Blog Archive

Sunday, July 11, 2021

ஒரு சனிக்கிழமை மாலை.








வல்லிசிம்ஹன்மழை இல்லாமல் காற்றில்லாமல்
இருக்கும் நாள் ஒன்றில் இந்த வெந்தய தோசையையும் 
மோர்க்குழம்பையும் 
ரசித்தபடி 
மலர்களோடு  பேசலாம்.
வெந்தய தோசைக்கு,
5 கப் இட்லி அரிசி,
1/2 கப் வெந்தயம்
இரண்டையும் எட்டு மணி நேரம் ஊறவைத்து

அரைக்கும் போது 1/2 கப் அவலையும் தனியே
ஊறவைத்து அரைத்து சேர்க்க வேண்டும்.
மாவு புளித்ததும்
 வார்த்தால் பஞ்சு தோசை வார்க்க
முடியும்.

மலர்கள் பல வண்ணங்களில் மகிழ்ச்சி கொடுக்கின்றன.

16 comments:

கோமதி அரசு said...

வெந்தய தோசையும், மலர்களும் மிக அருமை.

மலர்கள் பார்க்க அழகு, மனமகிழ்ச்சி தரும்.

திண்டுக்கல் தனபாலன் said...

அழகிய மலர்கள்...

மனோ சாமிநாதன் said...

வெந்தய தோசை குறிப்பு நன்றாக இருக்கிறது. செய்து பார்க்கிறேன். அரை கப் வெந்தயம் என்பதால் வெந்தய வாசனை அதிகம் இருக்குமா?
பூக்கள் எல்லாம் கொள்ளை அழகு!

மாதேவி said...

அழகிய மலர்கள் பேசுகின்றன.

மலர்களை ரசித்தபடியே தோசை சாப்பிடுவது மிகுந்த ஆனந்தம்தான்.

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

அழகான பதிவு. தோசையும், மோர் குழம்பும் பார்த்ததும் "சாப்பிட வா"வென அன்போடு அழைக்கிறது.கூடவே மலர்களும் தலையசைத்து அழைக்கின்றன. தேங்காய் சட்னிக்கு பதிலாக மோர் குழம்பு அருமையான பொருத்தம். மலர்கள் எப்போதும் பார்த்துக் கொணடேயிருக்கலாம் என்ற அழகு. "தோசையும், மலர்களும் ஒன்றிற்க்கொன்று நாங்கள் அழகில் சளைத்தவர்கள் இல்லை என்ற இணையாக கூறுகின்றனவோ ...? பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

Geetha Sambasivam said...

என்னோட மாமியார் வல்லி சொல்லி இருக்கிறாப்போல் தான் போட்டு அரைப்பார்கள். ஆனால் அவல் சேர்த்தது இல்லை. அவல்/சேமியா/ஜவ்வரிசி/ஆளி விதைகள்/வெண்டைக்காய்க் காம்புகள்னு இப்போச் சேர்க்கச் சொல்றாங்க. மாமியார் வெந்தயத்தை முதலில் கல்லுரலில் போட்டு அரைத்துவிட்டுப் பின்னர் அரிசியைப் போட்டு நன்கு அரைக்கச் சொல்லுவார். புளிக்கப் புளிக்க நன்றாய் மெத்தென்றும் கொஞ்சம் மாவு விட்டாலே உப்பிக் கொண்டும் தோசையின் உள்ளே ஓட்டைகள் போட்டுக் கொண்டும் வரும். வயிற்றுக்கு நல்லது. நான் பத்து நாளுக்கு ஒரு முறை பண்ணிடுவேன். ஆனால் இவருக்குக் கொஞ்சம் உளுந்து சேர்க்கணும் என்பதால் வெந்தயம் கொஞ்சம் குறைவாகப் போட்டுவிட்டு உளுந்தைச் சேர்த்துப்பேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதி மா,

வாழ்க வளமுடன்.
கொஞ்சம் பழுப்பாகி விட்டது. நல்ல வெள்ளையாக எடுத்திருக்கலாம்.
செய்முறை பார்த்தபோது,
தோசை வார்த்து விட்டு ,மூடி வைக்கச் சொன்னார்கள்.
அப்படிச் செய்தால் பஞ்சு போல
வந்திருக்கும். நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

நன்றி தனபாலன். நலமுடன் இருங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் மனோ,
வெந்தயம் கசக்கத்தான் செய்யும் அம்மா.

அரை கப்புக்குக் குறைவாகப் போட்டு,
அதில் பாதி உ.பருப்பும் சேர்த்துக் கொள்ளலாம்.

உ.பருப்பு ஒத்துக் கொள்ளாதவர்களுக்காக
இதைச் செய்யலாம்.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் மாதேவி,
மலர்களின் காலம் இது.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கமலாமா,

மலர்கள் முன் தோசை கொஞ்சம்
வண்ணம் குறைந்து விட்டது:)

இறைவன் படைப்பு அது அல்லவா.

தோசை மாவை இன்னும் தளர்த்தி
வார்த்திருக்க வேண்டும்.
கவிதையாகப் பதிவைப் பரிவுடன்
புரிந்து கொண்டு இருக்கிறீர்கள்.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,

உளுந்து சின்னவனுக்கு ஒத்துக் கொள்ளாததால்
வெந்தயம் சேர்த்து அரைக்கலாம்
என்று மகள் தான் சொன்னாள்.

கொஞ்சம் உளுந்து சேர்க்க ஆசைதான்.
எனக்கு இந்த தோசை ஒத்துக் கொள்ளவில்லை.
இத்தனைக்கும் எட்டுமணி நேரம் ஊறி,
12 மணி நேரம் புளித்தது.

உங்களையே கேட்டு செய்திருக்கலாம்.
விளக்கமாகச் சொல்லி இருப்பீர்கள்.
நன்றி மா.

வெங்கட் நாகராஜ் said...

வெந்தய தோசையும் மலர்களும் - நல்ல காம்பினேஷன்.

இயற்கையை ரசித்தபடியே உணவு உண்ண முடிவது நல்ல விஷயம்.

Bhanumathy Venkateswaran said...

ஓட்டை ஓட்டையாய், மெத்தென்று வெந்தய தோசை அம்மா அடிக்கடி செய்வாள். அதற்கு மோர்குழம்பு தொட்டுக் கொள்ளலாம் என்று இப்போதுதான் அறிகிறேன். பூக்கள் அழகு!

வல்லிசிம்ஹன் said...

அன்பின் வெங்கட்,
இயற்கை நம் ஜீரணத்துக்கு உதவி செய்கிறது.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் பானுமா,
ஒரு மாறுதலுக்குத் தான் மோர்க்குழம்பு.

மோர்க்குழம்பு உடம்புக்கு ஒத்துக் கொள்கிறது.
அதனால் தான் அது பிடித்திருக்கிறது.
அம்மாக்களுக்கு கல்லுரல் நிறைய
ஒத்துழைத்தது மா.