Blog Archive

Saturday, October 02, 2021

ஆறினால் அந்த சினம் பயன்படுமா



















இப்போது எத்தனையோ மேனேஜ்மெண்ட் வகுப்புகள் எல்லா விஷயங்களுக்கும் வந்துவிட்டன.


எங்க கால டாக்டர் ஆத்ரேயாவிலிருந்து இப்போது வலம் வரும் தீபக் வோரா வரை எல்லோருடைய அறிவுரைகளும் காதுகளில் விழுந்து கொண்டுதான் இருக்கின்றன.


ஆனாலும் சினத்தை வென்றவர் என்று பார்க்கப் போனால் விரல்விட்டு எண்ணக்கூடியவர்கள்தான் இருப்போம்.




மற்றவர்கள் எல்லோரும் கோபம் வரும்போது கட்டுப்படுத்துபவர்களாக இருப்பார்கள். சாப்பாட்டில் காண்பிப்பார்கள். சாப்பாடு செய்பவர்களின் கோபம் காரமாய் வந்து சேரும்.


சாப்பிடுபவர்கள் வயிற்றுக்குப் போய் அது படுத்தும்.

இன்னோரு வகை, உண்ணாவிரதம் இருந்து சாதிக்க முயலுவார்கள்.

பழைய காலமாயிருந்தால் யார் கண்டுகொள்வார்கள்?

ஒருநாள் சப்பிடலைன்னா ஒண்ணும் கெடாது என்று விட்டுவிடுவார்கள்.


அங்கேதான் இந்தவயிற்றுப்ப்ரச்சினைகள் ஆரம்பிக்கின்றன.

வேளைக்குப் பேணப்படாத வயிறு,புண்ணாகி வலிக்கிறது.

அது பரவாயில்லை.

மனதில் விழும் வலிக்கு ஏது மருந்து.?

நம்மைப் போய் இதுபோல பேசிவிட்டார்களே.,

நாம் நினைத்தது ஒன்றும் நடக்கவில்லயே, நேர்மையான ஆசைதானே,என்றெல்லாம் மனம் நினைக்கும்.


எங்க திருமண ஆரம்பக் கட்டங்களில் என் கோபத்துக்கு மதிப்பு அதிகம்.

இருவர் சுபாவமும் வேறு.

தன் வேலையைத்தவிர வேற எதையும் சீரியசாக எடுத்துக் கொள்ளத்தெரியாத மனிதர்,பபவம்.

இந்த மாதிரி சினிமா ஹீரோயின்கள் கணக்கில் கோபிக்கும் எந்த ஜீவனையும் பார்த்திராத அப்பாவி.

அவர் அம்மாவோடு ஒப்பு நோக்கும் குணம் வேற.

அவங்க அம்மாவோ பொறுமையின் பூஷணம்.

மாமியார் ஆட்சியில் அவங்க சொல்றதுக்கெல்லாம் சரி சரினு சொல்லியே

கழுத்து வலி வந்தவர்.


நாம அப்படியா.

"நினைத்ததை நடத்தியே முடிப்பவள் நான் நான் "பிடிவாதம்.

என் பெற்றோருக்கு என்னை எப்படி வழிக்குக் கொண்டுவருவது அத்துப்படி.

ஒரு சினிமாவுக்குக் கூட்டிப்போனால் கோபம் பஞ்சாய்ப் பறந்துபோகும்

என்று தெரியும்.

அடுத்தவாரம் எங்க வீட்டுப்பிள்ளை படம் டவுனுக்குப் போய்ப் பார்க்கலாம்

என்று போகிறவாக்கில் அப்பா,அம்மாவிடம் சொல்ல, அதைக் கேட்டு

மறுபடி சாதுவாகிவிடும் அசட்டுப் புத்தி.:))

இந்த நெளிவு சுளிவெல்லாம் தெரியாத எங்க வீட்டுச் சிங்கம்

புதுக்கோட்டை,தஞ்சாவூர்,நாகப்பட்டணம் என்று வாடிக்கையாளர்களைப்

போய்ப் பார்த்துவிட்டு வருவார்.(அறந்தாங்கி ரோட்டில் ,புதுக்கோட்டையில் ஒரு பெரிய வீட்டுமாடியில் எங்கள் தனிக்குடித்தனம்.
திருமேனி என்னும் பையனும் அவன் பாட்டியும் எனக்குத் துணை.
சிங்கம் வர வரையில் பாட்டி எனக்குப் பழய கதைகள் சொல்லுவாள்.)
கண்ணும் காதும் மாடிப்படிகளயே பார்த்தாற்போல இருப்பேன்.

வாசலில் ஜீப் ஒரு உறுமலோடு நிற்க வேண்டியதுதான்.
கிழவி கால்களை மடித்து உறங்கப்போய்விடுவாள்.

இங்கே கைகேயி அவதாரம் ஆரம்பமாகிவிடும்.

அப்பத்தான் சமையலறையில் வெட்டி முறிக்கிற வேலை வந்து சப்பாத்தி மாவு டொப் டொப் சத்தத்தோடு பிசைந்து

ணங்னு தவ்வாவை ஸ்டவ்வில் வைத்து (ஆறே ஆறு சப்பாத்திக்கு இந்த நாடகம்) மோட்டுவளையைப் பார்த்தபடி போஸ்.

சிங்கத்துக்குப் பூ,பழம் ,சாக்லேட் இந்த மாதிரி சமாதான டாக்டிக்ஸ்

எல்லாம் தெரியாது.

குளித்துவிட்டு தன்பாட்டுக்கு ஒரு மைக் ஹாமர் ,இல்லாட்ட சேஸ் புஸ்தகத்தை எடுத்துக் கொண்டு உட்கார்ந்துவிடுவார்.
எனக்கோ பசி ..(அப்பவும் இப்பவும் இந்தப் பசி என்ன விடுவதாக இல்லை).-)
எனக்குத்தான் அன்பே வா படம் போகாத கோபமாச்சே.
அதனாலே சப்பபத்திகளையும் எனக்குத் தெரிந்தஒரெ ஒரு காய்கறிப் பொரியல் உ.கிழங்கையும் தரையில் வைத்து மூடிவிட்டு(அப்போதெல்லாம் டைனிங் டேபிள் லேது)
இரண்டு தட்டுகளையும் போட்டுவிட்டு படுக்கப் போய்விடுவேன்.
அந்தப் புத்தகத்தில் எல்லலக் கேசும் கண்டுபிடிச்சு ஹீரொ சியர்ஸ் சொல்லித் தன் பெண்சினேகிதியோடு வண்டியில் ஏறியபிறகு இந்தப் புதுக்கோட்டை
வீட்டிற்குள் இறங்குவார் சிங்கம்.
நாளைக்கு மிச்ச கோபம் பார்க்கலாம்.:-)))))))))))))))

47 comments:

கோவி.கண்ணன் said...

//மற்றவர்கள் எல்லோரும் கோபம் வரும்போது கட்டுப்படுத்துபவர்களாக இருப்பார்கள். சாப்பாட்டில் காண்பிப்பார்கள். சாப்பாடு செய்பவர்களின் கோபம் காரமாய் வந்து சேரும்.//

வல்லி அம்மா,
நல்ல நகைச்சுவை...முழுப்பதிவிலும் நல்ல தகவல்கள் !

ambi said...

நான் தான் பஷ்டா இன்னிக்கு?
அப்படியே வேற யாராவது வந்து இருந்தாலும் என்னோட கமண்டை முதல்ல பப்ளிஷ் பண்ணீடுங்கோ! :)


Geetha paati may say that ambi இதேல்லாம் ஒரு பொழப்பா? :p

//அப்பவும் இப்பவும் இந்தப் பசி என்ன விடுவதாக இல்லை//

ha haaa :)

ambi said...

ரொம்ப நல்லா போகுது. நெக்ஸ்ட் பார்ட்டுக்கு வெய்டிங்க். :)

வடுவூர் குமார் said...

என்னுடைய கோபம்/அழுத்தம் என் முகத்தில் அப்பட்டமாக தெரியும்,அவுங்க கோபமன வார்த்தை ,,, வரப்போவதற்கு ஒரு வாரம் முன்பு தெரியும்.
கைகேயி எல்லா வீட்டிலும் இருக்கிறார்கள் போலும். :-))

வல்லிசிம்ஹன் said...

வரணும் கண்ணன்.

நினைவிலிருந்து,சின்ன பெரிய கோபங்களை எடுப்பதற்கான முயற்சி இது.

தமிழை என் போக்கில் வளைத்தால் வர மறுக்கிறது.
அதன்போக்கில் விட்டு எழுதப் பார்க்கிறேன்.:-)

வல்லிசிம்ஹன் said...

அம்பி, கண்ணனுக்கப்புறம் ரங்கனாகி விட்டது இன்று.
நாளைப்பதிவில் நீங்கதான் முதலில்.:-))

இந்தப் பசி நல்ல பசிதானே. பதிவுக்கு முந்துவதினால் நிங்கள் பதிந்தவருக்கு இல்லையா நல்லது செய்கிறீர்கள்!!!

துளசி கோபால் said...

கஷ்டப்பட்டு 'ஆசை'யாச் செய்த சப்பாத்தியைத் தரையில் வச்சீங்களா?
அடடா........... வெறும் தரையில் இருக்கும் அழுக்கெல்லாம் ஒட்டாதா? :-))))))

நம்ம வீட்டுலே கோபம் வேற தினுசு. கையில் இருக்கும் பொருளை எதானாலும் சரி
வீசி எறிவேன். எத்தனை சாமான்கள் இப்படி.............. நினைச்சால் எனக்கே அவமானமா
இருக்கும்:-)

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் குமார்.
பசிவேளையில் கோபம் ஆகாது.
சாப்பிட்டால் பாதி கோபம் ஓடிவிடும்.

கடவுள் பாதி மிருகம் பாதினு தானே பாடறாங்க.
எத்தனை சதவிகிதம்னுதான் தெரியலை.

ஒரே கோசலையாகவும்,சுமித்திரையாகவும் இருந்தால் வாழ்க்கை போரடிக்கும் இல்லையா..:-)))

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் துளசி,
சப்பாத்திக்குனு அம்மா ஒரு அழகான எவர்சில்வர் வட்ட டப்பா கொடுத்தாங்க.
அதுக்காகவே சப்பாத்தி செய்வேன்.
தரையை விடுங்க.மேலே ஓட்டுக் கூரை
எலி சார் குடித்தனம் செய்வார்.
அவருக்குப் பயந்தாவது சீக்கிரம் சாப்பிடணும்:-)

Geetha Sambasivam said...

ம்ம்ம்ம்ம்ம்ம்ம், வல்லி, இறைவன் படைப்பில் கோபம் அடையாதவர் யாருமே இல்லை. எனக்கும் தான் கோபம் வரும். ஆனால் வேலையிலோ அல்லது சப்பாட்டு விஷயத்திலோ காட்டியதில்லை இன்று வரை, இந்த நிமிஷம் வரை. இப்போ கூடக் கொஞ்சம் கோபம் தான் மூன்று நாளாக. என்ன, பேச்சைக் குறைத்து விடுவேன். சிரிப்பு வராது, மற்றபடி எல்லாமே தினசரி நடைமுறைப்படி நடக்கும், அப்படியே பழகியாச்சு, ஆனால் என்னோட கோபத்தை யாருமே மதித்ததில்லை, அது வேறு விஷயம். எனக்குள்ளேயே புழுங்கிக் கொள்ளுவேன் பல சமயங்களில். அதுக்காகவே தேடித் தேடிப் புத்தகங்கள் படித்து மனம் ஆறுதல் கொள்வேன். சினிமா பார்க்கவெல்லாம் கோபித்துக்கொள்வது என்பது என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத ஒன்றும் கூட. தவறாகச் சொல்லி இருந்தால் மன்னிச்சுக்குங்க. மற்றபடி உங்கள் வெளிப்படையான அணுகுமுறை நல்லாவே இருக்கு, நல்லதொரு விஷயத்தைக் கூடியவரை படிப்பினையாகக் கொடுக்கிறீர்கள். பாராட்டுக்கள்.
ஹிஹிஹி, கொஞ்சம் பெரிசாப் போச்சோ, என்னோட பதிவு போல? :)))))))))))

Geetha Sambasivam said...

@அம்பி, விளக்கெண்ணெய்க் கேசரிக்குப் போய் இப்படி ஆலாய்ப் பறக்க வேண்டாம், சிலபேர் எத்தனை சொன்னாலும் திருந்தவே மாட்டாங்க, இன்னிக்கு மண்டகப்படி குறைச்சலோ? :P

வல்லிசிம்ஹன் said...

கொஞ்சமென்ன நிறையவே பெரிசாப்போச்சு கீதா:)))

பாகவதம் போல ஒண்ணைத்தொட்டா ஒண்ணுகூடவே வந்துவிடுகிறது.
என் கோபத்துக்கு மதிப்பு கிடையாது என்று சொல்ல மாட்டேன்.
ரொம்ப சின்ன விஷயத்துக்குக் கோபம் வந்து , மிகப் பெரிய விஷயங்களில் ஏமாந்துவிடுவேன்.இது திருமணமாகி ஓரிரு மாதங்களில் நடந்த விஷயம்.அதனால் எல்லோருக்கும் என்னை மேனேஜ் செய்வது ரொம்ப சுலபம்.
நீங்க சொல்வதில் எனக்கு மறுப்பு ஒண்ணும் கிடையாது.:-))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஒரு சினிமாவுக்குக் கூட்டிப்போனால் கோபம் பஞ்சாய்ப் பறந்துபோகும்//

எத்தனை சினிமா இது மாதிரி பாத்திருக்கீங்க வல்லியம்மா?

எத்தனை முறை கோபப்பட்டிருக்கீங்க-ன்னு கேட்கலாம்-னு தோனிச்சு! அதான் இப்படி மாத்திக் கேட்டுவிட்டேன் :-))))

//சிங்கத்துக்குப் பூ,பழம் ,சாக்லேட் இந்த மாதிரி சமாதான டாக்டிக்ஸ்
எல்லாம் தெரியாது//

ஹி ஹி....ரொம்ப இயல்பா அதிகம் கலாய்க்காம சொல்லி இருக்கீங்க!
இதைப் படிச்சிட்டு அவர் என்ன சொன்னார், செய்தார் என்பதையும் தனிப் பதிவா போடுங்க! :-)))

வல்லிசிம்ஹன் said...

வரணும் ரவி.
நான் சினிமா என்ற சொல்லுக்குக் கட்டுப்படுவேன் என்று அப்பாவுக்குத் தெரியும். அவர் சொல்வாரே தவிர நாங்க போக மாதம் ஒன்றாவது ஆகிவிடும்.

எண்ணிப்பார்த்தால் என் பிறந்தவீட்டு வாழ்க்கையில் 15 படங்கள் பார்த்திருப்பேன்.:))
கோபம் ஷார்ட்லிவ்ட் அண்ட் மறந்துபோகிற வகை.

சிங்கத்திடம் இப்போகூட சொல்லுவேன்பா.
நைச்சியமாகப் பேசத் தெரியலைனு.அவசியமே கிடையாதுனு பதில் வரும்.:))))

Geetha Sambasivam said...

"பேச்சுக்கலை"யில் நீங்க சொல்றதைப் பார்த்தால் நான் கூட ஃபெயில் தான் வல்லி, எனக்கும் நைச்சியமாய்ப் பேசத் தெரியாது. பொதுவாக எல்லாருக்கும் இது இருக்கே, நமக்கு இல்லையேன்னு கூட நினைச்சுப்பேன். என்ன செய்ய? :)

வல்லிசிம்ஹன் said...

கீதா,
எல்லாப் பழக்க வழக்கங்களும் பெற்றோரிடமிருந்து கற்றுக் கொள்கிறோம்.
பேசாதே என்று சொல்லித்தானே வளர்க்கிறார்கள்.

திருமணமாகி 20 வருடங்கள் கழித்து
எங்க அம்மா,உனக்கு நிறையப் பேச வந்துவிட்டது என்பார்கள்.:-))

Geetha Sambasivam said...

எட்டிப் பார்த்துவிட்டுப் போங்க, எட்டு எழுத கைக்கு எட்டின உங்களை எட்டிப் பார்த்துக் கூப்பிட்டிருக்கேன். :)))))))))

G.Ragavan said...

அறியா சனமா இருக்குறப்பதான் அறியா சினம் வந்து பாடாப் படுத்தும். ஆனா அதையும் நல்ல நகைச்சுவையா சொல்லீருக்கீங்க. :)

இலவசக்கொத்தனார் said...

பாவம்!!!

(யாருன்னு வேற தனியாச் சொல்லணுமா?)

வல்லிசிம்ஹன் said...

கொத்ஸ், நீங்க எல்லாம் அவரைத் தான் சப்போர்ட் பண்ணுவீங்கனு தெரிஞ்சும் நான் சொல்றேன்னா நான் எத்தனை பாவம்.
சும்மாப்பா:-))
winning time,losing time
இருக்கும் இல்லையா.எனக்கு அப்போ சுக்கிர தசை:-))))

வல்லிசிம்ஹன் said...

ராகவன் அப்ப நாங்க அறியாப் பிள்ளைகளாத்தான்
அறியப்பட்டோம்.

குடும்பம்,கணவன்,வீட்டுவேலை தவிர ஒண்ணும் தெரியாது.
ஊரு விட்டு ஊரு வந்து,அம்போனு
தனியா விட்டுட்டு டூர் போயிட்டாரேனு வருத்தம்.அவ்வளவுதான்:-)

வல்லிசிம்ஹன் said...

கீதா,
கட்டாயம் போய்ப் பார்க்கிறேன்.
என்னால் முடியும்னு நினைக்கிறீங்களா.

செய்துட்டாப் போச்சு:-))

நானானி said...

வல்லி!
என் கோபம் பேச்சைக்குறைப்பது. சரியாக ரெண்டு நாளாகும். இப்போது
அதுவும் போரடிச்சு கோபப்படுவதையே
மூட்டை கட்டி வச்சாச்சு! பிரஷராவது
நார்மலாக இருக்குமில்லையா?

வல்லிசிம்ஹன் said...

இப்போ கோபத்துக்கு ஏது இடம் நானானி.
நீங்க சொல்கிற மாதிரி நம்ம உணவு பழக்கம்,உடல்நலம் எல்லாமே நம்மை ஒரு கட்டுக்குள் வைக்கின்றன.
கோபம் தலைக்கேறினால் தலை சுத்தல்தான் வரது.
அத்தோட கண்ணும் கெடுமாமே.

அதனால் நிறையத் தண்ணீர் குடித்து விடுவேன்.
பேசாமல் இருக்க என்னால் முடியாது.
ரொம்ப நல்லதாப் போச்சுனு விட்டுவிட்டாங்கன்னா.:-)))))

suratha yarlvanan said...

வணக்கம்
உங்களது இந்தப் பதிவு இந்த வார பூங்கா இதழுக்கான தமிழ்மண வாசிப்பில் என்னை கவர்ந்த பதிவுகளில் ஒன்றாக தெரிவுசெய்துள்ளேன்.
பாராட்டுக்களுடன் மேலும் எழுத வாழ்த்துக்கள்.

நளாயினி said...

சிங்கத்துக்குப் பூ,பழம் ,சாக்லேட் இந்த மாதிரி சமாதான டாக்டிக்ஸ்

அடடாh றொம்ப ரசிச்சேன்.

குட்டிபிசாசு said...

@ வல்லி அம்மா,

//இங்கே கைகேயி அவதாரம் ஆரம்பமாகிவிடும//

அப்பாவ ரொம்ப தான் படுத்தி இருக்கீங்க!!

ஆனா துளசி அம்மாதான் ரேங்கிங் அதிகம்.அவங்க கணவர் இன்னும் பாவம் (//கையில் இருக்கும் பொருளை எதானாலும் சரி
வீசி எறிவேன//)

என்னோட சின்ன வயசு ஞாபகம் தான் வருது!!

வல்லிசிம்ஹன் said...

வரணும் நளாயினி,
உண்மை,உண்மை முக்காலும் உண்மை.

வல்லிசிம்ஹன் said...

குட்டி பிசாசு,
அந்தக் கோபமெல்லாம்
ஜுஜுபி.
கைகேயி வேஷம்னு பேருதான்.
உண்மையில் அந்த மாதிரி கிடையாது.:)))

அப்பா டோடல் கண்ட்ரோல்ல இருப்பார்.
உங்க அனுபவம் எப்படி?

வல்லிசிம்ஹன் said...

அன்பின் மாதேவிக்கும், அன்பின் கமலா ஹரிஹரனுக்கும்
இந்தப் பதிவுகள் புதியவை. அதனால் பதிந்தேன்.
பழைய நினைப்புதான் பேராண்டி லேபல்:)

கோமதி அரசு said...

நீங்கள் சொல்வது போல் சினம் தவிர்த்தல் படித்தாலும் கோபம் சில நேரம் வரும்.அது பற்றி வகுப்பு எடுத்து இருக்கிறேன் மன்றத்தில். அப்போது மனதுக்கு கஷ்டமாக இருக்கும் . உனக்கு என்ன தகுதி இருக்கிறது சினத்தை தவிர்க்க சொல்ல என்று நினைத்துக் கொள்வேன்.

பழைய நினைவுகளை திரும்பி பார்த்து கொண்டு இருக்கிறீர்கள்.
பழைய பதிவு படிக்க படிக்க ஆனந்தம்.
பின்னூட்டங்கள் மிக அருமை.

நானும் கோபபட்டு பேசாமல் இருந்து இருக்கிறேன்.
நினைத்து வருந்துவேன்.
அப்படித்தான் மெளனவிரதம் இருக்க முடிந்தது. (கைவரபட்டது.)
அவர்களுக்கும் கோபம் வரும். கோபத்தை உன்னிடம் தானே! உங்ககளிடம் தானே காட்டமுடியும் என்று இருவரும் வசனம் பேசிக் கொள்வோம்.

சாரின் நினைவு தினம் வர போகிறது. உங்கள் நினைவுகள் முழுவதும் நிறைந்து இருப்பார்கள்.

வல்லிசிம்ஹன் said...

“சாரின் நினைவு நாள் .,
இன்னும் ஒரு மாதம் கழித்து தான் வருகிறது. ஐப்பசி மாதம்.

வாழ்நாள் முழுவதும் சென்றாலும் புரிந்து கொண்டோமா என்று எண்ணிப் பார்ததால் இல்லை என்று தான் சொலவேன்.

புரியாத குறையில் கோபம் வருகிறது.
அவருக்கு அந்த சிரமம் இல்லை. கோபிக்கவும் நேரம் இல்லை. எனக்கும் அகத்தி சண்டை போட வராது:)
நீங்கள் சொல்வது போல மௌனம் தான் தெரிந்த வழி.
“பழைய நினைவுகளும் பின்னூட்டங்களும் எப்போதுமே. இனிமை தான். எழுதுபவர்களும் படிப்பவர்களும் அதிகமாக இருந்த காலம்.

நீங்களும் படித்து ரசித்ததே இனிமை. நன்றி மா.

Geetha Sambasivam said...

படிச்ச மாதிரி இருக்கேன்னு நினைச்சேன். பின்னூட்டங்கள் காட்டிக் கொடுத்தன. இந்தக் கோபம் விஷயத்தில் எனக்கு இப்போவும் இதில் நான் சொல்லி இருக்கும் நிலைதான். என் கோபமெல்லாம் யாருக்கும் லட்சியமே இருக்காது! நானாய்க் கோவித்துக்கொண்டு நானாய்த் தணியணும். இஃகி,இஃகி, இஃகி!

ஸ்ரீராம். said...

கோபம் சிரிப்பு வருகிறது.  எல்லோரிடமும் இந்தக் கோபங்கள் இருக்கின்றன.  செல்லும் இடத்தில்தான் கோபம்.  உறவினர் இல்லங்களிலோ, வேறு இடங்களிலோ நம் கோபத்தைக் காண்பிக்க முடியுமா, மதிப்பார்களா என்ன!

ஸ்ரீராம். said...

திருமேனி என்றெல்லாம் நிஜமாகவே பெயர் வைத்திருந்தார்களா?!!!!   தமிழ்வாணன் கதைகளில் மட்டும்தான் அப்படி பெயர் வரும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்!

ஸ்ரீராம். said...

உங்களுக்கு அவ்வளவு பசி இருக்கும்போது அவர் மட்டுமெப்படி பசி இல்லாமல்?  வெளியில் ஏதும் சாப்பிட்டு விட்டு வந்திருப்பாரோ!!

வண்ண சிறகுகள் said...

கோபம் கொடியதே
https://vannasiraku.blogspot.com/2019/11/blog-post_18.html

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

சுவாரஸ்யமான பதிவு சகோதரி. நம் நினைவுகள்தான் எத்தனை நெருக்கமாக நம்முடன் உறவாடியபடி இருக்கிறது. சினத்துடனும்,சினேகமாக பழ(க்)கி கொண்டு நல்ல நகைச்சுவையாக எழுதியுள்ளீர்கள். பிறகு நமக்குள் கோபம் இருக்கிறது என எப்படி வெளிக்காட்டுவதாம். அவ்வப்போது இப்படி காட்டினால்தான், அந்த சினமும் நமக்கு மரியாதை தருகிறாள் என்பதை புரிந்து கொண்டு நம்மை விட்டு விலகாமல் நட்புடன் இருக்கும்.:) ஆனால்,என் கோபங்கள் இன்று வரை யாரிடமும் பலித்ததில்லை என்பதே ஒரு சோகந்தான் எனக்கு. இந்த உங்கள் பதிவுக்கு வந்த பின்னூட்டங்களும் வெகு சுவாரஸ்யமாக இருந்தது. இதில் நீங்கள் என்னையும் குறிப்பிட்டு எழுதியிருப்பது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.நீங்கள் இப்படி மீள் பதிவுகளை நிறைய போடுங்கள் எனவும் கேட்டுக் கொள்கிறேன். சுவாரஸ்யமான எழுத்து நடை தங்களுடையது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,

அவருக்கு நான் கோபித்துக் கொண்டு இருக்கிறேன் என்று கூடத் தெரியாது:)

அதெல்லாம் அறியாமையால் செய்கிற தவறுகள்.
நமக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று நினைத்துச் செய்த சிறு
நேரங்கள்.
உண்மையில் குழந்தைகள் வந்த பிறகு
கோபிக்க ஏது நேரம்:)

வல்லிசிம்ஹன் said...

கோபம் சிரிப்பு வருகிறது. எல்லோரிடமும் இந்தக் கோபங்கள் இருக்கின்றன. செல்லும் இடத்தில்தான் கோபம். "

அன்பின் ஸ்ரீராம்.
ஆமாம் செல்லும் இடத்தில் தான் கோபம்.
சென்றதா என்று தெரியாது:)
அவர் பாட்டுக்கு சாப்பிட்டு, தூங்கி

நான் அயர்ன் செய்து வைத்திருக்கும் பாண்ட் , சட்டை
போட்டுக் கிளம்பிடுவார்.
மறந்தும் போய்விடுவார். எத்தனை நேரம் சினம் காப்பது:)
நானும் மறந்துவிடுவேன்,!!!!

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம்,

"திருமேனி என்றெல்லாம் நிஜமாகவே பெயர் வைத்திருந்தார்களா?!!!! ""

ஓ . உண்டுமா. அங்கே திருமெய்யம் என்ற திவ்யக்ஷேத்திரம்.
அதன் பெருமாளின் திருமேனி
அத்தனை அழகாம்.
அதனால் இந்தப் பெயர் கிழவியின்
பேரனுக்கு வைத்திருந்தார்கள்.
அழகான ஊர். புதுக்கோட்டை.

அவர் சாப்பிட்டு எல்லாம் வர மாட்டார் மா.
எப்போ பார்த்தாலும் காப்பியும் அக்னி ஹோத்ரமும்
தான்:)

வல்லிசிம்ஹன் said...

மிக நன்றி My Blog.
கட்டாயம் சென்று பார்க்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

"சுவாரஸ்யமான பதிவு சகோதரி. நம் நினைவுகள்தான் எத்தனை நெருக்கமாக நம்முடன் உறவாடியபடி இருக்கிறது. சினத்துடனும்,சினேகமாக பழ(க்)கி கொண்டு
நல்ல நகைச்சுவையாக"

அன்பின் கமலாமா,
அப்பொழுதெல்லாம் எழுத்தின் வசந்த காலம்.
சுதந்திரம் நம் வசம்.

சினம் கொண்டாடியது எல்லாம் அறியாமையால்.
குழந்தை பிறந்ததும் பொறுமை தானே வந்துவிட்டது,.
தன்னிரக்கம் எல்லாம் போய் விட்டது.:)

முடிந்த வரை நல்ல பதிவுகளைக் கொடுக்கப்
பார்க்கிறேன் அம்மா.
நீங்கள் ரசிப்பதே பெரிய ஊக்கம்.
தொடர்ந்து படிப்பதற்கு நன்றி.

Thulasidharan V Thillaiakathu said...

ஆனாலும் சினத்தை வென்றவர் என்று பார்க்கப் போனால் விரல்விட்டு எண்ணக்கூடியவர்கள்தான் இருப்போம்.//

கண்டிப்பாக அம்மா. நீங்கள் சொல்வது போல் அப்போ எல்லாம் எங்கே மேனேஜ்மென்ட் கோர்ஸ் ..அதெல்லாம் நம்ம வீட்டு பெரியவர்களே கையில் எடுத்துக் கொண்டதுதான். ஹாஹாஹா

நீங்க வேற தனியா அங்கே....நான் ப நி பே பார்த்ததும் பேய்க் கதை ந்னு நினைத்துவிட்டேன் ஹாஹாஹாஹா..

லாங்க் ஜம்ப்/ ஹையோ சிரித்துவிட்டேன்

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

பழைய காலமாயிருந்தால் யார் கண்டுகொள்வார்கள்?

ஒருநாள் சப்பிடலைன்னா ஒண்ணும் கெடாது என்று விட்டுவிடுவார்கள்.//


ஆமா, அதானே யாரு கொஞ்சப் போறாங்க?

கழுத்துவலி// ஹாஹாஹாஹா ரொம்ப சிரித்துவிட்டேன்!!!

அப்பா ஊருக்குப் போகலையா?

அடுத்த பகுதிக்குப் போகிறேன்

கீதா

வல்லிசிம்ஹன் said...

நீங்க வேற தனியா அங்கே....நான் ப நி பே பார்த்ததும் பேய்க் கதை ந்னு நினைத்துவிட்டேன் ஹாஹாஹாஹா..""""""""""""""""""""""""


ஹாய்ய்ய்ய். கீதாமா, ஆஹா சிரிப்பு வருகிற மாதிரி எழுதி இருக்கிறேனோ:))))
அச்சோ ரசித்ததற்கு மிக நன்றி மா.
எல்லாம் ஒரு ஃப்ளோ ல எழுதினதுமா.

அம்மா வீட்டிலயாவது மிரட்டி சாப்பிட வைப்பார்கள்.
மாமியார் வீட்டில் அது நடக்காது.

அங்கே சமையல் காரர் உண்டு.
அவர் செய்யும் தளிகை வாசனை
மாடியில் இருக்கும் என் மூக்கைத் துளைக்கும். எப்போது அழைப்பார்கள்
என்று காத்திருப்பேன்:))
வீடு நிறைய மக்கள். வரிசையாகப் பந்தி.

கோபமாவது ஒண்ணாவது:)

வல்லிசிம்ஹன் said...

Geetha ma,

''கண்டிப்பாக அம்மா. நீங்கள் சொல்வது போல் அப்போ எல்லாம் எங்கே மேனேஜ்மென்ட் கோர்ஸ் ..அதெல்லாம் நம்ம வீட்டு பெரியவர்களே கையில் எடுத்துக் கொண்டதுதான். ஹாஹாஹா""

😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂