இந்தத் தடவை அம்மாவின் ஆப்திகமும், என் பிறந்தநாளுக்காக மல்லேஸ்வரம் லக்ஷ்மி நரசிம்மர் கோவில் திருமஞ்சனமும், காவிரி (ஶ்ரீரங்கபட்டினம்) துலா ஸ்நாநமும் விக்னமில்லாமல் நிறைவேறயது அவனருள்தான். நான் மட்டும் போகவேண்டி வந்துவிடுமோ எனக் கவலைப்பட்டேன்.
காவிரி ந்தி சலசலத்து நன்றாக ஓடுகிறது. வெள்ளம் இல்லை. மழைத்தூரல்தான். அருகிருந்த ஶ்ரீரங்கநாதர் கோவிலில் நல்ல தரிசனம். நெருக்கமாக சேவிக்க முடிந்தது. எல்லா சன்னிதிகளையும் சேவித்து, ரொம்ப நாளாக நினைத்துக்கொண்டிருந்த ஶ்ரீரங்கம் ழங்கநாதர் முதலிய படங்களையும் வாங்கினேன். பிறகு அருகில் லக்ஷ்மிநரசிம்மர்்ஆலயம், மடத்தில் காலை உணவு, பிறகு திரும்பி 2 மணிக்கு பெங்களூர் அடைந்தோம். கொரோனா காலத்துக்கு முன் ஶ்ரீரங்க காவேரியில் துலா ஸ்நாநம். அப்போது கீதா சாம்பசிவம் மேடம் ஊரில் இல்லை.
8 comments:
ஐப்பசி மாத துலா ஸ்நான மகிமைகள் கேட்டேன்.
ஒருமுறை கூட துலா ஸ்நானம் செய்ததில்லை! நான் ஆற்றில் நீராடியதே காசி, கயா சென்று வ்நதபோது கங்கை, யமுனையில் நீராடியதுதான்.
இந்தத் தடவை அம்மாவின் ஆப்திகமும், என் பிறந்தநாளுக்காக மல்லேஸ்வரம் லக்ஷ்மி நரசிம்மர் கோவில் திருமஞ்சனமும், காவிரி (ஶ்ரீரங்கபட்டினம்) துலா ஸ்நாநமும் விக்னமில்லாமல் நிறைவேறயது அவனருள்தான். நான் மட்டும் போகவேண்டி வந்துவிடுமோ எனக் கவலைப்பட்டேன்.
காவிரி ந்தி சலசலத்து நன்றாக ஓடுகிறது. வெள்ளம் இல்லை. மழைத்தூரல்தான். அருகிருந்த ஶ்ரீரங்கநாதர் கோவிலில் நல்ல தரிசனம். நெருக்கமாக சேவிக்க முடிந்தது. எல்லா சன்னிதிகளையும் சேவித்து, ரொம்ப நாளாக நினைத்துக்கொண்டிருந்த ஶ்ரீரங்கம் ழங்கநாதர் முதலிய படங்களையும் வாங்கினேன். பிறகு அருகில் லக்ஷ்மிநரசிம்மர்்ஆலயம், மடத்தில் காலை உணவு, பிறகு திரும்பி 2 மணிக்கு பெங்களூர் அடைந்தோம். கொரோனா காலத்துக்கு முன் ஶ்ரீரங்க காவேரியில் துலா ஸ்நாநம். அப்போது கீதா சாம்பசிவம் மேடம் ஊரில் இல்லை.
கடைமுழுக்கு படம் 7 வருடம் முன் போட்ட பதிவை காட்டியது முகநூல். இன்று அதை மீள் பதிவாக போட்டேன்.
உங்கள் துலா மாத சிறப்பு பதிவும் , முடவன் முழுக்கு பற்றிய காணொளி போட்டு விட்டீர்கள்.
மாயவரம் நினைவுகள் வந்து போகிறது.
பாரதி மணி அஞ்சலி என்று பார்த்தேனே என்று வந்தேன். காணோம்!
அன்பின் ஸ்ரீராம்,
தாமதமாகப் பதில் பதிகிறேன்.
நாங்கள் திருச்சியில் இருக்கும் போது
காவிரி ஸ்னானம் கிட்டியது.
பிறகு தலைக்காவிரி செல்லும்போதும் தான்.
வாய்ப்பு கிடைக்கப் பிரார்த்தனை செய்வோம்.
வேறென்ன செய்வது அப்பா.
அன்பின் முரளிமா,
நீங்கள் ஸ்ரீரங்கப் பட்டினம் போய் வந்தது மிக அருமை. ஆப்திகம் நல்ல படியாக
நிறைவேறியதும் மகிழ்ச்சி.
அம்மாவுக்கு நல்ல அமைதி கிடைத்திருக்கும்.
சில தெய்வதரிசனங்கள் சட் சட்டென்று நிறைவேறும்.
இப்படித்தான் பெரிய மகன் பங்களூரிலிருந்தபோது
ஸ்ரீரங்கப்பட்டினம், மேல் கோட்டே எல்லாம் போய் வந்தோம்.
2000 ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன். மலையேறி நரசிம்ஹரைத் தரிசித்தது
மிக மிக அதிசயம் எனக்கு.!!!
உங்களுக்கும் லக்ஷ்மி ந்ருசிம்ஹன் அருள் செய்ததே மகிழ்ச்சி.
நலமுடன் இருங்கள்.
அன்பின் கோமதிமா,
வாழ்க வளமுடன்,
மாயவரம் என்ற்தும் உங்கள் நினைவு வந்ததுமா.
முகனூலில் உங்கள் பதிவைப் படிக்கிறேன்.
எல்லாமே இணையத்தில் பார்க்க வேண்டி வந்துவிட்டது
பாருங்கள்.
நலமுடன் இருங்கள் மா.
Post a Comment