(Shared by Vino Mohan) -edited
ஸ்ரீ ரங்கத்தில் மேல சித்திர வீதியில் ஒரு ரங்க ராஜன்...
கீழ சித்திர வீதியில் இன்னொரு ரங்கராஜன்....
மே.சி.வீதி ரங்கராஜன் தான் வாலி....கவிஞர் வாலிதான்...
கீ.சி. வீதி ரங்கராஜன்.......என்ன கேள்வி இது?....நம் சுஜாதா தான்...
அவர்கள் இருவரும் நப்பின்னையும் மட்டுமே அறிந்த ஒரு சம்பவத்தை நப் பின்னை என்று தலைப்பிட்டு 2013 ஆம் ஆண்டு குமுதம் பொங்கல் மலரில் எழுதியிருந்தார் வாலி...
கட்டுரை,சிறுகதை என்று எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம்.. வாசிப்பவர் பிரியம் அது..
வாலி ஸ்ரீரங்கத்து தமிழில் அவர்களின் பரிபாஷை எல்லாம் கலந்து சொன்ன கதை...
முடிந்தவரை சீர் கெடாமல் நப்பின்னை பற்றி சொல்ல ஆசை...சொல்லட்டுமா?அழகிய சிங்கர் வாத்தியாரின் பெண் நப்பின்னை...
அழகிய சிங்கரைப் பற்றியே அரை பக்கம் வர்ணித்திருந்தார் வாலி.
கோபுலு, அழகிய சிங்கரைப் பார்த்திருந்தார் என்றால் kent paper, crayon இரண்டையும் எடுத்து caricature போட்டு விடுவாராம்...
சுஜாதா வீட்டுக்கு எதிர் வீடு அவர் வீடு.
ஒரு சாயரட்சையில் இரு ரங்கராஜன்களும் பேசிகொண்டிருந்த போது சுஜாதாவின் எதிர் வீட்டில் இருந்து ஒரு பங்குனி உத்திர தேர் வெளிப் போந்து மாசிக்கோனார் மளிகை ஸ்டோர் நோக்கி சென்றது..
பனி பிரதேசத்தில் அம்மணமாக நிற்பது போல பாதாதிகேசம் உறைந்து நின்றேன் என்கிறார் வாலி.
அழகிய சிங்கரையே அரை பக்கம் வர்ணித்தவர் நப்பின்னையை எவ்வளவு வர்ணித்திருப்பார்?அந்த வர்ணனைகளில் கை வைக்க அடியேனால் ஆகாது.. விட்டு விடுகிறேன்...
நப்பின்னையைப் பார்த்து வாலிக்கு ஏற்பட்ட உபாதைகளை உணர்ந்து கொண்ட சுஜாதா அழகிய சிங்கத்திற்கு வாலியை அறிமுகம் செய்து வைக்கிறார்...
இன்று போய் நாளை வா படத்தில் மூன்று இளைஞர்கள் ராதிகாவிற்காக செய்த சேவைகளை தனி ஒருவனாக வாலி செய்திருக்கிறார் நப்பின்னை வீட்டிற்கு..
ஊஹூம்....முன்னேற்றம் ஒன்றும் இல்லை..
சுஜாதாவே இன்னொரு யோசனை சொல்கிறார்.
உன்னுடைய நாடகத்திற்கு இரண்டு காம்ப்ளிமென்ட்ரி டிக்கெட் கொடுத்து கூப்பிடு....
உன் தமிழை பார்த்து நப்பின்னைக்கு உன் மேல் காதல் வரலாம் என்று யோசனை சொல்கிறார்..
அப்படியே கொடுத்தாயிற்று..
அந்தோ!
தனியாகத்தான் அழகிய சிங்கர் வாத்தியார் வந்தாராம் நாடகத்திற்கு.
கேட்டதற்கு பொண்ணு - நேத்து ராத்திரி கொல்லை ரேழியில் உட்காந்துண்டுட்டா என்றாராம்.
வாலி நொறுங்கி போனாராம்...
இனி பொறுப்பதில்லை என்று எரிதழல் கொண்டு வரச் சொன்ன வீமன் போல காவிரிக்கு குளிக்க வந்த நப்பின்னையிடம் காதல் கடிதம் கொடுத்திருக்கிறார்....
பின்னாட்களில், அன்புள்ள மான் விழிக்கு ஆசையில் ஓர் கடிதம்...நான் அனுப்புவது கடிதம் அல்ல,உள்ளம் என்றெல்லாம் பாடல்கள் எழுதிய வாலி,தன் காதலிக்கென்று எழுதிய அந்த காதல் கடிதம் காண ஆசை..
கிடைத்தால்,நரகத்தில் ஆயிரம் ஆண்டுகள் தலை கீழாக தொங்கவும் சம்மதம்.
அய்யகோ! கடிதத்தை படிக்காமலே கசக்கி வாலி முகத்தில் எறிந்து விட்டு இரு இரு,அப்பாவண்ட சொல்லி என்ன பண்றேன் பார் என்று வெகுண்டளாம் நப்பின்னை.
பின் ஒரு பிராதக் காலத்தில் காதலுக்கு காவிரியில் காதலுக்கு தலை முழுகியிருக்கிறார் வாலி..
வாலி சென்னையை ஏக......
சுஜாதா டெல்லிக்குப் போக........
இருவருமே உலகறிந்த ஸ்ரீரங்கத்து மணிகளாக ஒளி வீச...காதல் கடிதம் கொடுத்து நாற்பது ஆண்டுகளுக்கு பிறகு வாலி ஸ்ரீ ரங்கம் போகிறார்..யதேச்சையாக சுஜாதாவும் வந்திருக்கிறார் ஸ்ரீ ரங்கத்திற்கு...
இருவரும் ஒரு மாலையில் தாயார் சந்நிதிக்கு போக...தொலைவில் பிராகாரதில் சேவித்து கொண்டிருந்த ஒரு மூதாட்டியை காட்டி சுஜாதா,
"வாலி தெரியறதா?நப்பின்னை........அழகிய சிங்கர் வாத்தியார் பொண்ணு" என்றாராம்..
"அப்பாவும் போயாச்சு.ஆத்துக்காராரும் போயாச்சு.. பசங்க மாசாமாசம் பணம் அனுப்புறானுங்க... நப்பின்னை நிம்மதியாக இருக்கா..போய் பேசேன்" என்று சுஜாதா சொல்லியிருக்கிறார்.....
வாலியும் நப்பின்னை முன்னே பிரசன்னாமாகி "என்னை தெரியறதா?" என கேட்க..
"உலகத்திற்கே தெரியும். எனக்கு தெரியாதா? வாலி" என்றாள்.
அப்படியே பிரதட்சினம் செய்து கொண்டே பேசி கொண்டு போகிறார்கள் இருவரும்.
"நப்பின்னை,கோபிக்க கூடாது. இவ்வளவு புகழ்,செல்வத்தோடு இருக்கிறேன்..என்றாவது ஒருநாள் வாலியை நிராகரித்தது தப்பிதமோ? என்று நினைத்தது உண்டா" என்று அசட்டு தனமாக கேட்டிருக்கிறார் வாலி..
இராமானுஜர்,பாண்டவர் பூமி எல்லாம் எழுதி முடித்த பின்னால்...
"அப்போ வருத்த படலே.. இப்போ வருத்த படறேன். இப்படி ஒரு கேள்வி கேட்ட உங்களை பார்த்து...உங்க மேல அன்னைக்கு வராத காதல் காசு வந்ததும் வந்து விடுமா? பெண்கள் காசில்லாதவனைத் தான் காதலிப்பா.."
"கவிஞர் ஆச்சே..கம்பராமாயனம் படிச்சிருப்பேளே..இது தெரியலையா? காசு என்றால் பணம்னு மட்டும் அர்த்தமில்லே..குற்றம் என்றும் அர்த்தம்.. அதனால் தான் கம்பன் பாடினான் காசில் ராம காதையை! என்று சொன்னான்.
"குற்றமற்ற ராமன் கதையை பாடினேன் என்று சொன்னான். காதல் காசில்லாதவன் மேல் தான் வரும்.நன்னாருங்கோ! வர்றேன்" என்று பிரதட்சிணத்தை போய் விடுகிறாள்.
தன் கன்னத்தில் பளீர் பளீர் என்று யாரோ அறைந்தது போல உணர்ந்ததாக வாலி முடிக்கிறார் நப்பின்னை கதையை.....
அவசியம் படிக்க வேண்டும்...
அந்த தமிழுக்காக மட்டும் அல்ல...
நப்பின்னைகாகவும் தான்...
26 comments:
அற்புதம்...இதுவரை படித்ததில்லை..பகிர்ந்தமைக்கு நல்வாழ்த்துகள்..
அடடே.... ரொம்ப நல்லாயிருக்கு. இதுவரை படித்ததில்லை. நிஜமா, கற்பனையா என்றும் தெரியவில்லை. எழுத்தாளர் சுஜாதா வேறு வந்திருக்கிறாரே......
இனிய காலை வணக்கம். ஸ்ரீராம். எனக்கும் கதையோ கற்பனையோ
என்று தோன்றியது.
வாலிபெயரில் வந்திருப்பதால் சுவாரஸ்யம் பா.
அன்பின் ரமணி ஜி,
நன்றாக இருந்தது அதனால் பகிர்ந்தேன் மா.
நன்றி.
சுஜாதா சாரின் ஸ்ரீரங்கத்து தேவதைகளில்
ஒரு நப்பின்னை படித்தது
போல நினைவு.
//சுஜாதா சாரின் ஸ்ரீரங்கத்து தேவதைகளில் ஒரு நப்பின்னை படித்தது
போல நினைவு.//
அப்படியா? எடுத்துக் பார்க்க வேண்டும். அழகிய சிங்கர் என்று எனக்கு ஒரு முன்னோர் என்று கவுளர்களின் பள்ளத்தாக்கில் எழுதி இருப்பார்.
இதுவரையிலும் படிக்காத சுவாரசியமான உண்மை (?) கதை? நன்றாக இருக்கிறது. பகிர்ந்தமைக்கு நன்றி.
வணக்கம் சகோதரி
நலமா? எப்படி இருக்கிறீர்கள்? தாங்கள் பதிவு நன்றாக உள்ளது. இது நிஜமாகவே நடந்து உள்ளது போலும்... இல்லை சில கற்பனைகள் கலந்து எழுதப் பட்டனவோ...படிக்க நன்றாக உள்ளது. சுஜாதா அவர்களின் எத்தனையோ கதைகள் படித்ததில் நினைவிருந்தாலும், ஸ்ரீ ரங்கத்து தேவதைகள் கதை நினைவில்லை. படிக்கனும். படித்தால் ஒருவேளை ஏற்கனவே படித்திருக்கிறேனோ என்பது நினைவுக்குள் வரும். பகிர்ந்தமைக்கு நன்றி சகோதரி. தங்களது பல பதிவுகளை நான் படிக்கவில்லை. அதையும் படிக்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பகிர்வு படித்தேன். நான் படித்ததில்லை
அம்மா வாவ் செமையா ரசித்தேன். ரொம்ப ரொம்ப நன்றி அம்மா
ஆனால் உண்மையாக இருக்குமோ என்றும் தோன்றுகிறது கற்பனையும் கொஞ்சம் கலந்திருக்கலாம் ஆனால் நப்பின்னை பற்றி சுஜாதா எழுதியிருக்கிறார். அவள் கணவன் ரொம்ப அதி புத்திசாலி என்றும் சென்னையில்தான் கல்லூரி ஒன்றில் (லயோலா?) அந்த க்வார்ட்டர்ஸில் இருந்தார்...பேராசிரியராக இருந்தார் அப்போது சுஜாதா சென்னை ஏர்போர்ட்டில் வேலை...நப்பின்னையின் கணவன் அவரை அழைத்துப் பேசினார் அவர் வீட்டிற்குச் சென்றார் அமெரிக்காவில் ஆராய்ச்சி செய்ய வாய்ப்பு கிடைத்து போகத் தயங்க சுஜாதா போகச் சொல்லி அறிவுறுத்த அங்கு போய் இறந்து சென்னைக்கு அவர் உடல் வந்தப்ப சுஜதாதான் அது ஃபார்மாலிட்டிஸை சீக்கிரம் முடிக்க உதவி என்று அதைப் பற்றிச் சொல்லியிருப்பார்.
நப்பின்னை என்றதுமே அது நினைவுக்கு வந்துவிட்டது அம்மா
கீதா
"கவிஞர் ஆச்சே..கம்பராமாயனம் படிச்சிருப்பேளே..இது தெரியலையா? காசு என்றால் பணம்னு மட்டும் அர்த்தமில்லே..குற்றம் என்றும் அர்த்தம்.. அதனால் தான் கம்பன் பாடினான் காசில் ராம காதையை! என்று சொன்னான்.
"குற்றமற்ற ராமன் கதையை பாடினேன் என்று சொன்னான். காதல் காசில்லாதவன் மேல் தான் வரும்.நன்னாருங்கோ! வர்றேன்" என்று பிரதட்சிணத்தை போய் விடுகிறாள்./
செம செம செம பதில் ரொம்ப ரொம்ப ரசித்தேன்!!!!! நப்பின்னை மாமிக்கு பாராட்ட வேண்டும் உண்மையானதாக இருந்தால்..உண்மைதான்னு தோன்றுகிறது...இல்லை அதுகற்பனை என்றால் அவருக்கு குடோஸ். உண்மையான வரிகளை எழுதியிருக்கிறார். வாலி அப்படியும் இப்படியும்தானே இருந்தார் முன்பு!! அதுவும்...வேண்டாம் பொதுவில்...
கீதா
தன் கன்னத்தில் பளீர் பளீர் என்று யாரோ அறைந்தது போல உணர்ந்ததாக வாலி முடிக்கிறார் நப்பின்னை கதையை.....//
இருக்காதா பின்னே!!!!!!
கீதா
புதிய தகவல்... அருமை...
பகிர்ந்தமைக்கு நன்றி சகோதரி
ஸ்ரீரெங்கத்து தேவதைகள் புத்தகம் என்னிடம் இருந்தது. அதில் நப்பின்னை கதை படித்ததாக நினைவில்லை.
பெண்கள் காசில்லாதவனைத்தான் காதலிப்பார்கள் - விளக்கம் அருமை.
ஸ்ரீராம்,
பானு சொல்லி இருக்கிறார்.ஸ்ரீரங்கத்து தேவதைகளில்
இல்லை என்று. நான் தான் வேறெதோ
இடத்தில் படித்துவிட்டு இங்கே
சொல்லி இருப்பேன்.
அவரது அம்பலம் அரட்டைகளில் இருந்திருக்கிறலாம் மா.
அன்பு கீதாமா,
அவர் எழுத்திலும், சுஜாதா சார் எழுத்திலும் நல்ல வளத்தை எதிபார்த்துப்
படிப்பேன். நல்ல பச்சை மிளகாய் எழுத்து.
வந்து கருத்து சொன்னதற்கு மிக நன்றி மா.
உண்மையோ, கற்பனையோ நன்றாக இருக்கிறது. அதுவும் கடைசி வரிகள்...
பகிர்ந்து கொண்டதற்கு நன்றிம்மா.
அன்பின் கமலாமா.
நான் நலமே மா. நீங்களும் மன வேதனை தீர்ந்து மெது மெதுவே இயல்புக்கு வரவேண்டும். என்று பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
ஆமாம் என் தங்கைகள், சித்தப்பா பெண்கள்
அக்காவுக்காக நிறைய நல்ல செய்திகளை அனுப்புவார்கள்.
கதை கற்பனை என்று பார்க்கவில்லை.
சொல்லும் விதம் தான் மிக சுவை.
நீங்களும் வந்து கருத்து சொன்னதற்கு மிக
நன்றி மா.மெதுவாகப் படியுங்கள். ஒன்றும் நஷ்டம் இல்லை.
அன்புடன் வல்லிம்மா.
அன்பின் கோமதி
வாழ்க வளமுடன். சுவாரஸ்யமாக இருந்தது. நீங்களும் படித்ததில் மிக மகிழ்ச்சி.
நன்றி மா.
அன்பின் சின்ன கீதா,
ஏயப்பா. எத்தனை தெரிந்திருக்கிறது உங்களுக்கு!!!
இதை நான் படித்ததில்லையே.
மிக நன்றி ராஜா.
பாவம் நப்பின்னை. வாலியின் சொல்லலங்காரம் அவளை
இன்னும் சிறப்பாக்குகிறது.
நிஜ வாழ்க்கையில் தான் எத்தனை டிராமா அரங்கேறுகிறது!!
சுஜாதா சார் ரியல்லி க்ரேட்.
காதல் காசில்லாதவன் மேல் தான் வரும்.நன்னாருங்கோ! வர்றேன்" என்று பிரதட்சிணத்தை போய் விடுகிறாள்./....//.........
அன்பின் சின்ன கீதாமா,
நச் வார்த்தைகள். ஆமாம் ஆண்கள்
சீரில்லாமல் இருந்தாலும் அவ்வளவாகக்
கண்டு கொள்ளாத உலகம் தானே இது.
மிக அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள்.
திண்ணத்துடன் வாழ்க்கை நடத்திய நப்பின்னை மேல்
மனம் கசிகிறது.தெரியாத விஷயங்களைச் சொல்லி இருக்கிறீர்கள்.
மிக நன்றி மா.
கருத்துக்கும் செய்திக்கும் மிக நன்றி பானுமா.
அன்பின் ஜெயக்குமார் இந்தப் பதிவும்
உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி. நன்றி மா.
அன்பின் தனபாலன்,
பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சிமா.
மனம் நிறை நன்றி.
படிக்க நன்றாக உள்ளது.
Post a Comment