Blog Archive

Tuesday, June 08, 2021

பொட்டு வைத்த முகமோ பாடல் பதிவில் spb யிடம் கிசுகிசுத்த சிவாஜி - ஆலங்குடி...





12 comments:

கோமதி அரசு said...

பாடல் பிறந்த கதை அருமை.

பொட்டு வைத்த முகமோ பாடலும் , படமும் மிகவும் பிடிக்கும்.
அடுத்த பாடலும் லட்சுமி, பாலசுப்பிரமணியன் நடிப்பும் பிடிக்கும்.அந்த தெலுங்கு படம் பார்த்து மிகவும் வருந்தினேன். இரண்டு, மூன்று நாள் சாரிடம் புலம்ப வேறு செய்தேன்.
கற்பூரவள்ளி பாடலும் அவர் நடிப்பும் அருமைதான்.
பகிர்வு அருமை அக்கா.

மனோ சாமிநாதன் said...

லக்ஷ்மி எஸ்.பி.பி பாடல் காட்சி அருமை! மனதை என்னவோ செய்கிறது.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதி மா,
வாழ்க வளமுடன். அந்த மனிதருக்கு எல்லாமே சுலபமாக வந்திருக்கிறது.
சகல கலா வல்லவன்!!
அந்த படத்தில் லக்ஷ்மியும் அவரும் நடித்த இந்தப் பாடல்
மிகவும் ரசித்தது.
அதனால பகிர்ந்தேன் மா. ஆமாம்
அவர் மறைந்த போது அத்தனை வருத்தமாக இருந்தது.
நன்றி மா. நல்ல மனிதர்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் மனோ, உங்களுக்குமா!!
கோமதியும் அதையே சொல்லி இருக்கிறார்கள்.
நம் எல்லோர் மன நிலைகளும் ஒரே மாதிரி இயங்குகிறது.
அவர் நினைவை ரசிப்போம்.

ஸ்ரீராம். said...

கடைசிக் காலங்களில் அவரை நிறைய பாடல்கள் பாட வாய்ப்பு வழங்கவில்லை தற்கால இசை அமைப்பாளர்கள்.  எனினும் அவர் பாடிய பல்லாயிரம் பாடல்கள் மனதில் என்றென்றும் இருக்கும்.  நல்ல நடிகர், நல்லதொரு இசை அமைப்பாளரும் கூட. 

Geetha Sambasivam said...

லக்ஷ்மி/எஸ்பிபி படம் பார்த்தேன். மனதை வேதனைப்படுத்திய படம். :( அதுக்கு அடுத்த வீடியோ தெரியலை. இல்லைனு வருது. கேளடி கண்மணி படம் தொலைக்காட்சி தயவில் பார்த்திருக்கேன். அருமையான காட்சி.

திண்டுக்கல் தனபாலன் said...

ஆவக்காய் பாடலும் அருமை...

கரந்தை ஜெயக்குமார் said...

அருமையான பாடல்
பாடல் காட்சியும் அருமை

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஶ்ரீராம்.உண்மைதான். அவர் மனதிலும் ஏக்கம் இருந்திருக்கும்.பாவம். இத்தனை நெஞ்சங்களில் இணிமையின் உருவாக்க உரைந்திருப்பவர். தேவகானம் பாடிக் கொண்டிருப்பார் மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,
உண்மைதான். சோகமான முடிவு. ரசமான ஆரம்பம்.
நல்ல நடிப்பு. நன்றி மா. அடுத்த வீடியோ ஏன்வரவில்லை? எனக்கும் தெரியவில்லை.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் தனபாலன்,
கருத்துக்கு மிக நன்றி ராஜா. ஆந்திராக்காரர்களுக்கு ஆவக்காய் தான்
உயிர் என்று சொல்வார்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஜெயக்குமார் ,
மனம் நிறை நன்றி மா.