வல்லிசிம்ஹன்
தந்தையின் மறைவுக்கு வந்திருந்த லிசாவையும்
அவள் மகளையும் பார்த்த மார்ட்டினுக்கு
அதிர்ச்சியாகிறது.
அந்தப் பதினெட்டு வயது பெண்ணின் தலை முடி,
கண்கள் எல்லாமே அவனுடைய தாயின் சாயலைக் கொண்டிருந்தன.
அலட்சியமாக வாயில் சூயிங்கம் மென்றபடி
நின்ற அந்தப் பெண் Cathy alias Katherine
வரவேண்டுமே என்ற அசுவாரஸ்யத்தோடு ம், கோபத்துடனும் நின்ற அந்தப் பெண்ணின்
உயரம்,நிற்கும் தோரணை எல்லாம் தன்னை
ஒத்திருப்பதைக் கண்டு அவன் மனம்
பறந்தது.
'என்ன அதிசயம்' என்ன அதிசயம்' என்று
அலட்டியது அவன் மனம். லிஸாவின் கண்களைப்
பார்த்தவன் , நொந்து ,வேதனைகளைக் கடந்து
வந்த கடந்த காலத்தை ஒரு நொடியில் அறிந்தான்.
மிகக் கஷ்டப்பட்டுத் தன்னை அடக்கிக் கொண்டவன்
அவர்கள் வெளியில் வரும்போது
தாங்க் யூ என்று சொன்ன வார்த்தை
லிஸா காதில் விழ, ''மீண்டும் சந்திக்கலாம்''
என்று சொன்னபடி தன் வண்டியில் ஏறிக் கொண்டாள்.
தன்னிடம் இத்தனை நாட்களாகத் தங்கியிருந்த
பாரம் சட்டென்று இறங்கியது போல உணர்ந்தாள் லிஸா.
அருகில் வந்தமர்ந்த கேதரின், "முகம் எல்லாம் சிவந்திருக்கிறதே
மாம்? உன்னுடைய பழைய நண்பரா அவர்?"
என்று கேட்டதும், சட்டென்று தன் நிலைக்கு வந்த
லிஸா, ''நாங்கள் ஒன்றாக வளர்ந்தவர்கள்.
இப்போதுதான் திரும்பி வந்திருக்கிறார்"
என்று சுருக்கமாகச் சொல்லி வண்டியைத் திருப்பினாள்.
அந்த வயதுக்கே உய்ய குறுகுறுப்புடன் அம்மாவைப்
பார்த்த கேட்டி, என்னுடைய அப்பாவை இவருக்குத் தெரியுமா?
என்று கேட்டதும், இல்லை என்று மட்டும் தலை அசைத்து,
'' உன் நண்பர் யாரையாவது சந்திக்க வேண்டுமா?
நான் கொண்டு போய் விடுகிறேன். எனக்கு கடையில்
பழைய ஸ்டாக் எல்லாம் கணக்கெடுக்க வேண்டும்"
என்றாள்.
எனக்கு எங்கேயும் போக வேண்டாம் .
உன்னுடன் வருகிறேன்" என்று சொன்ன மகளின் குரலில்
ஒரு வித்தியாசத்தை உணர்ந்தாள் லிஸா.
Martins villa by Lakeside.
பெருமூச்சு விட்டபடி மகளை நோக்கி ,
உனக்கு என்ன சங்கடம் இப்போது?
அம்மாவுக்கு சினேகிதர்கள் இருக்கக் கூடாதா?''
இத்தனை நாட்கள் உனக்குத் தோழிகள்
மட்டும் தானே தெரியும்.. இவர் திடீரென்று
வந்திருக்கிறாரே என்று கேட்டேன்!!
'Aren't you too old to have boy friend?"
மிகவும் சிரமத்தோடு பொங்கி வந்த சினத்தை
அடக்கிக் கொண்டாள் லிஸா.
''அவர் என் ஆப்த நண்பர். பாய் ஃப்ரண்ட்
என்றெல்லாம் சொல்ல அவசியம் இல்லை.
நீ உன் எல்லை தாண்டி என்னைக் கேள்வி கேட்கிறாய்"
என்றபடி
சட்டென்று காரை வளைத்துத் தன் பொடீக் முன் நிறுத்தினாள்.
'' லிஸன் கேத்தி,
உனக்கு இப்போ என்ன பிரச்சினை என்று எனக்குத் தெரியவில்லை. என்னோடு
நேராகப் பேசலாம்"
என்ற அம்மாவைப் பார்த்தவள் நிதானமாக
'' நீ பல தோழிகள் அவர்களின் கணவர்கள்
எல்லாருக்கும் விருந்து கொடுப்பதைப்
பார்த்திருக்கிறேன். இவர் வித்தியாசமாகத் தெரிகிறார்.
நீயும் அவரும் பேசக்கூட இல்லை.
இருந்தாலும் எனக்கு சந்தேகமாக இருந்தது"
என்ற மகளின் தீர்க்கமான பார்வையை
சந்தித்த லிஸா, ''எனக்குக் களைப்பாக இருக்கிறது.
உன் ஆராய்ச்சியை இன்னோரு நாளைக்குத்
தள்ளிப்போடு. உள்ளே வந்து புது உடைகளை
வகைப் படுத்த எனக்கு உதவி செய் "
என்றபடி இறங்கினாள்.
இந்தக் கதையில் வரும் சம்பவங்கள் நிஜம்.இடம் உண்மை. பெயர்கள்,
உரையாடல்கள் கற்பனை. .......................................... மீண்டும் பார்க்கலாம்.
17 comments:
இரண்டு என்கிற எண்ணைப் பார்த்து 'ஒன்றை'த் தேடி விட்டு வந்தேன். சுவாரஸ்யமான ஆரம்பம்.
நன்றி ஸ்ரீராம்.
எனக்கு அந்தப் பழைய லிங்க்
கொடுக்கும் முறை நான் கற்றுக் கொள்ளவில்லை மா.
முதல் பதிவுக்கும் இந்தப் பதிவுக்கும் நடுவில் ஒரு வாரம் ஓடி விட்டது:)
இவர் திடீரென்று
வந்திருக்கிறாரே என்று கேட்டேன்!!
'Aren't you too old to have boy friend?"//
அங்கும் இப்படிக் கேள்விகள் கேட்கிறார்களா குழந்தைகள்!! ஆச்சரியம்..
அம்மா உரையாடல்கள் கற்பனை அசத்துகிறீர்கள் அம்மா. இதை அப்படியே எபி க்குக் கேவாபோக வுக்கு அனுப்பியிருக்கலாமே அம்மா. ரொம்ப ரொம்ப நன்றாக எழுதுகிறீர்கள். நிஜமாகவே.
உரையாடல்கள் மிக யதார்த்தம்
கீதா
அம்மா படங்கள் அட்டகாசம்....மார்ட்டின் வில்லா லேக் பக்கத்தில் இருப்பது நிஜமாக அவரது வில்லாதானா...இப்படி ஒரு இடத்தில் இருக்கமாட்டோமா என்று ஆசையாக இருக்கு...ரொம்பப் பிடிக்கும்
அந்தக் கடல்...ஆழம் கம்மியான இடமோ சின்ன மணற் நிலம் அங்கு மக்கள் தண்ணீரின் அருகில்...வாவ் செம இடம் மிக மிக் ரசித்தேன் அது எந்த இடம் அம்மா?
கீதா
கதை சுவாரசியமாகச் செல்கிறதே.
முடிவு என்னவாக இருக்கும் என்று யோசிக்கிறேன்
ரசித்து வாசித்தேன்
துளசிதரன்
அன்பின் கீதாமா,
நன்றி ராஜா.
இப்போதும் எப்போதும் மகள் தாய் உறவு மாறுவதில்லை.
அந்தப் பெண்ணுக்குத் தாய் தன்னை மட்டும் கவனித்தே
வழக்கம். முதலிலிருந்தே லிஸா எல்லோருடனும்
கலந்து பழகாமல் விரக்தியாகவே இருந்துவிட்டாள்.
அவளது திடீர் மாறுதலை
மகள் கூர்ந்து கவனிக்கிறாள்.
அவளுக்குப் பிடிக்கவில்லை. அதுதான் அவள் கேள்விக்கணைகளுக்குக் காரணம்.:)
அந்தக் கடல்...ஆழம் கம்மியான இடமோ சின்ன மணற் நிலம் அங்கு மக்கள் தண்ணீரின் அருகில்...வாவ் செம இடம் மிக மிக் ரசித்தேன் அது எந்த இடம் அம்மா?////////////////
அன்பின் கீதா, அது ஏரி மா.
நீங்கள் கண்டிப்பா இங்க வரணும். ஏரியில் கடல் போல அலை அடிக்கும்.
ப்ரைவேட் beaches உண்டு. அந்தச் சின்னத்தீவு .
ஒரு மணல் மேடு.அவ்வப்போது மூழ்கிவிடும் என்றும் சொன்னார்கள்.
இது எல்லாமே கூகிள் இமேஜஸில் கிடைக்கும்.
முதல் பேரன் பிறந்தபோது வண்டியில் நிறைய இடங்களுக்குச் செல்வோம்.
மஹராஜபுரம் சந்தானம் பாட்டு போட்டால்
குழந்தை தூங்கிவிடும்.!!!
'''அம்மா உரையாடல்கள் கற்பனை அசத்துகிறீர்கள் அம்மா. இதை அப்படியே எபி க்குக் கேவாபோக வுக்கு அனுப்பியிருக்கலாமே அம்மா. ரொம்ப ரொம்ப நன்றாக எழுதுகிறீர்கள். நிஜமாகவே''
Awww. Thank you so much dear.
அன்பின் கீதாமா,
உங்களுக்குத் தெரியுமே. நான் வளவளாவென்று
எழுதுவேன்.
எபிக்கு அது பொருந்தாதே.
சின்ன கதையாக நல்ல கரு உள்ளதாகச் சொல்ல இன்னும் எனக்குக்
கைவரவில்லை.
I am very bad at Precise writing.:)
நன்றி கண்ணா.
"கதை சுவாரசியமாகச் செல்கிறதே.
முடிவு என்னவாக இருக்கும் என்று யோசிக்கிறேன்"
கதை சுவாரசியமாகச் செல்கிறதே.
முடிவு என்னவாக இருக்கும் என்று யோசிக்கிறேன்
அன்பின் துளசி,
வந்து வாசித்ததற்கு மிக நன்றிமா.
நடந்ததைக் கொஞ்சம் மெருகு ஏற்றிச் சொல்கிறேன்.
முடிவு என்றுமே சுபம் தான் நம் கதைகளில்:)
அருமையாக இருக்கிறது கதை. கதை சொல்லிய விதம் அருமை.
படங்கள் எல்லாம் அழகு.
அந்த வீடு படம் மிக அழகாய் இருக்கிறது.
உரையாடல் கற்பனை என்றாலும் மிக அருமையாக உரையாடலை அமைத்து இருக்கிறீர்கள்.
அன்பின் கோமதிமா,,
வாழ்க வளமுடன். நல்ல கருத்துக்கு மிக நன்றி. என்ன நடந்தது என்று தெரியும். மற்ற விஷயங்களைக் கறபனையில் சொல்ல வேண்டியதுதான் மா!
அன்பின் கோமதி மா, பேசுவது நமக்குப் பிடித்ததே பேச்சு தானே:)
பேசாமல்் போவதால் பிரச்சினைகள் எழுகின்றன.இங்கேயும் பேசித் தீரட்டும். நன்றி மா.
மகளுக்கும் தாய்க்குமான சம்பாஷணைகள்....
மேலும் எப்படிப் போகப் போகிறது என்பதை அடுத்த பகுதியில் படிக்க இதோ செல்கிறேன்.
விறுவிறுப்பாக எழுதி வருகிறீர்கள். உண்மைச் சம்பவமா? ஆச்சரியமா இருக்கே! இடங்கள் மிக அழகாக இருக்கின்றன. லிசாவும் அவள் மகளும் பேசிக்கொள்வது சுவாரசியமாக இருக்கு. அந்த வயசுக்கே உரிய கேள்விகள் மகளிடம். அம்மாவோ மகளிடம் பகிர்ந்து கொள்ளவில்லை. எனக்கென்னவோ லிசா கல்யாணம் ஆகாமலேயே மார்ட்டினின் குழந்தையைச் சுமந்து கொண்டு வளர்த்து வருகிறாளோ எனத் தோன்றுகிறது.
அன்பின் வெங்கட் ,
நன்றி மா. மிக சிக்கலான உறவுகளிக் குழந்தைகளுக்கு
விளக்குவது கடினம். அதுவும் பதினெட்டு
வயதுப் பெண்ணிடம் புரிய வைப்பது இன்னும்
சிரமம்.
அன்பும் கரிசனமும் மட்டும் உபயோகப் படும்.
நல்லதே நடக்கும்.
அன்பின் கீதாமா,
நடந்த கதை தான். சில கற்பனை சம்பாஷணைகளை ஏற்றி
இருக்கிறேன்.
லிஸா மணம் முடித்ததற்கே அவள் கர்ப்பம் தரித்ததே
காரணம். மார்ட்டினின் குழந்தைதான் கேத்தி.
அது அந்தப் பெண்ணிற்குத் தெரியாது. ஆத்திரப்
படுகிறது.
தொடர்ந்து படித்ததற்கு நன்றிமா.
Post a Comment