இனிய இசையும் நல்ல திரைக் கதையும்
அமைந்த படம்.
இனிய இசையும் நல்ல திரைக் கதையும்
அமைந்த படம்.
புதுமைப் பித்தன் படம் 1957இல் வெளியானது.
ராஜா ராணி கதை தான்.
திரு ஜி.ராமனாதன் இசையில் வந்த பாடல்கள்.
பாடல்கள் திரு தஞ்சை ராமதாஸின் கைவண்ணம்.
எம் ஜி ஆர், டி ஆர் ராஜகுமாரி,
பி எஸ் சரோஜா, ஈவி சரோஜா, சந்திரபாபு, பாலையா
என்று பிரபல நடிகர்களின் அசத்தலான நடிப்பு.
அப்போதெல்லாம் கிடைக்காத சான்ஸ் இப்போது
யூடியூப் சேவையில் கிடைக்கிறது.:)
ஏதோ பழைய ஷேக்ஸ்பியர் டிராமா
பார்ப்பது போல இருந்தது.
இரண்டு மூன்று ஆங்கிலப் படங்கள் சாயல்.
இருந்தாலும் அருமையான உழைப்புடன்
எடுக்கப் பட்டிருக்கும் திரைப் படம்.
டி ஆர் ராமண்ணா இயக்கியிருக்கிறார்.
ஒவ்வொருவர் வரலாற்றையும் படிக்கும் போது ஆச்சரியமாக
இருக்கிறது.
சீக்கிரமே ஒரு ஆராய்ச்சிப் பட்டம் வாங்கும்
அளவுக்குத் தேறிவிடுவேன் என்று நினைக்கிறேன்:))
எல்லோரும் நலமுடன் நோய்த் தொற்று
பயமில்லாமல் வாழ வேண்டும்.
14 comments:
புதுமைப்பித்தன் என்று ஒரு படமா ? முதலில் நான் எழுத்தாளர் பற்றி என்று நினைத்தேன் அம்மா
காணொளிகள் எல்லாம் அப்புறம் கேட்கிறேன் அம்மா. பாடல்கள் கேட்டிருக்கிறேனா தெரியவில்லை
கீதா
கண்டிப்பாக உங்களுக்கு ஆராய்ச்சிப்பட்டம் இதோ பிடிங்க!!!! ஹாஹாஹாஹா
ராஜா ராணி கதையா...
யுட்யூபில் கிடைத்தாலும் எனக்குச் சூழல் அமைந்தால்தான் பார்க்க முடியும்..
படம் பற்றிய தகவல்கள் அறிந்தேன் அம்மா. ஜி ராமனாதன் இசையா...மெதுவாகக் கேட்கிறேன் கேட்டுவிட்டு வருகிறேன் அம்மா
கீதா
பாடல்கள், எல்லாம் நன்றாக இருக்கிறது.
அப்போதெல்லாம் கிடைக்காத சான்ஸ் இப்போது
யூடியூப் சேவையில் கிடைக்கிறது.:)//
அப்போது பார்க்காத படங்களை பார்க்கலாம்தான்.
கொஞ்சம் கொஞ்சமாக பார்த்து கொள்ள வசதி. முடிந்த போது பார்க்கலாம்.
அன்பின் கீதா ரங்கன்,
மனலமுடன் இருங்கள்.
புதுமைப் பித்தன் சினிம எனக்கே பழசு:)
எல்லோருமே நன்றாக நடித்திருக்கிறார்கள். பாடலும் இனிமை.
உங்களுக்குப் பிடிக்கும்.
வாழ்வில் முதன் முதலாக ஆராய்ச்சி முனைவர் பட்டம் கிடைத்ததற்கு,
பல்கலைப் பேராசியர் கீதா ரங்கனுக்கு
பல கோடி நன்றிகள்.:)
அன்பின் கோமதி மா.
வாழ்க வளமுடன்.
தூக்கம் வராத போது போட்டால்
அந்த ஒலியிலியே தூங்கி விடுகிறேன்.
நன்றி மா.
புதுமைப்பித்தன் திரைப்படம் இருப்பது அறிந்த விடயமே...
பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி அம்மா
அன்பின் தேவகோட்டை ஜி,
நலமுடன் இருங்கள். இங்கே இருப்பவர்கள் என்னை விட மிக மிக வயதில் குறைந்தவர்கள் மா.
எனக்குப் புரட்சித் தலைவர் படங்கள் பிடிக்கும். நன்றி மா.
வாழ்வில் முதன் முதலாக ஆராய்ச்சி முனைவர் பட்டம் கிடைத்ததற்கு,
பல்கலைப் பேராசியர் கீதா ரங்கனுக்கு
பல கோடி நன்றிகள்.:)//
ஹாஹாஹாஹா அம்ம ஆனா என்னை பேராசிரியர் னு சொன்னதுதான் என்னைப் போய் இப்படி...
கீதா
பாடல்கள் இப்போதுதான் முதல் முறையாகக் கேட்கிறேன். படம் பற்றியும் அறிந்ததில்லை. பாடல்கள் எல்லாமே சிறப்பாக இருக்கிறது. நான் எம்ஜிஆர் படங்கள் என்றால் பார்த்துவிடும் பழக்கம் உண்டு ஆனால் இது தெரிந்திருக்கவில்லை.
நேரம் கிடைக்கும் போது பார்த்துவிடுகிறேன்.
பகிர்விற்கு மிக்க நன்றி வல்லிஅம்மா
துளசிதரன்
புதுமைப்பித்தன் எனப் படம் வந்திருப்பது முற்றிலும் அறியேன். அறியத் தந்தமைக்கு நன்றி. நல்ல ஆராய்ச்சி தான் செய்திருக்கீங்க. இதுக்கும் தாராளமா முனைவர் பட்டம் கொடுக்கலாமே!
அன்பின் கீதா ரங்கன்,
இன்னிக்கே உங்களுக்குப் பேராசிரியர்
பொறுப்பு கொடுக்கிறேன்.
வாழ்வில் அனைவரையும் அனுசரித்துப்
போவதில் நீங்களே உத்தம ஆசிரியர்.
அன்பின் துளசிதரன்,
நலமுடன் இருங்கள்.
50களில் பல சிறப்பான படங்கள் வெளியிடப்பட்டன.
பாடல்களும் கதை அம்சங்களும் அருமையாக இருந்த
படங்கள்.
நீண்டு இருப்பதால் சில கத்திரிக்குள் அகப்பட்டு
நல்ல காட்சிகளும் சிதைக்கப் பட்டு விடும்போது
கதை ஓட்டம் புரிபடுவதில்லை.
நீங்கள் ரசிப்பதே எனக்கு மகிழ்ச்சி.
அன்பின் கீதாமா,
மிக நலமுடன் இருங்கள்.
இப்போதெல்லாம் பழைய படங்களைப்
பார்ப்பதில் ஏதோ ஒரு அமைதி கிடைக்கிறது.
எனக்கு இந்த த்ரில்லர், திகில் ஒன்றும்
பிடிக்கவில்லை.
அதைப் படித்தால் கூட சோர்வாக இருக்கிறது.
யூ டியூபில் தான் நிறையக் கிடைக்கிறதே.
மத்யானம் சாப்பிட்ட பிறகு பார்க்கிறேன்.
செய்திகள் பார்ப்பதில்லை:)
நன்றி மா.
Post a Comment