Blog Archive

Thursday, June 17, 2021

| Ilakkanam Maarudho | Nizhal Nijamaagirathu | E...

மாயம்  ,மாஜிக் என்ன ஒரு ஜாலம்,,, ஐயா  உங்கள் குரலில்!!!!!



பாடகர் ஸ்ரீனிவாஸ், மகள் சரண்யா ஸ்ரீனிவாஸ்...இவர்கள் குரல்களில் என்ன ஒரு இனிமை!!!
மறக்க முடியாத பாடல்களைப் 
புதுப்பித்துத் தரும் ஸுபஸ்ரீ தணிகாசலம் அவர்களுக்கு நன்றி. 

மலேசியா வாசுதேவன், ஜானகி அம்மா குரல்களில் வரும் இசை  வெள்ளம்
அடுத்த பாடலில்
நம்மை அடித்துச் செல்கிறது.

அடுத்து மூன்றாவது பாடல் ஒலிக்கவில்லை.
அதுவும்
மிக நல்ல பாடல். ந ஜியா லாகேனா. 'என்னால்
நீயில்லாமல்  வாழ முடியாது.''

ஆனந்த் படப் பாடல். 
அதே நம் எஸ் பி பியின் குரலில்
தேன் வழிந்தோட 'நாஆஆஆன் எண்ணும் பொழுது'
என்று கேட்கும்போது உருகாமல் இருக்க முடியுமா.


10 comments:

ஸ்ரீராம். said...

ஸ்ரீனிவாஸ் குரல் இனிமை.  ஆனால் அவர் பாடல்கள் அதிகம் கேட்பதில்லை!  எஸ் பி பி கேட்கவேண்டுமா?  எனக்கும் ஆனந்த் பாடலும் அழியாத கோலங்கள் பாடலும் பிடிக்கும்.  சிவப்பு ரோஜாக்கள் இளையராஜாவின் இன்னிசையில் இனிமை.

Geetha Sambasivam said...

சுபஶ்ரீ தணிகாசலம் சென்னைத் தொலைக்காட்சியில் இருக்கும்போதில் இருந்தே மிக அருமையாக ரசனையோடு எல்லா நிகழ்ச்சிகளையும் கொடுப்பார். இப்போது எங்கோ உயரத்திற்குச் சென்று விட்டார்.எங்க மாமா பெண்ணின் வகுப்புத் தோழி (விவேகானந்தா பள்ளி மாணவினு நினைக்கிறேன்.) எல்லாமே அருமையாக இருக்கின்றன. இது போல் பல பாடல்கள் கடந்த ஒரு வருஷமாகக் கொடுத்து வருகிறார்.

கோமதி அரசு said...

பாடல்கள் பகிர்வு அருமை.எல்லா பாடல்களும் கேட்டேன்.

திண்டுக்கல் தனபாலன் said...

இனிமையான பாடல்கள்...

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம்,

ஸ்ரீனிவாஸ் நல்ல பாடகர். அவர் மகள் அவரைவிட இனிமையாகப் பாடுகிறார்.
நமக்கு வேண்டியது காதைத் துளைக்காத குரல்.

பாலு சார் சொல்லவே வேண்டாம்.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,
சுபஸ்ரீ நல்ல திறமைசாலி.
அவர் சொல்லும் இசைக் குறிப்புகள் என்னை மிக மிக வியக்க வைக்கின்றன.
ஆமாம் 25 வருடத் தொலைக்காட்சி அனுபவம் என்றால் சும்மாவா.
எதைத் தொட்டாலும் இவர் பெயர் வரும் அந்த நாட்களில்!!!!
இப்போது நிகழ்த்தும் க்வாரண்டைன் ஃப்ரம் ரியாலிட்டி
மிகச் சிறப்பாக நடந்திருக்கிறது.
நன்றாக இருக்கட்டும். உங்கள் மாமா பெண்ணோடு
படித்தவரா.
அது நல்ல பள்ளிக்கூடம். நினைவில் இருக்கிறது.
நன்றி மா.

மனோ சாமிநாதன் said...

நான் மறந்து போன ஒரு அருமையான பாடலை திரும்பவும் நினைவுக்கு கொண்டு வந்து விட்டீர்கள்! அழையாத கோலங்கள் பாடலைத்தான் சொல்கிறேன். ஆனந்த் படத்திலும் லதா மங்கேஷ்கர் மிக இனிமையாக பாடியிருப்பார்!

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதி மா,
வாழ்க வளமுடன்.
நல்ல இசை நமக்கு எல்லாமே மகிழ்ச்சி.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் தனபாலன்,
வந்து ரசித்ததற்கு மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் மனோ,
பல பாடல்களை மறந்து விடுகிறோம்.
நினைவுக்கு வருவதைப் பதிவில்
பதிந்து விடுகிறேன்.
நீங்களும் ரசித்ததில் மகிழ்ச்சி.