Blog Archive

Saturday, September 18, 2021

நெல்லைக்குப் போகலாமா. ஒரு பயணம்!

முன்பு சென்ற இடங்களெல்லாம் மனதில் 
நிழலாகச் செல்ல,

அவசரப் பயணமாக நெல்லை சென்று வந்தது ஒரு 
கனவு போலத் தோன்றுகிறது.
பல நல்லவர்களின் விளை நிலமாக
இருக்கும் நெல்லைத் தாமிரபரணி தீரம் 
1995இல்  இருந்து  திட்டமிட்டு 2019இல் 
நிறைவேறியது.

திருக்குறுங்குடி, கீழ நத்தம், திருக்குருகூர் -ஆழ்வார் திரு நகரி
இவையே வரித்திட்ட ஸ்தலங்கள். 

தந்தை ஊர், தாயின் ஊர், குரு,ஆச்சார்யனின் 
ஊர் என்று திட்டம் இட்ட மனம்.

சென்னையிலிருந்து மதுரைக்கு விமானம். பழங்கா நத்தத்தில்
தங்கல்.
அடுத்த நாள் வாடகைக்காரில் திரு நெல்வேலிக்குப் 
பயணம். பழகிய இடங்கள் ஒன்றுமே கண்ணில் படவில்லை.
திருப்பரங்குன்றம் கோயிலும் ,மலையும் ,கப்பலூரும்
கண்ணில் பட்டன. திருமங்கலத்தைதாண்டி விரைந்த வண்டியின்

ஓட்டுனருக்கு சகல அரசியலும் தெரிந்திருந்தது.
வேண்டுமோ வேண்டாமோ அத்தனையையும்
காதில் திணித்தார்.

சிங்கமாயிருந்தால் ஒரு அதட்டலில் நிலமை மாறி இருக்கும். 
மகன்கள்  இருவரும் மரியாதை நிமித்தம்
பொறுத்துக் கொண்டு வந்தார்கள்:)

மனம் 71 வருட வாழ்க்கையின் ஒவ்வொரு 
சம்பவங்களையும் அசை போட்டுக் கொண்டு 
முன்னோர்கள் இருந்த இடங்களையும், கோவில்தெய்வங்களையும் மனதுருக வேண்டிக்கொண்டு 
வந்தோம்.
இதோ இன்னும் ஒரு புரட்டாசி ,ஐப்பசி வந்துவிட்டது. 



Nammazhvaar

அனைவரும் நலமுடன் இருக்க இறைவன் துணை.




வல்லிசிம்ஹன்

கற்பனையிலாவது ரயிலில் போகலாமே என்ற ஆசைதான். :)

16 comments:

மாதேவி said...

ஊர் செல்லும் ஆசை வந்துவிட்டதா?
காலம் சரியானால் உங்கள் ஆசை நிறைவேறும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் மாதேவி,
ஊரை விட்டு வந்தது முதல் ஊர் நினைவுதான்.
அதனால் எழுதிக் கொண்டிருப்பேன். நன்றி மா.

கோமதி அரசு said...

நினைவுகள் அருமை.

//திருக்குறுங்குடி, கீழ நத்தம், திருக்குருகூர் -ஆழ்வார் திரு நகரி
இவையே வரித்திட்ட ஸ்தலங்கள். //

இந்த பயணத்தின் போது மதுரை வந்தீர்கள். மதினி வீட்டு பூஜையில் கலந்து கொள்ள வந்து விட்டதால் உங்களை பார்க்க முடியவில்லை. அந்த வருத்தம் மனதில் இருக்கிறது.

ஸ்ரீராம். said...

// வேண்டுமோ வேண்டாமோ..  அத்தனையையும் காதில் திணித்தார் //

ஹா..  ஹா..  ஹா..

பயணம் வருபவர்கள் அந்தந்த இடங்களைப் பார்க்கும்போது தங்கள் குடும்பத்துக்குள் பேச பல பழைய நினைவுகள் இருக்கும்.  இதுபோன்ற குறுக்கீடுகள் எரிச்சலூட்டுபவை!

நீங்கள் சென்றுவந்தபின் இது இரண்டாவது புரட்டாசி!  சென்றமுறை நீங்கள் நெல்லைப் பயணம் புறப்படும் முன் நாம் சந்தித்தோம் என்று நினைவு!

கோமதி அரசு said...

ரயில் பயணம் நனறாக சொல்கிறார் அந்த பையன்.

Thulasidharan V Thillaiakathu said...

பழகிய இடங்கள் ஒன்றுமே கண்ணில் படவில்லை.//

அம்மா நான் அவ்வப்போது முன்பு சென்று வந்த எனக்கே அங்கு ஒன்றும் கண்ணில் படவில்லை உங்களுக்குக் கண்டிப்பாக மாற்றம் பெரிதாகத் தெரிந்திருக்கும்.

அம்மா நெல்லைக்க்குப் போகலாமா என்ற தலைப்பைப் பார்த்ததும் நான் உணர்ச்சிவசப்படுவிட்டேன். போக வேண்டும் என்ற ஆசை மனதில் ரொம்பவே வந்துவிட்டது. முழுவதும் வாசித்துவிட்டு வருகிறேன்

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

ஓட்டுனருக்கு சகல அரசியலும் தெரிந்திருந்தது.
வேண்டுமோ வேண்டாமோ அத்தனையையும்
காதில் திணித்தார்.//

புரிந்து கொள்ள முடிகிறது. எனக்கும் பிடிக்காத விஷயம்.

திருக்குறுங்குடியைப் பார்த்ததும் ரொம்ப உணர்ச்சிவசப்பட்டுவிட்டேன் அம்மா. வீடியோ கேட்கிறேன்

அதுவும் நம்பிமலைக்குப் பலமுறை பயணம் செய்த நினைவுகள். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு மாதிரி இருக்கும் மலை...கோயில் அங்கிருக்கும் சிறு அருவி...எல்லாமே. இப்போது கோயில் ரொம்பவே மாறி இருப்பதாகத் தெரிகிறது. முன்பக்கம் நிறைய இடம் வைத்துக் கட்டியிருப்பதாகத் தெரிகிறது.

ஊரைக் காட்டியதற்கு மிக்க நன்றி அம்மா

கீதா

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதிமா,
வாழ்க வளமுடன்.

ஆமாம். அந்த தொலைபேசி உரையாடலை நினைத்துக்
கொண்டே எழுதினேன், செய்தி விட்டுப் போனதுமா.

மகன்கள் இருவருக்கும் விடுமுறை குறைவு.
கிடைத்ததே நாலு நாட்கள்.
நெல்லையிலிருந்து நேரே விமான நிலையம்
வந்துவிட்டோம்.
மதுரையைச் சுற்றியும் பார்க்கவில்லை.

உங்களையும் பார்க்க முடியவில்லை. வருத்தம் தான்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம்,

திருநெல்வேலி போய் வந்த பிறகே
உங்களை எல்லாம் சந்தித்தேன் என்று நினைக்கிறேன்.
பழைய பதிவுகளைப் பார்த்தால் தெரியும்.

சிங்கம் நினைவு நாள் ஐப்பசி. அதைப் பூர்த்தி செய்து கொண்டு மறுனாள்
நெல்லை கிளம்பினோம். 16 ஆம் தேதி ஜகார்தா கிளம்பியாச்சு.
14 ஆம் தேதி உங்களையும்,பாஸையும் பானு,ரமா, ஸ்ரீனிவாசன்'
எல்லோரையும் சந்தித்ததாக நினைவு.

அந்த டிரைவரை இப்போது நினைத்தால் சிரிப்பாக வருகிறது.
அப்பொழுது அலுப்பாக இருந்தது.
வண்டியின் வேகம் பயம் கொடுத்தது:))))
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதிமா,

இது போலப் பயணங்களை வெகு நாட்களாகப்
பார்த்து வருகிறேன்.

இவர் சொல்லும் நம்மூர் ரயில் பயணங்கள் சிறப்பு.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,
அச்சோ பாவம். அப்பா நினைவு வந்திருக்கும் உங்களுக்கு.
எப்படி எல்லாம் மாட்டிக் கொள்கிறோம் நாம்.!!!!

மனிதர்கள் மாறி வீடுகள் மாறி,கிராமங்களும் மாறி விடுகின்றன.

உங்களுக்கும் ஒரு வாய்ப்பு கிடைக்க வேண்டும்.
நம்பியை நம்புவோம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,
மலை மேல் நம்பி சென்று பார்க்கவில்லை.
நிறைய மாறி இருப்பதாக
பட்டர் ஸ்வாமி சொன்னார்.
பழமை மாறாமல் இருந்தால் நன்றாக
இருக்கும்.
இன்னும் அந்த மலையைக் கோடை வாசஸ்தலம்
ஆக்காமல் விட வேண்டும்:(

நெல்லைத் தமிழன் said...

கீழநத்தத்தில் படமே எடுக்க வில்லையா?

இந்த எல்லா இடங்களுக்கும் இரு வருடங்களுக்குள் சென்றிருந்தேன். 2018லிருந்து மூன்று தடவைகளுக்கு மேல் இந்த இடங்களுக்குச் சென்றிருக்கிறேன்.

என் தாத்தாவின் ஊர் திருக்குறுங்குடியாக இருக்கலாம். அவர் பெயர் நம்பி ஐயங்கார். அவர் வாரிசுகளின் பசங்களுக்கும் இந்தப் பெயர் உண்டு. நான் வளர்ந்தது (to some extent) கீழநத்தம். அங்கிருந்து நடந்து பாளையங்கோட்டை சேவியர் பள்ளியில் படித்தேன். பதின்ம வயது, எல்லாவற்றிலும் ஆசை இருக்கும், மற்றவர்களோடு கம்பேர் செய்ய நினைக்கும், பெண்கள் முன்னால் பெருமிதத்துடன் இருக்கணும் என்ற எண்ணம் வரும்...இத்தனைக்கும் வாய்ப்பே இல்லாமல் வாழ்ந்ததை (எளிமை என்பது எங்கள் பெரியப்பாவின் தாரக மந்திரம்) நினைத்துச் சில நேரங்களில் மனதுக்கு ரொம்பவே சங்கடமாக இருக்கும்.

வல்லிசிம்ஹன் said...

https://naachiyaar.blogspot.com/2019/11/11-5.html

அன்பின் முரளிமா,
முன்பே படங்கள் போட்டு நவம்பர் 2019இல்
பதிவும் போட்டு நீங்கள் பின்னூட்டமும்
போட்டு இருந்தீர்கள்.

வல்லிசிம்ஹன் said...

திருக்குறுங்குடி தான் என் பாட்டி திருவேங்கடம், தாத்தா ஸ்ரீனிவாசய்யங்கார்
இருவருக்கும்
சொந்த ஊர்.
பாட்டியின் தந்தை நம்பி ஐய்யங்கார்.
அந்த ஊரில் திரும்பினால் ஒரு நம்பி இருந்திருப்பார்
என்று நினைக்கிறேன்.
ஆனால் டிவிஎஸ் நிறுவன நம்பி மாமாவும் அங்கே இருந்தார்
என்று அப்பா சொல்லிக் கேள்வி.
உங்கள் தாத்தாவுக்கும் அந்த ஊர் என்றால்
நாம் எல்லோரும் கீதா ரங்கன் உள்பட அங்கே இருந்து வந்திருக்கிறோம்.!!!!!

கீழ நத்தம் அம்மாவழித் தாத்தாவின் ஊர்.
அதனால் தான் இரண்டு ஊர்களுக்கும் சென்றோம்.
ஸ்ரீ வேணு கோபாலனையும் தரிசித்துக் கொண்டு
ஒரு மூன்று மணி நேரம் அங்கே தங்கினோம்.

அப்பாவின் மாமா பெயர் கூட சேஷன் தான்.
அவர் மகன் ராஜாமணி ஹிந்துஸ்தான் லீவர்
சி ஈ ஓ வாக இருந்தார். இதெல்லாம் 30 வருடங்களுக்கு
முந்திய செய்தி:)
இப்போ தொடர்பே இல்லை.

வல்லிசிம்ஹன் said...

நினைவுகளோடு பயணம் செய்துவிட்டோம்
அன்பு முரளிமா.
நல்ல நலமுடன் இருங்கள். நம்பியும் வேணுகோபாலனும்
நம் எல்லோருக்கும் துணை இருக்கட்டும்.