வல்லிசிம்ஹன்
Monday, June 25, 2007
ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி......3
முன் குறிப்பு...இந்தக் கதைக்கு ஆரம்பம் இரண்டு பகுதிகளாப் போட்டாச்சு. ரீட்டானு போடறது பக்கத்தில இருக்கிற குரங்கு அம்மா பேரு.
இப்ப என்ன செய்யறது. ரீட்டாவுக்கும்
எனக்கும் ரிலீஃப் வேணும்.
சாயங்கால சாப்பாடு செய்யணும்.சிங்கமும் வீட்டுக்கு வராது.
பக்கத்து ஸ்கூட்டர் ரிப்பேர் கடை கூடச் சாத்தியாச்சு.யாரை உதவிக்குக் கூப்பிடறது... என்று யோசித்தபடியே இருந்தபோதுதான் அந்தக் கதவு கண்ணில் பட்டது. வந்த ஒரு மாதமாத் திறந்து கூடப் பார்க்கவில்லை.
அந்தக் கதவுக்கு அந்தப் பக்கம் வீட்டுச் சொந்தக்காரர்களோட இடம் என்று தெரியும்.
சொந்தக்காரர்கள் சிங்கப்பூரிலோ மலேஷியாவிலோ இருந்தார்கள்.
எப்படியாவது கீழே போய்த் திருமேனியை அழைத்து இந்த ரீட்டாவைப் பிடித்துக் கட்ட வேண்டும்.
கதவு பூட்டாமல்தான் இருந்தது.தாழ்ப்பாள் விலக்கியதும் இருளோ இருள்.
டார்ச்சை எடுத்துக் கொண்டு கிழவியையும் ,திருமேனியையும் அழைத்தபடிக்
கீழே இறங்கினேன்.
பூட்டின வீட்டுக்குள் அவர்கள் எப்படி வருவார்கள் என்ற நினப்பில்லாமல்,
நான் போட்ட கூச்சலில் பக்கத்து வீட்டு ஆச்சி பயந்து,
திருடன் டார்ச் லைட் அடிக்கிறான்னு கத்த,
நிஜமாகத் திருடன் வந்துட்டானாக்கும் என்று நான் மீண்டும் மாடிக்கு ஓட,
இந்தக் கூத்தில் ரீட்டாவும் பயந்து கயிற்றை அறுத்துக் கொண்டு(கயிறா அது..,வெறும் நூல்)
இருந்த ஒரே சோஃபாவில் அது தாவி உட்கார்ந்து கொண்டது.:)))))))))))))))))))))))
இப்போது சொல்லுங்கள் கோபம் வருமா வராதா.
இத்தனை சப்தம் ஆன பிறகு பக்கத்துவீட்டுப் பையன் மாடிப்படிகளிலிருந்து
ஒரு மாதிரி கத்தல் போட்டு மரக்கிளையைக் கையில் வைத்து அசைத்தான்.
தலையைத் திருப்பிப் பார்த்து ரீட்டா தன் இனத்தைச் சேர்ந்தவன் நினைத்தொ என்னவோ மொட்டைமாடியை நோக்கி ஓடவும்
நான் வாசல் கதவை அடைத்தேன்.
எட்டு மணிக்கு ஆஸ்வாசப் படுத்திக்கொண்டு பிறகு சமைத்துப்
படுக்க 10 மணியானது.
இதன் எதிரொலி அடுத்த நாள் நாம் முன்பே பார்த்த சினம் தணியாத புராணம்.
சிங்கத்துக்கு ரீட்டா புராணத்தைச் சொல்லலாம் என்றால் ,அவர் வேறு ஞாபகத்தில் புத்தகம் படிக்க உட்கார்ந்துவிட்டார்.
அதன்பலன் நான் பட்டினி.
அடுத்த நாள் வயிற்றுவலி.
மருத்துவர் விசிட். அப்புறம் தலைதீபாவளிக்கு மறுநாள்,மதுரையில் முதல் பையன் பிறந்தாச்சு.
சுபம்.
கூடவே தொடர்ந்து படித்தவர்களுக்கு மிக நன்றி.
மேலே இருக்கும் முதல் பாடல் சிங்கம்
அடிக்கடி பாடுவது:)
கீழே நான் அடிக்கடி பாடுவது:)
21 comments:
வீடியோ வரவில்லை என்றால் யூடியூப்
பக்கம் போய்த்தான் பார்க்க வேண்டும்.
முதல் பாடல் யூடியூப் போய் கேட்டு விட்டேன்.
நானும் நீங்கள் பாடைய பாடலை பாடி இருக்கிறேன்.
பதிவை நகைச்சுவையாக பகிர்ந்து கொண்டாலும் மனதில் அப்போது வருத்தம் இருந்து இருக்கும் இல்லையா?
திருமணம் ஆன புதுதி என்றால் எதிர்பார்ப்புகள் அதிகம் இருக்கும் .
உங்களுக்கு சார் வேலை வேலை என்று இருந்தார்கள். இவர்கள் கல்யாணம் செய்து கொண்டு படித்துக் கொண்டே இருந்தார்கள்.
எம். ஏ தான் படித்து இருந்தார்கள் என்னை கல்யாணம் செய்து கொள்ளும் முன். அப்புறம் எம்.பில், பி.எச்டி என்று படித்தார்கள். அப்புறம், மொழியியல் என்று படித்தார்கள். முனைவர், எம்.பில் படிக்க அடிக்கடி தஞ்சாவூர், சென்னை போவார்கள் அவர்கள் கைடை பார்க்க. சென்னை , காரைக்குடி எல்லாம் நூலகத்தில் குறிப்புகள் எடுக்க போவார்கள். வயதானபின்னும் படிப்பு குறையவில்லை கணினி படித்தார்கள்.
கல்லூரியில் ஆசிரியர் போராட்டங்களில் கலந்து கொள்வார்கள் சங்கத்தில் உயர் பதவியில் இருந்தார்கள்.
படிப்பு, வேலை என்று எப்போதும் பிஸிதான்.
அதனால் நானும் என்னை பிஸியாக வைத்துக் கொண்டு எதிர்பார்ப்புகளை குறைத்து கொண்டேன்.
அன்பின் கோமதிமா,
வாழ்க வளமுடன்.
என்ன செய்யலாம் அம்மா:(
அவர்கள் வயதும மனமும் முன்னேறுவதில் இருந்தது.
நமகும் எதிர்த்துப் பேசத் தெரியாது. இவர் அப்போது காற்றில் ஓடக் கூடிய. எஞ்சினைத் தயாரிக்க ஆயத்தம்
ஆகிக் கொண்டிருந்தார். முதல் இரண்டு வாரங்களில் அவரின் ஆர்வம் புரிந்தது.
உங்களை மாதிரி தான் யாராவது ஒருவர் இறங்கி வரவேண்டும்:)
திருமணத்தில் அன்பிறகுக் குறைவே இல்லை. அதைக் காட்டிக் கொள்ள நிறைய நேரம் கிடைக்கவில்லை.
நானும் படித்தேன் எதற்கும் தடை சொல்ல மாட்டார்.செலவழிக்க அஞ்ச மாட்டார்.
திருமணமான புதிதில் எல்லா எதிர்பார்பபுகளும் நிறெவேறுவது இலை. சிவசங்கரி
நாவலில் மட்டுமேஅது நடக்கும்!
குழந்தைகள் வந்த பிறகு அதுவே பெரிய விஷயமானது. சார். படித்ததைக கேடக அதிசயமாக இருக்கிறது!
நம்பிறந்த இடங்களில். கூடிக கொண்டாடுவதே. வழக்கம் . எனக்கும் நிறையப் பேசவேண்டும்:) அவருக்கு. அவ்வளவு.
பேச வேண்டாம்!
எல்லாம் தானே வாழ்க்கை. …. :)
நடந்த பல நல் செய்திகளை நினைக்க வேண்டியது தான்.
பல விஷயங்களில் நம் வாழ்ககை. ஒத்துப் போகிறது. அதனால் தான் புரிகிறது. நான் அதிகம் எழுதுகிறேன். யாரும் கம்ப்ளெயின் செய்ய மாட்டார்கள்.
உங்கள் நட்பு கிடைத்ததே பாக்யம் அம்மா.
வணக்கம் சகோதரி
பதிவு அருமை. நினைவுகளை நகைச்சுவையாக பகிர்ந்து இருக்கிறீர்கள். இறுதியில் அந்த குரங்கு குட்டி ஒருவழியாக அதன் வாழ்விடத்தை நோக்கி பயணித்து அப்போதைய தங்கள் சிரமத்தை குறைத்து விட்டது.நல்லவேளை...
வாழ்க்கையில் இணையும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விருப்பங்கள்.என் கணவருக்கும் வேலைதான் முதல் மனைவி. பரஸ்பர அன்பு,அக்கறை கவனிப்பு, புரிதல் என்று இருந்தாலும் ரசனைகள் வேறு வேறாக அமைந்து விடுகிறது. நீங்கள் சொல்வது போல், கதைகளிலும், சினிமாவிலும் இருவருக்கும் ஒரே ரசனைகள் இருப்பதாக படிக்கலாம்/பார்க்கலாம்.உலக வாழ்விலும் சிலருக்கும்/பலருக்கும் அது போல் அமையலாம். ஆனால், எல்லோருக்கும் அது கிட்டுவதில்லை. பொதுவாக திருமணமான புதிதில் நிறைய கற்பனைகளுடன்தான் வாழ புகுந்த வீடு வருகிறோம்.ஆனால் பிறந்த வீட்டின் வளர்ப்பு முறைகள் எல்லாவற்றையும் அனுசரித்து போக துணை புரிந்து விடுகிறது.என்ன செய்வது? குழந்தைகள் பிறந்ததும்,அவர்களுடன் நாமும் ஒரு குழந்தைகளாக மாறி வளர/வளர்க்க ஆரம்பித்து விடுகிறோம். அதில் நம் மனதின் ரசனைகளும் மறைந்து மாறிச் செல்ல ஆரம்பித்து விடுகிறது. நமக்கென்று விதித்திருப்பதைதானே அந்த ஆண்டவனும் அருளுவான்.
உங்கள் பதிவில் என் நினைவுகளும் நிறையவே மலருகின்றன. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
இதன் எதிரொலி அடுத்த நாள் நாம் முன்பே பார்த்த சினம் தணியாத புராணம்.//
இப்போ புரிந்துவிட்டது எதிரொலி!!! ஹாஹா
ஆமாம் அம்மா சிலர் கோபத்தை சாப்பாட்டில் காட்டுவார்கள். நான் என்ன வருத்தம் கோபம் வந்தாலும் வயிற்றைக் கவனித்துவிடுவேன்!!!!
கல்யாணம் ஆன புதிது இல்லையா அதுவும் அந்தக் காலம் எல்லாம் புரிந்து கொள்ள முடிகிறது அம்மா.
அப்போதைய அனுபவத்தைப் பின்னால் நினைத்துப் பார்க்கறப்ப சிரிப்பு வரலாம் ஆனால் அந்தத் தருணங்கள் அதுவும் உங்க வயசு ரொம்பச் சின்ன வயது இல்லையா...ஸோ எப்படி இருந்திருக்கும் என்று தெரிகிறது. புரிகிறது. அதை இப்ப நகைச்சுவையா சொல்ல முடியும் ஆனால் அப்போது கண்டிப்பாக..மனசு கோபம் வருத்தம் எல்லாம் கலந்து கட்டி இருந்திருக்கும்.
சரி அப்பா ஊரிலிருந்து வந்ததும் ரீட்டா பத்தி எதுவும் கேட்கலையா?
எப்படியோ அந்தப் பையன் மரத்தை அசைக்க...இது ஓடியதே...
கீதா
ஆங்கிலப் படக் காட்சி, அல்லது திகில் படக்காட்சி போல திறக்காத கதவு, திறந்தால் இருள்... சுவாரஸ்யம். ஆனாலும் துணிச்சல்தான் உங்களுக்கு! அப்புரம் இதை எல்லாம் அவரிடம் எப்போதுதான் சொன்னீர்கள்?!!
சிங்கத்துக்கு கிஷோர் பாடல்கள்தான் பிடிக்குமா? ஜவாப் நஹிதான்! சொல்லத்தான் நினைக்கிறேன் என்று இதையெல்லாம் எப்போதுதான் அவரிடம் சொன்னேனெர்கள் என்றும் சொல்லுங்கள்!!
கோமதி அக்கா... ஸார் பற்றி நீங்கள் சொல்லி இருப்பது பிரமிப்பைதான் தருகிறது. எவ்வளவு படித்திருக்கிறார்.. என்ன சுவாரஸ்யம் படிப்பில் அவருக்கு... ஆனால் நீங்களும் பாவம்தான். போர் அடித்திருக்கும்.
திருமணமான புதிதில் எல்லா எதிர்பார்பபுகளும் நிறெவேறுவது இலை. சிவசங்கரி
நாவலில் மட்டுமேஅது நடக்கும்!//
ஹாஹாஹாஹா...
கீதா
வீடியோ வரலைனு எழுத நினைச்சேன். உங்க முதல் கமென்டே யூ ட்யூபில் போய்ப் பார்க்கச் சொல்லிவிட்டது! :)))) அருமையான சம்பவங்கள். திகில் வேறே அதில். உங்களுக்குச் சின்ன வயசில் இப்படி நடந்திருக்கு என்பதால் நிச்சயம் பயம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா இருந்திருக்கும். நினைச்சாலே பயமாத் தானே இருக்கு. இப்போக்கூட 4 வருஷங்கள் முன்னர் எங்க குடியிருப்பு வளாகத்தில் எங்க படுக்கை அறை ஜன்னலைத் திறந்து கொண்டு குரங்கார் வந்துட்டார். நான் அலறின அலறலில் பயந்து அதுவே ஓடிப் போச்சு! :))))
ஹா...ஹா...ரசனையாக சொல்லி சென்றுள்ளீர்கள். ஆனால் அந்நேரம் உங்கள் மனம்......எப்படி ஆடி இருக்கும் என்பது தெரிகிறது.
திருமணமானதும் எதிர்பார்புகள்...
வேலைக்கு செல்லாத பெண்வேண்டும் தன்னையும் குழந்தைகளையும் கவனித்தால் சரி என்று நினைக்கும் கணவர் எனது அப்பாவும் அதே கொள்கை. இதை புரிந்து நான் . சென்றது வாழ்க்கை மகிழ்வுடன்தான்.
குழந்தைகள் வளர்ந்த பின் தனியார் நிறுவனம் என்பதால் என்னையும் தனக்கு உதவியாக அழைத்துக் கொண்டார்.:) இப்போதும் வீட்டு வேலை,பேரனை கவனிப்பதுடன் அங்கும் கவனித்துக்கொள்கிறேன். :) மொத்தத்தில் முழுநேர வேலை மகிழ்வுடன்தான்.
//திருமணத்தில் அன்பிறகுக் குறைவே இல்லை. அதைக் காட்டிக் கொள்ள நிறைய நேரம் கிடைக்கவில்லை.
நானும் படித்தேன் எதற்கும் தடை சொல்ல மாட்டார்.செலவழிக்க அஞ்ச மாட்டார்.//
ஆமாம், அக்கா அன்பை காட்டிக் கொள்ள தெரியாது.
நானும் நிறைய பேசுவேன், அவர்கள் அளந்துதான் பேசுவார்கள்.
//பல விஷயங்களில் நம் வாழ்ககை. ஒத்துப் போகிறது. அதனால் தான் புரிகிறது. நான் அதிகம் எழுதுகிறேன்//
நம்மிடம் நிறைய ஒத்த கருத்துக்கள் இருப்பது உண்மை.
உங்கள் நட்பு எனக்கும் பாக்கியம்தான் அக்கா.
சாரை இழந்து தவித்த போது உங்களின் ஆறுதால் வார்த்தைகள் என்னை மீட்க உதவியதை எப்போதும் மறக்க முடியாது.
நீங்கள் எழுதியவை அனைத்தும் மிக அருமையான நினைவுகள் மனதில் உள்ளதை அழகாய் பகிர தெரிகிறது உங்களுக்கு.
//ஸார் பற்றி நீங்கள் சொல்லி இருப்பது பிரமிப்பைதான் தருகிறது. எவ்வளவு படித்திருக்கிறார்.. என்ன சுவாரஸ்யம் படிப்பில் அவருக்கு//
ஸ்ரீராம் , அவர்களுக்கு நிறைய படிக்க ஆசை. இறப்பதற்கு முந்தின மாலை கூட அவர்கள் சிறு வயது ஆசிரியர் தன்னை புகழ்ந்து பேசியதை பகிர்ந்து கொண்டார்கள்.
அதிகம் பேச மாட்டார்கள், பேசினால் நிறைய செய்திகள் பழைய நினைவுகள் சுவாரஸ்யமாக பேசுவார்கள்.
வாழ்க்கையில் இணையும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விருப்பங்கள்.என் கணவருக்கும் வேலைதான் முதல் மனைவி. பரஸ்பர அன்பு,அக்கறை கவனிப்பு, புரிதல் என்று இருந்தாலும் ரசனைகள் வேறு வேறாக அமைந்து விடுகிறது."""""""""""""""""""""""""""""""""""""""""'
அன்பின் கமலாமா,
இந்த உணமையைத் தெரிந்து கொள்ள வெகு காலம் பிடிக்கிறது.
சரி ....அவர் வழியே போய் விடலாம் என்று
உணர நாட்கள் பிடிக்கின்றன.
அப்படியே உங்கள், கோமதி,என் வாழ்க்கைகள் ஒத்துப்
போகின்றன.
மணம் முடித்த காலங்கள் தான் வேறு.
ஒரு அமைப்பில் உருவான கணவர்கள்.
நிறையப் பெண்களின் வாழ்வு இப்படி இருந்திருக்கலாம்.
என் அப்பாவும் பெரிய தம்பியும் பொறுப்புள்ள வேலைகளி இருந்தாலும்
குடும்பத்துக்கு என்று ஞாயிற்றுக் கிழமை
ஒதுக்கி விடுவார்கள்.
சின்னத் தம்பியும் இவரும் ஒரே அச்சு.
வேலைக்குத் தன்னை அர்ப்பணித்துக்
கொண்டவர்கள்.
இந்தக் காரணத்துக்காகவே இவர் மறைந்த பொழுது ஏற்பட்ட வேதனையைப்
போக்க 'சில்லென்ற சில நினைவுகளைப்
பொக்கிஷமாகப் பதிந்தேன்.
வாழ்க்கையில் எத்தனையோ பொன்னான நிகழ்ச்சிகளும்
இருந்தன. தங்கமான குழந்தைகள் , அவர்களுக்கு வாய்த்த நல் வாழ்க்கைத் துணைகள்.
அடுத்த வாரிசுகள் அனைவருமே நலமாக இருக்க இறைவனை வேண்டிப் பிரார்த்திப்போம்,
நலமுடன் இருங்கள் அம்மா,.
அன்பின் ஸ்ரீராம்,
துணிச்சல் என்றா சொல்கிறீர்கள். தப்பிக்க விரும்பும் அசட்டுத் தைரியம்."_)
கீழே யாரும் இல்லை என்று தெரிந்து இறங்குவானேன்:)
அதுவும் வாசல் கதைவை மூடிவிட்டுப்
போயிருக்கலாம். ஹாஹாஹா!!
@ஸ்ரீராம்,
அவருக்குக் கிஷோர் மட்டும் தான் பிடிக்கும்.
ரஃபி எல்லாம் திரும்பிக் கூடப்
பார்க்க மாட்டார்:)
நான் எல்லோரையும் ரசிப்பேன்.
லதாஜியின் பாடல்களை என்னைப் பாடச் சொல்லிக் கேட்பார்.
அதுவும் லக் ஜா Gale மிகவும் பிடித்த பாடல்.
உங்களோடு எல்லாம் அவர் உட்கார்ந்து பேச சந்தர்ப்பம் இல்லாமல் போனது.
@ ஸ்ரீராம்,
ஆமாம் கோமதி ,கமலா இருவரும் என் மாதிரியே
உணர்ந்திருக்கிறார்கள்.
அளவுக்கு மீறிய அறிவு, செயல் திறன் எல்லாம் அமைந்தவர்கள்
அவர்களுக்கேற்ற துணையாகத் தேர்ந்தெடுக்கும்
பெண்களின் மனங்களைப் புரிந்து கொள்ள அந்தக் காலத்தில்
முயற்சி செய்துதான் இருப்பார்கள்.
எங்கேயோ எதுவோ தடைப் பட்டது.
உயரப் பறப்பவர்களை எட்டிப் பிடிப்பது எல்லாப்
பெண்களாலும் முடியாது இல்லையா.
நன்றி மா.
@ Geetha Rangan,
ஆமாம் அம்மா சிலர் கோபத்தை சாப்பாட்டில் காட்டுவார்கள். நான் என்ன வருத்தம் கோபம் வந்தாலும் வயிற்றைக் கவனித்துவிடுவேன்!!!!
கல்யாணம் ஆன புதிது இல்லையா அதுவும் அந்தக் காலம் எல்லாம் புரிந்து கொள்ள முடிகிறது அம்மா."""
ஆமாம் பா. வயது பற்றிப் பிரச்சினை இல்லை.
முதிர்ச்சி இல்லாத மனம் என்று தான் சொல்வேன்.
சட்டென்று சுதாரித்துக் கொள்ளத் தெரியாத
அசட்டுத்தனம்.
நாங்கள் இருந்த வீட்டின் ஜன்னல்கள் பெரியவை.
அடுத்த வீட்டின் மாடிப்படியில் நின்றால்
நம் ஹால் நன்றாகத் தெரியும்.
அந்தச் செட்டியார் வீட்டு மகன் என் தம்பி
போலவே இருப்பான்.
எதேச்சையாக நான் போட்ட கூச்சலைக் கேட்டு
சமயத்தில் காப்பாற்றினான்.
அப்பாகிட்டயும் சொல்லி இருப்பேன்.
டாபிக் கோபத்தைப் பற்றி இல்லையா:)))))
அதுதான் அப்பவும் விட்டுப் போஸ்சு.
அடுத்த நாள் 'அன்பே வா" படம்
பார்க்கத்தான் செய்தோம்:)
நன்றி கண்ணா.
@ Geethasambasivam
''நினைச்சாலே பயமாத் தானே இருக்கு. இப்போக்கூட 4 வருஷங்கள் முன்னர் எங்க குடியிருப்பு வளாகத்தில் எங்க படுக்கை அறை ஜன்னலைத் திறந்து கொண்டு குரங்கார் வந்துட்டார். நான் அலறின அலறலில் பயந்து அதுவே ஓடிப் போச்சு""😂😂😂😂😂😂😂😂😂😂
இந்த ராஜேந்திர குமார் கதைகளில் எல்லாம் வீல்
என்று கத்தும் கதானாயகிகள்
எப்படி அந்த சத்தம் போட்டிருப்பார்கள் என்று யோசிக்கிறேன்:)))))
நாம் போட்ட சத்தம் நிச்சயம் அப்படி இருந்திருக்காது.
அலறல் வகைதான்.
அதான் குரங்காரும் ஓடி விட்டார் மா.ஹாஹா:)
மிக நன்றி கீதா மா.
அன்பின் மாதேவி,
ஆஹா கேட்கவே இனிமையாக இருக்கிறது.
நீங்கள் உங்கள் வாழ்க்கையைச் செவ்வனே
அமைத்துக் கொண்டது தான் அழகு.
குழந்தைகள் படிப்பு முடியும் வரை காத்திருந்ததும்
அருமை.
தங்கள் குடும்பம் மென்மேலும் மகிழ்ச்சியுடன் வளர
ஆசிகள். நன்றி மா.
Post a Comment