Blog Archive

Saturday, July 31, 2021

பொருள்விளங்கா உருண்டை கிராம சமையல்


21 comments:

ஸ்ரீராம். said...

கைகளால் மாவரைக்கும் அந்த இயந்திரம் நாங்களும் வைத்திருந்தோம்.  அப்புறம் யாருக்கு கொடுப்பது என்று தெரியாமல் ஒருமுறை வீட்டைக் காலிசெய்துவிட்டு வரும்போது சத்தமில்லாமல் அங்கேயே விட்டு விட்டு வந்துவிட்டோம்!!

பொருவிளங்கா உருண்டை சூப்பர்.

நெல்லைத்தமிழன் said...

பொருவிளங்காய் செய்யத் தெரிந்தவர்களே அருகி விட்டார்கள்.

பொருவிளங்காய்னா அதைக் கடிக்க முடியாதபடிக்கு இருக்கணும். எங்கள் பாட்டி இறந்தபோது (சரியாத்தான் எழுதியிருக்கேன்.. காரியங்களின்போது ஒரு நாள்) ஒரு நாள் செய்திருந்தார்கள். இப்போ எல்லாம் மாலாடு மாதிரி பண்ணறாங்க. எபிக்காக நான் வீட்டில் செய்தேன். மனைவி சொன்னதைக் கேட்காமல் ஆர்வக்கோளாறில், பொடியின்மேல் சூடான பாகை விட்டு, உருண்டை பிடிக்க முடியாமல், சில உருண்டை ஷேப் சரியாக வராமல் பிடித்து...மீதி பாத்திரத்தில் கல் போல் ஒட்டிக்கொண்டு... அனுப்ப முடியாமல் போய்விட்டது

கோமதி அரசு said...

கிராமத்து வாழ்க்கை அழகு. மாடு, ஆடு, கோழி . பன ஒலையில் கிலு கிலுப்பை செய்யும் பெண். பொருள் விளங்கா செய்யும் அம்மா, மகள் எல்லாம் பார்க்க பார்க்க அருமை.

பிள்ளைகள் உருண்டையை எடுத்துக் கொண்டு மரத்தில் ஏறி அமர்ந்து உருண்டையை சாப்பிடுவது பார்க்கவே அழகு.

கிராமத்து மக்கள் இன்னும் பழைய இனிப்புகளை செய்து சாப்பிடுவது மகிழ்ச்சி. அந்த குழந்தைகள் கொடுத்து வைத்தவர்கள்.

கோமதி அரசு said...

திருவையை பயன்படுத்துவது மகைழ்ச்சியாக இருக்கிறது. அம்மா பயன்படுத்தியது, அத்தை பயன்படுத்தியது எல்லாம் மொட்டைமாடியில் கிடக்கிறது.

கோமதி அரசு said...

பொரி அரிசி உருண்டையும் நன்றாக இருக்கிறது. வயதானவர்களுக்கு இந்த உருண்டை நன்றாக இருக்கும்.( பல் பலம் இல்லாதவர்களுக்கு)

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

இதனை எங்கள் ஆத்தா புடலங்காய் உருண்டை என்பார்கள். சிலர் இதனை கெட்டி உருண்டை என்பார்கள். தீபாவளியின்போது இதனுடன் ரவா உருண்டையும், பச்சைப்பயறு உருண்டையும் செய்து வைப்பார்கள். அந்த இனிய நாள்கள் இப்போது நினைவிற்கு வந்தன.

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

அருமையான பதிவு. இரண்டு வெல்ல இனிப்பு உருண்டைகளும் பார்ப்பதற்கே சுவையாக இருக்கிறது.

முதலில் அரிசிமாவு உருண்டை நாம் சதுர்த்தி கொழுக்கட்டைக்கு பண்ணுவது போல.. அதே மாதிரி இருக்கிறது. நாம் நிவேதனத்திற்காக பச்சரிசி பயன்படுத்துவோம் . இது புழுங்கலரிசியில் செய்வதால்,பொரிந்து நல்ல வாசனையாக இருக்கும்.இதைப் போல் செய்து பார்க்க வேண்டும். கலரும் செய்முறையும், நன்றாக உள்ளது.

இரண்டாவது கிராம மண்வாசனையுடன் செய்த பொருள் விளங்கா உருண்டை, (அதில் சேர்க்கப்படும் பொருள்தான் என்னவென்று விளங்கி விட்டதே..! பிறகு அதற்கு ஏன் அந்தப் பெயர் வந்ததோ..? ஹா.ஹா.ஹா.) (நம் வீடுகளில் வளைகாப்பு விஷேடத்திற்கும் இந்த பொ.வி.உருண்டை இடம் பெறும். அதை முன்பெல்லாம் பேப்பரில் வைத்து கதவு. நிலைப்படி நடுவில் வைத்து உடைப்போம். கல்லால் தட்டினாலும் உடையாது.பா. பருப்பு, க. பருப்பு வெல்லம் சேர்ந்தவுடன் அவ்வளவு இறுக்கம் தந்து விடும். ) நன்றாக உள்ளது. ஒரு முழுமையான கிராமத்திற்கே சென்று பயணித்து வந்த உணர்வு கிட்டியது.

அப்போதெல்லாம் இந்த திருகை கல்லில்தான் எத்தனை மாவை திருகியிருக்கிறோம்.இந்த மிக்ஸி நம் பயன்பாட்டுக்கு வந்த பின் திருகை நம்மிடம் கோபித்துக் கொண்டு ஒதுங்கி விட்டது.:)

இரண்டு காணொளி செய்முறைகளும் கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம்,
கிராமங்கள் இன்னும் யூடியூபிலயாவது பார்க்கிறோம் என்று மகிழ்ச்சியாக இருக்கிறது.
நம் வீடுகளில் பயறு பருப்பு என்று
கடிக்க முடியாத ஒரு பொருவிளங்கா உருண்டை
பல்லை சோதிக்கும்.
இவர்கள் செய்வது வேறு மாதிரி இருக்கிறது. பார்க்கவே நல்ல ருசி.
நன்றி மா. யந்திரம் இன்னும் ஒரு பாகம் செடியை
வைத்துக்கொண்டு நம் வீட்டில் இருக்கிறது,

வல்லிசிம்ஹன் said...

அன்பு முரளிமா...
எக்சாக்ட்லி.!!!!!
அஞ்சி ஓடும்படி தான் இருக்கும். அதே
பத்து நாட்கள் காரியங்களில் தான் சாப்பிட்டு இருக்கிறேன்.
நீங்களாவது முயற்சித்தீர்கள்.!!!
நான் செய்ய முற்பட்டதே இல்லை:)
உங்களை நினைக்க ரொம்பப் பெருமையாக இருக்கிறது மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதி மா,
வாழ்க வளமுடன்.
எனக்கு இந்த கிராம வாழ்க்கை பார்க்க
பழைய நாட்கள் நினைவில் வரும்.
அப்பா,நாங்கள் இருந்த இடங்கள் இப்படித்தான் இருக்கும்.
காட்டாமணக்குச் செடிகளும்
அந்த ஐயா தழை,சிராய் வெட்டுகிறாரே அந்த செடி என்று சர்வ சகஜமாய் சுற்றித் திரிவோம்.

இவர்கள் செய்யும் அந்தப் பொருள்விளங்கா உருண்டை
மிக ருசியாக இருக்கும் என்று நம்புகிறேன்,

திரிகையில் திரிப்பது ஒரு சுகம்.
நானும் மாமியாரும், பயறு உடைப்போம்
உளுந்து பருப்பு, அரிசி குருணை எல்லாம்
வீட்டில் செய்வோம்.

எல்லாம் கனவாகி விட்டன:)
கால மாற்றம் தான்.நமக்காவது இப்படி இருந்தது தெரியும்.
பேரன் பேத்திகளுக்கு
அதுவும் தெரிய வழி இல்லை.

வல்லிசிம்ஹன் said...

கோமதிமா,
பல் இல்லாதவர்களும் ,இருப்பவர்களும் உடைத்துப் பொடித்து
சாப்பிட வேண்டும். நல்ல புரத சத்து உள்ளது.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...


பிள்ளைகள் உருண்டையை எடுத்துக் கொண்டு மரத்தில் ஏறி அமர்ந்து உருண்டையை சாப்பிடுவது பார்க்கவே அழகு.

கிராமத்து மக்கள் இன்னும் பழைய இனிப்புகளை செய்து சாப்பிடுவது மகிழ்ச்சி. அந்த குழந்தைகள் கொடுத்து வைத்தவர்கள்.



உண்மைதான். இது போல அம்மாக்களும்,
பாட்டிகளும் நன்றாக வளமாக இருக்க வேண்டும் அன்பு கோமதிமா.

வல்லிசிம்ஹன் said...

வீட்டில் பூஜை. மீண்டும் வருகிறேன் மன்னிக்கவும்.

நெல்லைத் தமிழன் said...

என் மனைவி பஹ்ரைனில் பல தடவைகள் எனக்குப் பண்ணித் தந்திருக்கிறார். இதில் எண்ணெய் கிடையாது, பருப்புகள் மட்டும்தான். கொஞ்சம் இனிப்பையே சாப்பிட்டு முடிக்க நேரமாகும் என்பதால்தான் இதனைச் செய்யச் சொல்லுவேன். மற்ற இனிப்புகள்னா லவக் லவக்னு சாப்பிட்டு முடித்துவிடுவேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு முனைவர் ஐயா,
தமிழ் நாட்டின் உணவு வகைகள் மிகவும் ரசனையோடு தயாரிக்கப்
படுபவை.
எத்தனையோ நாட்கள் வைத்தாலும் கெடாமல் இருக்கும்.
அந்த வகையில் நீங்கள் சொல்லும்
உருண்டைகள் சத்து கொண்டதாகவே தயாரிப்பார்கள்.
தங்கள் வீட்டிலும் இவ்வகை உணவுகள் வரவேற்கப்
பட்டிருக்கும். மிக நன்றி ஐயா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கமலாமா,
பின்னூட்டம் இடுவது எப்படி என்று உங்களிடம் கற்க வேண்டும் அம்மா.

ஒரு எழுத்து விடாமல் உங்கள் நல்லுணர்வுகளால்
பதிவை நிறைக்கிறீர்கள்.
மனம் நிரம்புகிறது.
ஆமாம் அதில் என்ன இருக்கிறது என்று தெரிந்தும் ஏன் அந்தப் பெயர்:)
எனக்கும் புரியவில்லை.:))))

இந்த அரிசி மாவு உருண்டை செய்யும் விதம் எனக்கும்
புதுசு.

எத்தனை அழகாகப் படம் பிடிக்கிறார்கள்!!
வண்ணமும் இனிமை.

செய்து பார்க்க வேண்டும்.
பொதுவாக கிராமத்து சமையலை மிகவும்
ரசித்துப் பார்ப்பேன். பொரு விளங்கா உருண்டையை
எப்படி உழைத்து செய்கிறார்கள்.!!!

அந்தக் குட்டிப் பெண் பனை ஓலையில்
பெட்டி செய்வதும், உருட்டான் செய்வதும் அருமை.
தலை நிறைய பூ.
பார்க்கவே மகிழ்ச்சி. நிறைய வலிமை இருந்தால்
தான் அந்த வெல்லப் பாகையும் மாவையும் சேர்க்க முடியும்.

வளமுடன் இருக்கட்டும்.
உங்கள் ரசனையும் எங்களை எப்போதும் வந்தடைய வேண்டும்.

Geetha Sambasivam said...

அரிசிமாவு உருண்டை பண்ணினதில்லை. ஒரு தரம் பண்ணிப் பார்க்கணும். பொருள்விளங்கா உருண்டை நிறையவே என் அம்மா பண்ணுவார். அதுவும் நவராத்திரிக்கு வெற்றிலை, பாக்கில் வைத்துக் கொடுக்கக் கூடப் பண்ணி இருக்கார். பொருள்விளங்கா உருண்டை, மாலாடு, பொட்டுக்கடலை/நிலக்கடலை உருண்டை போன்றவை நவராத்திரி சமயத்தில் பண்ணி வைச்சுப்பாங்க. நானும் பண்ணி வைச்சிருந்திருக்கேன்.

Geetha Sambasivam said...

நீங்களும், நெல்லையும் சொல்வது போல் அபர காரியத்துக்கு மட்டும் பொருள்விளங்கா உருண்டை இல்லை. எங்க பக்கம் (மதுரைக்காரங்க) முதல் பிரசவத்திற்கு ஐந்தாம் மாசம் மசக்கைக்குப் பெண்ணை அழைக்கச் செல்கையில் இந்தப் பொருள்விளங்காப் பருப்புத் தேங்காய் தான் பண்ணிக் கொண்டு திரட்டுப்பாலோடு பெண்ணை அழைக்க வருவார்கள். எனக்கும் அப்பா/அம்மா அப்படித்தான் செய்தார்கள். அழைத்துப் போகையில் அப்பா வந்தார். திரும்பி வரும்போது அம்மா வந்தார். பொருள்விளங்கா உருண்டை மாதிரி கெட்டியாகக் குழந்தையும் எந்தவிதமான அப்பழுக்கும் இன்றி நல்லவிதமாகப் பெற்றெடுக்க வேண்டும் என்று பொருளாம். அதே போல் ஶ்ரீமந்தம் முடிந்து புக்ககத்தில் இருந்து பிறந்தகம் செல்லும்போதும் அப்பம், கொழுக்கட்டையோடு மாமியார் இந்தப் பொருள்விளங்கா உருண்டைப் பருப்புத் தேங்காயோடு மட்டைத் தேங்காயும் மாட்டுப் பெண்ணுக்கு வைத்துக் கொடுத்து அனுப்புவாங்களாம். இவற்றைப் போல் திடமான குழந்தை பிறந்து பிரசவமும் திடமாக ஆகவேண்டும் என்பது உட்கருத்து என்பார்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,
இன்று முழுவதும் நினைத்துக் கொண்டிருந்தேன்.
நல்லபடியாக ஸ்ராத காரியங்கள் நடந்திருக்க வேண்டுமே
என்று.

பொருள் விளங்கா உருண்டை முதன் முதலாகச் சாப்பிட்டதைச் சொல்லி இருந்தேன் மா.
இரண்டு பாட்டிகளும் அம்மாவும் செய்வார்கள். நான் செய்ததில்லை.

செய்து வைத்தால் கோடைகாலப் பசிக்கு
உபயோகமாகும்.
உடைத்து சாப்பிடவேண்டும்.
ஆனால் அந்த ருசிக்கு என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு முரளிமா,
உங்கள் மனைவி செய்து கொடுக்கிறார் என்பதே பெரிய விஷயம்.

ஆமாம் இதில் இனிப்பு குறைவாக
இருப்பதாலும் பருப்பூ சேர்ந்திருப்பதாலும்
உடம்புக்கும் நல்லது.
அடுத்த செய்முறையாக இதைப் பதிவு செய்யுங்கள் மா.
மிக நன்றி

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,
அரிசி வறுத்துப் பொடி செய்வதை
இப்போதுதான் பார்க்கிறேன் மா.
நாம் வெண்ணெய் காய்ச்சி இறக்கும் போது அரிசிமாவைக்
கலந்து அந்த சூட்டிலேயே சர்க்கரையும்
சேர்த்து உருண்டை பிடிப்பது போல என்று நினைத்தேன்.
இது உண்மையிலேயே நல்ல வண்ணத்தில்
நன்றாக இருக்கிறது.
"பொருளாம். அதே போல் ஶ்ரீமந்தம் முடிந்து புக்ககத்தில் இருந்து பிறந்தகம் செல்லும்போதும் அப்பம், கொழுக்கட்டையோடு மாமியார் இந்தப் பொருள்விளங்கா உருண்டைப் பருப்புத் தேங்காயோடு மட்டைத் தேங்காயும் மாட்டுப் பெண்ணுக்கு வைத்துக் கொடுத்து""


இது நினைவில் இருக்கிறது!!
நல்லதை நினைத்து நல்லதே செய்கிறார்கள்.
நல்லதே நடந்தது.