Blog Archive

Saturday, November 13, 2021

ஜகர்த்தா பெருமாள்.

15 comments:

நெல்லைத் தமிழன் said...

வெங்கடேசப் பெருமாளை, ஜகர்த்தா பெருமாள் என்று சொல்லிட்டீங்களே

மிக அருமையான பகிர்வு. பெருமாளின் தரிசனம் கிடைக்கப்பெற்றேன். மிக்க நன்றி

வல்லிசிம்ஹன் said...

:)))))).அவர் பெயரே "ஜகார்த்தா அதிபதி" தான் அன்பு முரளிமா.
பெரியவன் பிறந்த நாள். அவன் கைகர்யம் செய்யும் இடம். கடல் கடந்து வந்து கருணை
செய்யும் நம் பெருமான்.நன்றி மா. அந்த ஊர்க்காரர்களின் சிரத்தை சொல்லி முடியாது.
சஹஸ்ர நாமம் சொல்லும் அனந்தா மாமா இப்போது மைசூரில் இருக்கிறார்.
அவர்தான் மற்றவர்களுக்கெல்லாம் குரு.
அந்த பட்டாச்சாரியார் மிகமிக நல்ல ஆத்மா. 37 வயசுதான் ஆகிறது.


கோமதி அரசு said...

இன்று என் மகனுக்கும் பிறந்த நாள் அக்கா.
உங்கள் மகனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்

ஜகார்த்தா அதிபதி மிக அழகு.

கோமதி அரசு said...

சனிக்கிழமை பெருமாள் தரிசனம் நன்றி பகிர்வுக்கு.

கோமதி அரசு said...

ஊஞ்சல் தரிசனம் அருமை.சாய் பாபா இருக்கிறார்

வல்லிசிம்ஹன் said...

இன்று என் மகனுக்கும் பிறந்த நாள் அக்கா.'

அன்பின் கோமதி மா
வாழ்க வளமுடன்.
என்ன ஒரு அதிசயம் அம்மா.
செல்வனுக்கு அன்பு வாழ்த்துகள் பா. என்றும்
நலமுடன் இருக்க வேண்டும்.
உங்கள் வாழ்த்துகளுக்கு மிக நன்றி.
நம் குழந்தைகள் என்றும் நலமுடன் இருக்க வேண்டும். இறைவன் அருள்
நம்முடன்.

வல்லிசிம்ஹன் said...

ஜகார்த்தா கோயிலில் எல்லாக் கடவுளர்களும் உள்ளார்கள்.

நவக்கிரஹங்கள், சிவன், அனுமன், ஷீர்டி பாபா, முருகன்,
துர்க்கா தேவி,சிவ பார்வதி,பிள்ளையார்,ராம்,சீதா எல்லோரும்
உண்டு. எல்லோருக்கும் அர்ச்சனை செய்யலாம்.

மிக உன்னதமாக இருக்கும். அங்கே பால்வண்ணன் என்றொரு
தஞ்சாவூர்க்காரர் தேவாரம் அருமையாகப் பாடுவார்.
நல்ல தமிழ் பேசுவார்.

எப்பொழுது வேண்டுமானாலும் போகலாம். தியானம் செய்யலாம்.
சன்னிதிகள் திறந்தே இருக்கும்.

Geetha Sambasivam said...

காலை வேளையில் அருமையான தரிசனம் கொடுத்தீர்கள். மிக்க நன்றி. உங்கள் மகனுக்கும் எங்கள் பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

பெருமாளின் திவ்ய தரிசனம் கிடைக்கப் பெற்றேன். உங்கள் மகனுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.சகோதரி கோமதி அரசு அவர்களின் மகனுக்கும் இன்று பிறந்த நாள் என தெரிந்து கொண்டேன். அவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். இருவருக்கும் இன்று பிறந்த நாள் சேர்ந்து வந்திருப்பது ஆச்சரியமான ஒன்று. அனேக நலங்களுடன் இருவரும் சிறப்புடன் வாழ வெங்கடேச பெருமாளை வேண்டிக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

ஸ்ரீராம். said...

மகனுக்கு பிறந்த நாளா?  என் வாழ்த்துகளையும் சொல்லி விடுங்கள்.  ஜகார்தாவோ, திருப்பதியோ  பெருமாள் பெருமாள்தான்!  பெருமாள் தரிசனத்துக்கு நன்றி.

ஸ்ரீராம். said...

கோமதி அக்கா மகனுக்கும் எங்கள் வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,
நலமுடன் இருங்கள்.

அந்தக் கோவிலுக்கு வரும் அனைவருமே அங்கே தொண்டு
புரிவார்கள்.
பிரசாதம் செய்து கொண்டுவருவார்கள்.
எல்லோரும் இருந்து உண்டு, பேசி மகிழ்ந்து செல்வார்கள்.

நல்லதொரு கோயில்.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கமலாமா,

மிக மிக நன்றி மா.
ஆமாம் இருவருக்கும் வயதில் நிறைய வித்யாசம் இருக்கும்.

பத்து வருடங்களாவது எங்கள் மகன் பெரியவனாய் இருப்பான்.
ஏதோ கடவுள் நம்மை எப்படி எல்லாமோ
இணைக்கப் பார்க்கிறார்.
கோமதி அரசு மாதிரியே அவர் மகனும்
இனிமையானவராக இருப்பார் என்று நினைக்கிறேன்.
இறைவன் நம் குழந்தைகளை அருமையாகக் காக்க வேண்டும்.
வாழ்த்துகளுக்கு மிக மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம்,

நன்றி மா,
நலமுடன் இருங்கள்.
ஆமாம். அன்பின் கோமதியின் மகனுக்கும்
13 ஆம் தேதி பிறந்த நாள்.
எங்கள் இருவருக்கும் பல விஷயங்களில்
ஒத்துப் போகும்.
அந்த வகையில் இந்தப் பிறந்த நாளும் சேர்ந்து கொண்டதுதான்
அதிசயம்.
எல்லாப் பிள்ளைகளும் நல்ல ஆரோக்கியத்துடன்
நல் வாழ்வுடன் இருக்க வேண்டும்.

வெங்கட் நாகராஜ் said...

கோவில் காட்சிகள் பார்க்க வேண்டும் - மாலையில் பார்க்கிறேன்.