Blog Archive

Friday, June 18, 2021

Cooking Moringa leaves and fresh vegetables by tribe village grandmother...

8 comments:

ஸ்ரீராம். said...

அம்மியில் அரைத்த காலமும் போச்சு 
அறுசுவையாய் உண்ட காலமும் போச்சு 
விறகடுப்பில் சமைத்த காலமும் போச்சு 
வடித்த கஞ்சி சாதம் போயே போச்சு 
மரம் செடி வளர்க்க இடமில்லை 
மனதார சாப்பிட நேரமில்லை!
அப்போது பறித்து அப்போது சமைக்கும் வழக்கமும் போச்சு 
அப்படியொரு காலம் இருந்ததே மறந்தே போச்சு!

கோமதி அரசு said...

கிராமத்து சமையல் அருமை. அவர்கள் அடுப்பு, பாத்திரம் எல்லாம் அழகு.
பச்சை பசேல் கீரை, பிஞ்சு பீர்க்கை, உருளை குழம்பு எல்லாம் அருமை.
அருமையான பகிர்வு. வங்களாத்தில் உள்ள கிராமம் என்று நினைக்கிறேன்.
அவர்கள் வளையல் சொல்கிறது. சிவப்பு வளையல், சங்கு வளையல்.

Thulasidharan V Thillaiakathu said...

சூப்பர் மா. கிராமத்துச் சமையல் கிராமத்துச் சமையல்தான். கைக்கு எட்டி வாய்க்கும் எட்டுகிறது!

கீதா

வல்லிசிம்ஹன் said...

ஆமாமாஆமாம் ஆமாம் ஸ்ரீராம்.
நமக்காவது அம்மி தெரியும் நம்
பேரப் பசங்களுக்கு அதுவும் தெரியாது:)

இருப்பதை விட்டுப் பறப்பதை நினைப்பானேன்:)
இது பெங்கால் கிராமம் என்று
நினைக்கிறேன்.
முருங்கை இலையையும்,பீர்க்கங்காய்,உ'கிழங்கு சேர்த்து

நல்ல சமையல். அனுபவித்துச் சாப்பிட்டு உழைக்கிறார்கள்.
நன்றாக இருக்கட்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதிமா,
வாழ்க வளமுடன் மா.
நீங்கள் சொன்னது போல் இது வங்காளத்தில் ஒரு
கிராமம். சந்தாலி என்ற பெயர் இருந்தது.
சந்தால் என்ற பழங்குடியினர் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறேன்.
அதாக இருக்கலாம்.
முருங்கை இலை,பீர்க்கங்காய் எல்லாம் சேர்த்து உடனடியாக
மசாலாவும் அரைத்து செய்து
அழகாகப் பசித்துப் புசிக்கும் அழகு அருமை.
தண்ணீர் எங்கேயோ இருக்கிறது.
அடுப்புக்கு விறகு வேறு இடம். எல்லாமே உழைப்புதான்,.

நீங்கள் பார்த்தது மகிழ்வு மா. நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் சின்ன கீதா,

எப்பொழுதுமே சுறுசுறுப்பாக இயங்குகிறார்கள்.
அதுவே எனக்குப் பிடித்தது. இயற்கையோடு ஒன்றிய வாழ்க்கை.
சுவையான உணவு.
கடினமான ஒன்றுதான். படம் எடுத்துப்
பதிவிட்டால் எனக்கும் பிடித்திருக்கிறது.:)
முடியுமா என்று தெரியவில்லை.
நன்றி மா.

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை

மாதேவி said...

உழைக்கும் மக்களின் சுறுசுறுப்பு .மனதுக்கு இனிய காட்சிகள்.
நாங்களும் இப்பொழுது ஊரில் இருப்பதால் வீட்டில்உள்ளமுருங்கைக்காய்,கீரைவகைகள், தேங்காய்,மாங்காய்,எலுமிச்சை,மிளகாய்,சுண்டங்காய் என ஆய்ந்து சமைப்போம் சுவைதான்.