நம் நாட்டுக்கே உரிமையான
சகோதரபாசம் கொண்டாடும் நாள் இன்று.
கனுப்பொங்கல்.
சிலபேருக்கு இன்றுதான் பொங்கல் விழா.
தை மகள் தினந்தோறும் பிறக்கிறாள்
போல இருக்கிறது.
எப்படியோ
ஆதவன் செழிப்புடன் நம்மைக் காக்கட்டும்.
நீர் வளம் நிரம்பி,பயிர் வளம் செழித்து,
மக்கள் மனம் நிறைய நல் வாழ்வு கிடைக்க வேண்டும்.
இறைவன் நம் அனைத்து சகோதரகளையும்
சகோதரிகளையும்
பாசம் குன்றாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
அனைத்து நட்புகளுக்கும் வாழ்த்துகள்.
15 comments:
சகோதரகள், புதல்வர்கள், அவர்களின்
செல்வங்கள் என்று அனைவரும்
அவரவர் வாழ்க்கையில் நலங்கள் காண ,
திருமணங்கள் நடக்க, நடந்த திருமணங்கள் மேலும் செழிக்க
இறைவன் கருணை செய்யட்டும்.
தங்களுக்கும் வாழ்த்துகள் அம்மா.
வாழ்த்துகள் வல்லி. இந்த வருஷம் யாரையும் "சீர"ச் சொல்லிக் கேட்கக்கூட நேரமில்லை பாருங்க! :))))))
அன்பின் கீதாமா,
நமக்கு மனசெல்லாம் நம் நட்புகள் தானே.
எந்த நாள் வாழ்த்தினாலும் சிறப்புதான் அம்மா.
உங்க பதிவுகளை மிஸ் செய்யறேன்.
பரவாயில்லை. குட்டி குஞ்சுலுவுடன்
செலவழிக்கும் நேரமே இனிமை.
உங்கள் மகன் ,மகள்,குழந்தைகள் அனைவருக்கும் ஆசிகள்
மெதுவாக 'சீர'லாம்:)
அன்பு தம்பி வாசுதேவனை ( தி. வா )நினைக்கிறேன்!!!
நன்றாக இருக்கட்டும்.
அன்பின் தேவகோட்டைஜி,
வாழ்வில் உங்களுக்கு ஆரோக்கியமும் ,மன நிம்மதியையும்
இறைவன் என்றும் அருள வேண்டும்.
நன்றாக இருங்கள் அப்பா.
வணக்கம் சகோதரி
தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள் சகோதரி. இரண்டு நாட்களாக வேலைகளுடன் நேரம் ஓடுகிறது. அனைவருக்கும் அன்பான நல்வாழ்த்துகள். தங்கள் வாழ்த்திற்கும் நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி அம்மா. நேற்று என் அக்கா, என் தங்கை இருவரையும் அவரவர்கள் பெண்ணுடன் வீட்டுக்கு கூப்பிட்டு அன்பு செய்தோம். வெல்ல சாதம், புளியோதரை, தேங்காய் சாதம், அவியல் செய்து கொண்டாடினோம்.
அன்பின் கமலாமா,
என்றும் நலமுடன். இருக்க வேண்டும்.
மூன்று நாட்களாக வேலைகள் தான்.:)
சந்தோஷமாக இருந்தது.
உங்களுக்கும் குழந்தைகளுடன் பொழுது
நல்லபடியாகச் சென்றிருக்கும் என்று தெரிகிறது.
நலம் தரும் வேளைகள் தொடர இறைவன்
அருள வேண்டும். நல் வாழ்த்துகள் அம்மா.
அன்பின் ஸ்ரீராம்,
நலமுடன் இருங்கள்.
உறவுகள் பிறந்தகம் வரும் காலம் தான் எத்தனை இனிமை!!
உங்கள் சகோதரிகள்,அவர்களது
பெண்கள் என்று உற்சாகமாகச் சென்றிருக்கும்
பொழுது.
கலந்த சாதம், வெல்ல சாதம் என்று கேட்கவே
அமிர்தமாக இருந்தது.
நன்றி மா.
கேட்காத பாடல் கேட்டேன்.
சகோதரபாசம் கொண்டாடும் நாளில் நேற்று தம்பி வீட்டுக்கு போய் வந்தோம்.
தங்கைகள் தம்பி வீட்டுக்கு வந்து பார்த்தார்கள்.
//இறைவன் நம் அனைத்து சகோதரகளையும்
சகோதரிகளையும்
பாசம் குன்றாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.//
நானும் அப்படியே இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன் அக்கா.
உங்களுக்கும் வாழ்த்துக்கள்.
கனுப்பொங்கல் தாமதமாக வாழ்த்துகள் அம்மா.
இது பற்றி பழைய நினைவுகளே அன்றி எனக்குச் சொல்லிக் கொள்ளும்ப்படி எதுவுமில்லை.
கீதா
பாடல் இனிமை. அனைவருக்கும் காணும் பொங்கல் நல்வாழ்த்துகள்.
அன்பின் கோமதிமா,
என்றும் வாழ்க வளமுடன்.
சேர்ந்து பிறந்த பாசம் என்றும் நிலைக்கும். அவர்கள் நன்றாக
இருக்க நாமும் நலமாக இருப்போம்.
நீங்கள், தங்கைகள் தம்பி ,அக்கா அனைவரும்
நலமே வாழ என் அன்பு வாழ்த்துகள்.
அன்புடன் அக்கா.
அன்பின் கீதாமா,
என்றும் நலமுடன் இருங்கள்.
எனக்கும் பழைய நினைவுகளே இன்னும் வாழ வைக்கிறது.
மற்ற கசின்ஸ் எல்லோரையும் வாழ்த்தியே கனு வைத்தேன்.
நாமே நமக்கு உறவு அம்மா.
நன்றி.
அன்பின் வெங்கட்,
நலம் பெறுக நல் வாழ்வுக்கு ஆசிகள்.
எல்லாம் வீடியோ காணொளி மூலம்
தான் நம் விழாக்கள் நிறைவேறுகின்றன.
நீங்களும், ஆதியும், ரோஷ்ணியும்
என்றும் நலமுடன் இருக்க வாழ்த்துகள்.
Post a Comment