நவம்பர் 7 2008
+++++++++++++++++++++++++++++
ஊருக்குக் கிளம்பப் போகிறொம் என்ற முஸ்தீபுடன் பேரனுடன் ஒரு அதிகாலை
பேச உட்கார்ந்தேன்.
அவன் தன்னுடைய காலை நேரத் தியானம் முடித்துக்கொண்டு, உடல்பயிற்சியும்
செய்த பிறகு ,என்னுடன் வந்து உட்கார்ந்தான்.
அவன் முகத்தில் கேள்வி. ஒன் மோர் அட்வைஸ் செஷனா????????
என்ற கேள்வி அவன் முகத்தில்.
எங்கள் அறையில் படுப்பதால் எங்களுடனேயே எழுந்திருக்கும் வழக்கம் வந்துவிட்டது.
அவனுக்கு வீட்டுப்பாடங்கள் இல்லாத நாளாகப் பார்த்து,
நேரம் இருக்கும் போது, மெஷின் துப்பாக்கி, வான்வெளி, குற்றங்கள் தண்டிக்கப் படவேண்டியவை
என்று ஒரே வேகமாகப் பேசுவான்.
எனக்கோ பயமாக இருக்கும். ஒரு வேளை அதிகமாகக் கற்பனை உலகத்தில் ,இருக்கிறானோ. நிறைய வீர தீரப் புத்தகங்கள் படிப்பதால் இத்தனை தீவிர சிந்தனைகள் வருகிறதோ என்று நினைப்பேன்.
''
பையா, இவ்வளவு உணர்ச்சி வசப்பட வேண்டாம், அது உடலுக்கு நல்லதில்லை.
எதையும் தீர்மானம் செய்வதற்குள் தீர யோசிக்கணும்'' என்று நான் முடிப்பதற்குள்
பாய்ந்து வரும் பதில்கள்.
அப்படித்தான் என் பள்ளிப்பருவத்தையும் அவனுடைய தற்போதைய பாடங்களையும் நேற்று
பேசிக்கொண்டிருந்தோம். '' உனக்கு இவ்வளவு பெரிய புத்தகங்கள் இருந்ததா பாட்டி?
நீ ஆந்தையைப் பற்றி பிராஜெக்ட் செய்திருக்கியா.
ஆப்ரஹாம் லின்கன் பற்றி என்ன தெரியும்.'' என்றேல்லாம் கேட்டபோது நான் என்னுடைய ' நாலாப்பு'
எப்படி இருந்தது என்று யோசித்து முடிந்தவரை சொன்னேன்.
என்னுடைய தேடல்கள் கூகிளில் தான். மற்றும் புத்தகங்களிருந்து இப்போதுதான்
எனக்கு வேண்டும் என்பதைநிறையப் படிக்கிறேன் என்றும் சொன்னேன்
ஆந்தை சாப்பிட்ட உணவை(எலிகள்) எப்படித் திருப்பிக் கக்கிவிடும் என்றும்
அதை (எலியின் எலும்புகளை) அவர்கள்
பரிசோதனைக் கூடத்தில் அறுத்துப் பார்த்ததாகச் சொன்னதும்
எனக்கு வியப்பு தாங்கவில்லை.
''அந்த எலும்புகளை என் லாக்கரில் ஒரு ப்ளாஸ்டிக் பையில் சீல் செய்து வைத்திருக்கிறேன்' என்று
வேறு சொன்னான்.
அது நல்லதில்லையே தொத்து நோய் ஏதாவது வந்துவிடாதா என்றதும்,
நாங்கள் எல்லோருமே அப்படித்தான் வைத்திருக்கிறோம்,ஒன்றும் வராது''என்றான்.
எதற்கு இதையெல்லாம் தெரிந்து கொள்ளணும் என்றேன். 'சுற்றுச் சூழல் பற்றி தெரிந்து கொண்டால்தானே
நாம் ஒழுங்காகப் பிழைக்க முடியும் என்று பதில் வந்தது.
.
நீ எதையாவது டைசெக்ட் செய்திருக்கிறாயா?? பாட்டி.
நான்; ஏதோ பூக்களைப் பிரித்துப் பார்ப்போம். ஒரு தவளை, ஒரு காக்ரோச்,ஒரு எலி டைசெக்ட் செய்திருக்கிறேன்''
அதுவும் நான் கல்லூரிக்குப் போனபோதுதான் என்றதும்,
உனக்கு ரொம்ப ஸ்லோ எஜுகேஷன் இல்லை??? என்று வேறு கேட்டான்.
நான் இந்திய கல்விமுறையைச் சோதிக்கும் இக்கட்டிலிருந்து விடுபட
,அப்படிப் படித்தே நம் ஊரில் ஏகப்பட்ட விஞ்ஞானிகள் வளர்ந்தார்கள்,இருக்கிறார்கள் என்றும்
மேற்கோளோடு எடுத்துச் சொன்னேன்.
நான் மேம்போக்காக , ' பரிசோதனைன்னு சொல்லி கினிபிக் எல்லாம் கொல்லறாங்களே
அது தப்புனு தோணுகிறது' என்று நான் சொன்னதும்.
அப்படிப் பார்க்கப் போனால் ''நீ செடியிலிருந்து பூவைப் பறிக்கிறதும் தப்புதான்.''
பூ செடியிலிருந்தால்தான் அந்தச் செடிக்கு நல்லது. நீ அதப் பறித்து சுவாமிக்கு வச்சு அது வாடிப் போய்க்
குப்பைக்குப் போகிறது.'' என்றான்.
ஒருவேளை மனிதர்களை வைத்துப் பரிசோதித்தால் இன்னும் பலன் கிடைக்குமோ என்னவோ என்று என்னை யோசனையோடு
பார்த்தான்.( அதாவது போட்டு வாங்குவது") என்னிடம் என்ன பதில் வருமென்று சோதனை செய்கிறான் என்று புரிந்தது:)
எனக்குச் சந்தேகம் வந்துவிட்டது. தாத்தா வாசனை பேரன் பேரில் பட்டிருக்கிறது என்று. அவருக்குத் தான் இந்தச் செடியில் பூக்களைப் பறிக்கிறது எல்லாம் பிடிக்காது.
அவனுடைய எண்ணங்கள், செயல்கள் எல்லாமே வித்தியாசமாகவே எனக்குத் தெரியும்.
கொஞ்ச வருடங்களா இருக்கின்றன அவனுக்கும் எனக்கு இடையில்.
ஐம்பது வருடங்கள்.!!!
13 comments:
அம்மாடி இந்த வயதிலேயே இவ்வளவு பாடங்களா? என்னென்ன கேள்விகள், யோசனைகள் அப்போதே உங்கள் பேரன் மனதில்.. இப்போது எண்ணங்கள் இன்னும் மேம்பட்ட நிலையில் இருப்பார் உங்கள் பேரன் இல்லையா?
பெயரனுடனான பேச்சு சுவாரஸ்யமான தகவல் அம்மா.
ஹா ஹா ஹா
தலைமுறை இடைவெளி, வளர்ந்த சூழலின் வித்தியாசம்.
என் பெண், பூமியை கடலிலிருந்து எப்படிப்பா பெருமாள் (வராஹர்) தூக்கியிருக்க முடியும் எனக் கேட்டு நான் விழித்தது நினைவுக்கு வருது.
12ம் வகுப்பில் பயாலஜி இன்டர்னலுக்காக போர்டில் வண்ணத்துப்பூச்சி போன்றவற்றைப் பாடம் செய்து ஒட்டியகொது, பேன் உதிர்ந்துவிடவே, கடைசி நேரத்தில் கறுப்பு மையால் பேன் போல அவ்கெல்லாம் புள்ளிவைத்து ஏமாற்ற நினைத்தது நினைவுக்கு வருகிறது
மிக அருமையான மீள்பதிவு.
தலைப்பும் அருமை.
பேரனின் ஆராய்ச்சியும், கேள்விகளும் அருமை.
// 'சுற்றுச் சூழல் பற்றி தெரிந்து கொண்டால்தானே
நாம் ஒழுங்காகப் பிழைக்க முடியும் என்று பதில் வந்தது.//
பேரனின் பதில் அருமை.
இயற்கையின் சுற்றுச்சூழலும் தெரியவேண்டிய அவசியத்தில் இருக்கிறோம்.
தாத்தாவின் குணநலன் பேரனிடம் இருப்பது மகிழ்ச்சி.
மலரும் நினைவுகள் அருமை.
இந்த வயதில் எவ்வளவு விஷயங்கள்தெறிந்திருக்கிறது? ஆச்சரியம். அன்புடன்
அன்பின் ஸ்ரீராம்,
இப்போத் அவர் பகவத் கீதை, இந்து
புராணங்கள் என்று ஆராய்ச்சிய்யில் இருக்கிறார்.
என்னிடமும் அலசல் உண்டு.
நான் நிறையக் கற்று வருகிறேன் மா.
நன்றி.
அன்பின் முரளிமா,
மிகப் பெரிய இடைவெளி.
வித்தியாசமான படிப்பு.
இங்கிருக்கும் ஆந்தைகள் கருடன் போல் மிகப்
பெரிதாக இருக்கும்.
அதை எல்லாம் ஆராய்ச்சி செய்யணும்னு எப்படித் தோன்றுமோ !!!
சின்னவனும் இந்த வராஹக் கேள்வ்யைக் கேட்பான்:)
உங்கள் பேரன் பேத்திகள்
இதைவிட நிறையப் படிப்பார்கள்.
அன்பின் தேவ கோட்டைஜி,
ஆமாம்மா.
சிறியவர்களிடம் இருந்து நாம் எப்பொழுதுமே நிறையைக் கற்கிறோம்.
"பேரனின் பதில் அருமை.
இயற்கையின் சுற்றுச்சூழலும் தெரியவேண்டிய அவசியத்தில் இருக்கிறோம்.
தாத்தாவின் குணநலன் பேரனிடம் இருப்பது மகிழ்ச்சி."
அன்பின் கோமதி மா.
வாழ்க வளமுடன்.
அவர்களின் கணிதம். விஞ்ஞானம் எல்லாமே
என்னை அதிர வைக்கிறது.
இவ்வளவு படிப்பும் உழைப்பும் தேவையா. எதிர்காலத்தில் இதெல்லாம்
அவனுக்கு எந்த விதத்தில் உதவும்
என்று கேள்விகள் எனக்கு எழும்பும்.
அன்பின் காமாட்சிமா,
ஆமாம் மா .இவர்களின் படிப்பு என்னை அதிசயிக்க வைக்கிறது
நீங்கள் வந்து பின்னூட்டம் இட்டது மிக மகிழ்ச்சி மா. ஜெனிவா
சீதோஷ்ணம் உங்களுக்கு ஒத்துக் கொள்கிறதா?
நலமுடன் இருங்கள்.
இந்தச் செடியில் பூக்களைப் பறிக்கிறது எல்லாம் பிடிக்காது.//
அதே அதே எனக்கும் என் மகனுக்கும் கூட.
அம்மா உங்க பேரன் செம அம்மா என்ன கேள்விகள் பதில்கள்!!! என் மகனை நினைவுபடுத்துகிறார்.
அப்போவே இப்படினா இப்போ இன்னும் அவர் சிந்தனைகள் ரொம்ப மெச்சூர்டா இருக்கும் என்று தோன்றுகிறது. ரொம்ப ரொம்ப ரசித்தேன் அம்மா.
படித்துக் கொண்டு வரும் போதே தாத்தாவுக்கான பேராண்டி என்று யூகிக்க முடிந்தது!!!!
பாட்டி என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். பேரன் பேத்திகளோடு அளவலாவ வேண்டும். ஹெல்தி ரிலேஷன்ஷிப்! எனக்கு மிகவும் பிடித்த ரிலேஷன்ஷிப்!.
ரொம்ப ரசித்தேன் அம்மா உங்க வரிகளையும் கூட
கீதா
பேரனுடனான உங்கள் உரையாடல் வெகு சுவாரஸ்யம். அவருடைய அறிவும்,தெளிவும் வியக்க வைக்கின்றன.
இது ஏற்கெனவே படிச்சிருக்கேனோ? நல்ல புத்தி சாதுரியம். இந்த வயசிலேயே! ஆராய்ச்சி மனப்பான்மையும் அதிகமாக உள்ளது. தாத்தா போல் கைத்திறன்களிலும் சிறந்து விளங்கப் பிரார்த்தனைகள். குழந்தைக்கு எங்கள் ஆசிகள்.
Post a Comment