அவர் மறையும் போது கூட
சிரிப்பாகச் சில விஷமங்கள் செய்து
மறைகிறாரோ என்று நினைப்பு வந்தது.
ஒரு செய்தியும் பின்னர் மறுப்பும் வந்ததும் காலை
எழுதிய பதிவை
பயந்து போய் எடுத்துவிட்டேன்.
மீண்டும் சுகா அவர்கள் பதிவைப் படித்த பிறகே
தைரியமாக இப்போது பதிவிடுகிறேன்.
சென்று வாருங்கள் ஐயா. தமிழுலகின் பாட்டையா
என்ற செல்லப் பெயரை
வாங்கியவர். அனைவரிடமும் இனிமையையும்
நகைச்சுவையையும் தெளித்தவர்,
முதுமை என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று வாழ்ந்து
காட்டிய பெரிய மனிதர்.
எப்படி ,இந்த மாதிரி திடுக்கிடும் செய்தியைக்
கொடுத்தாரோ தெரியவில்லை.
சென்ற இடத்திலும் அனைவரையும் சுகமாக வைத்திருப்பார்.
13 comments:
நெல்லைத் தமிழன் commented on "அஞ்சலி பாரதி மணி ஐயா."
9 hours ago
சில வாரங்களுக்கு முன் நினைத்தேன். பெங்களூரில்தானே நாம் இருக்கிறோம். அவரைப் பார்த்து அவரது புத்தகத்தில் அவரது கையெழுத்தோடு வாங்கி வரணும்னு.
ஸ்ரீராம். commented on "துலா மாசமும் காவிரியும்"
1 hour ago
பாரதி மணி அஞ்சலி என்று பார்த்தேனே என்று வந்தேன். காணோம்!
எனது அஞ்சலியும் அம்மா.
அடக்கடவுளே! எனக்குத் தெரியவே தெரியாது! அவர் என்னுடை ஓர்ப்படியின் அத்திம்பேர் (அத்தை பெண் கணவர்) ம்ம்ம்ம்ம், நல்ல மனிதர்.அன்னாரின் ஆன்மா நற்கதி அடையப் பிரார்த்திக்கிறேன்.
அவர் மகன் அவர் பக்கத்தில் கொடுத்திருக்கும் செய்தியைப் படித்து மனம் நெகிழ்ந்தேன். சிலகாலமாய் புற்று நோயால் அவதிப்பட்டு வந்தும் தன் துன்பத்தை வெளிக்காட்டாது இருந்திருக்கிறார். அவர் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறப் பிரார்த்திக்கிறேன்.
பாரதி மணி அவர்களின் நாடகங்கள் பார்த்து கொண்டு இருந்தேன்.(மைக்ரோ தொடர் நாடகம்.) இரண்டு மாதங்களுக்கு முன். அதில் ஒரு நாடகத்தில் அவர் பேசிய வசனம் காதில் ஒலித்து கொண்டே இருக்கிறது.
பாரதி படத்தில் பாரதியின் தந்தையாக நன்றாக நடித்து இருப்பார்.
அவரின் கட்டுரைகள் படித்து இருக்கிறேன்.
அவர் முதுமையை ரசித்து வாழ்ந்தவர்.
அவருக்கு அஞ்ச்சலிகள்.
துளசி அவர்களும் பதிவு போட்டு இருக்கிறார்கள். முன்பு அவரை சந்தித்த பதிவு.
நானும் முதலில் நீங்கள் போட்டு இருந்தீர்கள் என்று படிக்க வந்தேன் , அப்புறம் இல்லை.
அம்மா ரொம்பவே வருத்தமாக இருந்தது. பாட்டையா என்று அறியப்பட்டாலும், இளைஞராகவே இருந்ததாகத்தான் தோன்றுகிறது. வாழ்க்கையை அனுபவித்து ரசித்து வாழ்ந்திருக்கிறார். நாரோயில் பார்வதிபுரத்துக்காரர். தற்போது பெங்களூரில்தான் இருந்தார் என்பதையும் அறிய நேர்ந்தது. ஆனால் அறிந்த போது ரொம்ப லேட்.
அவர் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனைகள்.
கீதா
அன்பின் தேவகோட்டைஜி,
நலமுடன் இருங்கள்
நல்ல சந்தோஷமான மனிதர்.
அன்பின் கீதாமா,
எனக்கும் ஒரு தோழி சொல்லி தான் தெரியும்.
அவள் வீட்டுக்கும் கோவையில் அவர் ,புத்தகம் வெளியிடும் போது
சென்று நல்ல ரசம் சாதமாக சாப்பிட்டிருக்கிறார்.
அவளுக்கு நினைக்க நினைக்க ஆறவில்லை.
அன்பின் ஸ்ரீராம்,
''மனம் நெகிழ்ந்தேன். சிலகாலமாய் புற்று நோயால் அவதிப்பட்டு வந்தும் தன் துன்பத்தை வெளிக்காட்டாது இருந்திருக்கிறார். ""
நல்ல வேளை இந்த செய்தி எனக்குத் தெரியாது. மனம் வேதனைப் பட்டிருக்கும். அவரைப் பற்றி
எல்லோரும் நிறைய நல்ல செய்திகள் சொல்கிறார்கள்.
உடல் தானம் செய்துவிட்டாராமே.
;''
பாரதி படத்தில் பாரதியின் தந்தையாக நன்றாக நடித்து இருப்பார்.
அவரின் கட்டுரைகள் படித்து இருக்கிறேன்.
அவர் முதுமையை ரசித்து வாழ்ந்தவர்.''
பாரதி படத்தில் பாரதியின் தந்தையாக நன்றாக நடித்து இருப்பார்.
அவரின் கட்டுரைகள் படித்து இருக்கிறேன்.
அவர் முதுமையை ரசித்து வாழ்ந்தவர்.
''இளைஞராகவே இருந்ததாகத்தான் தோன்றுகிறது. வாழ்க்கையை அனுபவித்து ரசித்து வாழ்ந்திருக்கிறார். நாரோயில் பார்வதிபுரத்துக்காரர்."
அன்பின் கீதாமா,
உங்கள் ஊர்க்காரர். நெல்லை மணம் கமழ
அவர் புத்தகம் மிக சுவை.
சந்திக்கக் கொடுத்து வைத்திருக்கிறது.
சின்னவர்களுக்குப் பாட்டையா. எங்களுக்கெல்லாம் தோழர்.
இப்படித்தான் வாழ வேண்டும் என்று வாழ்ந்திருக்கிறார்.
குடும்பத்தினர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.அவரின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்தனைகள்.
Post a Comment