Blog Archive

Wednesday, July 07, 2021

இங்கே சில நிலவரங்கள்.

வல்லிசிம்ஹன்
அமைதி வேண்டும். பிரார்த்தனைகள்.


ஃப்ளாரிடா  மானிலத்தில் நிகழ்ந்த 

கட்டிட அழிவு,அது சரிந்த விதம் எல்லாமே பத்து 
நாட்களாகத் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.
40 வருடங்கள் தான் ஆகிறது அந்த அடுக்கு மாடிக் கட்டிடம் கட்டி.
நடு நிசி வேளையில் ஒரு அறிவிப்பில்லாமல்
சரிந்து எண்ணற்ற உயிர்களைப் பலி வாங்கி இருக்கிறது.

கண் கொண்டு பார்க்க முடியாத பிம்பங்கள்.
எல்லா வயதுக்காரர்களும் இதில் அடங்கும்.

இதிலிருந்து தப்பித்தவர்கள், அந்த வேளையில் வெளியில் இருந்தவர்கள்,
மனைவி வெளியிலிருக்க உள்ளே மாட்டிக் கொண்ட குடும்பம்,
எங்கிருந்தோ விடுமுறைக்கு வந்திருந்த மாணவன்
இப்படி நீள்கிறது  பட்டியல்.
எப்பவோ பார்த்த 'ரமணா' படம்தான் நினைவுக்கு 
வந்தது. 
கடற்கரையோரமாக இருக்கும் இந்த அடுக்குமாடிக் 
கட்டிடங்கள்
உப்புக்காற்றால் அரிக்கப் பட்டிருக்கலாம்,
அஸ்திவாரம் பலமில்லாமல் மணலில் 
இறங்கி இருக்கலாம்.
கட்டிட விரிசல்களைக் கவனிக்காமல் விட்டார்கள்.
அடிமட்டத்தில் தண்ணீர் தேங்கி இருந்திருக்கிறது.

இதெல்லாம் இப்போது சொல்கிறார்கள்.


இனித் தேசமெங்கும் இருக்கும் உயர்ந்த, 100,108,120
மாடிகளைக் கொண்ட கட்டிடங்களில்
இருப்பவர்கள் என்ன என்ன என்று பயப்படுவார்களோ:(

துபாயில் மணல் பிரதேசத்தில் எழும் கட்டிடங்களைப்
பார்க்கும் போது அளவில்லாத கவலை ஏற்படும்.

அங்கு உலகப் பிரசித்தி பெற்ற நிபுணர்களே
கட்டுகிறார்கள். 
பணம் பணம் மேலும் பணம்.

நேற்று புது செய்தி ஸான்ஃப்ரான்சிஸ்கோ 
நகரக் கட்டிடம் ஒன்று 18 அங்குலம் சாய்ந்திருக்கிறதாம்.
அதைக் கட்டியவர்  அந்த இடத்தை விட்டு வெளியேற
வெண்டும் என்பவர்களுக்குப் பணம் கொடுத்ததும்,
உடனே மூட்டை முடிச்சோடு வெளியேறின சிலரைப் பாராட்டத் தோன்றியது.

இன்னும் அங்கு குடியிருப்பவர்கள். அவ்வளவு பணத்தை
தங்கள் தங்கள் வீட்டில் கொட்டி இருக்கிறார்களாம்.
ஆயிரக்கணக்கில் இல்லை. கோடிகள் கணக்கில்.
என்ன செய்யப் போகிறார்களோ.!!!!

நல்ல செய்தி, இந்த மாகாணத்தில் இரண்டு நாட்களாகத் தொற்றே
இல்லையாம். மற்ற மானிலங்களை விட 
இங்கே தடுப்பூசி போட்டுக் கொண்டவர் சதவிகிதம் அதிகமாக இருக்கிறதாம்.

இருந்தும் கவனம் வேண்டும் என்றே எச்சரிக்கை
செய்கிறார்கள்.
நமக்கு இப்படியே பழகிவிடப் போகிறது.

உலகம் முழுவதும் இறைவன் கரங்களுக்குள்
அடங்கி இருக்கிறது. அனைத்து உயிரையும்
அவன் காக்க வேண்டும். நலம் செழிக்கட்டும்.





24 comments:

ஸ்ரீராம். said...

ஒரு பக்கம் இடிந்து மறுபக்கம் அப்படியே புதுக்கருக்கு மாறாமல் நிற்கிறது கட்டிடம்.  பார்க்கவே பயங்கரமாய் இருக்கிறது. அதில் வசித்தவர்களின் முடிவு இபப்டி வந்திருக்க வேண்டாம்.  கொடூரம்.

ஸ்ரீராம். said...

சென்னையில் புதிய கட்டிடம் ஒன்று முகலிவாக்கத்தில் சரிந்தது.  நலல்வேலை அதில் யாரும் அதுவரை குடிபுகவில்லை.  ஆனால் அதில் போட்ட பணம் அவர்களுக்கு இன்னும்தான் கிடைத்துக்கொண்டிருக்கிறது என்று   நினைக்கிறேன்.

Geetha Sambasivam said...

ஃப்ளோரிடாச் செய்தி கேள்விப் படலை. சான்ஃப்ராஸிஸ்கோ பற்றியும். இங்கேயும் இப்படி ஒரு கட்டிடம் சில ஆண்டுகள் முன்னர் விழுந்தது. மும்பையில் பழைய கட்டிடங்கள் நிறையவே விழுகின்றன. செய்திகள் மனதை வருத்துகின்றன. ஆனாலும் என்ன செய்ய முடியும்! :)

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்,

அத்தனை ஆயிரம் வாலண்டியர்கள் இன்னும்
கற்களை அகற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

இடிபாடுகளிலிருந்து முதலில் ஒருவர் மீண்டார் இனிமேலும்
மீள்வார்கள் என்று நம்பிக்கை குறைந்து வருகிறது.

நம் ஊர் முகலிவாக்கம் பற்றி படித்தேன்.
மும்பை மழை வரும்போதே பழைய கட்டிடங்கள்
பலியாகும் .படித்த நினைவு உண்டு.
கவனக்குறைவுகள் தான் காரணம் இங்கே.

நான் இந்த செய்திகளைப் பார்ப்பதை நிறுத்தி விட்டேன்.
படிப்பதோடு சரி.

வல்லிசிம்ஹன் said...

இடியாமல் இருந்த ஒரு பக்கப் படிகள் வழியே முதிய மாது
ஒருவர் இறங்கி வந்து பிழைத்திருக்கிறார்.
என்ன சொல்வது.
பாவம் மா.
பண விஷயத்தில் நேர்மை இருக்கிறது. நம்மூர் மக்கள்
நிலைமை பரிதாபம்.

KILLERGEE Devakottai said...

துபாயில் ஒரு கட்டிடத்தின் வயது இருபது ஆண்டுகள் மட்டுமே அம்மா.

நான் பல கட்டிடங்கள் கட்டுவதையும், இடிப்பதையும் பார்த்து இருக்கிறேன்.

அதே நேரம் ஓர் கட்டிடம் கட்டும்போது பார்த்தேன் அதே கட்டிடம் இருபது ஆண்டுகள் கடந்து இடிப்பதையும் பார்த்தேன்.

உலகில் மனிதர்களின் அட்டூழியங்கள் பெருகி விட்டது. மனித அழிவுகளும் பெருகி விட்டது. இறையே துணை.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,

இங்கே அதுதான் முதல் செய்தி. நடு செய்தி,கடைசி செய்தி
என்று எல்லா சானல்களிலும்
செய்தி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.
தப்பவே முடியாது.

ஆமாம்.நல்ல செய்திகளை கேட்கதான் ஆசை.
நம் எங்கள் ப்ளாகில் தான் படிக்க வேண்டும்.

ஒரு விஷயத்திலும் ஒன்றும் செய்ய முடியவில்லை மா.

திண்டுக்கல் தனபாலன் said...

கொடூரமான நிகழ்வு...

வெங்கட் நாகராஜ் said...

இடிந்த கட்டிடம் - குடித்த உயிர்கள்... வேதனை. படிக்க/பார்க்கவே வேதனை தான். அங்கே இருந்தவர்களின் நிலை குறித்த வேதனை மனதில்.

இரண்டு நாட்கள் தொற்றில்லாமல் - நல்ல விஷயம்.

முற்றும் அறிந்த அதிரா said...

நியூஸ் படிச்சு வேதனையாகவே இருந்தது.. உலக அழிவு என்பது இப்படித்தான் போலும்.. எங்கு பார்த்தாலும் ஏதோ ஒரு வகையில் மரணங்கள்:((

நெல்லைத் தமிழன் said...

கட்டிடம் இடிந்த செய்து...ஐயோ என்று இருக்கிறது. இடிபடாத பகுதிகளில் இருந்தவர்கள் மனதில் என்ன ஓடியிருக்கும்? அவங்க பாவம் என்றா, ஐயோ நம்ம தப்பித்தோம் என்றா?

100 மாடி கட்டிடங்களும் அதற்கு மேலுமா..... 100 வது மாடியிலிருந்து தேவர்கள் நடப்பதைப் பார்ப்பார்கள் போலிருக்கே

கோமதி அரசு said...

கட்டிடங்கள் உடந்து இருப்பதை பார்க்கும் போது மனது மிகவும் வேதனை படுகிறது.
இயற்கையின் சீற்றம் ஏன் என்று இன்னும் புரிந்து கொள்ளவில்லையோ நாம்.
இறைவன் ஏன் இப்படி ஒரு அழிவுகளை தருகிறார்?
நிறைய கேள்விகள் மனதில் எழுகிறது.

மேலும் மேலும் இந்த மாதிரி சோதனைகளை தர வேண்டாம் இறைவா என்று வேண்டுவோம்.

கரந்தை ஜெயக்குமார் said...

கட்டிடங்களின் நிலை வேதனையைத் தருகிறது

Bhanumathy Venkateswaran said...

படிக்கவே வேதனையாக இருக்கிறது.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் தேவகோட்டை ஜி,
துபாயில் கட்டி, அழித்து விட்டு மீண்டும் கட்டுவார்களா?
எனக்கு அது தெரியாதுமா.

அப்போது அவர்கள் ஜாக்கிரதையாக இருக்கிறார்கள் என்று தானே பொருள்!!
பல மாடிக் கட்டிடங்கள். ஷேக் ஷாயித் சாலையில்
மாறாமல் இருப்பதையும் பார்த்திருக்கிறேன்.

இன்னும் ஆழ்ந்த ஆராய்ச்சிகளுக்குப் பின் கட்டி இருப்பார்களாக
இருக்கும். ஜெர்மனியிலிருந்து வந்த இஞ்சினீயர்கள்
2012 இல் வேலை செய்து கொண்டிருந்தார்கள்.
எப்படியோ பணத்துக்காக மக்களை விடாமல் இருந்தால் சரி.

நன்றி மா. நலமுடன் இருங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் தனபாலன்,
இருப்பிடம் ,இறைவன் என்று நாம் நம்புகிறோம்.
கட்டுபவர்களும் அதையே நம்பினால் தான்
எதிர்காலம் நன்றாக இருக்கும். நன்றி மா.
நலமுடன் இருங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட்,
உண்மைதான் மா. அந்த இடிந்து விழுந்த வீடியோ
கூடக் காண்பித்துக் கொண்டே இருக்கிறார்கள்.
எல்லா இடத்திலும் காமிரா இருக்கிறதே
அப்படியே விழுவதைப் படமாக்கி இருக்கிறது.
பரிதாபம் மா.
இறைவன் அருளால் எல்லோரும் நலமாக இருக்க
பிரார்த்தனைகள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் அதிரா,
உண்மைதான் அம்மா. நம் ஊரில் எல்லாமே செங்கல் கான்கிரீட்
ஆனது.
இங்கும் இந்த அழிவு நடந்த இடத்தில்
செங்கல் கட்டிடம் என்றுதான் சொல்கிறார்கள்.
கண்கொண்டு காது கொடுத்துக் கேட்க முடியவில்லை.

அஸ்திவாரம் நேரே இல்லை என்றால்
சிரமம் தானே அம்மா.
இறைவன் தான் துணை.

வல்லிசிம்ஹன் said...

அனின் முரளிமா,
நியூயார்க் முழுவதும் இது போலக் கட்டிடங்கள் தான்.
நாங்கள் அனேகமாக எல்லா ஊரிலும் 110
மாடிகள் கொண்ட கட்டிடங்களில் சென்று பார்த்திருக்கிறோம்.

எல்லா அமெரிக்கத் தலை நகர்களிலும்
நல்ல உயரமான காட்டிடங்கள்.

இந்த உடைப்பு நடந்த இடத்தில் மொத்தம் மூன்று காண்டோஸ். Condos.
ஒன்று நிற்கிறது மற்ற இரண்டும் '
விழுந்து விட்டன.

மூன்றாம் கட்டிடத்திலிருப்பவர்கள் வெளியேறி இருக்கிறார்கள்.
இதோ இன்றோடு தேடும் பணி முடிந்து
அகற்றும் வேலை நடக்கப் போகிறது.
மஹா சங்கடம் மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதிமா.
நீங்களும் செய்திகளில் பார்த்திருப்பீர்கள்.

இதோ அங்கே புயலும் மழையுமாக இருக்கிறது. உறவினர்களுடன் பேசிக் கொண்டிருக்கிறேன்.
இறைவன் காக்க வேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஜெயக்குமார்,
உண்மைதான் பிரார்த்திப்போம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் பானுமா,

என்னவோ போறாத காலம் மா அங்கே,.

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

பதிவின் செய்திகள் மனதில் பயங்கர சோகத்தை தந்தது. அடுத்த நொடி என்னவென்று தெரியாத பயங்கரம். ஏன்தான் இப்படி உயரமான கட்டிடங்களை கட்டுகின்றனரோ ? இங்கும் உயரமான கட்டுமானத்தை காணும் போது தலை சுற்றும். ஒரு அளவிற்கு மேல் பத்தாவது மாடிக்கு மேல் குடியிருப்பவர்களை என்னதான் லிப்ட் வசதி இருந்தாலும், காணச் செல்லும் போதே கொஞ்சம் பயமாகத்தான் இருக்கும். இப்படி நூற்றுக்கும் மேல் மாடி இருப்பதை இப்போதுதான் பார்க்கிறேன். இடிபாடுகளில் சிக்கியவர்களை நினைத்தால் மனது கஸ்டமாக உள்ளது.

/உலகம் முழுவதும் இறைவன் கரங்களுக்குள்
அடங்கி இருக்கிறது. அனைத்து உயிரையும்
அவன் காக்க வேண்டும்./

ஆம், அவன்தான் இப்படிபட்ட கட்டிடங்களில் வாழ்பவர்களை கண்டிப்பாக காக்க வேண்டும்.

அன்புடன்
கமலா ஹரிஹரன்.

வல்லிசிம்ஹன் said...


பதிவின் செய்திகள் மனதில் பயங்கர சோகத்தை தந்தது. அடுத்த நொடி என்னவென்று தெரியாத பயங்கரம். ஏன்தான் இப்படி உயரமான கட்டிடங்களை கட்டுகின்றனரோ ////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

அன்பின் கமலாமா,

நிலம் தான் காரணம். காணி நிலம் கேட்ட அந்த நாள் இல்லை.
400 சதுர அடிக்கு 40 கோடி கொடுத்துக் குடி வருகிறார்கள்
இங்கே.
அதுவும் அந்தக் கடற்கரையோர அபார்ட்மெண்டுகள்
முக்கால்வாசி ஓய்வெடுத்துக் கொள்ளப்
போகும் இடங்கள்.

ஆசைப்பட்டுக் கொண்டே இருந்தால் அளவேது.
எல்லோருக்கும் சங்கடம் கொடுத்து விட்டேனோ
என்று தோன்றுகிறது.
நன்றி மா.