Blog Archive

Friday, November 12, 2021

வெள்ளக்காடான மயிலாப்பூர்...#RainUpdates #ChennaiRains #ChennaiRains #Che...

எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் தண்ணீர்.
எங்கள் மயிலை.:(

8 comments:

ஸ்ரீராம். said...

மேற்கு மாம்பலத்தில் அடைப்பைச் சரிசெய்தபோது கிலோ கிலோவாக பிளாஸ்டிக் பைகள் எடுக்கப் பட்டனவாம்.  உபயோகித்துவிட்டு கண்டபடி தெருவில் போட்ட மக்களை சொல்வதா, அல்லது இன்னமும் அதை உபயோகத்தில் விட்டிருக்கும் அரசைச் சொல்வதா, அல்லது அவ்வப்போது ஆங்காங்கே குப்பைகளை சரியாக எடுக்காமல் இருக்கும் அரசு இயந்திரத்தைச் சொல்வதா?  மொத்தத்தில் அரசு என்பதும் நாம்தான் என்பதை உணர்ந்து மக்கள் பெரிய அளவில் மாற்றம் காணவேண்டும்.

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

பதிவை பார்க்கையில் மனதுக்கு கஸ்டமாக உள்ளது.முன்பு நாங்கள் சென்னையில் இருந்த போது மழை காலங்களில் மயிலை கொஞ்சம் வெள்ளத்திலிருந்து தப்பிக்கும். இப்போது மயிலையும் நிறைய மாறி விட்டது. தங்கள் பதிவை பார்க்கையில் பழைய நினைவுகள் வந்து போயின. அனைவரையும் இறைவன் நலமுடன் காக்க வேண்டும். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

Bhnumathy said...

நிரம்பி வழிந்தோடும் சித்திரை குளத்தின் காட்சி காணொளியாக வந்ததே பார்த்தீர்களா?

கோமதி அரசு said...

காணொளி பார்க்க கஷ்டமாக இருக்கிறது.

கடல் அலை போல் தேங்கி இருக்கும் தண்ணீரில் அலை தெரிகிறது வண்டியில் போய் கொண்டு காணொளி எடுத்து இருப்பதால்.

வெள்ளநீர் வடித்து மக்கள் எல்லோரும் நலமாக இருக்க வேண்டும்.

இயல்பு வாழ்க்கை திரும்ப வேண்டும்.

KILLERGEE Devakottai said...

இந்நிலைக்கு அரசு மட்டுமே காரணம் அல்ல... மக்களும்தான்...

Thulasidharan V Thillaiakathu said...

அம்மா இது வெள்ளம்னு சொல்ல முடியலையே. தண்ணீர் வெளியே செல்ல முடியாமல் தேங்கி வெள்ளமாகிறது இல்லையா? சென்னையைப் பொருத்தவரை எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

negligence of city planning, management and maintenance

geetha

Geetha Sambasivam said...

மேற்கு மாம்பலத்தில் ஏரியைத் தூர்த்து வீடுகளைக் கட்டிக் கொண்டு விட்டார்கள். இப்போ மழையைக் குற்றம் சொன்னால் எப்படி? அதே போல் மயிலையிலும் பலவிதமான ஆக்கிரமிப்புக்கள். கபாலி கோயில் குளத்தைக் கூட விட்டு வைக்கலை. இது வெள்ளமெல்லாம் இல்லை. தேங்கி நிற்கும் மழை நீர். அவதிப்படும் மக்கள் மனம்திருந்தினால் உண்டு. இல்லை எனில் பிரச்னைகள் தொடரத்தான் செய்யும்.