Blog Archive

Tuesday, July 20, 2021

லின் போ சி எண்ணங்கள்.

Chi Po Lin
வல்லிசிம்ஹன்


கடந்த ஆறு மாதங்களாக 
கொரியன்  நாடக சீரியல்களைப் பார்த்து வருகிறேன்.
அவர்களுடைய எண்ணங்கள்
 
நம் தமிழ் நாட்டை ஒத்து இருக்கின்றன.
அதே மாதிரி வாழ்க்கைக் கட்டுப்பாடுகள்.

இப்போது பார்த்து வரும் நெட்ஃப்ளிக்ஸ் ஒரு ஆயிரம் இரவு வணக்கங்கள்

தொடர் ,ஒரு தந்தையைத் திடீரென இழக்கும் 
மகள்களையும்,
அவரது  இயற்கையின் மீதான ஆர்வத்தையும்
மிக அழகாகச் சொல்லி வருகிறார்கள்.

தெய்வான் நாட்டில் நடக்கும் கதை.
கதையின் ஊடே  லின் போசின் என்னும் இயற்கை ஆர்வலர் எடுத்த 
படங்களும், அவரது வாழ்க்கை பற்றிய தத்துவங்களும் 
சொல்லும்போது மனம் மிக நெகிழ்கிறது. 

அதன் நடுவே வருவது மரங்களையும், பறவைகளையும் 
நேசிக்கும் மனிதர்களின் குழு பற்றிய குறிப்புகள்.

வாழ்விற்குத் தேவையானது பணம் மட்டும் அல்ல. மனித நேயமும்
நல்ல உணவும்,குடும்ப அமைப்பும் தான்

என்று சொல்லிக் கொண்டே வரும் பாங்கு
அருமை. 








8 comments:

ஸ்ரீராம். said...

மிக அருமையான வாசகங்களாய் இருக்கிறது.  சீ போ என்று சொல்லாமல் போ சி என்று சொல்லலாம்!!!

Bhanumathy Venkateswaran said...

அருமையான வாசகங்கள்! உங்கள் பதிவிற்கு நீங்கள் தேர்ந்தெடுக்கும் விஷயங்கள் ஸ்வரஸ்யமாக இருகின்றன.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம் ,
முடிந்தால் இந்த சீரியல் பாருங்கள். ஒரு அனாவசிய
சீன் கிடையாது.
எல்லாமே குடும்பச் சூழ்னிலைகள்.
சற்றே மாற்றம் கொண்ட நிலைக்களன்.
அவர் பெயர் லின் போ சி தான். Chi என்பது ஃபாமிலி
பெயர்.:)

வல்லிசிம்ஹன் said...

அன்பின் பானு
நன்றி மா.
வழக்கம் போல இல்லாமல் இந்த சீரியல் என்னை மிகவும் கவர்ந்தது
அதில் வரும் வாசகங்களால் தான்.

One thousand Good nights.

மாதேவி said...

அருமையாக உள்ளது.

வெங்கட் நாகராஜ் said...

வாசகங்கள் அனைத்தும் சிறப்பு.

வல்லிசிம்ஹன் said...

அன்பு மாதேவி,
வந்து ரசித்துக் கருத்தும் சொன்னதற்கு
மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் வெங்கட்,
நலமுடன் இருங்கள்.
சமீப காலத்தில் நான் பார்க்கும் நல்ல டாக்குமெண்டரியில் வரும்
நல்ல கருத்துகளைப் பதிய விரும்பினேன் மா.

நன்றி மா.