Blog Archive

Wednesday, November 03, 2021

கந்த சஷ்டி ஆரம்பம்.



ஐப்பசியும் வந்தது. அமாவாசையும் வந்தது. அடுத்தாற்போல்
வரவேண்டியது கந்த ஸ்வாமியின் ஷஷ்டி  விழா தானே,

விழாவின் போது விரதம் இருப்பவர்களைப்
பற்றி நம் கோமதி அரசு எழுதுவார் என்றே
நம்புகிறேன். 

அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ள எப்போதுமே ஆவல்.

எங்கெல்லாம் தங்கி இருந்தோமோ
அங்கெல்லாம் முருகனும் பிள்ளையாரும் மலை மேலிருந்து
ஒளி வெள்ளமாகக் காட்சி கொடுப்பார்கள்.

திருப்பரங்குன்றம் மலை, திண்டுக்கல் மலை, மருதமல, திருச்சி மலை
திருத்தணி மலை என்று குன்றுகள் தோறும் இருந்து 
நம்மைக் காக்கும் அண்ணனும் தம்பியும் 
என்றும் துணை.

வல்லிசிம்ஹன்

12 comments:

ஸ்ரீராம். said...

பழனி, திருச்செந்தூர் இரண்டுமே நான் பார்க்காத ஸ்தலங்கள்.  எப்போது பார்க்கப் போகிறேனோ!

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம்,
நலமுடன் இருங்கள்.

நானும் பழனி பார்த்ததில்லை!!
திருச்செந்தூர் சின்ன வயதில் போயிருக்கிறோம்.
முருகன் அழைப்பான்.
சென்னையில் அறுபடை வீடு என்று ஒரு ஸ்தலம் இருக்கிறது. கேளம்பாக்கம்
என்று நினைவு.
முடிந்தால் அங்கு சென்று வாருங்கள்.
திருமணங்களை நடத்தி வைப்பான்.

வெங்கட் நாகராஜ் said...

சென்ற ஞாயிறன்று தில்லியின் மலை மந்திர் சென்றபோது அங்கே கந்த சஷ்டி விழா குறித்த பதாகைகள் பார்த்தேன். நீண்ட இடைவெளிக்குப் பிறகு கோவிலுக்குச் சென்று வந்தேன். வரும் ஞாயிறன்று பால்குடம் எடுக்கிறார்கள், வாருங்கள் என்றும் எழுதி இருந்தது! முடிந்தால் சென்று வர நினைத்திருக்கிறேன்.

காணொளிகள் இப்போது பார்க்க முடியவில்லை. பிறகு வந்து தான் காண வேண்டும்.

KILLERGEE Devakottai said...

திண்டுக்கல் மலை மட்டும் நான் பார்த்ததில்லை அம்மா.

கோமதி அரசு said...

//விழாவின் போது விரதம் இருப்பவர்களைப்
பற்றி நம் கோமதி அரசு எழுதுவார் என்றே
நம்புகிறேன். //

அக்கா என்னை குறிப்பிட்டதற்கு நன்றி.

நிறைய கந்த சஷ்டி விரதம், ஆறு நாட்கள் தொடர் பதிவு என்று ஆறு படைவீடுகள் என்று பதிவு போட்டேன் முன்பு.

இப்போது மனதே இல்லை கந்த புராணம் படிப்பேன் , விரதம் இருப்பேன், நாங்கள் இருவரும் சேர்ந்து மாத ஷஷ்டி விரதம் இருப்போம். கார்த்திகை ஷஷ்டி விரதம் இருப்போம்.
நினைவுகள் இப்போது மனதை வாட்டிக் கொண்டு இருக்கிறது.

கோமதி அரசு said...

கடைசி பாடல் மிகவும் பிடித்த பாடல். திருச்செந்தூர் கோவிலையும் பார்த்து ரசித்தேன். ஆறுபடை வீடுகளையும் அந்த பாடலில் காட்டுவது நன்றாக இருக்கிறது.திருச்செந்தூர் காணொளியும் நன்றாக இருக்கிறது.
பகிர்வுக்கு நன்றி அக்கா.

கோமதி அரசு said...

பழனி குழந்தைகளுக்கு முதல் முடி கொடுப்போம். ஆறுமாதத்திற்கு ஒரு முறை சுவாமி மலை, வருடத்திற்கு ஒரு முறை சுவாமி மலை, உறவினர் வருகை சமயம் போவோம்.

மதுரை வந்த பின் பழமுதிர் சோலைக்கு ஒவ்வொரு கார்த்திகை கார்த்திகை, வருட பிறப்பு என்று போனது நினைவுகளில்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் தேவ கோட்டைஜி,
தீபாவளி நல் வாழ்த்துகள்.

நலமுடன் இருக்க ஆசிகள்.
திண்டுக்கல் மலைக்கோட்டை பிரசித்தம்.
அது திப்பு சுல்தானுடையது.
அதன் அடிவாரத்தில் அனுமன் கோயில் இருந்தது. நான் சொல்வது
60 வருடங்களுக்கு முந்திய செய்தி அப்பா.

வல்லிசிம்ஹன் said...

""""இப்போது மனதே இல்லை கந்த புராணம் படிப்பேன் , விரதம் இருப்பேன், நாங்கள் இருவரும் சேர்ந்து மாத ஷஷ்டி விரதம் இருப்போம். கார்த்திகை ஷஷ்டி விரதம் இருப்போம்.
நினைவுகள் இப்போது மனதை வாட்டிக் கொண்டு இருக்கிறது."""""


அன்பின் கோமதிமா,
வாழ்க வளமுடன்.
மன்னிக்கணும் அம்மா. பழைய நினைவில் பதிந்து விட்டேன்.

புதிய நினைவுகளை மறக்க பழமையை விரும்பும் மனம்.

அதுவும் நினைவு நாள் நெருங்கும்போது இன்னும்
மனம் சோகப்படுகிறது.
முருகன் ஆறுதல் தரட்டும். வேறென்ன இருக்கிறது சொல்ல:(

வல்லிசிம்ஹன் said...

அன்பின் வெங்கட் ,
தீபாவளி நன்னாள் வாழ்த்துகள்

நீங்களும் முருகன் கோயில் போய் வந்தது மிக மகிழ்ச்சி.

பால்குடம் எடுத்து நம் ஊரில் விரதமாகத் திருத்தணிக்கும்,
பழனிக்கும் நடப்பார்கள்.
உங்களுக்கும் காணக் கிடைத்தால் அனுபவியுங்கள்.

காக்கும் கடவுள் கந்தன்.
என்றும் உங்களையும் குடும்பத்தையும்
நலமாக வைக்கட்டும்.

வல்லிசிம்ஹன் said...

"திருச்செந்தூர் கோவிலையும் பார்த்து ரசித்தேன். ஆறுபடை வீடுகளையும் அந்த பாடலில் காட்டுவது நன்றாக இருக்கிறது.திருச்செந்தூர் காணொளியும் நன்றாக இருக்கிறது.
பகிர்வுக்கு நன்றி அக்கா"
மிகப் பிடித்த கடவுளர்களில் முருகனுக்குத் தனி இடம் உண்டு.

பாடல்களையும் பக்தியையும் கேட்டே வளர்ந்தோம் இல்லையா கோமதி?
நலமுடன் இருப்போம் அம்மா.

மாதேவி said...

கந்தசஷ்டி நல்நாளில் முருகன் பகிர்வு காண மகிழ்ச்சி.

நாங்கள் இப்பொழுது இருப்பது முருகன் கோவில்முன்னால் உள்ள எங்கள் வீட்டில்.கோவில் மணிபூசைகளை கேட்டுக்கொண்டே இருக்கலாம் மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கும் .