Blog Archive

Friday, October 01, 2021

ஆறுவது சினம்:)ப.நி.பே.

வல்லிசிம்ஹன்
189ஆவது பதிவு 2007.

இந்தக் கோபத்துக்குக் காரணமாயிருந்தது ரீடா.
ஒரு குட்டிக் குரங்கு.
ரொம்ப அழகான குட்டிதான்.இருந்ததலும் குணம் குரங்குகுணம்தானே.
சிங்கத்தோட தொழிற்சாலை அருகே இருந்த மின் கம்பத்தில் மாட்டி உயிரை இழக்க இருந்ததைக் காப்பாற்றி வீட்டுக்குக் கொண்டு வந்துவிட்டார்.
அதற்கு ரீட்டானு நாமகரணமும் ஆச்சு.
சீதாவுக்கு ரைமிங்கா ரீட்டாவாம்.:)))
இந்த ஐயாவோ எட்டு மணி சைரன் ஊதுவதற்கு முன்னால் ஏழு மணிக்கு
வேலைக்குப் போகிறவர்.
இரவு வரும் வரை யார் அதைப் பார்த்துக்கிறது.
எனக்கும் முதலில் ரொம்பப் பாவமாக இருந்ததால் சரி போனாப் போகட்டும்னு சரி சொன்னேன். சமையலறை
ஜன்னலுக்கு வெளியே கயிற்றில் கட்டி விட்டுப் பக்கத்தில் தண்ணீர்,ரொட்டி எல்லாம் வைத்துவிட்டுப் போயிருந்தார்.
அதுவோ அம்மா ஞாபகத்தில் யாரைப் பார்த்தாலும் பாய ரெடியாக இருந்தது. சகிக்க முடியாத உர் உர் சத்தம் வேற.
மேடையில் ஸ்டவ்விலொ ஹாட்ப்ளேட்டிலோ ஏதாவது சத்தம் கேட்டால் ஜன்னலுக்குத் தாவி என்னைப் பார்த்துப் பல்லைக் காட்டும்.
நான் ஏன் அப்புறம் அங்கே நிப்பேன்.ஒரே தாவு .கூடத்துக்கு வந்துவிடுவேன்.
பள்ளிக்கூடத்தில் லாங் ஜம்ப் செய்தது எத்தனை பயன்பட்டது பாருங்க.
அதுவோ கூடத்துக்கும் சமையலறைக்கும் நடுவில் இருந்த வராந்தாவில் வந்து உட்கார்ந்து கொண்டு ஆட்டம் காட்டும்.
இதனால் நஷ்டங்கள் பின் வருமாறு ,
1, கிழவி துணைக்கு வரமாட்டார்
2,சாப்பிடச் சமையலறைக்குப் போகமுடியாது.
3,இன்னும் சிரமமான விஷயம் வீட்டு வாசலும் ,வெளிமாடிப்படியும்
ரீட்டாவைத் தாண்டிதான்.
4,எல்லாவற்றையும் விட அன்று மாலை அன்பே வா போகலாம்னு ஒரு திட்டம்.
அந்த வயதில் இவை எல்லாம் பெரிய பிரச்சினை.
வீட்டில ரேடியோ கிடையயது.
படிக்க வேணும்னால் சாமர்செட் மாம்,எட்கார் ஆலன் போ,இன்னோரு பெயர் தெரியாத டூ விமென் என்ற ஒரு நாவல். சோஃபியா லொரென் நடித்து வெளிவந்த படத்தோட கதை.
மற்றதெல்லாம் துப்பறியும் சிங்கங்கள் பற்றிய நாவல்கள்
கொஞ்சம் நம்ம அறிவுக்கு எட்டாத விஷயங்கள்.
இந்த நேரத்தில்தான் மேலே வந்த தொழிற்சாலை வேலையாள்
குரங்கைப் பார்த்ததும் அப்படியே படியோரத்தில் நின்று ஐயா வெளியூர் போறாராம்.இன்னிக்கு இரவு வீட்டுக்கு வர மாட்டார் என்றதும்
ஓனு கூப்பாடு போடலாமானு இருந்தது.
அதுவும் தெரியாதே!!.
அப்புறம் எப்படிச் சமாளித்தேன் என்பது வேறு கதை.¨:-)

8 comments:

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

பதிவு அருமையாக உள்ளது. ரீட்டாவுடன் உங்களது அனுபவம் சற்று (சற்றென்ன... மிகவுமே ..) பயந்தான்.அந்த குரங்கு குட்டியால் தங்களுக்கு ஏற்பட்ட நஸ்டங்களை நகைச்சுவையாக அட்டவணைகளுடன் குறிப்பிட்டு விவரித்து எழுதியிருக்கிறீர்கள். சில இடங்களில் உங்கள் நகைச்சுவையால் சிரித்து விட்டேன். ஆனால் படிக்கும் போது அப்போதைய உங்கள் நிலைமை கலக்கமூட்டுயடியாகத்தான் நானும் உணர்ந்தேன். உங்களவர் தீடீரென ஊருக்கு கிளம்பியவருக்கு தான் அழைத்து கொண்டு வந்து வீட்டில் விட்டிருக்கும் அந்த ரீட்டாவின் நினைவு கொஞ்சமேனும் வந்திருக்க கூடாதோ?:) பிறகு அவர் வரும் வரை எப்படித்தான் சமாளித்தீர்களோ? அந்த இரவை நினைத்தால் எனக்கே பயமாக இருக்கிறது. வீட்டில் துணைக்கென்று யாரும் இல்லையா? மேலும் நீங்கள் தொடர காத்திருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

மாதேவி said...

அட...டா....சிரிப்பதா.....அழுவதா...

எனது சிறுவயதிலும் தெரிந்த ஒருவர் வளர்த்த குட்டியை ஒருவாரம் எங்களிடம் தந்திருந்தார்.அப்பொழுது அண்ணா எங்களுக்கு எல்லாம் ஒரே விளையாட்டுதான்.
இப்போது கிட்டபோகவே பயப்படுவேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கமலா மா, திருமணமான புதிது. ஒரே காமெடி தான்.:)இது நடந்தது 1966 இல் புதுக்கோட்டையில்.அப்போ ஃபோன் எல்லாம் கிடையாது. வீட்டுக்கு ஒரு வயதான அம்மா துணைக்கு வருவார். குரங்கு குட்டியைப் பார்த்து அவரும் மாடிக்கு வரவில்லை. தனிக் குடித்தனம் வேறு யார் துணை:) சமாலித்தது இன்னொரு பதிவு.இதனுடன் போடவேண்டும் என்று தேடினேன். கிடைக்கும். பதிகிறேன். நீங்கள் சிரித்து ரசிக்கத்தான் இதை இன்று பதிந்தென்.அப்போ பயமகத் தான் இருந்தது:))))) நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் மாதேவி சிரிக்கத்தான் இந்தப் பதிவு:). அதைப் பார்த்து நான் பயப்பட என்னைப் பார்த்து அது பயப்பட கோலாகலம் தான்.:) நன்றி மா.உங்களுக்கும் குரங்கு அனுபவம் உண்டா? Hahaha.

கோமதி அரசு said...

குட்டி குரங்கை வீட்டில் வளர்ப்பதா?
குரங்கை காப்பாற்றியது நல்லசெயல்தான், ஆனால் வீட்டுக்கு கொண்டு வந்தது கஷ்டம்.

//ஐயா வெளியூர் போறாராம்.இன்னிக்கு இரவு வீட்டுக்கு வர மாட்டார் என்றதும்
ஓனு கூப்பாடு போடலாமானு இருந்தது.//

கண்டிப்பாய் அப்படித்தான் இருக்கும் தனியாக எப்படி சமாளிக்க முடியும்!

ஏதோ நினைவுகள் !

வல்லிசிம்ஹன் said...

🌸அன்பின் கோமதிமா,

வாழ்க வளமுடன்.

திருமணம் ஆகி மூன்று மாதங்கள் ஆகி இருந்தன.
அதன் நினைத்ததைச் செய்யும். வழக்கம் அவருக்கு.
பாவம் மா. அம்மா. இல்லாத குழந்தைன்னு சிபாரிசு வேற:)

பிறகு நடந்தது இன்னும். சுவாரஸ்யம். புரிதலுக்கு மிக நன்றி மா.

Thulasidharan V Thillaiakathu said...

ஐயா வெளியூர் போறாராம்.இன்னிக்கு இரவு வீட்டுக்கு வர மாட்டார் என்றதும்
ஓனு கூப்பாடு போடலாமானு இருந்தது.//

அட ராமா!! அப்பா மறந்துவிட்டாரா குரங்கை!

அதனால் வந்த நஷ்டங்கள் நு எழுதியதிய ரொம்ப ரசித்தேன். அம்மா உங்களுக்கு எவ்வளவு அழகா எழுத வருகிறது!! செம..

கீதா

வல்லிசிம்ஹன் said...

Geetha maa,

"அட ராமா!! அப்பா மறந்துவிட்டாரா குரங்கை!"

அப்பா மறக்கவில்லை மா.
அவர் ஜீப்பில் வந்து இறங்கும் போதே
இதவிக்குப் படுத்துக் கொண்ட அம்மா,
அவரை நன்றாகக் கோபித்துக் கொண்டார்.

வீட்டில குரங்கு இருந்தா பிள்ளை எப்படி வளரும்னு
சொன்னாளாம்.:))

ஒரே வருத்தம். எனக்கு 18 என்றால்
அவருக்கு 26 !! இளம் வயதுதானே!!!