Blog Archive

Monday, June 07, 2021

பூக்கள் மலரும் தருணம்

Violets





ரோஜா மலர்க்கூட்டம்









வல்லிசிம்ஹன்
Peonies

 இளவேனில் மறைந்து கோடை தொடங்கி விட்டது.

எங்கு பார்த்தாலும் மலர்கள் .பல வண்ணங்கள்.
கார்டீனியா, இம்பேஷன்ஸ், இன்னும் எத்தனை பெயர்களில் செடிகள் 
கண்ணுக்கு விருந்து வைக்கின்றன.
அதுவும் மஞ்சள் ரோஜாவின் அழகு சொல்லி முடியாது.எத்தனை பெரிதாக இருக்கிறது.
அப்படியே ஜன்னல் வழி  அந்த ரோஜாக்களைப் 
பார்த்துக் கொண்டே இருக்கலாம்.
இயற்கை அன்னைக்கு நன்றி.

24 comments:

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

இயற்கைதான் எத்தனை அழகு.? பூக்கள் அனைத்தும் மனதுக்கு அமைதியை தருகிறது. அத்தனையும் உங்கள் வீட்டுத் தோட்டத்திலேயா? மஞ்சள் ரோஜா கொள்ளை அழகு. அந்த மஞ்சள் ரோஜா ஜன்னல் வழியே வந்து உங்கள் அனைவரையும் நலம் விசாரிக்கிறதோ? ஒவ்வொன்றையும் அழகாக படங்கள் எடுத்துள்ளீர்கள் சகோதரி. ஒரே தொட்டியில்,பிங்க்,வெள்ளை, இளஞ்சிவப்பு, வயலட் என எத்தனைப் பூக்கள். அதில் அந்த வெள்ளைப் பூ அந்திமந்தாரையை வகையோ..? நேற்று எ.பியில் அழகு மலர்களை கண்டு ரசித்தது போல் இங்கும் பூக்கள் மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது.அத்தனைப் பூக்களையும், ரோஜாக்களையும் பார்த்து,பார்த்து ரசித்தேன்.பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

கோமதி அரசு said...

மலர்கள் அழகு. தலைப்பு அருமை. இங்கும் இரண்டு மூன்று பூச்செடிகள் வாங்கி இருக்கிறான் மகன்.

ஸ்ரீராம். said...

அதிகாலையில் அழகிய மலர்கள் காட்சி.  மனம் மலர்ந்து போகிறது.

ஸ்ரீராம். said...

சட்டென ஒரு பாடல் நினைவுக்கு வந்தது..  "சுதந்திர பூமியில் பலவகை ஜனங்களும் தோட்டத்தில் மலர்ந்த மலர்கள்.."

Geetha Sambasivam said...

மலர்க்கூட்டங்கள் கண்களுக்கும் மனதுக்கும் விருந்து.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கமலாமா. இனிய காலை வணக்கம்.
நலமே பெறுக.
ஆமாம் நம் வீட்டில் பூத்துக் கொண்டிருக்கும் மலர்கள் தான்.
அதுவும் இந்த மஞ்சள் ரோஜா ஒரு உன்னதமான ராணி! நான் எழுதும் போதும் சமைக்கும் போதும், படிக்கும் போதும்
தலையாட்டி உற்சாகப் படுத்திக் கொண்டிருக்கும் .
இவள் இறங்கிய பின் அடுத்த மலர் வருவாள். பாசமலர்கள்.

நல்ல எண்ணங்களைப் பரப்பும் நல்ல மலர்கள். உங்கள் வார்த்தைகள் இந்தப் பதிவுக்கு ஒரு நல்ல உரம் அம்மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கமலா, வண்ணமலர்கள் நாற்றாக வந்திருக்கின்றன. இனி. நிலத்திற்குச் செல்லும்.

KILLERGEE Devakottai said...

அழகான பூக்கள் பகிர்ந்தமைக்கு நன்றி அம்மா.

திண்டுக்கல் தனபாலன் said...

அழகான பூக்கள்...

மனம் பாடிய பாடல் :-

https://youtu.be/WAE9aNmAdxs

வெங்கட் நாகராஜ் said...

மலர்கள் இயற்கை அன்னையின் கொடைகள். பார்க்கப் பார்க்கப் பரவசம் தான் மா. தில்லியில் ஜனவரி-ஃபிப்ரவரி மாதங்களில் மலர்கள் வண்ணமயமாக பூத்துக் குலுங்கும். ஒவ்வொரு வருடமும் அவற்றைப் பார்க்கவே உலா வருவேன்!

இந்தப் பதிவிலும் அழகான மலர்களைப் பார்த்து ரசிக்கக் கொடுத்தமைக்கு நன்றி.

கரந்தை ஜெயக்குமார் said...

பூக்கள் அழகு

vaanampaadi said...

அன்புள்ள வல்லிம்மா, மலர்களை பார்த்து பூரித்துப் போனேன் ! எத்தனை அழகாக பூத்திருக்கிறது. நம் மனங்களும் இம்மலர்களைப்போல அன்பாக பூத்து, எங்கும் நேசத்தின் மணம் பரவட்டும். பூப் பதிவிற்கு நன்றி மா!

Thulasidharan V Thillaiakathu said...

அம்மா என்ன அழகான பூக்கள்! வாவ். செம கலர் செழிப்பா மலர்ந்திருக்கு. பாத்திரத்தில் மிதக்க விட்டதன் அதன் அடுக்கு இதழ்கள் மனதிற்கு இதம் கலரும் தான்.

கலரும் மலர்ந்திருக்கும் அழகும் மனதைக் கொள்ளை கொள்ளுகின்றன. மஞ்சள் செம..

எல்லாமே ரொம்ப ரசித்தேன் அம்மா

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

எல்லாப் படங்களும் பூக்களும் அழகாக இருக்கின்றன. முதல் பூவின் வயலட் வண்ணம் மிக நன்றாக இருக்கிறது அதன் பெயர் தெரியவில்லை. இங்கு அதை எங்கும் பார்த்ததாகத் தெரியவில்லை.

துளசிதரன்

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதிமா,
இனிய காலை வணக்கம்.
வாழ்க வளமுடன். இந்த ஊரில் புரட்டாசி வரை
நல்ல உஷ்ணம் இருக்கும். அதற்குப் பிறகு செடிகளை உள்ளே
கொண்டு வந்து விடவேண்டும். பிறகு அடுத்த மார்ச்,ஏப்ரில் தான்.
கருத்துக்கு மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம்,
இந்தப் பூக்கள் உலர்ந்த மனதையும்
மகிழச் செய்து விடும்.
நீங்கள் சொல்லும் பாடல் , திருச்சியில்
கேட்ட நினைவு. அங்கு வீட்டருகில் இருக்கும்
பள்ளியில் தினம் காலையில் ஒலி பரப்புவார்கள்.
வீரரின் வாழ்விலே வெற்றி மேல் வெற்றியே''
நல்ல பாடல்மா. நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,
உண்மைதான். கண்ணுக்கு குளிர்ச்சி.
தோட்டத்தைச் சுற்றி வந்தாலே நல்ல அமைதி கிடைக்கும்.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் வானம்பாடி.

இத்தனை மென்மையும் நம் மனதை நெகிழ்விக்கின்றன.
இறைவனுக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும்.
வந்து பார்த்து கருத்திட்டதற்கு மிக மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் தேவகோட்டைஜி,
என் கணவருக்கு மண்ணில் கைவைத்து
வேலை செய்வதில் அவ்வளவு விருப்பம் உண்டு.

எங்கிருந்தெல்லாமோ கொண்டு வந்து நடுவார்.
மகளுக்கும், சின்ன மகனுக்கும் இந்த தோட்ட ஆசை
அப்பாவிடமிருந்து வந்திருக்கிறது மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் தனபாலன்,
பாடலை நான் மறந்தே போயிருந்தேன் மா.

இந்தப் படம் தான் எத்தனை அருமை.
இந்தப் பாடலின் இசையும், சொல் வடிவமும்
மிகச் சிறப்பு.
மிக நன்றி மா.ரசித்தேன் அப்பா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் வெங்கட்,
இந்த வருட முதலில் பகிர்ந்திருந்தீர்கள் இல்லையா. அதை
மறக்க முடியுமா.
அது பிரம்மாண்டம்.
இது வீட்டளவில் மகிழ்ச்சி தரும் சின்ன மலர்கள்.

மணம் கிடையாது.
வருகைக்கும் கருத்துக்கும் மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

மிக நன்றிமா அன்பு ஜெயக்குமார்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் சின்ன கீதாமா,
இனிய காலை வணக்கம் மா.

சின்னச் சின்ன பூக்கள்.
பெரிய ரோஜா இன்று மிகப் பெரியதாகி இருக்கிறது.'
நாளை உதிர்ந்து விடலாம்.
ஏழு நாட்கள் வாழ்க்கை அதற்கு.
அதற்குள் இத்தனை இன்பம் கொடுக்கிறது.
காற்றில் ஆடும்போது அழைப்பது போல இருக்கிறது.
இறைவனுக்குத் தான் நன்றி சொல்லணும்.
இந்தப் பூவின் உதிர்ந்த இதழ்களையும் மகள் நீரில்
சேர்த்துவிடுவாள். இன்னும் கொஞ்ச நாட்கள் இருக்கும்.
நீங்கள் சொல்வது சரிதான். அந்தப் பியோனிஸ்
மிகப் பெரிய மலர்.
இன்னும் விரிந்து நெகிழ்ந்தது தண்ணீரில்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் துளசிதரன்,
இனிய காலை வணக்கம்மா.
நீங்கள் சொல்லும் மலர்களின் பெயர் பெடூனியா.

இன்னும் நிறைய நாற்றுகள் நடவேண்டும்.
அலர்ஜி தரும் காற்று அடித்ததால் வெளியே செல்ல முடியவில்லை.
மிக மிக நன்றி மா. இவை இந்த ஊரிலும் ,நம் ஊட்டி கொடைக்கானலிலும் பார்க்கலாம்.