Blog Archive

Sunday, October 03, 2021

வனங்களுக்கு ஒரு மானசீகப் பயணம்.



வல்லிசிம்ஹன்,  1969   and 1972  இரண்டு பயணங்கள் .
முழுவதும் 
ஒரு அம்பாசடர் வண்டியில் 
சேலத்திலிருந்து மைசூர் வரை 

சென்றுவந்தோம்.  ஒரு வாரப் பயணம்.

முதல் தடவை இரண்டு குழந்தைகள். 
மறு தடவை மூன்று.:)
பின் கோவையிலிருந்து பண்டிபூர் வரை.





22 comments:

KILLERGEE Devakottai said...

பழைய நினைவுகள் அருமை.
முதல் காணொளி கண்டேன்.

மற்றவை இயங்கவில்லை அம்மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின்் தேவகோட்டைஜி! வாழ்க நலமுடன்.

பதிவுக்கு வந்து பார்த்ததும் மிக மகிழ்ச்சி.அப்பா. எனக்குக காணொளி வேலை செய்கிறதே மா.

நன்றி ராஜா.

மாதேவி said...

மறக்கமுடியாத பயணமாக இருந்திருக்கும் இனிய நினைவுகள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் மாதேவி,

ஆமாம் பா. நல்ல நினைவுகள் தான் பா. அதுவும் அவரே அத்தனை இடங்களுக்கும் ஓட்டி
வந்தார்.
நன்றி மா.

கோமதி அரசு said...

மூன்று காணொளிகளும் நன்றாக இருக்கிறது.
இயற்கையை ரசிக்க நேரம் காலம் கிடைத்தால் மகிழ்ச்சிதான்.
இனிய நினைவுகளை சுமந்த பதிவு.

குழந்தைகளுடன், கணவருடன் பயணம் செய்வது இனிய அனுபவம் தான்.

மாங்களும், மயிலும் அருமை. மயில் தோகை விரித்து ஆடுவது அருமை.
அடுத்ததில் மைசூர் வனவிலங்கு பூங்காவை சுற்றி காட்ட மிகவும் கஷ்டப்பட்டு இருக்கிறார். ஒரே மாதிரி மஞ்சள் கலர் தொப்பி அணிந்த கூட்டம் அவரை மிகவும் கஷ்டபடுத்தி விட்டது.

பண்டிப்பூர் பாதை காடு விலங்குகள் எல்லாம் அருமை.

கோமதி அரசு said...

உங்கள் பழைய படம் அருமை.

கோமதி அரசு said...

உலக வனவிலங்கு நாளில் விலங்குகள் பார்த்து விட்டேன். உங்கள் வனபயணத்தில்.

ஸ்ரீராம். said...

பயணங்கள் எப்போதுமே இனிமையானவை. அதுவும் வண்டியில் சுதந்திரமாகச் சென்று வருவது இன்னும் சௌகர்யம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதிமா,
வாழ்க வளமுடன் மா.

உங்களுக்குக் காணொளிகள் காணக் கிடைத்தனவா.

பந்திப்பூர் கொஞ்சம் சிரமமாகத் தான் இருந்தது.
அப்போது எடுத்த படங்கள் சென்னையில்
இருக்கின்றன.
மைசூர் வீடியோ மஞ்சள் தொப்பி கொஞ்சம் தொல்லைதான்.

மிக நிறைவான பயணங்கள். மைசூர், ஷிமோகா
,ஜோக் அருவி எல்லாம்
பார்த்து வந்தோம்.

வல்லிசிம்ஹன் said...

"உலக வனவிலங்கு நாளில் விலங்குகள் பார்த்து விட்டேன். உங்கள் வனபயணத்தில்."


யதேச்சையாக அமைந்தது மா.

பழைய படங்கள் இந்த நாளுக்கான
கூகிள் ஆல்பங்களில் வந்தன.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம்,
ஆமாம். சின்ன வயதில் பயணம் செய்வது,அதுவும் தொடர் பயணம் சுலபம்.

உடல் நலம் குன்றுவதற்கு முன் சென்று வரவேண்டும்.
நன்றி மா.

திண்டுக்கல் தனபாலன் said...

இனிமையான நினைவுகள்...

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

ரசிக்கத்தக்க நினைவுகள்.

Thulasidharan V Thillaiakathu said...

இனிமையான நினைவுகள் தான் வல்லியம்மா.

எங்கள் ஊரிலிருந்து மைசூர் போகும் பாதைதானே முதுமலை, பந்திப்பூர் எல்லாம். ஊட்டி மூன்று மணிநேரப் பயணம்தான். பங்களூர் செல்ல இந்தப் பாதைவழிதான் செல்வது. போகும் போதே விலங்குகளைப் பார்க்க முடியும்.

உங்கள் இளமைக்கால ஃபோட்டோவை ரசித்தேன்

துளசிதரன்

Thulasidharan V Thillaiakathu said...

நம் வண்டியில் சென்றால் சுதந்திரமாகப் பார்த்து வரலாம் இல்லையா அம்மா. எந்த நெருக்கடியும் இல்லாமல்.

எனக்கும் பயணம் என்றாலே ரொம்ப ரொம்பப் பிடிக்கும். பயணத்தின் காதலி!

நல்ல நினைவுகள். அம்மா

காணொளி பார்த்துவிட்டு வருகிறேன்

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

நாகரஹோலே, மைசூர் ஜூ போயிருக்கிறேன் அம்மா. ஆனால் பந்திப்பூர் உள்ளே சென்றதில்லை. கேரளாவுக்குச் செல்லும் போதும் வரும் போதும் பார்த்திருக்கிறேன் உள்ளே சென்று பார்த்ததில்லை அம்மா. பழைய சுற்றுலா ஃபோட்டோஸ் இல்லை....ஆனால் பேருந்தில் கேரளா சென்ற [போது நிறைய பார்த்தேன் ஆனால் ஜன்னல் சீட் கிடைக்கவில்லை. ஒருவரிடம் கேட்டேன் ஆனால் மறுத்துவிட்டார் எல்லொரும் தூங்கிக் கொண்டே இருந்தார்கள்...என்ன செய்ய. ஸோ படம் அவ்வளவாக எடுக்க முடியவில்லை

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

காணொளிகள் நன்றாக இருக்கின்றன அம்மா..நாகர்ஹோலே வில் நாங்கள் சென்ற போது வித்தியாசமான விலங்குகள் பார்க்க முடியவில்லை வழ்கம்மான பைசன், குரங்குகள் வகைகள் இவைதான்.

கீதா

வல்லிசிம்ஹன் said...

@ Dindugal Dhanabalan,
அன்பின் தனபாலன்.,

மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

@ Dr. Jambulingam Munaivar,

வந்து பார்த்துப் பின்னூட்டம் இட்டதற்கு நன்றி ஐயா.

வல்லிசிம்ஹன் said...

@ துளசிதரன் தில்லையகத்து,

நீங்கள் கோவை அருகே இருக்கிறீர்களா?

நாங்களும் கோவையிலிருந்து, ஊட்டி,
முதுமலை என்ற நீண்ட பயணம் தான்.
பெரியவனுக்கு 3 வயது.மகளுக்கு ஒண்ணரை வயது.
படத்தில் இருப்பது அவர்கள் தான்.

நின்று நின்றுதான் பயணம் செய்தோம்.
மறக்க முடியாத பயணம்.
கூடவே பயணித்ததற்கு மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,

நாங்களும் சென்றபோது நேர் சாலையில்
இருந்த சில மிருகங்களைத்தான் பார்க்க முடிந்தது.
அதுவும் குழந்தைகள் இருந்ததால்
இறங்கி எல்லாம் பார்க்க முடியவில்லை. அது

நல்லதும் இல்லை. மைசூர் சூவில் நிறைய
பார்த்தோம்.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

@ Geetha Rengan,


அட ராமா, தூங்கிக் கொண்டு வருவதற்கு அவருக்கு
ஜன்னல் சீட் எதற்கு:(
நாங்கள் மைசூர் செல்லும் வழியில்
பந்திப்பூர் பார்த்தோம் மா.

முதுமலைக் காடுகள், யானை எல்லாம்
தாண்டிச் சென்றோம்.
நடுவில் ஒரு டூரிஸ்ட் பங்களோவில் தங்கல்.