வல்லிசிம்ஹன்
தீபாவளிக்குப் புதுப்படங்கள் வெளியிடப்படும். அதற்கு முன்பே
பாடல்களும் வந்துவிடும்.
முதன் முதல் வண்ணத் தொலைக்காட்சியில்
அது போலச் சில பாடல்கள் மனதில் பதிந்தன.
பாடல்கள் கேட்கும் போது , வானொலியில் இசையில்
புதுப் பாடல்கள் கேட்டு அவைகளை உடனே ரசிக்கக் கொஞ்ச நாட்கள் பிடிக்கும்.
தொலைக்காட்சி வந்த புதிதில் கறுப்பு வெள்ளையில்
ஒளியும் ஒலியும் பார்த்தது போக,
சன் டிவியில் ஒரு தீபாவளியில் 'ராக்கம்மா கையைத் தட்டு''
பாடலைக் கண்டு ரசித்தது இன்னும் நினைவில். 1991 என்று நினைவு.
9 comments:
நாங்கள் முதலில் கெல்ட்ரான் கருப்புவெள்ளை தொலைக்காட்சிப்பெட்டி வைத்திருந்தோம், தெளிவான படங்கள். அப்புறம் என் சம்பளத்தில்தான் முதல் வண்ணத்தொலைக்காட்சிப்பெட்டி வாங்கினோம். விடியோகான்! அதில் நான் முதலில் வண்ணத்தில் பார்த்தது, நடிகன் படத்தில் சத்யராஜ் பாண்டேஜ் க்ளாத் போல துணியில் சட்டை போட்டுக் கொண்டு ஆடும் காட்சி! அதுவும் சாலையில் வரும்போதே ஜன்னல் வழியாக ங்கள் தொலைக்காட்சிப்பெட்டி தெரியும்!
நல்ல பாடல்களை தேர்வு செய்து இருக்கிறீர்கள் அம்மா.
பாடல்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.
மலரும் நினைவுகள் அருமை.
அன்பின் ஸ்ரீராம்,
நாங்களும் முதலில் கெல்டிரான் டிவி தான்
வைத்திருந்தோம். 2000 ரூபாய்:)
பின் சாலிடேர். பிறகு ஸோனி.
இனிய நினைவுகள்.
"""அதில் நான் முதலில் வண்ணத்தில் பார்த்தது, நடிகன் படத்தில் சத்யராஜ் பாண்டேஜ் க்ளாத் போல துணியில் சட்டை போட்டுக் கொண்டு ஆடும் காட்சி! அதுவும் சாலையில் வரும்போதே ஜன்னல் வழியாக ங்கள் தொலைக்காட்சிப்பெட்டி தெரியும்!""
ஹாஹ்ஹா. அத்தனை விஷயங்களும் நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்தின
காலங்கள். நன்றி ஸ்ரீராம்.
மிக மிக நன்றி அன்பின் தேவ கோட்டைஜி.
அன்பின் கோமதிமா,
பாடல்களைக் கேட்டு ரசித்ததற்கு மிக நன்றி மா.
வாழ்க வளமுடன்.
நாங்கள் முதலில் மஸ்டங் தொலைக்காட்சிப் பெட்டி வைத்திருந்தோம். 81 ஆம் ஆண்டில் இருந்து 88 வரை அது தான். பின்னர் ராஜஸ்தான் போனபின்னர் பிபிஎல் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி. பின்னர் 2000 ஆம் ஆண்டில் பிபிஎல் தொலைக்காட்சிப் பெட்டியை அவர் ஊட்டிக்கு மாற்றலாகிப் போனதால் எடுத்துச் சென்றார். இங்கே பிலிப்ஸ் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிவாங்கி வைத்தார். இன்று வரை அதுதான். பல முறை அதை மாற்ற வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தார். நான் குறுக்கே விழுந்து தடுத்துக் கொண்டிருந்தேன். அந்தத் தொலைக்காட்சிப் பெட்டியில் சின்னதாக ஒரு பிரச்னை வரவந்து பார்த்த மெகானிக் அவரிடம் இதைக் கொடுத்துடாதீங்க சார், இந்த மாதிரி கலர் நன்றாகத் தெரியும் வண்ணம் இப்போதெல்லாம் வருவதில்லை. இப்போ வரும் தொலைக்காட்சிப் பெட்டிகள் எல்லாம் குறைந்த பட்சம் ஐந்து ஆண்டுகள் . அதிக பட்சம் பத்து ஆண்டுகள் தான். ஆகவே மாற்றவே மாற்றாதீங்கனு சொன்னார். அவர் பார்த்துட்டுப் போய் ஐந்தாறு வருஷங்கள் ஆகின்றன. இன்னிக்கு வரை அதே தொலைக்காட்சிப் பெட்டி தான்.
பாடல்கள் எல்லாம் அருமை.புன்னகை மன்னன்2, 3 தரம் பார்த்திருக்கேன். எல்லாம் தொலைக்காட்சி உபயம் தான் என்றாலும் பார்த்தவங்களுக்காக நானும் கூடவே உட்கார வேண்டி இருந்தது. :)))))
Post a Comment