Blog Archive

Saturday, August 21, 2021

ஒரு மழைக்கால வேண்டுதல்.

வல்லிசிம்ஹன்

கருணையோடு மழைதர வரும்
கரியவாய கருமேகங்காள்
அரியதாய திருப் பாசுரங்கள் 
அறிய எண்ணும் ஓர் மாலையில்
 
படிக்க எண்ணிப் பிரபந்தம் பிரிக்கக்
கொடும் இடி கொண்டு கூர்மழை பெய்தால்
அடிமை நான் அரியை அறிவது எக்கணம்?
கடுமழையால் எம்மை வாட்டாமல்
அரி அவன் புகழ் நான் பாட
அருள் கூர்ந்து இக்கணம்

கடுகிச் செல்கவே வேறெங்கிலும்.

இது மழை நிற்கப் பாடியது.கவிதை என்று யாரும் தவறாக நினைக்க வேண்டாம்.

15 comments:

கோமதி அரசு said...

கவிதை அருமை.
இடி பயமுறுத்துகிறதா?

//படிக்க எண்ணிப் பிரபந்தம் பிரிக்கக்
கொடும் இடி கொண்டு கூர்மழை பெய்தால்
அடிமை நான் அரியை அறிவது எக்கணம்?
கடுமழையால் எம்மை வாட்டாமல்
அரி அவன் புகழ் நான் பாட
அருள் கூர்ந்து இக்கணம்//

அந்த ஆண்டாள் ஆழி மழைக் கண்ணா! என்று பாடி சரமழை கேட்டாள்.
இந்த ஆண்டாள் கடு மழையால் வாட்டாதே! என்கிறார்.

அங்கு உள்ள குழந்தைகள் தொடர் மழையால் விளையாட முடியவில்லை என்பதால் மழையை போகச் சொல்லி பாடினார்கள்.
நீங்கள் பிரபந்தம் நிம்மதியாக பாட மழை வேண்டாம் என்று கேட்கிறீர்கள்.

கேட்டவருக்கு கேட்டபடி கொடுப்பவர் அவர் நீங்கள் கேட்டதை அருள்வார்.

வல்லிசிம்ஹன் said...

மேகம் கறுத்து மழை கொட்டப் போகிறது
என்று நினைத்தபோது எங்கள் வகுப்பு
பாதிக்கப் படாமல்
சூரியனார் வந்துவிட்டார். வகுப்பும்
நன்மையாக நடந்தது. நன்றி வருண பகவானே:)

கோமதி அரசு said...

பிரபந்த வகுப்பில் கலந்து கொள்கிறீர்களா? இணையம் மூலமா?
நல்லது. நல்ல பொழுதாக இறை சிந்தனையுடன் போவது மகிழ்ச்சி.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதி.வாழ்க வளமுடன்.
மழை வேண்டாம் என்று சொல்வது தவறு தான்.:)
சரியாக அந்த நேரம்,இந்த சத்தம் வந்தால்,அவர்கள் சந்தம் சொல்வது கேட்காது.வாரம் முழுவதும் சொல்லப் பழகியது விட்டுப் போகும்.

வல்லிசிம்ஹன் said...

உங்கள் வார்த்தைகள் சொன்னபடி மழை நியூயார்க்கில் சக்கை போடு பொடுகிறது. அங்கே ஏற்பாடு செய்திருந்த பாட்டுக் கச்சேரியை ரத்து செய்து விட்டார்கள். இடியும் மின்னலும் தாக்கக் கூடும் என்ற பயம் எல்லோருக்கும் உண்டானதே:( எத்தனை nashtamo இதனால் தெரியவில்லை.

ஸ்ரீராம். said...

அம்மா..   அருமையாய்க் கவி பாடி விட்டீர்கள்.  கிருஷ்ணபகவான் கவிதையில் மயங்கி மலையைத் தூக்கி குடையாய்ப் பிடித்து விட்டானோ...

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம்,
இனிய காலை வணக்கம்.
வார்த்தைப் பதிவுக்குக்
கவிதை முத்திரை விழுந்துவிட்டது என் அதிர்ஷ்டம்.

வெய்யில் காலத்தில் இங்கே மழை பெய்வது
வெகு சகஜம். வயது முதிர்ந்த நிலையில்
கொஞ்சமாவது நல்ல காரியம் செய்ய ஆசை.

கண்ணன் அருளால் மழை இங்கே வராமல்
வேறெங்கோ சென்றது.
அவனும் பாபாவும் பார்த்துக் கொண்டார்கள்.

கோமதி அரசு said...

இன்னொரு பின்னூட்டம் கொடுத்து இருந்தேன் காணவில்லையே!

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதிமா,

ஜிமெயிலில் வந்த பின்னூட்டங்களை பதிவிட்டு விட்டேன்.

கடவுள் கிருபையால் இரண்டு வகுப்புகளில் சேரந்திருக்கிறேன்்இசையுடன் சொல்லித் தருவதால்.,

சுவையாக இருக்கிறது. சங்கடங்கள் மறக்க இறைவன் அருள்கிறான். நன்றி மா.

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை...

வெங்கட் நாகராஜ் said...

கவிதை நன்று.

vaanampaadi said...

அன்புள்ள வல்லிம்மா, தங்கள் பாசுரம் கேட்டு அந்த கார்முகில் வண்ணன், கார் மேனி செங்கண் , கதிர்மதியம் போல் முகத்தான், தன் கருணை என்னும் மழையால் அங்கு பொழியும் பெருமழையையும், இடியையும் இடித்துரைப்பாராக...நாச்சியார் எழுதிய நல்லதொரு பாசுரம் படித்த மகிழ்ச்சி!

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன், மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட் ,
வருகைக்கும் கருத்துக்கும் மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...




அன்பின் வானம்பாடி,
பாசுரம் என்றே சொல்லிவிட்டீர்களா!!
அவள் பெயர் மட்டுமே தாங்கி நிற்கிறது
என் பதிவு.

அன்று இருந்த ஆற்றாமை எழுத்துகளை இங்கே
கொட்டிப் போனது. அவ்வளவு தான். நீங்கள் வந்து
பாராட்டுவதே பெரிய மகிழ்ச்சி.
எண்ணம் சுரமானால் எழுத்து பாசுரம்.
மிக நன்றி மா.