Blog Archive

Tuesday, October 26, 2021

சிவாஜி பானுமதி



15 comments:

Geetha Sambasivam said...

நன்றாக ரசித்துப் பார்த்தேன். பானுமதி, சிவாஜி நடித்த அறிவாளி படம் தான் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அது வடுவூர் துரைசாமி ஐயங்காரின் கதை என்பார்கள். அதில் தங்கவேலு/அங்கமுத்து காமெடியும் பிரபலமாச்சே! இவையும் நன்றாக இருக்கிறது.பானுமதி சகலகலாவல்லி/ அதோடு துணிச்சலும் மிகுந்தவர். சுயமாக முடிவெடுப்பவர். அருமையான எழுத்தாளர். இவரோட அத்தையம்மா தொடர் முழுவதும் படித்து ரசித்திருக்கேன்.

ஸ்ரீராம். said...

மூன்று படக்காட்சிகளுமே சிறப்பு.  நான் தங்கப்பதக்கத்திலேயே தங்கி விட்டேன்.

வெங்கட் நாகராஜ் said...

சிவாஜி - பானுமதி ஜோடி! காணொளிகள் பிறகு தான் பார்க்க வேண்டும்மா.... முடிந்தால் மாலை காண்பேன்.

திண்டுக்கல் தனபாலன் said...

வீரமான அருமையான பானுமதி அம்மா...

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,
ரசித்துப் பார்த்ததுக்கு ரொம்ப நன்றி.

எனக்கும் அறிவாளி மிகவும் பிடிக்கும்.
அதில் தங்கவேலு,முத்துலக்ஷ்மி 'அதான் எனக்குத் தெரியுமே' குடும்ப ஜோக்:)

பானுமதி மாதிரி ஆளுமை இனிமேல்
வராது. எல்லோருமே அவரைப் பார்த்து

பதுங்குவார்களாமே.!!! அஷ்டாவதானி'ந்னு சொல்லலாம்.
அத்தையம்மா கதைகளைக் குமுதத்தில் படித்திருக்கிறேன்.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம்,
தங்கப் பதக்கம் தங்கும் பதக்கம்.
நீங்கள் அதை விட்டு வெளியே வரமுடியாதது
அதிசயமே இல்லை.

தங்கப் பதக்கம் நாடகமாக வந்த போது

பார்த்திருக்கிறேன்.
அத்தனை உணர்ச்சி காட்டி நடித்திருப்பார்
சிவாஜி.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் வெங்கட்,
நன்றி மா. மெதுவாகப் பாருங்கள். நான் கண்ணில் பட்டதைப்
பதிந்து விடுகிறேன்.
அவசரம் இல்லை.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் தனபாலன்,

மிக மிக நன்றி மா. பானுமதி அற்புதமான நடிகை.

கோமதி அரசு said...

சிவாஜியும், பானுமதியும் நடித்த படங்கள் எல்லாம் மிக அருமையாக இருக்கும்.

பானுமதி சகலகலாவல்லி. அவர் நடித்த அன்னை, அறிவாளிபிடிக்கும். நீங்கள் பகிர்ந்த மக்களைப்பெற்ற மகராசி பிடித்த படம். பாடல்கள் எல்லாம் மிக அருமையாக இருக்கும்.

ஸ்ரீகாந்த் நடித்த படம் பகிர்வும் அருமை. அவர் இப்போது மறைந்து விட்டார்.

நெல்லைத்தமிழன் said...

பானுமதி அவர்களின் கதை படித்திருக்கிறேன்.

அந்த ஆளுமைக்கு, கோபம் உள்ள பெண்ணுக்கு, எப்படி காதல் வந்தது, கணவன் சொன்ன சொல்லை மீறாமலேயே வாழும் குணம் எப்படி வந்து... ஆச்சர்யம்தான்

நெல்லைத்தமிழன் said...

சிவாஜி தங்கப் பதக்கம் ஓவர் ஆக்டிங்னு சொல்வார்கள்.

சமீபத்துல பழைய சூப்பர் சிங்கர் எபிசோடில் ஒரு பெண், எப்படி காவல்துறையில் இருக்கும் அப்பா வீட்டில் அதே நினைப்போடு ஸ்டிரிக்டாக இருக்கிறார் எனச் சொன்னார். ஒரு எபிசோடில் அவரையும் மேடை ஏற்றினார்கள். டிபார்ட்மென்ட்தான் முக்கியம் என்பதால் அதன் நினைவு, வேலையிலேயே இருப்பேன் எனச் சொன்னார்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் Gomathima.வாழ்க வளமுடன்..அன்னை படம் அண்மையில் கூடப் பார்த்து ரசித்தேன்.பானுமதியுடன் நடிப்பவர்கள் அவர் திறனுக்கு ஈடு கொடுக்க சிரமப் படுவார்கள் என்றும் சொல்வார்கள். நடிகர் ஶ்ரீகாந்த் மறைவை ஒட்டியே அவர் காட்சியைப் பதிந்தேன்.நல்ல பெயர் வாங்கிக் கொடுத்த படம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் முரளி மா.பானுமதி கணவரை மிக மதித்ததால் தான் அந்தத் திருமணம் நிலைத்தது.:) எல்லோருமே வியக்கும் விதமாகக் கொலு வைப்பார்.அவரைப் பற்றி நேர் கானல்கள் வித்தியாசமாக இருக்கின்றன..

வல்லிசிம்ஹன் said...
This comment has been removed by the author.
வல்லிசிம்ஹன் said...

அன்பின் முரளிமா,
தங்கப் பதக்கம் மிகச் சிறப்பான, கதை,இயக்கம், வசனம்
என்று எல்லா விதத்திலும் வெற்றி பெற்றது. இந்தப் படத்தின் முழுப் பளுவையும் தாங்கி
நடித்திருப்பார்.

அவர் மகன் பிரபு ஒரு நேர்காணலில் தன் தந்தையின் கருத்து எல்லா நிகழ்ச்சிகளையும்
உள்வாங்கிக் கொண்டே இருக்கும் என்று சொல்வதைப்
பார்த்தேன்.

கௌரவம் படத்தில் அவருடைய மேக் அப், மானரிசம்
எல்லாம், டிவிஎஸ் அதிபர் திரு டி எஸ் கிருஷ்ணா அவர்களை ஒத்திருக்கும் என்று
அப்பொழுது சொன்னார்கள்.
மகத்தான நடிகன்.
அதில் சந்தேகமே இல்லை.
மிக நன்றி மா.