



13 comments:

வெங்கட் நாகராஜ் said...

இனிமையான பாடல்கள் கேட்டு ரசித்தேன். மூன்று பாடல்களுமே முதல் முறையாக கேட்கிறேன். இந்து கொண்டதற்கு நன்றி.

தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் வெங்கட்,
என்றும் நலமுடன் இருங்கள்.
ஆமாம் மா. 50களில் கேட்ட வானொலிப் பாடல்கள்
அப்பா இவை.
உங்களுக்குப் பிடித்ததில் எனக்கும் மகிழ்ச்சி.
நன்றி மா.

ஸ்ரீராம். said...

தங்கிலீஷில் பாடல் அப்போதே வந்திருந்திருக்கிறது.  அது மட்டுமல்லாமல் எல்லா வரிகளும் டி என்றே முடியும்வகையில் அமைந்திருக்கும் பாடல்.  டி ஆர் ஆர் ரசிக்க வைத்திருக்கிறார்.  செம டான்ஸ்!  டியூன் வேறொரு பாடலை நினைவுபடுத்துகிறது!

இரண்டாவது பாடலில் சூலமங்கலம்  ராஜலக்ஷ்மி குரல் தெரிகிறது.

மூன்றாவது பாடல் கிண்டல் வகையறா போல..   நித்தம் நித்தம் நெல்லுசோறு டைப்பிலும் பாடி இருக்கிறார்!  மூன்றும் ஒரே படமோ?!

Thulasidharan V Thillaiakathu said...

அம்மா இதுவரை கேட்டதே இல்லை. இப்போதுதான் கேட்கிறேன். நல்ல பாடல்கள் வரிகளும் தான். ரொம்ப பழைய பாடல்கள் இல்லையா?!!!

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

இனிய பாடல்கள். அதிகம் கேட்டதில்லை என்றாலும் இப்போது கேட்டவுடன் நினைவுக்கு வந்தது. இலங்கை வானொலியில் மதிய நேரத்தில் கேட்ட நினைவு. அதுவும் மூன்றாவது பாடல் வசனத்துடன் வருவது.

மிக்க நன்றி வல்லிம்மா

இப்புத்தாண்டும் இனி வரும் ஆண்டுகளும் எல்லோருக்கும் இனிய நினைவுகளை வழங்கி நல்ல ஆரோக்கியத்தை வழங்கி மகிழ்ச்சி ஏற்படுத்திட இறைவனிடம் பிரார்த்தனைகளோடு உங்கள் எல்லோருக்கும் அன்பான வாழ்த்துகள்!

துளசிதரன்

வல்லிசிம்ஹன் said...

அன்பின் வெங்கட்,
நலமுடன் இருங்கள்.
பாடல்கள் தலைப்பில் கொடுத்திருக்கும் பெயரில் வந்தவை.
தங்கவேலுவின் ஒரிஜினலிட்டி பாடல் அப்போது இகப் பிரபலம்!!
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

''
மூன்றாவது பாடல் கிண்டல் வகையறா போல.. நித்தம் நித்தம் நெல்லுசோறு டைப்பிலும் பாடி இருக்கிறார்! மூன்றும் ஒரே படமோ?!"

அன்பின் ஸ்ரீராம்,
நலமுடன் இருங்கள்.
நீலாவுக்கு நெறஞ்ச மனசு படத்திலிருந்து
பாடல்கள்.
ஒரிஜினாலிட்டி பாடல் திருச்சி லோகனாதன் பாடி தங்கவேலு ஆடி இருக்கிறார்:)
நல்ல பாடல் .பாட்டியிடம் பர்மிஷன் கேட்கிறார்,.
நன்றி மா..

படத்தில் ராகினி, எம்.என் ராஜம், டி பி.முத்துலட்சுமி
மூவரும் சகோதரிகள்.
வெவ்வேறு விதமாகப் பாடுகிறார்கள்.
நல்ல இசை அமைந்த படம்.


வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,

ஆமாம் மா, 1958 ல வந்தது என்று நினைக்கிறேன்.

இசை அருமையாக இருக்கும்.
உங்களுக்கும் பிடித்ததுதான் சந்தோஷம் .நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் துளசிதரன்,
என்றும் நலமுடன் இருங்கள்.
புத்தாண்டு அனைத்து மங்களங்களையும்
வழங்க வேண்டும். நன்றிமா.

பாடல்களை என் பத்து வயதில் கேட்டிருப்பேன்.
நீங்கள் ரசித்துக் கேட்டதுதான் மகிழ்ச்சி.

''வானொலியில் மதிய நேரத்தில் கேட்ட நினைவு. அதுவும் மூன்றாவது பாடல் வசனத்துடன் வருவது."
மிக இனிமை. நன்றி,

மாதேவி said...

பழைய பாடல்கள். முதல் பாடல் இப்பொழுதுதான் கேட்டேன்.

Geetha Sambasivam said...

கேட்காத பாடல்கள். இப்போத் தான் இந்தப் படம்/பாடல்கள் பற்றி அறிந்தேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் மாதேவி,
நலமுடன் இருங்கள்.

உண்மையில் இலங்கை வானொலிக்குத் தான் நன்றி சொல்லணும்.
எத்தனையோ நல்ல பாடல்களை ஒலி பரப்பிக் கொண்டே இருப்பார்கள்.

நீங்களும் ரசித்துக் கேட்பதே மகிழ்ச்சி.
நன்றி மா.இனிய புத்தாண்டு நலவாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,
நலமுடன் இருங்கள்.

இங்கு குளிர் நிறைய இருப்பதாலும், தொற்று ஒரே நாளில்
மும்மடங்கு அதிகரித்திருப்பதால் கோவிலுக்கும் போக முடியாது!

பாடல்களும் யூடியூபுமே கதி:)
நன்றி மா. மிகப் பழைய பாடல்கள் இவை.