பிரதாப முதலியார் சரித்திரம்,
தமிழ் நாட்டின் முதல் நாவல்.
எழுதியவர் திரு. மாயூரம் வேத நாயகம் பிள்ளை.
இந்த புதினத்தைப் பற்றி
பழைய க்விஸ் நிகழ்ச்சிகளுக்காகத் தெரிந்து கொண்ட
நினைவு.
இதை ஒரு பெரிய ப்ராஜெக்ட்டாக அன்பு மதுமிதா
எடுத்துப் பொறுமையாகப் படித்து வருகிறார்.
அந்த ஏற்றத் தாழ்வுடன் , இதமான குரலில்
அவர் படிக்கும் அருமை ,
அந்தக் கதையை வேத நாயகம் அவர்கள்
எழுதி இருக்கும் சிறப்பு எல்லாமே
அசர வைக்கிறது.
இந்த எழுத்து நடை நான் இது வரை படிக்காதது.
நிறைய பேரை சென்றடைய வேண்டும்
என்பதற்காக இங்கே பதிகிறேன்.
இவ்வளவு ஈடுபாட்டுடன் ஒருவர் முனையும் போது அதைக்
கேட்டுப் பயன் அடையலாமே என்ற ஆசைதான்.
படிக்க முடியாதவர்கள் கேட்டுப் பயன் அடையலாம்.
அந்தக் கால வாழ்வு எத்தனை உன்னதமாக
நேர்மையாக இருந்திருகிறது என்று உணர முடிகிறது.
நிகழ்வுகள் நடந்த காலத்தின் சரித்திரம்
கண்முன்னே நிகழ்வுது போல ஆசிரியர் எழுதி இருக்கிறார்.
அனைவரும் கேட்க வேண்டிய ஆடியோ புத்தகம்.
ஒரு இழப்பிலிருந்திலிருந்து வெளி வந்திருக்கும் தோழி
எடுத்திருக்கும் நல்ல திடமான முயற்சி வெற்றி பெற வேண்டும்
என்பதே என் ஆசை.
நன்றி.
10 comments:
நான் பிரதாப முதலியார் சரித்திரம் படித்ததில்லை. அதன் நாய் எண்ணெய் படிக்கத்தூண்டியதில்லை. இந்த ஆடியோபுக் கேட்கலாம் என்று தோன்றுகிறது. குறித்துக் கொள்கிறேன் அம்மா.
//ஒரு இழப்பிலிருந்திலிருந்து வெளி வந்திருக்கும் தோழி//
ஓ... அவர் மனம் இது மாதிரி செயல்களில் அமைதி அடையட்டும்.
பிரதாப முதலியார் சரித்திரம் பற்றி பள்ளி நாட்களில் படித்த நினைவு. வேதநாயகம்பிள்ளை பற்றி படித்த போது.
வீடியோ கேட்கிறேன் அம்மா
அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி
கீதா
பிரதாப முத்லியார் சரித்திரம் எனக்கு பாடமாக வந்ததது.
என் கணவருடன் வேலை பார்த்த ஆசிரியர் ஒருவர் பிரதாப முத்லியார் சருத்திரதை முணைவர் பட்டத்திற்கு எடுத்து இருந்தார். அவர் பிரதாப முத்லியார் சரித்தர புத்தகத்தை எனக்கு கொடுத்தார் அவர் வீட்டுக்கு போய் இருந்த போது.
ஒரு மகளிர் தினத்திற்கு இந்த கதையின் கதாநாயகி பற்றி எழுதி இருந்தேன். அவளின் திறமை, அறிவு கொண்டு தன் கணவரை காப்பாற்றிய வீர தீர கதை.
ஆடியோ புத்தகம் கேட்க வேண்டும் அக்கா.
தாத்தாவிடம் புத்தகம் இருந்தது. சின்ன வயசில் படிச்சிருக்கேன். ஆனாலும் ஆனந்தரங்கம் பிள்ளை டைரிக்குறிப்பு, விநோத சிந்தாமணி, வடுவூர், வைமுகோ, ஆரணி குப்புசாமி முதலியார் போல் மனதைக் கவரவில்லை. தமிழ் நடை குறிப்பிடத்தக்க முறையில் இருக்கும்.
வணக்கம் சகோதரி
பதிவு அருமை. தங்கள் தோழியின் சரளமான பேச்சுடன் பிரதாப முதலியார் ஆடியோ கதையை முழுவதும் கேட்டேன். தங்கள் தோழி நன்றாக சொல்லியிருந்தார். அவருக்கு வாழ்த்துக்களை சொல்லி விடுங்கள். இந்தக் கதை ஏற்கனவே படித்துள்ளேன். அந்த கற்புக்கரசியை இறுதி வரை சோதித்த இறைவன் அவருக்கு நல்ல நிலையையும், புகழையும் தந்துள்ளார். ராணி மங்கம்மாளின் வீரமும், தீரமும் புகழ் பெற்றவை. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அன்பின் ஸ்ரீராம்,
நலமுடன் இருங்கள்.
புத்தகமாகக் கையில் எடுத்துப் படிப்பதற்கு எல்லோருக்கும்
நேரம் இருப்பதில்லை.
கவிதா என்பவர் பொன்னியின் செல்வனை
ஆடியோவைக் கேட்பது நிறைவாக இருந்தது.
அதே போல நிறைய கதைகளை
சொல்பவரின் உறுதி, அந்தக் கதையின் மேல் இருக்கும்
நேசம் எல்லாமே அதைக் கேட்கும் போதே
தெரியும்.
நம் மதுமிதாவும் அதே தொனியில்
சொல்வதால் என்னால் ரசிக்க முடிகிறது.
முடிந்த போது கேளுங்கள்.
அன்பின் கீதாமா,
அன்பின் மதுமிதா மிக சிரமம் எடுத்து இந்த நன்மை செய்திருக்கிறார்.
எனக்குக் கேட்கக் கேட்க இன்னும் பிடித்திருக்கிறது.
படிப்பதில் உள்ள சிரமம் கேட்பதில் இல்லை.
உங்களுக்கு முடிந்த வேலையில் கேளுங்கள்.
நன்றி மா.
அன்பின் கோமதிமா,
வாழ்க வளமுடன்.
''ஒரு மகளிர் தினத்திற்கு இந்த கதையின் கதாநாயகி பற்றி எழுதி இருந்தேன். அவளின் திறமை, அறிவு கொண்டு தன் கணவரை காப்பாற்றிய வீர தீர கதை.''
கற்பலங்காரி கதை என்னை மிகவும் ஈர்த்தது. அதுவும் அந்தக் காலங்களில் இது
உண்மையிலேயே
மிக தைரியம் வேண்டியிருந்திருக்கும்.
அதுவும் குழந்தைகளுக்கு இது போல
நீதிக் கதைகளைச் சொல்லி வளர்ப்பது
எவ்வளவு அவசியம் என்பதையும்
உணர்த்துகிறது. நல்ல வாழ்க்கைமுறை.
நன்றி மா
அன்பின் கீதாமா,
என்றும் நலமுடன் இருக்க இறைவன் துணை.
நானும் ஆனந்தரங்கம் பிள்ளையின் டயரிக் குறிப்புகள்
படைத்திருக்கிறேன்.
இந்த நாவலையும் படிக்க முற்பட்டு.
நிறுத்தி விட்டேன்.
இப்போது ஒலிப்பதிவாக வந்திருப்பதால்
கவனத்தை ஈர்க்கிறது.
அதுதான் +++++++ பாயிண்ட்.
நன்றிமா.
அன்பின் கமலாமா,
என்றும் நலமுடன் இருங்கள்.
ஸ்ரீ பிரதாப முதலியார் சரித்திரத்தைத் தோழி
ஒலிப்பதிவாகக் கொடுப்பதால் தான்
எனக்கு சுவாரஸ்யம் வந்தது.
அதில் இந்த எட்டாம் பதிவில் கற்பலங்காரி கதை
மிகச் சிறப்பாகச் சொல்லி இருக்கிறார்.
சம்பவங்கள் கண்முன்னே நிகழ்வது போலச் சொல்வதே
நம்மை அந்த நாட்களுக்கே
கொண்டு செல்கிறது.
கண்டிப்பாக உங்கள் கருத்தைத் தோழியிடம் தெரிவிக்கிறேன்.
அவருக்கு இருக்கும் எத்தனையோ திறமைகளில்
இதுவும் ஒன்று.
நன்றி கமலாமா.
Post a Comment