Blog Archive

Wednesday, November 03, 2021

தீப ஒளித் திரு நாள் வாழ்த்துகள்.


வல்லிசிம்ஹன்,

மீள் பதிவு. 2011

Luz Vinayagar.


கிருஷ்ணா     வைகுந்தா மாதவா


'' பிலாஜி கிங்''
*******************
இது ஒரு பலகாரம். இனிப்புப் பட்சணம். வாயில் போட வேண்டியதுதான்.
ம்ம்ம் என்பதற்கு முன்னால் தொண்டைக்குள் போய் விடும்.

''எனக்குப் பிடிக்கலை பாட்டி. இட் இஸ் ஸோ ஸ்வீட்.''
இது    ஸ்விஸ் பேத்தி.

ஓ!  இட் இஸ்  ஓகே ஐ  கஸ்'' இது பெரியவர்:)

பிலாஜி கிங் பெஸ்ட்  பாட்டி. அம்மா  மேட் இட்.

இது நடுப் பெருமாள்.:)  ஐந்து வயது கிருஷ்ணா.

என்னடா அது புதுப் பேரா  இருக்கே.
அது ஸ்விம் பண்ணும் பாட்டி.
என்னது!!!!!!

ஸ்வீட்   வாட்டர்ல  ஸ்விம் பண்ணும்.
ஓ வெள்ளையா இருக்குமா.???

இல்லாஆஆ.
ப்ரௌன்  கலர்.

வெல்லச் சீடையா செய்தா உங்க அம்மா. தீபாவளிக்கு.?????
அவனைச் சீண்டினேன்.

"இல்ல பிலாஜி கிங்."

அம்மா பாட்டிக்குத் தெரியவே இல்ல. நீ சொல்லு.:"

என்னடிம்மா பண்ண?
வாயில நுழையாத ஸ்வீட்  பேரா இருக்கே!!  இது நான்.



"அவன் சாப்பிட்டது இரண்டு தான் மா.
அதுல  நாக்குத் தமிழ்ல  புரளறது.:)பலவிதமாச் சொல்லிப் பார்த்து இந்தப் பெயர்ல வந்து நின்னிருக்கான்:)

குலாப்ஜாமுன்  தான் இந்தப் பாடு பட்டுவிட்டது.:)"





எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.

16 comments:

கோமதி அரசு said...

தீப ஒளித் திருநாள் வாழ்த்துக்கள் அக்கா.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்

மலரும் நினைவுகள் அருமை.


//என்னடா அது புதுப் பேரா இருக்கே.
அது ஸ்விம் பண்ணும் பாட்டி.
என்னது!!!!!!//

பேரனின் பேச்சு மழலை அருமை.அப்போதே புரிந்து விட்டது பலகாரத்தின் பேர்.

கடைசியில் அதன் பேர் அதுதான் என்று தெரிந்தவுடன் சிரிப்பு வந்தது.

ரசனையான பகிர்வு.

ஸ்ரீராம். said...

அட ராமா...   குலாப் ஜாமூன்தானா அது!  என்னவோ புதுப்பெயராக இருக்கிறதே என்று பார்த்தேன்.

ஸ்ரீராம். said...

இனிய தீபாவளித் திருநாள் வாழ்த்துகள்.

நெல்லைத் தமிழன் said...

அட.. பிலாஜிகிங் என்ற பெயரே நன்றாக இருக்கிறதே....

எனக்கு ஜாமூன், ரசகுல்லா போன்றவற்றை கொஞ்சம் அலம்பிவிட்டுச் சாப்பிடப் பிடிக்கும். இல்லைனா ஒரே ஜீராவ இனித்துத் தொலைக்கும்.

நான் கொஞ்சம் சாமர்த்தியமா(ச் செய்யறதா நினைச்சுக்கிட்டு) பஹ்ரைன்ல, உபி வாலாக்கள்ட, கொஞ்சம் ஜீராவை எடுத்துவிட்டு ரசகுல்லா, ஜாமூன் கிலோவாக வாங்குவேன். ஜீரான்னா வெறும்ன தூரப்போடணும்னு.

எங்கள் வல்லிம்மாவுக்கும் அவர் குடும்பத்தாருக்கும் தீபாவளி நல் வாழ்த்துகள்

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

பதிவு அருமையாக உள்ளது. படங்கள் நன்றாக உள்ளன. லஸ் விநாயகரை தரிசித்து கொண்டேன். விளக்கின் ஒளியில் உலகின் சகல சுபிட்சமும் தெரிகிறது. அந்த தீப ஒளியில் பிரகாசமாக அமர்ந்திருக்கும் யானை முகத்தவன் அனைவரின் நலம் காத்து அனைவரின் வாழ்விலும் நல்லதை மட்டும் தர பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

குலோப்ஜாமூன் மழலையுடன் பெயர் மாறினாலும் பதிவில் அபாரமாக இனிக்கிறது. உங்கள் தீப ஒளித்திருநாள் வாழ்த்திற்கு மிக்க நன்றிகள். உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எங்கள் தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

என் கருத்துரை வரவில்லையோவென இரண்டு முறை அனுப்பி விட்டேன் போலிருக்கிறது. ஒன்றை டெலிட் பண்ணி விடுங்கள். நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம்,
வாழ்த்துகளுக்கு மிக நன்றி மா.

நீங்கள் பாஸ்,பசங்க,வரப்போகும் மருமகள்கள்
எல்லோரும் மிகச் சிறந்த வாழ்க்கையுடன் வளமாக
இருக்க ஆசிகளும் வாழ்த்துகளும்.
ஆமாம் பிலாஜி என்பது குலாபோட மறு வடிவம். கிங் எங்கேயிருந்து
வந்தது என்று தான் தெரியவில்லை:)

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதிமா,
வாழ்க வளமுடன்.

வாழ்த்துகளுக்கு மிக நன்றி மா.
குழந்தைகளின் எதிர்காலமே நம் வாழ்வின் நோக்கமும்.

பிரார்த்தனைகளும்.
இறைவன் அவர்களை நன்கு கருணையுடன்
கவனித்துக் கொள்ள வேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் மழலை மாறாமல் பேசுவான்.
அதைக் கேட்க மிக ஆர்வத்துடன் அவன்
சொல்வதைக் கேட்போம். நம் ஊரில் அப்போது ஸ்கைப்
தானே!!!

ரொம்ப ஆர்வமாகப் பேசுவான்.
அதற்கப்புறம் பேத்தி, இன்னோரு பேரன்
என்று மழலை வளர்ந்தது.

இதற்காகவே குழந்தைகள் உடன் இருப்பது
மிகவும் பிடித்துப் போனது:)

வல்லிசிம்ஹன் said...

அன்பின் முரளிமா,
இனிய தீபாவளி (அடுத்த ஆண்டு)க்கான நல் வாழ்த்துகள்.

ஆமாம் பெரிய பேரன் இத்தனை மழலை
பேச மாட்டான். க்ளிப்தமா நல்ல தமிழ்
பேச்சு:)
இவனும் இன்னோரு பேத்தியும் தான் மழலை சொல்வார்கள்.
எல்லாவற்றையும் குறித்து வைத்திருக்கிறேன்:)
இப்ப எல்லாம் வளர்ந்து விட்டார்களே!!!

அன்போடு பாராட்டியதற்கு நன்றி மா. உங்கள் வீட்டில் அனைவருக்கும்
வருங்கால நல்ல நாளுக்கான
ஆசிகளும் வாழ்த்துகளும்.

எனக்கு ரசகுல்லா அறவே பிடிக்காமல் போனதற்கு பெரிய தம்பி ஒரு காரணம். அவன் கல்கத்தாவில் 8 வருடங்கள் இருந்தான்.
வருடத்துக்கு இரண்டு முறை ரசகுல்லா வந்து கொண்டே இருக்கும்.:)

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கமலாமா,
இனிய தீபாவளி நல்ல நாள் வாழ்த்துகள் மா.
குழந்தைகளுக்கு ஆசியும் வாழ்த்துகளும்.

அனைவரும் இறைவன் அருளுடன்
நல்லாசியுடன் நம் வாழ்வை நடத்த வேண்டும்.

அன்பு நண்பர்களின் வாழ்வு செழிக்க வேண்டும்.

அந்தப் படம் நம் சென்னை வீட்டின் பூஜை
அறை பழைய படம். எல்லாம் நிறைந்திருந்த அன்றைய தீபாவளி நாளின் படம். உங்கள் ரசனையில் அந்த அறை நிறைவடைகிறது.
மிக மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

என் கருத்துரை வரவில்லையோவென இரண்டு முறை அனுப்பி விட்டேன் போலிருக்கிறது. ஒன்றை டெலிட் பண்ணி விடுங்கள். நன்றி."

எடுத்துவிட்டேன் அம்மா. நன்றி கமலா.

கரந்தை ஜெயக்குமார் said...

தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்

மனோ சாமிநாதன் said...


இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

Geetha Sambasivam said...

பிலாஜி கிங் அருமை! இந்தப் பதிவை நான் இப்போத் தான் பார்க்கிறேன். மீள் பதிவா இது? இப்போதைய குழந்தைகளில் நம் இந்திய உணவுகள் உட்கொண்டு ரசிக்கும் குழந்தைகள் குறைவு. :(

மாதேவி said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

பேரனின் குறும்பு சிரிப்பை வரவழைத்தது ரசனை.