சூர சம்ஹாரக் காட்சிகள் பொதிகையில்
ஒளி பரப்பாகும் நாள்
நாமும் அந்தக் கூட்டத்துடன் ஒன்றி கந்தனைச் சேவிப்போம்.
அகந்தையையும், கர்ம வினைகளையும் அழிக்க வந்த
வள்ளலின் நாமம் எங்கும் ஒலிக்க,
செந்தூர் அலைகள் துதி பாட
அந்த உணர்ச்சி மிகும்
ஓசைகள் நம் சிந்தையைச் சுத்தம் செய்யும்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எப்பொழுதுமே கோபுரங்களும் விளக்குகளும் நமக்கு ஆதரவு
தரும். நான் உள்ளிருக்கிறேன்
என்று அந்த வேல் உரைக்கும்.
இன்றும் வேலா உன்னிடம் வேண்டுகின்றேன்.
இப்பொழுது என்னைத் துன்புறுத்தும்
இந்த வலிகளிலிருந்து எனக்கு விடுதலை கொடு.
நீ கொடுப்பாய். நம்பிக்கை உண்டு.
உன் அம்மையும் அப்பனும் ,அன்பு சகோதரனும்,
உன மாமனும் மாமியும் , உன் இரு மாதரும்
அனைவருக்கும் நல் வழி காட்டட்டும்.
5 comments:
முருகா நீ வரவேண்டும் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல். நான் அடிக்கடி கேட்கும் பாடல். முருகன் அருள் என்றென்றும் நமக்கு இருக்கும்.
பாடல்கள் கேட்டு மகிழ்ந்தேன்.முதல் பாடல் எப்போது கேட்டாலும் விழிகளில் நீர் மல்கும்.
மற்ற இரண்டு பாடல்களும் youtube.ல் போய் கேட்டேன்.
அருமையான பாடல்கள்.
என் சிறு வயதில் கொலுவில் பாடச் சொன்னால் நினைத்த போது நீ வர வேண்டும் பாடல்தான் பாடுவேன். பிடித்த பாடல்.
வள்ளல் உங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவான். உடல் வலியை போக்குவான் முருகன்.
உடல் நலத்தைப்பார்த்துக் கொள்ளுங்கள் அக்கா.
வணக்கம் சகோதரி
இனிய பதிவு அருமை. பாடல்கள் அருமை. "சொல்லாத நாளில்லை" பாடல் எனக்கு பிடித்தமானது. நிறைய தடவை பக்தி பரவசத்தில் கண்களில் நீர் பெருக பாடியிருக்கிறேன்.மற்ற இரு பாடல்களும் ஏனோ எனக்கு வரவில்லை.
உண்மைதானே... அவனை சொல்லாத நாளேது? முருகா.. ஞானபண்டிதா என இப்போது நான் அடிக்கடி வாயார கூறிக் கொண்டிருக்கும் வாய்ப்பை அவன் நிரந்தரமாக தந்தருள வேண்டும். நம் மனமெங்கும் முருகன் வியாபித்திருக்கிறான். கண்டிப்பாக அவனருள் நமக்கு உண்டு. தங்கள் உடல் உபாதைகளை சீக்கிரம் தீர்த்தருளுவான். கவலை வேண்டாம். நானும் உங்கள் நலனுக்காக அவனிடம் மனதாற வேண்டிக் கொள்கிறேன். நிச்சயம் நம் வேண்டுதலுக்கு பலனுண்டு. முருகா சரணம். பக்தி பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வீடியோ ரொம்ப நன்றாக இருந்தது அம்மா. பாடல்களும்..
அருமையான பாடல்கள்..
அம்மா டேக் கேர் உங்க உடல் நலம் முக்கியம். முருகன் நல்லது செய்வார்
கீதா
கடைசி இரு பாடல்களும் எனக்கு வரவில்லை. ஆனால் எல்லாப் பாடல்களுமே முருகன் மேல் என்பது புரிந்தது. அருமையான பாடல்கள். பகிர்வுக்கு நன்றி. உடல் நலத்தைக் கவனித்துக் கொள்ளவும்.
Post a Comment