Blog Archive

Sunday, July 18, 2021

எஸ்.வரலக்ஷ்மியின் பாடல்கள்






பலவித செய்திகள் உறவில், நட்பில்
பாதிப்பை ஏற்படுத்திய வாரம் 
கடந்த வாரம். 
ஒருவர் மீண்டு கொண்டிருக்கிறார்.
இன்னோருவரும் , அவள் கணவரும் மீள்வார்கள் என்று
இறைவன் பெயரில் நம்பிக்கை
வைத்து பிரார்த்திக்கிறேன்.
அனைவரும் வாழ்க வளமுடன்.

20 comments:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

இவரின் காந்தக்குரலால் ஈர்க்கப்பட்டடோரில் நானும் ஒருவன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் முனைவர் ஐயா,
எப்பொழுதுமே இவர் குரலின் தமிழ் உச்சரிப்பில்
மனம் மயங்கும்.

நல்ல குரல்.சங்கீத ஞானம்.
உங்களுக்கும் பிடித்ததே எனக்கும் மகிழ்ச்சி.
மிக நன்றி .

கோமதி அரசு said...

இவர் நடிப்பும், பாடலும் பிடிக்கும்.

நல்ல குரல் . பாடல்கள் எல்லாம் கேட்டேன்.
அம்மனாக நடிக்கும் போது மிக அழகாய் இருப்பார். சிரிப்பு நன்றாக இருக்கும்.

கோமதி அரசு said...

மனம் கனிந்து அருள் பாட்டு கேட்டால் மனம் கனிந்து போகும்.
சிங்கார கண்ணே பிடித்த பாடல்.

திண்டுக்கல் தனபாலன் said...

மனதை கவரும் குரல்... இனிமையான பாடல்கள்...

துரை செல்வராஜூ said...

கோல நிலவோடு கலந்த குளிர்த் தென்றலைப் போல இவரது குரல்!..

வெள்ளிமலை மன்னவா..
வேதம் நீயல்லவா!..
- கந்தன் கருணை படடப் பாடலில் உருகாத மனமும் உண்டோ!?..

ஸ்ரீராம். said...

தீநுண்மித் தொற்றா?  வேறு ஏதாவதா?  எதுவாயினும் அவர்கள் மீண்டுவர நானும் இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.  சிங்காரக்கண்ணே பாடல் மகா இனிமை, முதலிடம்.

Geetha Sambasivam said...

நல்ல சங்கீத ஞானம் உள்ளவர். நல்ல குரலும் கூட. எனினும் அதிகம் சோபிக்கவில்லை. திரைப்படங்களிலும் சரி, வெளியே சங்கீத உலகிலும் சரி. இவர் பாடிய பாடல்கள் மறக்கவே முடியாதவை. அதிலும் வீரபாண்டியக் கட்டபொம்மனின் "சிங்காரக்கண்ணே!" பாடல் என்றென்றும் மறக்க முடியாத ஒன்று.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதிமா,
வாழ்க வளமுடன்.
வரலக்ஷ்மியின் குரலும் நடிப்பும் தீர்க்கமாக
இருக்கும்.
அலுக்காது. நல்ல கதா பாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து
நடித்திருக்கிறார்.

இன்னும் பல பாடல்கள் இருக்கின்றன.
சிலவற்றை மட்டும் பதிவிட்டேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதி,
இவர் அம்மனாக நடித்த படம் என்ன வென்று யோசிக்கிறேன்.
ஆதி பராசக்தியோ.?
எந்த வேடமானாலும் சிறப்பிக்கிறார்.
அவரது முக வடிவும், குரலும் அப்படி.
மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் தனபாலன்,
நல்ல தமிழ் எப்பொழுதும் கேட்க இனிமை.
இவர் பெயரே வரலக்ஷ்மி. வரம் வாங்கி வந்த குரல்.
ரசித்ததற்கு மிக நன்றி மா. நலமுடன் இருங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் துரை செல்வராஜு,
நலமாக இருங்கள்.

ஆமாம் பா. அவரது குரல் உங்கள் எண்ணம் போலவே
குளிர் நிலவும் தென்றலும்
சேர்ந்தது போலத் தான் கேட்கிறது.
முருகன் பாடல் இவர் குரலில் இன்னும் பக்தி கூட்டுகிறது.
நன்றி மா. முருகன் ,குமரன் அனைவரையும்
காக்கட்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம்,
நன்றி மா.
தீ நுண்மி இல்லை. அதை விடக் கொஞ்சம்
சிரமம்.

சரியாகட்டும். நல்ல தெய்வபக்தி அவர்கள் குடும்பத்துக்கே
உண்டு.
இருவரும் மீண்டு வருவார்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,
உண்மைதான். குரலும், அழகும், முகbhaவமும்

எளிமையாக அவருடன் சேர்ந்திருந்தன.
நிறைய அறியப் படவில்லை
என்பதே நிஜம்.
நல்ல நடிகை. மிக நேர்மை என்றும்
சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன்.
அதனாலயே முன்னுக்கு வர முடியவில்லையோ என்னவோ.

பாடல்களை நீங்களும் ரசித்ததே மகிழ்ச்சிமா.

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

சிறந்த பாடகியும், நடிகையுமான எஸ். வரலக்ஷ்மியின் அருமையான பாடல்களாக தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள்.அவர் குரலின் இனிமையான கம்பீரம் அருமையாக இருக்கும். நடிப்பிலும் அப்படியே.. நானும் இவர் பாடல்களையும். நடிப்பையும் விரும்பி பார்ப்பேன். அத்தனை பாடல்களும் கேட்டு மகிழ்ந்தேன். மதியமே பாடல்கள் கேட்டவுடன் தங்கள் பதிவுக்கு கருத்தை அனுப்ப நினைத்தேன். இங்கு மழையில் நெட் பிரச்சனையில் அது போகவில்லை. இப்போதுதான் சரியாகி வந்துள்ளது. அதனால் தாமதம். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

vaanampaadi said...

அன்புள்ள வல்லிம்மா இன்றைய பாடல்கள் அனைத்தும் இனிமை மா! S.வரலட்சுமி அவர்களுடைய பாடல்களை ரசித்து கேட்டேன்.. ராஜராஜ சோழனின் வரும் "ஏடு தந்தானடி" பாடல் மிகப் பிடிக்கும். இந்தப் படத்தில் நான் குந்தவையின் கம்பீரத்தையும், அன்பையும் , ஆளுமையையும் வியந்து ரசித்ததுண்டு. சிவாஜி மற்றும் இவருடைய நடிப்பிற்காகவே பலமுறை பார்த்திருக்கிறேன்.

வெங்கட் நாகராஜ் said...

உறவினர்கள் விரைவில் நலம் பெற எனது பிரார்த்தனைகளும். பாடல்களை இப்போது கேட்க முடியாத சூழல். பின்ன்ர் காண்பேன்/கேட்பேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கமலாமா,

உண்மையான சொற்கள். நடிப்பு,பாட்டு ,அழகு,கம்பீரம் எல்லாமே
இருந்தது அவரிடம்.
அதனால் தான் நம் எல்லோருக்கும் பிடித்திருக்கிறது.
நம் கண்ணதாசனின் சகோதரரின் மனைவி.
அவருக்குக் கிடைத்த பாடல்களும் பொருள் பொதிந்திருந்தன.

சிவகங்கை சீமை படத்தில் அவரது பாடல்
தென்றல் வந்து வீசாதோ'' மிக அருமையாக
இருக்கும்.

அவரது நடிப்பு கட்டபொம்மன் படத்தில் மிகக்
கச்சிதமாக இருக்கும்.

உங்களுக்கும் இந்தப் பாடல்கள் பிடித்திருக்கிறது
என்பதே எனக்கு மகிழ்ச்சிமா. நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வானம்பாடி,
இனிய காலை வணக்கம்.

பொன்னியின் செல்வன் படித்ததிலிருந்து
குந்தவை மேல் அவ்வளவு. பாசம்.
அந்தக் கம்பீரம், பெண்மையின் திண்மை,சகோதர பாசம்
எல்லாவற்றையும்
திருமதி வரலக்ஷ்மி பிரதி பலித்ததாகவே
தோன்றுகிறது.

உங்களுக்குப் பிடித்ததே எனக்கு மகிழ்ச்சி மா.
நலமுடன் இருங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் வெங்கட்,
இனிய காலை வணக்கம்.
மெதுவாகப் பாருங்கள். உறவினர் குணமடைந்து வருகிறார்.
தோழியும் அவ்வாறே குணமடைவார். எல்லாம் இறைவன் அருள்.