ஆங்கிலக் காவியம் ஒன்றில்
'ஆயிரம் கப்பல்களைக் கடலில் இறக்கிய முகம்'
என்ற பாராட்டு ஒரு கதா நாயகிக்கு உண்டு.
ஹெலன் ஆஃப் டிராய்.
நம் ஹீரோ ஜயகாந்தன் சார் பல மனங்களை
பல்வேறு திசையில் செலுத்தினார்.
அவர் எழுதிய பல சிறுகதைகளை விகடன் தளத்தில்
அறுபது வருடங்களுக்கு முன் படித்ததை
இப்போது திருமதி பாரதி பாஸ்கர் கதையாகப்
படிக்க மீண்டும் அறியும் அனுபவிக்கும்
காலம் வந்திருக்கிறது.
இப்போது நிறைய யூடியூப் இணைய தளத்தில்
காணக் கிடைக்கிறது.
ஆகச் சிறந்த கதை சொல்லிகளாக திரு.பவா செல்லத்துரையும்,
திருமதி பாரதி பாஸ்கரும் கோலோச்சுகிறார்கள்.
அவர்கள் கையிலெடுக்கும் எழுத்தாளர்களும்
வல்லமை கொண்டவர்கள்.
மிக அனுபவித்துக் கேட்ட கதை ஹீரோ சீதாராமனின் கதை.
எத்தனையோ குடும்பங்களில் சர்வ சாதாரணமாக நடப்பதைக்
கேள்விப்பட்டிருக்கிறேன்.
ஆனாலும் இந்தக் கதையில் வரும் மதுரம்
ஏமாற்றீய தன் கணவனை விலக்கும் விதம்.
முதலில் படிக்கும் பொழுதும் அதிர வைத்து மகிழ்ச்சி கொடுத்தது.
இப்போதும் அதே உணர்ச்சி. இந்த உள்ளக் கோலங்களை எங்கிருந்து
கற்றாரோ நம் ஜெயகாந்தன்.
என் சகோதரிகளில் ஒருவர் ஜெகேயிடம் கொண்டிருக்கும் ஈடுபாடு சொல்லி முடியாது.
அதே மூச்சில் தி.ஜா வையும் படிப்பாள்.
அவளோடு விவாதம் புரிந்த நாட்கள் பசுமை.
நன்றி அன்பு சுபா.
இங்கே ஜெகே அவர்களின் முத்திரைக் கதையைப்
பதிப்பதில் மிக மகிழ்ச்சி அடைகிறேன்.
9 comments:
திருமதி. பாரதி பாஸ்கர் மிகச்சிறந்த பேச்சாளர் பிறகு கேட்கிறேன் அம்மா
நல்ல கதை. மதுரம் தன் பலம் அறிந்து கொண்டாள், தன் சுயத்தை உணர்ந்து கொண்டாள். இது போன்ற மதுரங்கள் இப்போது பெருகி வருகிறார்கள். இனியும் சீதாராமன் போன்றவர்கள் ஏமாற்ற முடியாது.
திரு பவா செல்லத்துரை அவர்களின் பேச்சை என் மாமா கே ஜி வொய் பரிந்துரைத்து சிலதடவை கேட்டிருக்கிறேன். பாரதி பாஸ்கர் பட்டி மன்றங்களில் பேசும்போது கேட்டிருக்கிறேன். பொதுவாக யாராவது கதை வாசிப்பதை நான் கேட்பதில்லை. இதைப் பார்க்கிறேன்.
ஜெயகாந்தன் கதைகளுக்கு - அவரது எழுத்துகளுக்கு -கேட்க வேண்டுமா...
அருமை
இனிய சுதந்திர நாள் வாழ்த்துகள்.
அன்பு தேவகோட்டைஜி,
நலமுடன் வாழ்க. நிதானமாகக் கேளுங்கள் அப்பா.
அன்பு தங்கை கோமதி ,
வாழ்க வளமுடன். எங்கும் சுதந்திரம் என்றும் வளரட்டும். ஆமாம் சீதாராமன்கள்
விரட்டப் பட வேண்டிய காலம் வந்தாகிவிட்டது. போதும் பெண்கள் ஏமாந்தது.
நல்ல வார்த்தைகள் சொன்னீர்கள். நன்றி மா.
அன்பின் ஶ்ரீராம், கதை கேட்பது
மிகப் பிடித்திருக்கிறது மா. புத்தகங்கள் நிறைய இல்லை.
அதனால் இவர்கள் படித்து சொல்வது பிடித்திருக்கிறது மா.
ஆமாம் ஜெகே எழுத்துக்கு ஏது இணை?
நம் மனதை அப்படியே படித்துச் சொல்லி விடுவார். நன்றி மா.
அன்பு யாழ் பாவாணன்,
மிக நன்றி மா.
தங்களுக்கும் வாழ்த்துகள்.
பாரதி பாஸ்கர் அவர்களின் குரலில் ஜெயகாந்தன் அவர்களின் கதை. ஒரு சில நூல்களின் ஒலி வடிவத்தினை கேட்டேன் - ஸ்ரீராம் சொல்வது போல எனக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை - படிப்பது போல வரவில்லை.
கேட்டுப் பார்க்கிறேன்.
Post a Comment