Blog Archive

Friday, November 05, 2021

மீண்டும் மீண்டும் மீண்டும் மீள் பதிவு. இது பின்னூட்டங்களுக்காக 2018

வல்லிசிம்ஹன்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

வாழ்க்கையில் எத்தனை தடவை அடி பட்டாலும்,
வாய் என்னவோ நேரம் பார்த்துப் பேசுவதில்லை.
சுற்றி இருப்பவர்களுக்குப் பிடித்த சப்ஜெக்ட் மட்டும் பேச வேண்டும்.

அவர்கள் மதிக்காதவர்களை 

உயர்த்திப் பேசக்கூடாது.

இதைவிட மௌனமாக இருக்கலாம் என்றால் அது முடிவதில்லை.
 வயதாவதில் வரும் தொந்தரவுகளில்
இதுவும் ஒன்று.


14 comments:
ஸ்ரீராம். said...
மனம் சொல்வதை மனமே கேட்காத நிலை!

8:50 PM 
வல்லிசிம்ஹன் said...
நான் சொன்னா நானே கேட்காமல் இருப்பதோ ஸ்ரீராம்.

1:52 AM 
நெல்லைத் தமிழன் said...
வல்லிசிம்ஹன் அம்மா... நான் நேரத்தை நம்புகிறவன். நமக்கு நேரம் (கோள்) சரியில்லாதபோது, நாம் நினைக்காமலேயே வார்த்தைகள் வந்துவிழுந்து நமக்கு பிரச்சனை உண்டாக்கிவிடும். சிலருக்கு அவங்களோட ராசியினால (எங்க அம்மா), மனதுல நினைத்திருக்கமாட்டார்கள் (அந்த அர்த்தத்தில்) ஆனால் பேசும்போது மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளாத அர்த்தத்தில்தான் வார்த்தைகள் வரும். நான், முக்கியமான மீட்டிங்குக்குச் செல்லும்போது நாம ஜெபம் செய்யாமல் செல்வதில்லை, முடிந்தவரை வாயைப் பொத்திக்கொண்டு இருக்க முயற்சிக்கிறேன். (ஆனாலும் கஷ்டம்தான்).

சமயத்துல நானே இதை நினைத்து சிரித்துக்கொள்வேன் (நேரம் சரியில்லாததால் வார்த்தைகளை விட்டுவிட்டதை எண்ணி, அதனால் வந்த பிரச்சனைகளையும் எண்ணி)

10:40 AM 
Geetha Sambasivam said...
ம்ம்ம் இப்போதெல்லாம் நான் பேச்சை வெகுவாய்க் குறைத்து விட்டேன். :)

2:16 PM 
வல்லிசிம்ஹன் said...
உண்மைதான் நெல்லைத்தமிழன்,
கோளும்,கிரகங்களும்,ஷஷ்டாஷ்டகம் என்றெல்லாம்
எத்தனையோ இருக்கிறதே.
கடந்த நாலு வருடங்களாக இந்தப் பாடு.
நாம் பேசும் வார்த்தைகளுக்கு ஏதோ உள் அர்த்தம் இருப்பதாக
நினைத்த்க் கொண்டுவிடுவார்கள்.
உலகத்தில் என்னைச் சரியாகப் புரிந்து கொண்டவர்களில்
அம்மா,அப்பா,தம்பிகள்,கணவர்.
நம் மனம் செல்லும் வேகம் குழந்தைகளுக்குப் புரிபடுவதில்லை.
மகன் களின் அணுகு முறையும் அப்படியே.
மாற்றாக வந்தவர்கள் நம்மைப் புரிந்து கொள்ளாவிடில்
கீதா மாதிரி பேசாமல் இருப்பதே மேல்.
உங்கள் அணுகுமுறை சிறப்பு.
ராம நாமம் காக்கும். அம்மா பாவம் மா.
அவரைப் பார்க்க ஆசையாய் இருக்கிறது.

7:17 PM 
வல்லிசிம்ஹன் said...
கீதா மா. நிஜமாவா. யாராவது என்னிடம் பேசும்போது நான் பதில் சொல்கிறேன்.
வரிந்து கட்டிக் கொண்டு தப்புக் கண்டு பிடித்தால் நான் என்ன செய்ய. ஹாஹா.

7:22 PM 
Avargal Unmaigal said...
பேசாமல் இருப்பது தவறு. பேசவேண்டும் அப்படி பேசும் போதுதான் நாம் பேசியது தவறா இல்லையா என்று தெரியவரும் அப்படி தெரியவரும் போது அது தவறாக இருந்தால் நம்மை திருத்தி கொள்ளவேண்டும்

11:56 PM 
நெல்லைத் தமிழன் said...
'அவர்கள் உண்மைகள்' - பெரும்பாலும் நாம் பேசுவதை, மற்றவர்கள் அர்த்தப்படுத்திக்கொள்வர். அதனால்தான் ரொம்ப ஜாக்கிரதையா வாய விடணும் (சொல்றது சுலபம். எனக்கும் இது வந்த பாடில்லை). நம்ம பையனை, அம்மா கண்டிக்கும்போது (தவறாப் புரிஞ்சு கண்டிக்கலாம், அல்லது அது பெரிய தவறா இல்லாமலிருக்கலாம்), நாம் தனியாக அம்மாவிடம் விளக்கலாம், இல்லைனா, பெரியவங்க, அவங்க சொன்னா அதுனால என்ன ஆகிடப்போறது, அவங்களுக்கு இல்லாத உரிமையா என்று விட்டுவிடலாம். இல்லைனா பையன் முன்னாலயே, நம்ம அம்மாட்ட, 'உன் வேலையைப் பார்த்துக்கிட்டிரு, ஏன் அவனை எப்போ பார்த்தாலும் கண்டிக்கற' என்றும் சொல்லலாம். ஒரே செயல், எந்த மாதிரி விளைவை ஏற்படுத்துது என்று நினைத்துத்தான் பேசவேண்டியிருக்கிறது.

2:02 PM 
வல்லிசிம்ஹன் said...
அன்பு நெல்லைத்தமிழன்,

அங்கே தான் வம்பே ஆரம்பிக்கிறது.
என் பாட்டி அம்மா வழிப் பாட்டி,
என்னிடம் மிகப் பிரியம். இருந்தாலும்
சுருக்கென்ற வார்த்தைகள் விழும். நம் நல்லதுக்கு சொல்வதாக என்னால் அப்போது எடுத்துக் கொள்ள முடியவில்லை.
இப்போது இங்கே மகள் வெகு சாமர்த்தியமாகப் பையனைக் கையாண்டாலும்,
என்னால் சகித்துக் கொள்ள முடிவதில்லை.
இந்தப் பொண்ணு சிரமப் படுகிறதே.
அவள் சொல்வதைக் காதில் வாங்காமல் தன்போக்குக்கு வேலை செய்கிறதேன்னு கவலை.
சொன்னால் எனக்குத்தான் நஷ்டம்.
பாட்டி சொல்லிட்டான்னு பசங்க வருத்தப்படும்னு அவள் என் மேலேயே
சொல்வாள். பேசாமல் இருக்கலாம். இது அவள் குடும்பம்னு விட வேண்டியதுதான்.
நடுவில் இருப்பவர்கள் பாடு திண்டாட்டம் தான்.

6:07 PM 
Geetha Sambasivam said...
//இல்லைனா பையன் முன்னாலயே, நம்ம அம்மாட்ட, 'உன் வேலையைப் பார்த்துக்கிட்டிரு, ஏன் அவனை எப்போ பார்த்தாலும் கண்டிக்கற' என்றும் சொல்லலாம்.// இங்கே நான் கொஞ்சம் மாறுபடுகிறேன், நம்ம குழந்தை தப்பு செய்து விட்டால் அம்மா கண்டிக்கையில் தலையிடாமல் இருப்பதே நல்லது! என்னைப் பொறுத்தவரை, அப்போக் குழந்தைகளிடம், " உன் நல்லதுக்குத் தானே சொல்றாங்க! பாட்டி தானே!" என்று சொல்லி முடித்திருக்கேன். ஆனால் அதையும் சொல்லக் கூடாது என்பார்கள்.

அதே சமயம் என்னுடைய மைத்துனர்கள், கடைசி நாத்தனார் (எல்லோருமே என்னை விடச் சிறியவர்கள் தான்) தப்பு செய்து விட்டு அப்போ நான் இப்படிச் செய்யலாமா என்று கேட்டாலே எல்லோருமே கோபப்படுவார்கள். அதிலும் அவங்க செய்வது என் குழந்தைகளையோ, என்னையோ எங்களோட பேச்சு, வேலைகளைப் பார்த்துக் கிண்டல் செய்வது! அதைத் தான் கேட்டிருப்பேன்! அப்படியும் என்னோட மாமனார், மாமியார் "உன் வேலையைப் பார்த்துக் கொண்டு போ! அவங்களுக்கு எது தப்பு, எது சரினு சொல்லித் தர அளவுக்கு நீ பெரியவளா? இல்லை கெட்டிக்காரியா?" என்பார்கள். இன்று வரை அப்படித் தான் நடக்கிறது! ஆகவே தான் நான் பெரும்பாலும் பேச்சைக் குறைத்துக் கொண்டு விட்டதோடு அபிப்பிராயம் கேட்டால் கூடச் சொல்லுவதில்லை! அப்படியா என்று கேட்டுவிட்டு நகர்ந்து விடுவேன்! :))))))) மற்றபடி எங்கள் குழந்தைகள் இருவரின் குடும்ப விவகாரங்களிலும் எங்கள் இருவருக்குமே காது கேட்காது, வாய் பேசாது! கண் தெரியாது!

6:14 AM 
வல்லிசிம்ஹன் said...
Geetha, the same with our family.Thank you .

6:46 AM 
Thulasidharan V Thillaiakathu said...
துளசி : அம்மா பல சமயங்களில் நாம நம்ம கருத்தைச் சொல்ல முடியாமல் போகிறதுதான்...பார்த்துத்தான் பேச வேண்டியுள்ள்து இருந்தாலும் சில சமயங்களில் நம் வார்த்தைகள் தவறாக அர்த்தம் கொள்ளப்பட்டுவிடுகிறது...நேரம் என்று எடுத்துக் கொண்டு நாக்கில் சனி என்றும் சொல்லிக் கொண்டு கடக்க வேண்டியதாக மனம் வருந்தும் சூழலும் ஏற்படுகிறது.

கீதா : வல்லிம்மா இடம் பொருள் ஏவல் என்று சொல்லுற மாதிரி பார்த்துத்தான் பேசணுமா இருக்கு. அதுவும் நாம நல்லதுனு யாருக்காவது சொல்லப் போக அந்த நல்லதும் கூடத் தப்பாகிவிடுகிறது. ஸோ மௌனம் நல்லது என்று சென்றுவிடுகிறேன் நான் பல சமயங்களில் முடிந்தால் அழகாகச் சொல்ல முடிந்தால் சொல்லுகிறேன் இல்லையா கப்சிப்பென்று போய்விடுகிறேன். அதுவும் வீட்டில் பெரும்பாலும் மௌனம் தான்...சாதாரணமாகக் கூடப் பேச முடியாமல் போகிறது. அத்னால் மௌனமே...மகனுடன் நிறைய பேசுவேன்...அவனுக்கு நேரம் இருக்கும் போது அவனும் பேசுவான்...

அவர்கள் மதிக்காதவர்களை உயர்த்திப் பேசக்கூடாது.// இது ரொம்பவே உண்மை எனக்கும் இந்த அனுபவம் உண்டு. நாம் எல்லோரையுமே அவர்களது ப்ளஸ் பாயின்ட்ஸ் எடுத்துச் சொல்லும் பழக்கம் வைத்துக் கொண்டால்...நான் சொல்லும் போது அவர்களைப் பற்றி நெகட்டிவாகச் சொல்ல வீட்டில் உள்ளனர். அதுவும் நாம் யாரையுமே உயர்வாகச் சொல்லமுடியாமலும் போவதுண்டு. வல்லிம்மா இது அவர்களின் ஈகோவைத்தான் காட்டுகிறது. எனவே நம்மீது தவறு இல்லையே நாம் நல்லதுதானே சொல்கிறோம் இல்லையா அப்படி நினைத்துக் கொண்டு சென்றுவிடலாம்..

9:54 AM 
Thulasidharan V Thillaiakathu said...
கீதாக்கா உங்களின் நெல்லைக்கான பதிலை அப்ப்டியெ வழி மொழிகிறேன்....ஒன்றே ஒன்றைத் தவிர...மைத்துனர், நாத்தனார் அவர்கள் சொல்லுவதற்குக் கூட நான் பதில் சொன்னதில்லை. என் மகனையே சொன்னதற்கும் வாய் மௌனமாக வந்துவிடுவதுண்டு....ஏனென்றால் பல இடங்களில் நாம் பேசிப் பயனில்லை. அவர்கள் அவ்வளவுதான்,,,பகவானே அவர்களுக்கு நல்ல சிந்தனைகளைக் கொடுனு சொல்லிக் கடந்துவிடுவதுண்டு. இத்தனைக்கும் என் பிறந்த வீட்டில் பாயின்ட் பேசி சட்டம்பி என்ற பெயரும் என் அம்மாவின் அம்மா என்னை அப்படி அழைப்பார்கள். ஆனால் அதன் பின் இதுவரை எத்தனையோ நடந்தாலும் பல சமயங்களில் மௌனமே!!

வல்லிம்மா வீட்டுக்கு வீடு வாசற்படி ஹா ஹா ஹா ஹா...பின்ன மனுஷங்கனு இருந்தா இப்படித்தானே...இது உலகம் முழுக்கப் பொருந்தும்!!

கீதா

10:00 AM 
வல்லிசிம்ஹன் said...
அன்பு கீதா,
பிறந்தகத்தில் சட்டாம்பிள்ளை
புகுந்த அகத்தில் சுண்டெலி.
எத்தனை மன வருத்தங்கள். அதைஎல்லாம் எழுதிக் கட்டுப் பிடியாகாது.
ஆமாம் மௌனம் ஒன்றே வழி.
இப்பொழுது ஒருவருக்கும் சந்தர்ப்பம் கொடுக்காமல் ஓடியாச்சு.
அதே மனிதர்களுக்கு வயதாகி விட்டது. என் குழந்தைகளுக்கும் வயதாகி விட்டது.
பெருமூச்சுதான் விடுகிறேன்.

8 comments:

நெல்லைத் தமிழன் said...

எனக்கு ஒரு மாமா இருந்தார். மத்தவங்க எல்லாம் சாப்பிடணும் என்று ரொம்ப கண்டிப்பா இருப்பார். என்ன கேட்டாலும் சாப்பிட வித விதமாகத் தருவார். ஆனால் அவர் வாயில் சனி. ரொம்ப கிண்டலாகவும் கோபமாகவும் பேசும் குணம் உள்ளவர். சாப்பாட்டில் ஒரு துளி தட்டில் வைத்தாலும் திட்டுவார். அவருடைய கோபமான குணம்தான் அவரைப் பற்றி நல்ல அபிப்ராயத்தை எனக்கு உண்டாக்கவே இல்லை. ஆனால் நிச்சயம் மனதளவில் அவர் நல்லவர்தான், அது பலருக்குத் தெரியாமலேயே போய்விட்டது.

கோமதி அரசு said...

//சுற்றி இருப்பவர்களுக்குப் பிடித்த சப்ஜெக்ட் மட்டும் பேச வேண்டும்.//

உண்மை அக்கா. நாம் நிறைய கற்றுக் கொண்டு இருக்கிறோம். மற்றவர்கள் சொல்வதை காது கொடுத்து கேட்கும் ஆளாக மட்டும் இருக்க வேண்டி உள்ளது.

நாம் பேசுவதை உள் அர்த்தம் எடுத்துக் கொள்வதை ஒன்றும் செய்ய முடியாது அக்கா. அனுமன் மாதிரி நெஞ்சை திறந்து காட்ட முடியாது.

சில நேரங்களில் மெளனம் நல்லது. கோபத்தில் ஏதாவது பேசி அது மேலும் பல சிக்கலை கொண்டு வந்து விடும்.

வயதானால் கிருஷ்ணா, ராமா, சிவ சிவா என்று இருக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள் போலும்.

பின்னூட்டங்கள் எல்லாம் அருமை.




ஸ்ரீராம். said...

பின்னூட்டங்களுக்காகவே மீள் பதிவா?  சென்ற வருடம் நான் கூட இப்படி ஒன்றை யோசித்தேன்.  நேரம் வாய்க்கவில்லை!

ஸ்ரீராம். said...

மற்றவர்களுக்குப் பிடித்ததை மட்டுமே பேசவேண்டுமென்றால் நாம் எப்போதுதான் நம் மனதை மதிக்க?  பேச்சு சரி இல்லை என்றால் நம் நல்ல குணங்களும் அடிபட்டுப் போகின்றன!

நெல்லைத்தமிழன் said...

நீங்க மிக உபயோகமானதை மீள் பதிவு செய்திருக்கீங்க.

கீதா சாம்பசிவம் மேடம் சொல்லிய, "என் மகன் மகள் குடும்ப விவகாரங்களில் எங்களுக்கு கண் தெரியாது வாய் பேசாது காது கேட்காது". என்ற attitude சுலபமாக வரக்கூடியதல்ல. வந்துவிட்டால் அதைப்போன்ற இன்பம் வேறு இல்லை (எல்லாச் சங்கடங்களையும் தவிர்த்துவிடுகிறோமே)

என் அம்மா, என் பசங்க அவங்களுக்குள் (சின்னப் பசங்க) இங்கிலீஷில் பேசிச் சிரித்துக்கொள்வதை, பஹ்ரைன் வந்தபோது தன்னைக் கேலி செய்வதாக எண்ணி என்னுடம் புகார் சொன்னார். தீர விசாரிக்காமல் பாவம் செய்யவேண்டியதாயிற்று. என் பசங்க அவல்களுக்குள், 'ஒண்ணுமில்லாத்தைப் பேசிக்கொண்டு சிரிப்பார்கள். சிரிப்பும் புளிப்பும் சிலகாலம் என்று எப்போதும் சொல்லித்தந்த என் அம்மாவுக்கே அப்போது தெரியவில்லை. மனைவி இன்னொசென்டாகச் சொல்வதற்கும் கோப்ப்பட்டிருக்கிறேன்.

இப்பவே நான் பற்றற்ற வாழ்க்கையை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்திருக்கிறேன். அதுதான் பிற்காலத்தில் எனக்கு உபயோகமாக இருக்கும் என நினைக்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் அனைவருக்கும்,
மிக மிக நன்றி.

பெரியவர்கள் கடும் சொற்கள் சொல்லும்போது
வருந்தி இருக்கிறேன். அவர்களின் ஆளுமை கீழ் இருந்ததால்
சகித்துக் கொண்டு போக வேண்டியதாயிற்று.

இப்பொழுது நான் என்ன சொல்வதானாலும், இல்லாவிட்டால் சொல்லாமல் இருந்தாலும் தவறாகப் போகிறது.

குழந்தைகளைச் சமாளிக்கலாம். அவர்களின் பெற்றோரை
சமாளிப்பது இன்னும் சிரமம் ஆகிறது.

தொண்டை வறண்ட சமயங்களில் பேச்சும் எழும்புவதில்லை.

இப்பொழுது தான் என் தந்தை ஏன் பேசாமல்
இருந்தார் என்று புரிகிறது.
ஏன் என் மாமியார் எப்பொழுதும் சஹஸ்ர நாமம் மட்டுமே
சொல்லிக் கொண்டிருந்தார் என்பதும்
தெரிகிறது.

நாம் யாருக்கும் எப்போதும் தீங்கு விளைக்கவில்லை.
தீங்கு நினைக்கவில்லை.
எத்தனையோ திருக்குறள் ,நீதி உரை கேட்டு வளர்ந்த நாம்
மற்றவர்களிடம் எவ்விதம் deal செய்வது என்பதை
இந்த 73 வயதிலும் கற்கவில்லை என்பது மஹா பெரிய வருத்தம்.

இது நம்மிடம் நட்பாக இருப்பவர்களுக்கும் பொருந்தும்.

சர்வ எச்சரிக்கையாக இருந்து மீள வேண்டும்.
ஆமாம் என்ன சாதிக்கப் போகிறோம்? இப்படி இருந்து?

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதிமா,
அன்பின் ஸ்ரீராம்,
அன்பின் நெல்லைத் தமிழன்
எல்லோருக்கும் நன்றி.

Geetha Sambasivam said...

நாம் ஒதுங்கிப் போனாலும் பிரச்னைகள் தொடர்ந்து வருகின்றனவே! அதற்கு என்ன செய்வது? ஆனால் பிள்ளை/பெண் குடும்ப விஷயங்களில் அவங்க குழந்தைகளை வளர்க்கும் விதங்களில் நாங்கள் இருவருமே மூக்கை நுழைக்க மாட்டோம். கண்டுக்கவே மாட்டோம். சுத்தமாக எந்த விஷயமும் எங்களுக்குச் சம்பந்தமே இல்லை என்பது போல் நடந்துப்போம். அவங்க குடும்பம். அவங்க பார்த்துக்கட்டும். அதுவே எங்கள் கருத்து. என்றாலும் மற்றவர்களிடம் பிரச்னைகள் வருவதைப் பல சமயங்களிலும் தவிர்க்க முடிவதில்லை. கூடியவரை பதில் சொல்லாமல் ஒதுங்கி விடுவேன்.